கிழக்கு மாகான வீடமைப்பு அதிகாரசபையினால் வீடு திருத்த வேலைக்கான காசோலைகள் வழங்கி வைப்பு..!
B.M.பயாஸ் (ஊடகவியலாளர்)
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளர் பொறியியலாளர் ஜீ.சுகுமாரன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் அவர்களின் பங்கு பற்றுதலுடன் தொழிநுட்ப உத்தியோகர் எஸ். யதுஷாயினியின் ஒழுங்குபடுத்தளில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வீடு திருத்த வேலை செய்வதற்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (26.01.2026) இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வருடம் 216 வீடுகளை திருத்தம் செய்யும் பணிகளை கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டது.
இந் நிகழ்வில் 103 வீடுகளை பூரணமாக திருத்தம் செய்த பயணளிகளுக்கான இறுதிக்கட்ட காசோலைகள் வழங்கப்பட்டதுடன் மிகுதி வீடுகளை பூரணமாக திருத்தம் செய்தவர்களுக்கான காசோலைகளும் வழங்கப்படவுள்ளன.
இவ் வீடு திருத்த வேலைகள் கிழக்கு மாகான வீடமைப்பு அதிகாரசபையின் பொறியியலாளர் எஸ். வினோராஜ் அவர்களின் மேற்பார்வையின் கீழ் இடம்பெற்று வருகின்றது.
கடந்த 05 வருடங்களாக கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபைக்கு 88.36 மில்லியன் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தற்போதைய
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளர் பொறியியலாளர் ஜீ.சுகுமாரன் அவர்களின் அயராத முயற்சியினால்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் 2025ம் ஆண்டிற்கு மட்டும் 145 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு,
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினர் ஜோன்ஷன், தேசிய மக்கள் சக்தியின் மாநகரசபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் உத்தியோகாத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகான வீடமைப்பு அதிகாரசபையினால் வீடு திருத்த வேலைக்கான காசோலைகள் வழங்கி வைப்பு..!
Reviewed by www.lankanvoice.lk
on
ஜனவரி 26, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஜனவரி 26, 2026
Rating:






கருத்துகள் இல்லை: