ஏறாவூர் பற்று பிரதேச சபைக்கு 16,000 லீட்டர் கொள்ளளவு கொண்ட புதிய குடிநீர் பவுசர் கையளிப்பு
ஏறாவூர் பற்று பிரதேச சபைக்கு 16,000 லீட்டர் கொள்ளளவு கொண்ட புதிய குடிநீர் பவுசர் கையளிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக குடிநீர்த் தட்டுப்பாட்டினை எதிர்கொள்ளும் மக்களுக்கு உதவும் வகையில், ஏறாவூர் பற்று பிரதேச சபைக்கு 16,000 லீட்டர் கொள்ளளவு கொண்ட புதிய குடிநீர் பவுசர் ஒன்று இன்று (21) வழங்கி வைக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் வழிகாட்டுதலின் கீழ், புதிய மாவட்ட செயலகத்தில் வைத்து அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம். சியாத் இதனை உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வறட்சியினால் அதிகம் பாதிக்கப்படும் பிரதேசங்களில் ஒன்றாக ஏறாவூர் பற்று காணப்படுவதைக் கருத்திற்கொண்டு, அனர்த்த நிவாரண சேவை நிலையத்தினால் இப் பவுசர் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வறட்சி நிலவும் காலப்பகுதிகளில் பொதுமக்களுக்கான குடிநீர் விநியோகத்தை மிகவும் வினைத்திறனுடன் முன்னெடுக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்வில் மாவட்ட நிவாரண சேவை உத்தியோகத்தர் எம். சுரேஸ்குமார், அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள் மற்றும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
கே ஆர் டி வி நெட்வொர்க்
கே ஆர் டி வி லங்கன் வொய்ஸ்
உள்நாட்டுச் செய்தி
එරාවුර් පත්තු ප්රාදේශීය සභාවට ලීටර් 16,000 ක ජල බවුසරයක් ප්රදානය කෙරේ
මඩකලපුව දිස්ත්රික්කයේ පවතින නියඟය හේතුවෙන් පානීය ජල හිඟයකට මුහුණ දී සිටින ජනතාවට සහනයක් සැලසීම සඳහා එරාවුර් පත්තු ප්රාදේශීය සභාව වෙත ලීටර් 16,000 ක ධාරිතාවයකින් යුත් නව ජල බවුසරයක් අද (21) ලබා දෙන ලදී. මඩකලපුව දිස්ත්රික් ලේකම්වරයාගේ මගපෙන්වීම යටතේ නව දිස්ත්රික් ලේකම් කාර්යාලයේදී ආපදා කළමනාකරණ මධ්යස්ථානයේ නියෝජ්ය අධ්යක්ෂ ඒ.එස්.එම්. සියාත් මහතා විසින් මෙය නිල වශයෙන් භාර දෙන ලදී.
මඩකලපුව දිස්ත්රික්කයේ නියඟයෙන් වැඩිපුරම පීඩාවට පත්වන ප්රදේශයක් වන එරාවුර් පත්තු ප්රදේශයේ ජල බෙදා හැරීමේ කටයුතු වඩාත් කාර්යක්ෂම කිරීමට ආපදා සහන සේවා මධ්යස්ථානය මගින් මෙම බවුසරය ලබා දී ඇත. මෙම අවස්ථාවට දිස්ත්රික් සහන සේවා නිලධාරී එම්. සුරේෂ් කුමාර් මහතා ඇතුළු නිලධාරීන් පිරිසක් සහභාගී වූහ.
කේ ආර් ටී වී නෙට්වර්ක්
කේ ආර් ටී වී ලංකන් වොයිස්
දේශීය පුවත්
16,000-Liter Water Bowser Handed Over to Eravur Pattu Pradeshiya Sabha
Under the guidance of the Batticaloa District Secretary, a new water bowser with a capacity of 16,000 liters was handed over to the Eravur Pattu Pradeshiya Sabha today (21) at the New District Secretariat. The bowser was officially presented by the Deputy Director of the Disaster Management Center (DMC), A.S.M. Siyath, to facilitate water supply during drought periods.
Eravur Pattu is identified as one of the areas most affected by drought in the Batticaloa district. This donation by the Disaster Relief Service Center aims to ensure efficient drinking water distribution to the affected public. District Relief Service Officer M. Sureshkumar, officials from the Disaster Management Center, and staff from the Eravur Pattu Pradeshiya Sabha were present at the event.
KR TV Network
KR TV Lankan Voice
Local News
Reviewed by KR TV LANKAN VOICE
on
ஏப்ரல் 21, 2026
Rating:



கருத்துகள் இல்லை: