மக்கள் வங்கி, இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி ஆகியவற்றின் 2025 வருடாந்த அறிக்கைகள் ஜனாதிபதியிடம் கையளிப்பு
மக்கள் வங்கி, இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி ஆகியவற்றின் 2025 வருடாந்த அறிக்கைகள் ஜனாதிபதியிடம் கையளிப்பு
இலங்கையின் முன்னணி அரச வங்கிகளான மக்கள் வங்கி, இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி ஆகியன தமது வரலாற்றில் இதுவரையில் இல்லாத அளவிலான அதிகூடிய லாபத்தை 2025 ஆம் நிதியாண்டில் ஈட்டியுள்ளன. இவ்வங்கிகளின் 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கைகள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் இன்று (20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அந்தந்த வங்கிகளின் தலைவர்களால் கையளிக்கப்பட்டன.
அரசாங்கத்தின் முறையான பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் உயரிய நிதி ஒழுக்கத்தைப் பின்பற்றியதாலேயே இந்த வரலாற்றுச் சாதனையை எட்ட முடிந்ததாக வங்கித் தலைவர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர். மக்கள் வங்கியின் தலைவர் பேராசிரியர் நாரத பெர்னாண்டோ, இலங்கை வங்கியின் தலைவர் காவிந்த டி சொய்சா மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் தலைவர் கலாநிதி ஹர்ஷ கப்ரால் ஆகியோர் இந்த அறிக்கைகளை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தனர்.
வங்கிகளின் நிதிச் சாதனை விபரங்கள் பின்வருமாறு:
* மக்கள் வங்கி: தனது வரலாற்றில் ஈட்டிய அதிகூடிய லாபத்தைப் பதிவு செய்துள்ளது. வரிக்கு முந்தைய லாபம் 64.4 பில்லியன் ரூபாவாகவும், வரிக்குப் பிந்தைய நிகர லாபம் 40 பில்லியன் ரூபாவாகவும் அமைந்துள்ளது.
* இலங்கை வங்கி: 87 வருட கால வரலாற்றில் அதிகூடிய லாபத்தை ஈட்டியுள்ளது. வரிக்கு முந்தைய லாபம் 120.8 பில்லியன் ரூபாவாகும். அத்துடன், வரிகளாக 77 பில்லியன் ரூபாவை அரசாங்கத்திற்கு இவ்வங்கி செலுத்தியுள்ளது.
* தேசிய சேமிப்பு வங்கி: வரிக்கு முன்னர் 59 பில்லியன் ரூபா லாபத்தைப் பெற்றுள்ளதுடன், அரசாங்கத்தின் திறைசேரிக்கு லாபப் பங்காக 6 பில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது.
இந்த வெற்றியின் பின்னணியில் வங்கி ஊழியர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய ஒத்துழைப்பு மிக முக்கியமானது என வங்கித் தலைவர்கள் பாராட்டுத் தெரிவித்தனர். இந்நிகழ்வில் பிரதி நிதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் வங்கிகளின் உயர்மட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
රාජ්ය බැංකු ඓතිහාසික ජයග්රහණයක් ලබයි; 2025 වාර්ෂික වාර්තා ජනපතිට පිළිගන්වයි
මහජන බැංකුව, ලංකා බැංකුව සහ ජාතික ඉතිරි කිරීමේ බැංකුව සිය ඉතිහාසයේ මෙතෙක් ලැබූ වැඩිම ලාභය 2025 වසරේදී වාර්තා කර තිබේ. මෙම බැංකුවල 2025 වාර්ෂික වාර්තා ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා වෙත අද (20) පස්වරුවේ ජනාධිපති කාර්යාලයේදී පිළිගන්වනු ලැබීය.
රජයේ නිසි මූල්ය ප්රතිපත්ති සහ සැලසුම් සහගත මූල්ය විනයක් අනුගමනය කිරීම මෙම සුවිශේෂී ජයග්රහණයට හේතු වූ බව බැංකු සභාපතිවරු මෙහිදී පෙන්වා දුන්හ.
බැංකු ලැබූ මූල්ය ප්රගතිය පහත පරිදි වේ:
* මහජන බැංකුව: ඉතිහාසයේ මෙතෙක් ලැබූ වැඩිම ලාභය වාර්තා කර ඇත. එය බදු පෙර ලාභය බිලියන 64.4ක් වන අතර බදු පසු ලාභය බිලියන 40කි.
* ලංකා බැංකුව: වසර 87ක ඉතිහාසයේ වැඩිම ලාභය ලැබීමට සමත් වී ඇත. බදු පෙර ලாභය බිලියන 120.8ක් වන අතර රජයට බදු ලෙස බිලියන 77ක් ගෙවා තිබේ.
* ජාතික ඉතිරි කිරීමේ බැංකුව: සියලු බදුවලට පෙර බිලියන 59ක ඉහළම ලාභයක් ලබා ඇති අතර රජයේ මහා භාණ්ඩාගාරයට බිලියන 6ක ලාභාංශ ලබා දී ඇත.
මෙම ජයග්රහණ සඳහා කාර්ය මණ්ඩලය ලබා දුන් සහායද බැංකු ප්රධානීහු මෙහිදී අගය කළහ. මෙම අවස්ථාවට නියෝජ්ය මුදල් අමාත්ය ආචාර්ය අනිල් ජයන්ත ප්රනාන්දු මහතා ඇතුළු ජ්යෙෂ්ඨ නිලධාරීන් පිරිසක් එක්ව සිටියහ.
State Banks Achieve Record Profits; 2025 Annual Reports Presented to the President
The People’s Bank, Bank of Ceylon (BOC), and National Savings Bank (NSB) have recorded their highest-ever profits in history for the financial year 2025. The 2025 Annual Reports of these banks were presented to President Anura Kumara Dissanayake at the Presidential Secretariat this afternoon (20).
The Chairpersons of the respective banks attributed these historic achievements to the implementation of government policies in a well-planned manner and maintaining a high degree of financial discipline.
Key financial highlights are as follows:
* People’s Bank: Recorded its highest-ever profit in history, with a pre-tax profit of Rs. 64.4 billion and a post-tax profit of Rs. 40 billion.
* Bank of Ceylon: Achieved its highest profit in its 87-year history, recording a pre-tax profit of Rs. 120.8 billion. The bank contributed Rs. 77 billion to the government as taxes.
* National Savings Bank: Registered a record pre-tax profit of Rs. 59 billion and contributed Rs. 6 billion in dividends to the Treasury.
The bank heads acknowledged the exceptional support and commitment extended by their staff in attaining these results. The event was attended by Deputy Minister of Finance Dr. Anil Jayantha Fernando, Ministry Secretary Dr. Harshana Sooriyaapperuma, and other senior banking officials.
KR TV Network
KR TV Lankan Voice
Local News
மக்கள் வங்கி, இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி ஆகியவற்றின் 2025 வருடாந்த அறிக்கைகள் ஜனாதிபதியிடம் கையளிப்பு
Reviewed by KR TV LANKAN VOICE
on
ஏப்ரல் 20, 2026
Rating:
Reviewed by KR TV LANKAN VOICE
on
ஏப்ரல் 20, 2026
Rating:



கருத்துகள் இல்லை: