அஸ்வசும நலன்புரி உதவிகள் தகுதியானவர்களுக்கு கிடைப்பதை உறுதிப்படுத்துங்கள்; மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கண்டிப்பான பணிப்புரை
அஸ்வசும நலன்புரி உதவிகள் தகுதியானவர்களுக்கு கிடைப்பதை உறுதிப்படுத்துங்கள்; மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கண்டிப்பான பணிப்புரை
மட்டக்களப்பு மாவட்டத்தில் அஸ்வசும நலன்புரித் திட்டத்தின் முன்னேற்றம் குறித்த மீளாய்வுக் கூட்டம், மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் தலைமையில் இன்று (21) பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் இத்திட்டத்தின் தற்போதைய நிலை மற்றும் தொழில்நுட்ப ரீதியான முன்னேற்றங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
இக்கூட்டத்தில் உரையாற்றிய அரசாங்க அதிபர், அரச செயற்திட்டங்களை மிகவும் வினைத்திறனுடன் முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். குறிப்பாக, அஸ்வசும உதவிகள் உண்மையாகவே தகுதியுடைய நபர்களுக்குச் சென்றடைவதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும், எக்காரணம் கொண்டும் தகுதியற்றவர்களுக்கு இவ்வுதவிகள் வழங்கப்படக் கூடாது என்றும் அவர் அதிகாரிகளுக்குக் கடுமையான பணிப்புரை விடுத்தார். மக்களின் நலன் சார்ந்த இத்திட்டத்திற்கு முன்னுரிமை அளித்து, அதனை நடைமுறைப்படுத்துவதில் ஏற்படும் சவால்கள் மற்றும் தொழில்நுட்பப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், பயனாளிகளின் தரவுகளைத் துரித கதியில் இற்றைப்படுத்துமாறும் (Update), மக்களின் நலனில் அதிக கவனம் செலுத்துமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட அஸ்வசும இணைப்பாளர் கே. விமலநாதன், உதவி பிரதேச செயலாளர்கள், தகவல் தொழில்நுட்ப உத்தியோகத்தர் திருமதி கே. லக்சிகா மற்றும் நலன்புரி நன்மைகள் பிரிவு உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
கே ஆர் டி வி நெட்வொர்க்
கே ஆர் டி வி லங்கன் வொய்ஸ்
உள்நாட்டுச் செய்தி
මඩකලපුව දිස්ත්රික්කයේ අස්වැසුම සුබසාධන ප්රතිලාභ වැඩසටහනේ ප්රගතිය සමාලෝචනය කිරීමේ රැස්වීමක් මඩකලපුව දිස්ත්රික් ලේකම් ජේ.එස්. අරුල්රාජ් මහතාගේ ප්රධානත්වයෙන් අද (21) පැවැත්විණි. අතිරේක දිස්ත්රික් ලේකම් සුදර්ශනී ශ්රීකාන්ත් මහත්මියගේ මෙහෙයවීමෙන් පැවති මෙම සාකච්ඡාවේදී දිස්ත්රික්කයේ ප්රාදේශීය ලේකම් කොට්ඨාස 14 හි ව්යාපෘති ප්රගතිය සහ තාක්ෂණික මට්ටම පිළිබඳව දීර්ඝ ලෙස අවධානය යොමු කෙරිණි.
මෙහිදී අදහස් දැක්වූ දිස්ත්රික් ලේකම්වරයා අවධාරණය කළේ රජයේ ව්යාපෘති කාර්යක්ෂමව ක්රියාත්මක කළ යුතු බවත්, අස්වැසුම ආධාර සැබෑ ලෙසම සුදුස්සන්ට පමණක් ලැබෙන බව තහවුරු කළ යුතු බවත්ය. නුසුදුසු පුද්ගලයන්ට මෙම ප්රතිලාභ ලබා නොදීමට වගබලා ගන්නා ලෙස ඔහු නිලධාරීන්ට දැඩිව උපදෙස් දුන්නේය. ජනතා සුබසාධනය උදෙසා ක්රියාත්මක මෙම වැඩසටහනට ප්රමුඛතාවය ලබා දෙන ලෙසත්, දත්ත පද්ධති කඩිනමින් යාවත්කාලීන කරන ලෙසත් මෙහිදී වැඩිදුරටත් උපදෙස් දෙන ලදී.
කේ ආර් ටී වී නෙට්වර්ක්
කේ ආර් ටී වී ලංකන් වොයිස්
දේශීය පුවත්
A progress review meeting on the Aswesuma Welfare Benefit Scheme in the Batticaloa District was held today (21) at the Old District Secretariat, presided over by District Secretary J.S. Arulraj. Organized by Additional District Secretary Sudarshini Srikanth, the meeting assessed the progress and technical updates of the project across the 14 Divisional Secretariat divisions in the district.
Addressing the officials, the District Secretary emphasized the need for efficient implementation of government projects. He strictly directed that Aswesuma benefits must reach the deserving individuals and instructed officials to ensure that ineligible persons are excluded from the scheme. He also called for the prioritization of public welfare tasks and the urgent updating of beneficiary data. Several officials, including Assistant Divisional Secretaries and IT specialists, participated in the event.
அஸ்வசும நலன்புரி உதவிகள் தகுதியானவர்களுக்கு கிடைப்பதை உறுதிப்படுத்துங்கள்; மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கண்டிப்பான பணிப்புரை
Reviewed by KR TV LANKAN VOICE
on
ஏப்ரல் 21, 2026
Rating:
Reviewed by KR TV LANKAN VOICE
on
ஏப்ரல் 21, 2026
Rating:





கருத்துகள் இல்லை: