கைத்துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில்
கைத்துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் பெரியவிளான் பகுதியில் நிலவிய காணிப் பிணக்கு காரணமாக, கடந்த 25ஆம் திகதி இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தனது கைத்துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தியிருந்தார். இச்சம்பவம் தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியதை அடுத்து, இளவாலை பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இன்று (29) மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்தது. அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கும் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
கே ஆர் டி வி நெட்வொர்க்
கே ஆர் டி வி லங்கன் வொய்ஸ்
உள்நாட்டுச் செய்தி
ගිනි අවියක් පෙන්වා තර්ජනය කළ මන්ත්රී අර්ජුන ඇප මත නිදහස්
ගිනි අවියක් පෙන්වා පුද්ගලයෙකුට තර්ජනය කිරීමේ චෝදනාව මත අත්අඩංගුවට ගෙන රක්ෂිත බන්ධනාගාර ගත කර සිටි පාර්ලිමේන්තු මන්ත්රී රාමනාදන් අර්ජුන මහතා ඇප මත නිදහස් කර තිබේ. යාපනය පෙරියවිලාන් ප්රදේශයේ ඉඩම් ආරවුලක් හේතුවෙන් පසුගිය 25 වනදා දෙපිරිසක් අතර ඇති වූ ගැටුමකදී මන්ත්රීවරයා ගිනි අවියක් පෙන්වා තර්ජනය කරන අයුරු දැක්වෙන වීඩියෝ දර්ශන සමාජ මාධ්ය ඔස්සේ සංසරණය විය.
එම සිද්ධිය සම්බන්ධයෙන් ඉලවාලෙයි පොලිසිය විසින් මන්ත්රීවරයා අත්අඩංගුවට ගෙන අධිකරණයට ඉදිරිපත් කිරීමෙන් අනතුරුව රක්ෂිත බන්ධනාගාර ගත කර සිටියේය. අද (29) මල්ලාකම් මහේස්ත්රාත් අධිකරණය හමුවට ඉදිරිපත් කිරීමෙන් පසු රුපියල් ලක්ෂ 5 බැගින් වූ ශරීර ඇප දෙකක් සහ රුපියල් 20,000 ක මුදල් ඇප මත ඔහුව නිදහස් කිරීමට නියෝග කෙරිණි. මන්ත්රීවරයාට පහරදීමේ චෝදනාව මත අත්අඩංගුවට ගෙන සිටි කාන්තාවකට ද අධිකරණය ඇප ලබා දී ඇත.
කේ ආර් ටී වී නෙට්වර්ක්
කේ ආර් ටී වී ලංකන් වොයිස්
දේශීය පුවත්
MP Arjuna Ramanathan released on Bail after threatening with a firearm
Member of Parliament Ramanathan Arjuna, who was arrested and remanded for threatening an individual with a firearm, has been released on bail. The incident occurred on the 25th during a clash over a land dispute in the Periyavilan area of Jaffna. Videos circulating on social media showed the MP pulling out a firearm and threatening others involved in the dispute.
Following investigations, the Ilavalai Police arrested MP Arjuna, and he was subsequently remanded by the court. Upon being presented before the Mallakam Magistrate’s Court today (29), he was granted bail with two surety bails of Rs. 500,000 each and a cash bail of Rs. 20,000. The court also granted bail to a woman who was arrested and remanded for allegedly assaulting the Member of Parliament during the same incident.
KR TV Network
KR TV Lankan Voice
Domestic News
Reviewed by KR TV LANKAN VOICE
on
ஏப்ரல் 29, 2026
Rating:

கருத்துகள் இல்லை: