காத்தான்குடி 167A பதுரியா மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம் ஏற்பாட்டில்; பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப் பைகள் வழங்கி வைப்பு.
-எம்.ரி.எம்.யூனுஸ் -
புதிய காத்தான்குடி 167A பதுரியா மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில், பாடசாலை மாணவர்களுக்கான புத்தகப் பைகள் வழங்கும் நிகழ்வு இன்று (02) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புதிய காத்தான்குடி 167A பதுரியா மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவி திருமதி சியாமா உபைதுல்லாஹ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 28 மாணவர்களுக்கு புத்தகப் பைகள் வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வின் அதிதிகளாக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ். அரசகுமார், புதிய காத்தான்குடி 167A கிராம சேவையாளர் திருமதி எஸ். என். எம். ஜரூப், அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ஜே. ஏ. றிஸ்வி, சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர் எம். எம். எம். இர்ஷாத் ஆகியோர் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு புத்தகப் பைகளை வழங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் புதிய காத்தான்குடி 167A பதுரியா மாதர் கிராம அபிவிருத்திச் சங்க பொருளாளர் திருமதி அனிஸா யூனுஸ், நிர்வாகிகள் மற்றும் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
கல்வி அபிவிருத்தியை ஊக்குவிக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வு, பெற்றோர் மற்றும் பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
காத்தான்குடி 167A பதுரியா மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம் ஏற்பாட்டில்; பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப் பைகள் வழங்கி வைப்பு.
Reviewed by www.lankanvoice.lk
on
ஜனவரி 02, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஜனவரி 02, 2026
Rating:




கருத்துகள் இல்லை: