• Home
  • About Us
  • Contact Us
lankanvoice media

Top Ad unit 728 × 90

Lankanvoice
  • செய்திகள் [News]
  • _இலங்கை
  • _உலகம்
  • அரசியல் [Political News]
  • விளையாட்டு [Sports New]
  • கட்டுரைகள் [Articles]
  • _கவிதைகள் [Poems]
  • கல்வி [Education]
  • _தொழில்நுட்பம்
  • நேர்காணல் [Interview]

இலங்கைச் செய்திகள்

Local News
Home Sri lanka கல்வி, திறன் அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி ஒத்துழைப்புகளைப் பலப்படுத்துவது குறித்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இருதரப்புப் பேச்சுவார்த்தை

கல்வி, திறன் அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி ஒத்துழைப்புகளைப் பலப்படுத்துவது குறித்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இருதரப்புப் பேச்சுவார்த்தை

www.lankanvoice.lk மார்ச் 10, 2026 Sri lanka

2026 மார்ச் 09 முதல் 11ஆம் திகதி வரை பிலிப்பைன்ஸிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருக்கும் இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, கல்வி, உயர்கல்வி, தொழில்நுட்பத் திறன் அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பைப் பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அந்நாட்டின் முக்கிய நிறுவனங்களுடன் தொடர்ச்சியான சந்திப்புகளை நடத்தினார்.

அதற்கமைய, மார்ச் 09ஆம் திகதி பிரதமர், பிலிப்பைன்ஸ் கல்விச் செயலாளர் Sonny Angara அவர்களுடன் கலந்துரையாடினார். கல்விக் கொள்கை, ஆசிரியர் பயிற்சி, பாடத்திட்டச் சீர்திருத்தங்கள் மற்றும் டிஜிட்டல்மய கற்றல் முன்முயற்சிகள் ஆகியவற்றில் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வது உட்பட, கல்வித்துறையில் இருதரப்பு ஒத்துழைப்பைப் பலப்படுத்துவது குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. 

பாடத்திட்டங்களை நவீனப்படுத்துதல் மற்றும் கற்றலில் தொழில்நுட்பத்தை உள்வாங்குதல் போன்ற இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் கல்வி மறுசீரமைப்புகள் குறித்தும் பிரதமர் பிலிப்பைன்ஸ் தரப்பிற்கு விளக்கமளித்தார்.



அதனைத் தொடர்ந்து, பிலிப்பைன்ஸ் உயர்கல்வி அதிகாரசபையின் (CHED) தலைவர் கலாநிதி Shirley C. Agrupis தலைமையிலான தூதுக்குழுவினரைப் பிரதமர் சந்தித்துப் பேசினார். ஆராய்ச்சி ஒத்துழைப்பு, பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கல்விசார் கூட்டுறவு, மாணவர் மற்றும் விரிவுரையாளர் பரிமாற்றம் மற்றும் தர உறுதிப்பாட்டுக் கட்டமைப்புகளைப் பலப்படுத்துதல் ஆகியவற்றில் விசேட கவனம் செலுத்தி, இரு நாடுகளினதும் உயர்கல்வி மேம்பாடு குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

மற்றொரு சந்திப்பில், தொழில்நுட்பக் கல்வி மற்றும் திறன் அபிவிருத்தி அதிகாரசபையின் (TESDA) செயலாளரும் பணிப்பாளர் நாயகமுமான Jose Francisco B. Benitez அவர்களுடன் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தினார். 

தொழில்நுட்பக் கல்வி மற்றும் தொழிற்கல்விப் பயிற்சி (TVET) துறையின் ஒத்துழைப்பு, அறிவுப் பகிர்வு, நிறுவன ரீதியான கூட்டுறவு மற்றும் தொழிலாளர் செயற்பாட்டினை மேம்படுத்தும் வகையில் தகைமைக் கட்டமைப்புகளை ஒருங்கிணைத்தல் ஆகிய விடயங்கள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

பேண்தகு அபிவிருத்தி மற்றும் மனிதவள அபிவிருத்திக்கு ஆதரவாகக் கல்வி, திறன் அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான இலங்கை, பிலிப்பைன்ஸ் ஆகிய இரு நாடுகளினதும், சர்வதேச ஆராய்ச்சி நிறுவனங்களினதும் அர்ப்பணிப்பை இச்சந்திப்புகள் மீண்டும் உறுதிப்படுத்தின.

