இளம் பெண் புகைப்படக் கலைஞர்களுக்கான செயல்முறைப் பயிற்சி செயலமர்வு.
(செய்தியாளர்,
பாத்திமா நதா )
டெலன் சமூக நல அமைப்பின் ஏற்பாட்டில் காத்தான்குடியில்,
தற்போது உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் தொழில்களில் ஒன்றாகக் கருதப்படும் புகைப்படக் கலைத் துறையில் இளம் புகைப்படக் கலைஞர்களின் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், காத்தான்குடி பிரதேசத்தில் 100 தொழில்முறை புகைப்படக் கலைஞர்களை உருவாக்கும் இலக்குடன் டெலன்ட் கலை இலக்கிய கழகம் மற்றும் டெலன்ட் சமூக நல அமைப்பு ஆகியவை இணைந்து முன்னெடுக்கும் பயிற்சித் திட்டத்தின் முதல் தொகுதி மாணவிகளுக்கான செயல்முறைப் பயிற்சி செயலமர்வு இன்று (08) மாலை, காத்தான்குடி கடற்கரை வீதியில் அமைந்துள்ள சத்தார் எலைட் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
டெலன்ட் சமூக நல அமைப்பின் தலைவர் ஊடகவியலாளர் எம்.எஸ்.எம். சஜீயின் தலைமையில், இந்நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
இச் செயலமர்வில், புகைப்படக் கலைஞர்களுக்குத் தேவையான ஒழுக்க நெறிகள், DSLR மற்றும் Mirrorless கமெராக்களுக்கிடையிலான வேறுபாடுகள், AI தொழில்நுட்பத்துடன் இணைந்த புகைப்படக் கலை வளர்ச்சி, கமெரா லைட் செட்டிங்ஸ், திருமண புகைப்படக் கலைஞர்களுக்குத் தேவையான திறன்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக, ஊடகவியலாளரும் புகைப்படக் கலைஞருமான எஸ். சஜீத் வளவாளராகக் கலந்து கொண்டு, மாணவிகளுக்கான செயல்முறை விளக்கங்களுடன் கூடிய பயிற்சிகளை வழங்கினார்.
100 இளம் புகைப்படக் கலைஞர்களை உருவாக்கும் இத்திட்டத்தின் ஊடாக, தொழில் வாண்மை புகைப்படக் கலைஞர்களை உருவாக்கி, காத்தான்குடி பிரதேசத்தில் அவர்களுக்கான சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்கி வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இத்திட்டத்தின் முதல் தொகுதி பயிற்சியில் சுமார் 30 மேற்பட்ட மாணவிகள் இணைந்துள்ளதுடன், இவர்கள் விரைவில் அரச அங்கீகாரம் பெற்ற சான்றிதழுடன் தொழில்முறை புகைப்படக் கலைஞர்களாக காத்தான்குடி பிரதேசத்தில் செயற்படும் அளவிற்கு அவர்களுக்கான வழிகாட்டல்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்து.
இளம் பெண் புகைப்படக் கலைஞர்களுக்கான செயல்முறைப் பயிற்சி செயலமர்வு.
Reviewed by www.lankanvoice.lk
on
ஜனவரி 08, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஜனவரி 08, 2026
Rating:



கருத்துகள் இல்லை: