Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

110 கோடி மதிப்பிலான போதைப்பொருளுடன் 22 தேரர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது


 110 கோடி மதிப்பிலான போதைப்பொருளுடன் 22 தேரர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது


கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான குஷ் மற்றும் ஹேஷ் வகை போதைப்பொருட்களுடன் 22 தேரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே இவர்கள் பிடிபட்டுள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.


கைது செய்யப்பட்டவர்கள் கொண்டு வந்த பயணப் பொதிகளில் பாடசாலை உபகரணங்கள் மற்றும் இனிப்புப் பண்டங்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 110 கிலோகிராமிற்கும் அதிக போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. ஒவ்வொருவரின் பயணப் பொதியிலும் தலா 5 கிலோகிராமிற்கும் அதிகமான போதைப்பொருள் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்கள் கடந்த 22ஆம் திகதி தாய்லாந்துக்குச் சென்று அங்கிருந்து நாடு திரும்பியுள்ளனர். கைதானவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளம் தேரர்கள் எனவும், இவர்கள் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


கே ஆர் டி வி நெட்வொர்க்

கே ஆர் டி வி லங்கன் வොய்ஸ்

உள்நாட்டுச் செய்தி


රුපියල් කෝටි 110ක මත්ද්‍රව්‍ය සමඟ හිමිවරුන් 22ක් කටුනායකදී අත්අඩංගුවට


රුපියල් කෝටි 110කට අධික වටිනාකමකින් යුත් කුෂ් (Kush) සහ හෑෂ් (Hash) මත්ද්‍රව්‍ය සමඟ හිමිවරුන් 22 දෙනෙකු කටුනායක ගුවන් තොටුපළේදී අත්අඩංගුවට ගෙන ඇත. ඊයේ (25) රාත්‍රියේ ගුවන් තොටුපළ පොලිස් මත්ද්‍රව්‍ය නාශක කාර්යාංශය විසින් සිදු කළ මෙහෙයුමකදී මෙම සැකකරුවන් අත්අඩංගුවට ගෙන තිබේ. පොලිස් මත්ද්‍රව්‍ය නාශක කාර්යාංශයට ලැබුණු බුද්ධි තොරතුරක් මත මෙම වැටලීම සිදු කර ඇත.


සැකකරුවන් රැගෙන ආ ගමන් මලු තුළ පාසල් උපකරණ සහ රසකැවිලි සමඟ සූක්ෂ්ම ලෙස සඟවා තිබූ මත්ද්‍රව්‍ය කිලෝග්‍රෑම් 110කට අධික ප්‍රමාණයක් සොයාගෙන ඇත. එක් හිමි නමකගේ ගමන් මල්ලක මත්ද්‍රව්‍ය කිලෝග්‍රෑම් 5කට වඩා තිබී ඇති බව සඳහන් වේ. මෙම පිරිස පසුගිය 22 වැනිදා තායිලන්තයට ගොස් ඇති අතර, ඔවුන් එහිදී ගිහි ඇඳුමින් සිටි ඡායාරූප සහ වීඩියෝ ද ඔවුන්ගේ ජංගම දුරකථනවල තිබී පොලිසිය සොයාගෙන ඇත. සැකකරුවන් අද (26) මීගමුව මහේස්ත්‍රාත් අධිකරණයට ඉදිරිපත් කිරීමට නියමිතය.


කේ ආර් ටී වී නෙට්වර්ක්

කේ ආර් ටී වී ලංකන් වොයිස්

දේශීය පුවත්


22 Monks arrested at Katunayake Airport with Narcotics worth Rs. 1.1 Billion


Twenty-two Buddhist monks were arrested at the Katunayake International Airport with Kush and Hashish narcotics valued at over Rs. 1.1 billion. The suspects were apprehended last night (25) during a special operation conducted by the Airport Police Narcotics Bureau based on intelligence reports. This marks the largest drug seizure in the history of Katunayake Airport involving a group of monks.


Authorities recovered over 110 kilograms of narcotics concealed in false bottoms of suitcases containing school supplies and sweets. Each monk reportedly carried over 5 kilograms of drugs. Investigations revealed that the group had traveled to Thailand on April 22. Police found photos and videos on their mobile phones showing the suspects in civilian clothing during their stay abroad. The arrested monks, who are reportedly young students from various parts of the island, are scheduled to be produced before the Negombo Magistrate's Court today (26).


KR TV Network

KR TV Lankan Voice

Domestic News


26/04/2026. #பர்ஹானா_பதுறுதீன்

110 கோடி மதிப்பிலான போதைப்பொருளுடன் 22 தேரர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது Reviewed by KR TV LANKAN VOICE on ஏப்ரல் 26, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.