நுவரெலியா மலர் கண்காட்சி கோலாகலமாக ஆரம்பம்; ஏப்ரல் வசந்த கால நிகழ்வு.
நுவரெலியா மலர் கண்காட்சி கோலாகலமாக ஆரம்பம்; ஏப்ரல் வசந்த கால நிகழ்வு.
நுவரெலியா மலர் கண்காட்சி கோலாகலமாக ஆரம்பம்; ஏப்ரல் வசந்த கால நிகழ்வு
நுவரெலியா மாநகர சபையின் ஏற்பாட்டில், ஏப்ரல் வசந்த கால நிகழ்வுகளின் ஒரு பகுதியாக நடத்தப்படும் பாரம்பரிய மலர் கண்காட்சி நுவரெலியா விக்டோரியா பூங்காவில் இன்று (17) கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்டச் செயலாளர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், நுவரெலியா மாநகர சபையின் பிரதி முதல்வர் கௌரவ சிவன்ஜோதி யோகராஜா அவர்கள் உள்ளிட்ட மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர ஆணையாளர், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு கண்காட்சியை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.
குறித்த மலர் கண்காட்சி இன்று (17) மற்றும் நாளை (18) ஆகிய இரு தினங்களுக்கு பொதுமக்கள் பார்வையிடுவதற்காகத் திறந்திருக்கும். மேலும், மலர் கண்காட்சிப் போட்டியில் பங்குபற்றுபவர்களுக்குக் கேடயங்களும் பணப் பரிசில்களும் வழங்கும் விசேட வைபவம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், பல வண்ண மலர்த் தொட்டிகள் பல்வேறு அலங்காரங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, குழந்தைகளையும் பார்வையாளர்களையும் மிகுதியாகக் கவரும் வகையில் பறவைகள், செல்லப் பிராணிகள் வடிவங்களில் அலங்கார வளைவுகள் மற்றும் செடிகளின் தோற்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மலர் கண்காட்சியைக் காண வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இவ்வாறு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் இங்கு வைக்கப்பட்டுள்ள மலர்ச் செடிகள், மலர் அலங்காரங்கள் மற்றும் மலரால் வடிவமைக்கப்பட்ட பல்வேறு உருவங்களைக் கண்டு ரசித்து வருகின்றனர்.
குறிப்பாக, மலர்கள் மூலம் அலங்காரம் செய்துள்ள பறவைகள் உருவங்களைப் பார்வையிட்ட சுற்றுலாப் பயணிகள் அதன் முன்பு நின்று புகைப்படமும் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். இதில் சிவப்பு மற்றும் வெள்ளை ரோஜாக்களைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்த மலர்ச் சிற்பங்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளன.
கே ஆர் டி வி நெட்வொர்க்
கே ஆர் டி வி லங்கன் வொய்ஸ்
உள்நாட்டுச் செய்தி
නුවරඑළිය මල් ප්රදර්ශනය උත්කර්ෂවත් අන්දමින් ආරම්භ වේ; අප්රේල් වසන්ත උද්යාන උත්සවය
Apr 17, 2026 - 06:12 pm
නුවරඑළිය මල් ප්රදර්ශනය උත්කර්ෂවත් අන්දමින් ආරම්භ වේ; අප්රේල් වසන්ත උද්යාන උත්සවය
නුවරඑළිය මහ නගර සභාවේ සංවිධානයෙන්, අප්රේල් වසන්ත උද්යාන උත්සවයේ අංගයක් ලෙස පවත්වනු ලබන සාම්ප්රදායික මල් ප්රදර්ශනය නුවරඑළිය වික්ටෝරියා උද්යානයේදී අද (17) උත්කර්ෂවත් අන්දමින් ආරම්භ කෙරිණි.
මෙම අවස්ථාවට නුවරඑළිය දිස්ත්රික් ලේකම්, පළාත් පාලන උප කොමසාරිස්, නුවරඑළිය මහ නගර සභාවේ නියෝජ්ය නගරාධිපති ගරු සිවන්ජෝති යෝගරාජා මහතා ඇතුළු නගර සභා මන්ත්රීවරුන්, නගර කොමසාරිස්, නිලධාරීන් සහ සේවකයින් ඇතුළු පිරිසක් සහභාගී වී ප්රදර්ශනය නිල වශයෙන් විවෘත කරන ලදී.
