Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

காத்தான்குடி பெண் சுயதொழில் முயற்சியாளர்களுக்கான இலவச வழிகாட்டி கருத்தரங்கு வெற்றிகரமாக நடைபெற்றது.


(செய்தியாளர் 
எம்.எஸ்.எம். சஜீ)

காத்தான்குடி பிரதேசத்தில் பெண் சுயதொழில் முயற்சியாளர்களின் தொழில் வாண்மையை மேம்படுத்தும் நோக்கில் காத்தான்குடி பிரதேச செயலகத்தின் அனுசரணையுடன் Dream Cakes & Rose Gallery இணைந்து ஏற்பாடு செய்த ஒருநாள் இலவச தொழில் வழிகாட்டி கருத்தரங்கு ஹிஸ்புல்லாஹ் கலாச்சார மண்டபம் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.


Dream Cakes நிறுவனத்தின் பணிப்பாளர் நுஸ்பா சஜாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜுத் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.


தற்போது வேகமாக வளர்ந்து வரும் மற்றும் அதிக வருமானம் ஈட்டக்கூடிய துறைகளாகக் கருதப்படும் சமையற்கலை மற்றும் ஆரி டிசைன் தொடர்பான பயிற்சிகள் இக்கருத்தரங்கில் இடம்பெற்றன. 


தேர்ச்சி பெற்ற விரிவுரையாளர்களின் வழிகாட்டுதலுடன் மொங்கோலியன் ரைஸ், ரெட் வெல்வெட் கேக், இத்தாலியன் பீட்சா, பேஸ்ட்ரி மற்றும் பேக்கரி தயாரிப்புகள், ஆரி வேலைப்பாடுகள், தையல், மெஹந்தி டிசைன் மற்றும் மிக்ஸாலஜி போன்ற துறைகளில் செயன்முறை விளக்கங்களுடன் கூடிய பயிற்சிகள் வழங்கப்பட்டன.


இந்நிகழ்வில் நுஸ்பா சஜாத் – Cookery (Mongolian Rice), Cake (Red Velvet Cake), Pastry & Bakery (Italian Pizza), மஷானா அனீஸ் – Aari Work & Tailoring, ஹன்ஷூல் இஸ்ஸத் – Mehandi Design & Mixology ஆகியோர் துறைசார்ந்த செயன்முறைப் பயிற்சிகளுடன் விரிவுரைகளை வழங்கினர்.


காத்தான்குடியில் பெண் சுயதொழில் முயற்சியாளர்களின் தொழில் வாண்மையை மேம்படுத்தும் வகையில் இவ்வாறு இலவசமாக நடத்தப்பட்ட வழிகாட்டி கருத்தரங்கு முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


கிழக்கு மாகாணம் முழுவதும் இருந்து சமையற்கலையில் ஆர்வம் கொண்ட 500-க்கும் மேற்பட்ட பெண் சுயதொழில் முயற்சியாளர்கள் இதில் பங்கேற்றனர். பயிற்சியின் போது கேள்வி-பதில் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு, திறமையுடன் பதிலளித்தவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.


நிகழ்வின் சிறப்பம்சமாக, Dream Cakes and Class நிறுவனத்தில் Cookery மற்றும் Cake பயிற்சி நெறிகளை பூர்த்தி செய்த சுமார் 130 மாணவிகளுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் பிரதம அதிதி உள்ளிட்ட அதிதிகளால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.


மேலும் இந்நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள், பெண் சுயதொழில் முயற்சியாளர்கள், துறை சார்ந்த விரிவுரையாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

காத்தான்குடி பெண் சுயதொழில் முயற்சியாளர்களுக்கான இலவச வழிகாட்டி கருத்தரங்கு வெற்றிகரமாக நடைபெற்றது. Reviewed by www.lankanvoice.lk on பிப்ரவரி 15, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.