பாடசாலைகளில் அழகியற் கலைகளை மேம்படுத்துவதற்கு அரங்கக் கலை உபகரணங்கள்
பாடசாலைகளில் அழகியற்கலைகள் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக அரங்கக்கலைகள் உபகரணங்களை விநியோகிப்பதற்கான கருத்திட்டத்தை 1,215 மில்லியன் ரூபாய்கள் மதிப்பீட்டுச் செலவின் கீழ் 2026 ஆம் ஆண்டு தொடக்கம் 2028 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கையிலுள்ள பாடசாலைகளில் அழகியற் கலைகள் கல்வி நடவடிக்கைகளின் கீழ் சங்கீதம், நடனம், சித்திரக்கலை மற்றும் நாடகம் போன்ற கலைத்துறைப் பாடங்கள் தொடர்ச்சியாகக் கற்பிக்கப்பட்டு வந்தாலும், அதிகமான பாடசாலைகளில் இவற்றுக்குத் தேவையான உபகரணங்கள் பற்றாக்குறை நிலவுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பிள்ளைகளின் தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் நவீன உபகரணங்கள் பாடசாலைகளில் இல்லாமையால் இந்நிலைமை மேலும் மோசமடைந்துள்ளதுடன், தற்போது காணப்படுகின்ற உபகரணங்கள் காலவதியாகிப் பழுதடைந்துள்ளதெனவும் தெரிய வருகின்றது. இந்நிலைமை அரங்கக் கலைகள் கல்வியின் தரப்பண்புக்கும் மற்றும் மாணவர்களின் முழுமையான ஆளுமை விருத்திக்கும் பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்துகின்மை கண்டறியப்பட்டுள்ளது.
Reviewed by www.lankanvoice.lk
on
பிப்ரவரி 04, 2026
Rating:

கருத்துகள் இல்லை: