சவூதியில் சம்மாந்துறை சமூகத்தினரின் மாபெரும் இஃப்தார் ஒன்றுகூடல்: இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வாத் பங்கேற்பு.
சவூதியில் சம்மாந்துறை சமூகத்தினரின் மாபெரும் இஃப்தார் ஒன்றுகூடல்: இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வாத் பங்கேற்பு.
சவூதி அரேபியாவில் வசிக்கும் இலங்கை சம்மாந்துறை சமூகத்தினருக்கான சிறப்பு இஃப்தார் மற்றும் இரவுப் போசன ஒன்றுகூடல் நிகழ்வு ரியாத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
ரியாத்தில் உள்ள அல்-மாஸ் (Al-Mas) ஹோட்டலில் (6) நடைபெற்ற இந்தச் சிறப்பான நிகழ்வில், சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் உமர் லெப்பை அமீர் அஜ்வாத் அவர்கள் மதிப்புமிகு அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த இஃப்தார் ஒன்றுகூடலில், சவூதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சம்மாந்துறையைச் சேர்ந்த பெருமளவிலான மக்கள் குடும்பத்தினருடன் ஆர்வமாக கலந்துகொண்டனர்.
தாயகத்திலிருந்து விலகி வாழும் நிலையில், தமக்கிடையிலான சமூக உறவுகளையும் சகோதரத்துவத்தையும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாக இந்த ஒன்றுகூடல் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சவூதியில் சம்மாந்துறை சமூகத்தினரின் மாபெரும் இஃப்தார் ஒன்றுகூடல்: இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வாத் பங்கேற்பு.
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 08, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 08, 2026
Rating:
.jpg)

கருத்துகள் இல்லை: