Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

ஈரானின் புதிய உச்ச தலைவருக்கு சீனா, ரஷ்யா முழு ஆதரவு!

ஈரானின் புதிய உச்ச தலைவருக்கு ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் வாழ்த்து தெரிவித்துள்ளன.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த 28ஆம் திகதிநடத்திய தாக்குதலில் ஈரான் உச்ச தலைவராக இருந்த அயத்துல்லா அலி காமேனி உயிரிழந்தார்.

இதையடுத்து, புதிய தலைவரை தேர்வு செய்யும் பணியில் 88 மத குருக்கள் அடங்கிய சபை ஈடுபட்டது.

இந்த சபை ஓட்டெடுப்பு மூலம் மறைந்த தலைவர் அயத்துல்லா காமேனியின் மகன் மோஜ்தபா காமேனியை 3-வது உச்ச தலைவராக தேர்வு செய்தது.

இந்த சூழலில், ஈரானின் புதிய உச்ச தலைவர் மோஜ்தபாவுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.

‘ஈரான் போரை சந்திக்கும் நேரத்தில், உயர் பதவிக்கு வந்துள்ள உங்களுக்கு அதிக தைரியமும், அர்ப்பணிப்பும் தேவை என்பதில் சந்தேகம் இல்லை.

ஈரான் மற்றும் எங்களது ஈரான் நண்பர்களுக்கு ரஷ்யாவின் முழு ஆதரவு உள்ளது’ என்று புடின் அதில் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவும் வாழ்த்து தெரிவித்துள்ளது.

ஈரானின் புதிய உச்ச தலைவருக்கு சீனா, ரஷ்யா முழு ஆதரவு! Reviewed by www.lankanvoice.lk on மார்ச் 11, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.