Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

தகவல் அறிதல் உரிமை தொடர்பான ஆணைக்குழுவின் பணிகளை டிஜிட்டல்மயப்படுத்தும் கருத்திட்டத்தை அமுல்படுத்தல்

 

2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவல் அறிதல் உரிமை தொடர்பான சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய நிறுவப்பட்டுள்ள தகவல் அறிதல் உரிமை தொடர்பான ஆணைக்குழுவால், குறித்த ஆணைக்குழுவுக்கு சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் சமர்ப்பிக்கப்படுகின்ற மேன்முறையீடுகளை விசாரணை செய்தல் மற்றும் அதுதொடர்பான தீர்மானங்களை எடுத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதற்கு தற்போது ஆணைக்குழுவிடம் காணப்படுகின்ற தொழிநுட்ப செயற்கருவிகளின் மட்டுப்பாடுகளால் மேன்முறையீட்டு விசாரணைச் செயன்முறை உள்ளிட்ட ஒட்டுமொத்த செயன்முறையும் ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றது.

அதனால், ஆணைக்குழுவின் கடமைகளை வினைத்திறனாக மேற்கொள்ளும் நோக்கில் அதன் செயற்பாடுகளை டிஜிட்டல்மயப்படுத்துவதற்கான கருத்திட்டமொன்று திட்டமிடப்பட்டுள்ளதுடன், உத்தேசக் கருத்திட்டத்திற்கு உலக வங்கியின் விதப்புரையின் அடிப்படையில் 'திறந்த சமூக மன்றம்' (Open Society Foundation) இனால் 200,000 அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் மயப்படுத்தலுக்குத் தேவையான இயந்திர உபகரணங்கள் கொள்வனவு, மென்பொருள் அபிவிருத்தி செய்தல், அத்தியாவசிய மனிதவள நிபுணத்துவ அறிவைப் பெற்றுக்கொள்ளல் மற்றும் தற்போதுள்ள பணிக்குழாமினரின் இயலளவு விருத்தி போன்ற பணிகளுக்கு இந்நன்கொடையைப் பயன்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, உத்தேச கருத்திட்டத்தை அமுல்படுத்துவதற்காக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தகவல் அறிதல் உரிமை தொடர்பான ஆணைக்குழுவின் பணிகளை டிஜிட்டல்மயப்படுத்தும் கருத்திட்டத்தை அமுல்படுத்தல் Reviewed by www.lankanvoice.lk on மார்ச் 10, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.