අදාළ මල් ප්රදර්ශනය අද (17) සහ හෙට (18) යන දෙදින තුළ මහජනතාවට නැරඹීම සඳහා විවෘතව පවතී. තවද මල් ප්රදර්ශන තරඟයට සහභාගී වන අයට කුසලාන සහ මුදල් ත්යාග පිරිනැමීමේ විශේෂ උත්සවයක්ද සංවිධානය කර ඇත.
සංචාරකයින් ආකර්ෂණය කර ගැනීම සඳහා, වර්ණවත් මල් පෝච්චි විවිධ සැරසිලි වලින් ප්රදර්ශනය කර ඇත. විශේෂයෙන්ම ළමයින් සහ නරඹන්නන් බෙහෙවින් ආකර්ෂණය වන පරිදි කුරුල්ලන්, සුරතල් සතුන්ගේ හැඩයෙන් යුත් සැරසිලි ආරුක්කු සහ පැලෑටි වල පෙනුම නිර්මාණය කර ඇත.
මෙම මල් ප්රදර්ශනය නැරඹීම සඳහා පිටස්තර දිස්ත්රික්කවලින් පමණක් නොව විදේශ රටවලින්ද විශාල සංචාරකයින් පිරිසක් පැමිණ සිටිති. මෙලෙස පැමිණෙන සංචාරකයින් මෙහි තබා ඇති මල් පැල, මල් සැරසිලි සහ මල්වලින් නිර්මාණය කර ඇති විවිධ රූප දැක බලා සතුටු වෙති.
විශේෂයෙන්ම මල් මගින් අලංකාර කර ඇති කුරුල්ලන්ගේ රූප නරඹන ලද සංචාරකයින් ඒ ඉදිරිපිට සිට ඡායාරූපද ගෙන සතුටු වෙති. මෙහි රතු සහ සුදු රෝස මල් යොදාගෙන නිර්මාණය කර තිබූ මල් ප්රතිමා සංචාරකයින්ගේ මහත් ආකර්ෂණයට ලක්විය.
කේ ආර් ටී වී නෙට්වර්ක්
කේ ආර් ටී වී ලංකන් වොයිස්
දේශීය පුවත්
Nuwara Eliya Flower Show Commences Grandly; April Spring Garden Festival
Apr 17, 2026 - 06:12 pm
Nuwara Eliya Flower Show Commences Grandly; April Spring Garden Festival
The traditional flower show, organized by the Nuwara Eliya Municipal Council as part of the April Spring Garden Festival events, was grandly commenced today (17) at the Nuwara Eliya Victoria Park.
Many dignitaries, including the Nuwara Eliya District Secretary, the Assistant Commissioner of Local Government, the Deputy Mayor of Nuwara Eliya Municipal Council, Hon. Sivanjothi Yogaraja, Municipal Council members, the Municipal Commissioner, officers, and staff, participated in the event and officially declared the exhibition open.
The respective flower show will be open for public viewing today (17) and tomorrow (18). Furthermore, a special ceremony has been organized to present trophies and cash prizes to those participating in the flower show competition.
To attract tourists, colorful flower pots are displayed in various decorations. Specifically, decorative arches in the shape of birds, pets, and the appearance of plants have been created, greatly attracting children and spectators.
A large number of tourists have come to see this flower show, not only from other districts but also from foreign countries. The tourists arriving in this manner are enjoying the flower plants, flower decorations, and various figures created with flowers kept here.
Specially, the tourists who viewed the figures of birds decorated with flowers are enjoying themselves by standing in front of them and taking photographs. The flower sculptures created using red and white roses in this exhibition greatly attracted the tourists.
KR TV Network
KR TV Lankan Voice
Local News
நுவரெலியா மலர் கண்காட்சி கோலாகலமாக ஆரம்பம்; ஏப்ரல் வசந்த கால நிகழ்வு.
Reviewed by KR TV LANKAN VOICE
on
ஏப்ரல் 17, 2026
Rating:
கருத்துகள் இல்லை: