Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

காத்தான்குடி கல்வி வளர்ச்சியிலும் கலைப்பிரிவில் அசைக்க முடியாத ஆளுமைகளில் ஒருவர் –ஆசிரியயை திருமதி சறோஜினிதேவி மகேந்திரன் அவர்கள் கல்விப் பணியில் இருந்து ஓய்வு பெறுகின்றார்


காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலைக்கு மாத்திரமின்றி காத்தான்குடி மத்திய கல்லூரியின் கல்வி வளர்ச்சியிலும் கலைப்பிரிவில் அசைக்க முடியாத ஆளுமைகளில் ஒருவர் –ஆசிரியயை  திருமதி சறோஜினிதேவி மகேந்திரன் அவர்கள் கல்விப் பணியில் இருந்து ஓய்வு பெறுகின்றார் .


யாழ் பல்கலைக்கழக கலைப் பட்டதாரியான இவர் 1995 முதல் இன்று வரை உயர்தர கலைப் பிரிவில் தமிழ் பாடத்தை கற்பித்தவர். இதுவரை 29 Batch  உயர்தர மாணவர்கள் இவரிடம்  தமிழ் கற்று வெளியேறியுள்ளனர்.


28 வருடங்கள் க.பொ.த.சாதாரணதர மாணவர்களுக்கும் தமிழ், தமிழ் இலக்கிய நயம் பாடங்களைக் கற்பித்தார்


காத்தான்குடியில் மட்டும் 12 மாணவர்கள் வழக்கறிஞர்களாகவும் சட்டத்துறை மாணவர்களாக வும் உள்ளனர். 


(இர்ஹாம், ஹக்கீமா போன்றோர்)  மேலும்  பல மாணவர்கள் பல்வேறு பதவிநிலைகளிலும் உள்ளனர்
(றிஷாத் Engineer  தென்கிழக்கு பல்கலைக்கழகம்,  Dr. இம்ரான், DR. அம்ஜத், Dr. அஜ்வத்,  AGM.ஹக்கீம்,  றஸுல்ஸா , அஸாம் போன்றோர்)


முதல் நியமனம் காத்தான்குடி மத்திய கல்லூரி  இதில் 15 ஆண்டுகள் கல்விப் பணியைத் தொடர்நதார் பின்னர் சிவானந்தா தேசிய பாடசாலை.  11 ஆண்டுகள் கற்பித்தார்.

2021  முதல் -  2026 04- 01 வரை மீரா பாலிகா தேசிய பாடசாலை - 5 ஆண்டுகள் கற்பித்தல் பணியில் ஈடுபட்டார்.


எமது பாடசாலையின் கலைப் பிரிவின் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றினார்.

எமது ஊரின் கல்வி வளர்ச்சியில் எமது ஆசிரியரின் கற்பித்தல்  மற்றும் வழிகாட்டுதலில் பல நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்விக் கல்லூரிகளில் பட்டம் பெற்று சட்டத்தரணிகளாகவும் கல்வி நிர்வாகிகளாகவும் அதிபர்களாகவும்ஆசியர்களாகவும்மற்றும் முகாமையாளர்களாகவும் கடமையாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


எமது ஊரின் கல்விவளர்ச்சியில் இலைமறை காயாக பல அதிபர்களின் வெற்றிச் செயற்பாடுகளுக்கு பங்காற்றியவர் எமது ஆசான் என்றால் அது மிகையாகாது.


ஒழுக்கம் பண்பாடு விழுமியங்கள் பற்றி போதிப்பதும் மாணவர்களை வழிப்படுத்துவதும் அவரின் சிறப்பம்சமாகும்.
கல்வி இஅரசியல் மற்றும் சமூகப் பற்றிய தெளிவான பார்வை அவருக்கே உரியதாகும்.


இன்று எமது ஆசிரியர் ஓய்வு பெறுவதை முன்னிட்டு மீரா பாலிகா தேசிய பாடசாலையில் திங்கள் (06) காலை ஒன்று கூடலின் போது   விசேட உரை ஒன்றை நடாத்தியதுடன் அதிபர் ஆசிரியர்கள் மாணவிகள் பாடசாலை  அபிவிருத்தி சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்கம் என்பன இணைந்து எமது ஆசிரியருக்கு விசேட கெளரவம் வழங்கினர்.
 
இப்படிக்கு.
ஊடகப் பிரிவு 
காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை
காத்தான்குடி
காத்தான்குடி கல்வி வளர்ச்சியிலும் கலைப்பிரிவில் அசைக்க முடியாத ஆளுமைகளில் ஒருவர் –ஆசிரியயை திருமதி சறோஜினிதேவி மகேந்திரன் அவர்கள் கல்விப் பணியில் இருந்து ஓய்வு பெறுகின்றார் Reviewed by www.lankanvoice.lk on ஏப்ரல் 08, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.