காசாவில் போர் நிறுத்தத்துக்கு மத்தியிலும் ராணுவத் தாக்குதலில் நூற்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் பலி!

காஸா பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபரில் மேற்கொள்ளப்பட்ட தற்காலிக போா்நிறுத்த ஒப்பந்தத்துக்குப் பிறகும், இதுவரை தொடரும் ராணுவத் தாக்குதல்களில் 100-க்கும் அதிகமான குழந்தைகள் கொல்லப்பட்டிருப்பதாக ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பான ‘யுனிசெப்’ கவலை தெரிவித்துள்ளது.
இது குறித்து காஸாவில் பணியாற்றும் ‘யுனிசெப்’ செய்தித் தொடா்பாளா் ஜேம்ஸ் எல்டா் கூறியுள்ளதாவது:
” போா்நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த பிறகு, வான்வழித் தாக்குதல்களும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களும் குறைந்திருந்தாலும், அவை முழுமையாக முடிவுக்கு வரவில்லை.
இத்தகைய தொடா் தாக்குதல்களால் இதுவரை 100-க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்துள்ளனா். இதில் 60 சிறுவா்களும், 40 சிறுமிகளும் அடங்குவா்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த எண்ணிக்கை, அதிகாரபூா்வ ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் மட்டுமே. ஆனால், களத்தில் நிலவும் உண்மையான உயிரிழப்புகளின் எண்ணிக்கை இதைவிட மிக அதிகமாக இருக்கக்கூடும் என்றாா்.
Reviewed by www.lankanvoice.lk
on
ஜனவரி 15, 2026
Rating:
கருத்துகள் இல்லை: