மட்டக்களப்பு மாவிலங்கத்துறை வாவியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1கோடி 40 இலட்சம் மில்லி லீட்டர் கோடா; 50 ஆயிரம் மில்லி லீட்டர் கசிப்புடன் மூவர் கைது.!
(B.M.பயாஸ்
ஊடகவியலாளர்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய அளவிலான சட்டவிரோத மதுபான ஒழிப்பு நடவடிக்கையை காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
மாவிலங்கத்துறை களப்புப் பகுதியை அண்டிய வாவியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கோடி 40 இலட்சம் மில்லி லீட்டர் கோடா மற்றும் 50 ஆயிரம் மில்லி லீட்டர் கசிப்பு ஆகியவற்றை மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் இன்று அதிகாலை கைப்பற்றினர்.
மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவின் விசேட குழுவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று மாலை 6 மணி முதல் இன்று அதிகாலை 6 மணி வரை சுமார் 12 மணித்தியாலங்கள் நீடித்த பாரிய தேடுதல் வேட்டையின் போதே இந்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன்போது கசிப்பு காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்பட்ட 8 பாரிய பரல்கள் மற்றும் 2 கலன்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் ஆரையம்பதியைச் சேர்ந்த இருவர் மற்றும் மாவிலங்கத்துறையைச் சேர்ந்த ஒருவர் என மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட பெருந்தொகையான மதுபானம் மற்றும் சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது குறித்த மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
மட்டக்களப்பு மாவிலங்கத்துறை வாவியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1கோடி 40 இலட்சம் மில்லி லீட்டர் கோடா; 50 ஆயிரம் மில்லி லீட்டர் கசிப்புடன் மூவர் கைது.!
Reviewed by www.lankanvoice.lk
on
பிப்ரவரி 10, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
பிப்ரவரி 10, 2026
Rating:




கருத்துகள் இல்லை: