Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

கொழும்பு புறநகர் ரயில் சேவையை மேம்படுத்த மின்சார ரயில் திட்டம்: ஜனாதிபதி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்


 கொழும்பு புறநகர் ரயில் சேவையை மேம்படுத்த மின்சார ரயில் திட்டம்: ஜனாதிபதி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்


கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் ரயில்வே சேவையை நவீனமயப்படுத்துவது மற்றும் மின்சார ரயில் சேவையை அறிமுகப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகளுக்கு இடையில் இன்று (29) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இத்திட்டத்தின் கீழ், மின்சார ரயில் சேவையை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.


முதற்கட்டமாக, களனிவெளி பாதையில் மருதானையிலிருந்து மாகும்புர வரையும், பிரதான பாதையில் கொழும்பு கோட்டையிலிருந்து ராகம வரையும், கரையோரப் பாதையில் கொழும்பு கோட்டையிலிருந்து பாணந்துறை வரையும் இச்சேவையைச் செயற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்காக தற்போதுள்ள ரயில் தண்டவாளங்களை நியமப் பாதைகளாக (Standard Gauge) புனரமைப்பது குறித்தும், நிதி வசதிகளைப் பெற்றுக்கொள்வது மற்றும் எதிர்கொள்ளக்கூடிய சவால்கள் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.


கே ஆர் டி வி நெட்வொர்க்

கே ஆர் டி வி லங்கன் வொய்ஸ்

உள்நாட்டுச் செய்தி


කොළඹ තදාසන්න දුම්රිය සේවය නවීකරණයට විදුලි දුම්රිය ව්‍යාපෘතියක්: ජනාධිපතිතුමාගේ ප්‍රධානත්වයෙන් සාකච්ඡා


කොළඹ තදාසන්න ප්‍රදේශවල දුම්රිය සේවය නව මුහුණුවරකින් යුතුව සංවර්ධනය කිරීම සහ විදුලි දුම්රිය සේවාවක් හඳුන්වා දීම පිළිබඳ විශේෂ සාකච්ඡාවක් ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා සහ ප්‍රවාහන අමාත්‍යාංශයේ නිලධාරීන් අතර අද (29) පෙරවරුවේ ජනාධිපති ලේකම් කාර්යාලයේදී පැවැත්විණි. මෙම ව්‍යාපෘතිය යටතේ ලබන වසරේ මුල් භාගයේදී විදුලි දුම්රිය සේවාව ආරම්භ කිරීමට සැලසුම් කර ඇත.


මෙහි පළමු අදියර යටතේ කැලණිවැලි දුම්රිය මාර්ගයේ මරදානේ සිට මාකුඹුර දක්වා ද, ප්‍රධාන දුම්රිය මාර්ගයේ කොළඹ කොටුවේ සිට රාගම දක්වා ද, මුහුදුබඩ දුම්රිය මාර්ගයේ කොළඹ කොටුවේ සිට පානදුර දක්වා ද මෙම සේවාව ක්‍රියාත්මක කිරීමට යෝජිතය. පවතින දුම්රිය මාර්ග සම්මත මිනුම් දුම්රිය මාර්ග (Standard Gauge) ලෙස ප්‍රතිසංස්කරණය කිරීම සහ ඒ සඳහා අවශ්‍ය මූල්‍ය පහසුකම් සපයා ගැනීම පිළිබඳව ද මෙහිදී දීර්ඝ වශයෙන් සාකච්ඡා විය.


කේ ආර් ටී වී නෙට්වර්ක්

කේ ආර් ටී වී ලංකන් වොයිස්

දේශීය පුවත්


Electric Train Service to launch in Colombo Suburbs: Plans discussed under Presidential Patronage


A special discussion regarding the modernization of railway services in suburban Colombo and the introduction of electric train services was held today (29) at the Presidential Secretariat, chaired by President Anura Kumara Dissanayake and officials from the Ministry of Transport. Under the Colombo Suburban Railway Project, the electric train service is scheduled to commence at the beginning of next year.


In the first phase, the project is proposed to operate from Maradana to Makumbura on the Kelani Valley line, Colombo Fort to Ragama on the Main Line, and Colombo Fort to Panadura on the Coastal Line. Discussions also focused on upgrading existing railway tracks to standard gauge tracks and addressing financial requirements and implementation challenges for the project.


KR TV Network

KR TV Lankan Voice

Domestic News

கொழும்பு புறநகர் ரயில் சேவையை மேம்படுத்த மின்சார ரயில் திட்டம்: ஜனாதிபதி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் Reviewed by KR TV LANKAN VOICE on ஏப்ரல் 29, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.