எக்ஸத் பத்திரிகையின் ஏற்பாட்டில்; “தேசத்தின் காவலர்” விருது வழங்கும் விழா.!!!
– எம்.ரி.எம்.யூனுஸ் –
பாதுகாப்புத் துறையில் பங்காற்றியவர்களையும், சமூக நலனுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய சமூக செயற்பாட்டாளர்களையும் கௌரவிக்கும் “தேசத்தின் காவலர்” விருது வழங்கும் நிகழ்வு, இன்று சனிக்கிழமை (10) காத்தான்குடி அல்மனார் அறிவியல் கல்லூரி – அப்துல் ஜவாத் மண்டபத்தில் நடைபெற்றது.
எக்ஸத் ஊடக வலையமைப்பின் பணிப்பாளர் JLM. ஷாஜஹான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தின் தலைவர் பேராசிரியர், கலாநிதி SMM. நபீஸ் LL.B (Col), LL.M (Malaysia), Ph.D in Law (Malaysia), Attorney at Law கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
கௌரவ அதிதிகளாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரத் துறை பேராசிரியர், கலாநிதி AAM. நுபைல், ஓய்வுநிலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் MA. நவாஸ், ஓய்வுநிலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் AM. ஜௌபர், முன்னாள் இராணுவ அதிகாரி மேஜர் ஜூனைட் நபீர், சட்டத்தரணி முஹைதீன் சாலி ஆகியோர் கலந்துகொண்டனர்.
தேசத்தின் பாதுகாப்புக்கும் சமூக நலனுக்கும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றியவர்களை கௌரவிக்கும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், பல்வேறு துறைகளில் சேவை புரிந்தவர்களுக்கு “தேசத்தின் காவலர்” விருதுகள் வழங்கப்பட்டன.
எக்ஸத் பத்திரிகையின் ஏற்பாட்டில்; “தேசத்தின் காவலர்” விருது வழங்கும் விழா.!!!
Reviewed by www.lankanvoice.lk
on
ஜனவரி 10, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஜனவரி 10, 2026
Rating:





















கருத்துகள் இல்லை: