Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

காத்தான்குடி ஹஜ் பெண் யாத்திரிகர்களுக்கான விசேட வழியனுப்பு நிகழ்வு; 42 சகோதரிகள் பங்கேற்பு


 காத்தான்குடி ஹஜ் பெண் யாத்திரிகர்களுக்கான விசேட வழியனுப்பு நிகழ்வு; 42 சகோதரிகள் பங்கேற்பு


இவ்வருடம் காத்தான்குடியிலிருந்து புனித ஹஜ் பயணத்தை மேற்கொள்கின்ற பெண்களுக்கான பொது வழியனுப்பு நிகழ்வு, நேற்று (24) பிற்பகல் 4.00 மணியளவில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. ஆய்வுக்கும் மேம்பாட்டிற்குமான இஸ்லாமிய மகளிர் ஒன்றியம் (IWARE) இதனை ஏற்பாடு செய்திருந்ததுடன், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் இதற்கான அனுசரணையினை வழங்கியிருந்தது.


IWARE அமைப்பின் தலைவி ஆசிரியை அனீஸா ஃபிர்தவ்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், 'ஹஜ் - ஓர் ஆன்மீகப் பயணம்' என்ற தலைப்பில் அஷ்ஷேக். MSM. நுஸ்ரி (நளீமி) அவர்கள் சிறப்புரையினை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து, ஹஜ் பயணத்தின் போது பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை சார்ந்த ஆலோசனைகளை மௌலவியா ஸில்மியா தாரிக் அவர்கள் வழங்கினார்.


இவ்வருடம் காத்தான்குடி மண்ணிலிருந்து ஹஜ் பயணத்தை மேற்கொள்ளவுள்ள 42 சகோதரிகள் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டதுடன், அவர்களை வழியனுப்பி வைப்பதற்காக ஊரின் பல பாகங்களிலிருந்தும் நூற்றுக்கணக்கான சகோதரிகள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


கே ஆர் டி வி நெட்வொர்க்

கே ஆர் டி வி லங்கன் வொய்ஸ்

உள்நாட்டுச் செய்தி



කාත්තාන්කුඩියේ සිට හජ් වන්දනාව සඳහා පිටත්ව යන කාන්තාවන් වෙනුවෙන් විශේෂ සමුගැනීමේ උත්සවයක්


මෙවර කාත්තාන්කුඩියේ සිට ශුද්ධ වූ හජ් වන්දනාව සඳහා පිටත්ව යන කාන්තාවන් වෙනුවෙන් සංවිධානය කරන ලද විශේෂ සමුගැනීමේ උත්සවයක් ඊයේ (24) පස්වරුවේ කාත්තාන්කුඩි හිස්බුල්ලා ශාලාවේදී පැවැත්විණි. ඉස්ලාමීය කාන්තා පර්යේෂණ හා සංවර්ධන සංගමය (IWARE) විසින් මෙය සංවිධානය කර තිබූ අතර කාත්තාන්කුඩි පල්ලි සහ මුස්ලිම් ආයතන සම්මේලනය මේ සඳහා අනුග්‍රහය දක්වන ලදී.


IWARE සංවිධානයේ සභාපතිනී අනීසා ෆිර්දවුස් මහත්මියගේ ප්‍රධානත්වයෙන් පැවති මෙම උත්සවයේදී 'හජ් - අධ්‍යාත්මික ගමනක්' යන තේමාව යටතේ අෂ්ෂෙයික් එම්.එස්.එම්. නුස්රි (නලීමි) මහතා විශේෂ දේශනයක් පැවැත්වීය. අනතුරුව හජ් වන්දනාවේදී කාන්තාවන් අනුගමනය කළ යුතු ප්‍රායෝගික කරුණු පිළිබඳව මවුලවියා සිල්මියා තාරික් මහත්මිය විසින් උපදෙස් ලබා දෙන ලදී.


මෙවර හජ් වන්දනාව සඳහා කාත්තාන්කුඩියෙන් තේරී පත්වී ඇති සහෝදරියන් 42 කු මෙම අවස්ථාවට සහභාගී වූ අතර ඔවුන්ට සුබ පැතීම සඳහා ප්‍රදේශයේ කාන්තාවන් සිය ගණනක් පැමිණ සිටියහ.


කේ ආර් ටී වී නෙට්වර්ක්

කේ ආර් ටී වී ලංකන් වොයිස්

දේශීය පුවත්



Farewell Ceremony for Female Hajj Pilgrims Held in Kattankudy


A special farewell ceremony for women departing from Kattankudy for the holy Hajj pilgrimage this year was held yesterday (24) at the Kattankudy Hizbullah Hall. Organized by the Islamic Women's Association for Research and Development (IWARE), the event was sponsored by the Federation of Kattankudy Mosques and Muslim Institutions.


Chaired by IWARE President Teacher Aneesa Firdous, the event featured a keynote address titled 'Hajj - A Spiritual Journey' by Ash-Sheikh M.S.M. Nusri (Naleemi). Furthermore, Maulavia Silmiya Tariq provided practical guidance and instructions for women to follow during their pilgrimage.


Forty-two sisters from the locality who are performing Hajj this year participated in the ceremony, while hundreds of other women from the area attended to see them off and offer their blessings.


KR TV Network

KR TV Lankan Voice

Local News

காத்தான்குடி ஹஜ் பெண் யாத்திரிகர்களுக்கான விசேட வழியனுப்பு நிகழ்வு; 42 சகோதரிகள் பங்கேற்பு Reviewed by KR TV LANKAN VOICE on ஏப்ரல் 25, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.