Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து 10 சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு


வால்பாறையில் பெரும் சோகம்; மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து 10 சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு

தமிழகத்தின் கோவை மாவட்டம் வால்பாறை மலைப்பாதையில் இன்று (17) பிற்பகல் நிகழ்ந்த பயங்கர விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கேரள மாநிலத்திலிருந்து வால்பாறையை நோக்கி 16 சுற்றுலா பயணிகளுடன் பயணித்த வாகனம் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது. வால்பாறை - பொள்ளாச்சி பிரதான வீதியில் அமைந்துள்ள 13 ஆவது கொண்டை ஊசி வளைவில் வாகனம் திரும்ப முயன்றபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த ஆழமான பள்ளத்திற்குள் பாய்ந்தது.

இந்த விபத்தின் கோரத்தினால் 10 பேர் அவ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில், பலத்த காயமடைந்த ஏனைய 6 பேரும் பொலிஸார் மற்றும் பொதுமக்களால் மீட்கப்பட்டனர். காயமடைந்தவர்கள் அவசர சிகிச்சைக்காக பொள்ளாச்சி மற்றும் கோவை அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விபத்து குறித்து வால்பாறை பொலிஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கே ஆர் டி வி நெட்வொர்க்
கே ஆர் டி வி லங்கன் வொய்ஸ்
சர்வதேச செய்தி

වාල්පාරෙයි කඳුකර මාර්ගයේදී සංචාරක වෑන් රථයක් ප්‍රපාතයකට පෙරළෙයි; 10 දෙනෙකු ජීවිතක්ෂයට

තමිල්නාඩුවේ කොයිම්බතූර් ප්‍රදේශයට අයත් වාල්පාරෙයි කඳුකර මාර්ගයේදී අද (17) සිදු වූ දරුණු රිය අනතුරකින් සංචාරකයින් 10 දෙනෙකු මියගොස් තිබේ. කේරළයේ සිට පැමිණි සංචාරකයින් 16 දෙනෙකු රැගත් වෑන් රථයක් මෙලෙස අනතුරට ලක්ව ඇත. වාල්පාරෙයි - පොල්ලාචි මාර්ගයේ 13 වැනි වංගුව අසලදී වෑන් රථය රියදුරුට පාලනය කරගත නොහැකිව අසල තිබූ ගැඹුරු ප්‍රපාතයකට පෙරළී ගොස් ඇත. අනතුර සිදු වූ ස්ථානයේදීම පුද්ගලයන් 10 දෙනෙකු මියගොස් ඇති අතර, තුවාල ලැබූ ඉතිරි 6 දෙනා පොලිසිය සහ ප්‍රදේශවාසීන් එක්ව මුදාගෙන රෝහල්ගත කර ඇත. ප්‍රතිකාර ලබන කිහිප දෙනෙකුගේ තත්ත්වය බරපතල බව වාර්තා වේ. මෙම අවාසනාවන්ත සිදුවීම සම්බන්ධයෙන් වාල්පාරෙයි පොලිසිය පරීක්ෂණ ආරම්භ කර තිබේ.

කේ ආර් ටී වී නෙට්වර්ක්
කේ ආර් ටී වී ලංකන් වොයිස්
ජාත්‍යන්තර පුවත්

Tragedy in Valparai: 10 Tourists Perish as Van Plunges into Ravine

A devastating road accident on the Valparai hill track in Tamil Nadu claimed the lives of 10 tourists this afternoon (17). The vehicle, carrying 16 passengers from Kerala, met with the accident while navigating the 13th hairpin bend on the Valparai-Pollachi main road. It is reported that the driver lost control of the steering, causing the van to veer off the road and plunge into a steep ravine. While 10 passengers died on the spot, six others sustained severe injuries and were rushed to government hospitals in Pollachi and Coimbatore with the help of local residents and the police. Medical sources indicate that some of the injured remain in critical condition. The Valparai police are currently investigating the circumstances surrounding this fatal incident.

KR TV Network
KR TV Lankan Voice
International News
மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து 10 சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு Reviewed by KR TV LANKAN VOICE on ஏப்ரல் 17, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.