இலங்கைத் தூதுக்குழுவில் பிலிப்பைன்ஸிற்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி சாணக்க தல்பாஹேவா, பிரதமரின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பி.எச். பியுமி பண்டார ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு


கல்வி, திறன் அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி ஒத்துழைப்புகளைப் பலப்படுத்துவது குறித்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இருதரப்புப் பேச்சுவார்த்தை Reviewed by www.lankanvoice.lk on மார்ச் 10, 2026 Rating: 5

Tags :

Sri lanka
  • Tweet
  • Share
  • Share
  • Share
  • Share
www.lankanvoice.lk

About Lankanvoice Media

Number of Entries : 500+

Leading News Agency in Eastern Provience.

Sri lanka

கருத்துகள் இல்லை:

இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate

76th Happy Independence Day

76th Happy Independence Day

Ads

Ads

Ads

Ads
Contact us

பிரபலமான இடுகைகள்

  • காத்தான்குடியில் ஆறு டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில் 4 பாடசாலை மாணவர்கள்.
    டெங்கு தொற்று அடையாளம் காணப்பட்ட பகுதியாக காத்தான்குடி நகர சபை மற்றும் MOH அமைத்துள்ள பகுதிகள் இனம் காணப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார அதிகாரி ...
  • தயாசிரி மீது சிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது – அமைச்சர் ஆனந்தா
    பாத்திமா சுமைஹா ஜனாதிபதி நிதியிலிருந்து கள்ள ரசீதுகளைச் சமர்ப்பித்து பணம் பெற்றது தொடர்பான நிதி மோசடி குறித்து, பாராளுமன்ற உறுப்பினர்தயாசிரி...
  • காத்தான்குடி கல்விக் கோட்டத்தின் புதிய கோட்டக் கல்வி அதிகாரியாக மர்சூக் (SLEAS) நியமனம்
    காத்தான்குடி கல்விக் கோட்டத்தின் புதிய கோட்டக் கல்வி அதிகாரியாக  A.J. மர்சூக் (SLEAS) நியமனம். காத்தான்குடி கல்விக் கோட்டத்தின் புதிய கோட்டக...
  • மட்டக்களப்பு அரச கால்நடை வைத்திய அலுவலகமும் வைத்தியர் விடுதியும் திறந்து வைப்பு
    கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் மட்டக்களப்பு அரச கால்நடை வைத்திய அலுவலகமும் வைத்தியர் விடுதியும் இன்று (18) திறந்து வை...

Recent Posts

ஊடகத்துறை பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்தின - ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் சந்திப்பு; ஊடகத்துறை மேம்பாடு குறித்து விரிவான கலந்துரையாடல்

ஊடகத்துறை பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்தின அவர்களுக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் (SLMMF) பிரதிநிதிகளுக்கும் இடையிலான உத்தி...

Interested

  • தயாசிரி மீது சிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது – அமைச்சர் ஆனந்தா
    பாத்திமா சுமைஹா ஜனாதிபதி நிதியிலிருந்து கள்ள ரசீதுகளைச் சமர்ப்பித்து பணம் பெற்றது தொடர்பான நிதி மோசடி குறித்து, பாராளுமன்ற உறுப்பினர்தயாசிரி...
  • KFL-7A- SIDE TROPHY - 2026 உதைப்பந்தாட்ட இறுதிநாள் நிகழ்வு; பிரதம அதிதியாக ஹிஸ்புல்லாஹ்
    ‘KFL 7A SIDE TROPHY - 2026’ உதைப்பந்தாட்ட இறுதிநாள் நிகழ்வு; பிரதம அதிதியாக கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார். Kattankudy ...
  • இலங்கை பல் மருத்துவ சங்கத்தின் 93வது வருடாந்திர அறிவியல் அமர்வு பிரதமரின் முன்னிலையில் நடைபெற்றது
    இலங்கை பல் மருத்துவ சங்கத்தின் (SLDA) 93வது வருடாந்திர அறிவியல் அமர்வு, பிரதமர் டாக்டர் ஹரினி அமரசூரியவின் அனுசரணையில், ஜூன் 26 அன்று கொழும்...
  • அடுத்த மாதம் பிரான்ஸ் பறக்கிறார் தோழர் அநுர
    ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க எதிர்வரும் ஜூலை 16 ஆம் திகதி பிரான்ஸ் நாட்டிற்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். இருதரப்...
All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.