Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

தமிழக சட்டமன்றத் தேர்தல் நிறைவு; ஓய்வெடுப்பதற்காக குடும்பத்துடன் லண்டன் பயணமானார் உதயநிதி ஸ்டாலின்


 தமிழக சட்டமன்றத் தேர்தல் நிறைவு; ஓய்வெடுப்பதற்காக குடும்பத்துடன் லண்டன் பயணமானார் உதயநிதி ஸ்டாலின்


தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், தீவிர தேர்தல் பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டிருந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், ஓய்வெடுப்பதற்காக தனது குடும்பத்துடன் பிரித்தானியாவிற்கு (லண்டன்) பயணமானார்.


கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் தொடர்ச்சியான பிரச்சாரப் பயணங்களை மேற்கொண்டு வந்த அவர், தேர்தல் முடிவுகளுக்காகக் காத்திருக்கும் இந்த இடைப்பட்ட காலத்தில் தனிப்பட்ட பயணமாக லண்டன் சென்றுள்ளார். அங்கு சில நாட்கள் தங்கியிருந்து ஓய்வெடுத்த பின்னர், வாக்கு எண்ணிக்கை தினத்திற்கு முன்பாக அவர் மீண்டும் தமிழகம் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தத் தேர்தலில் திமுக கூட்டணியின் வெற்றிக்காக மாநிலம் தழுவிய ரீதியில் அவர் தீவிரமாகச் சுழன்று பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


கே ஆர் டி வி நெட்வொர்க்

கே ஆர் டி வி லங்கன் வொய்ஸ்

சர்வதேச செய்தி


තමිල්නාඩු මැතිවරණය අවසන්; උදයනිධි ස්ටාලින් මහතා විවේකය සඳහා පවුල සමඟ බ්‍රිතාන්‍යයට යයි


තමිල්නාඩු ප්‍රාන්ත සභා මැතිවරණයේ ඡන්ද විමසීම අවසන් වීමත් සමඟ, දැඩි මැතිවරණ ප්‍රචාරක කටයුතුවල නිරතව සිටි තරුණ කටයුතු සහ ක්‍රීඩා සංවර්ධන අමාත්‍ය උදයනිධි ස්ටාලින් මහතා සිය පවුලේ සාමාජිකයන් සමඟ විවේකය සඳහා බ්‍රිතාන්‍යය (ලන්ඩන්) බලා පිටත්ව ගොස් තිබේ.


පසුගිය සති කිහිපය පුරා තමිල්නාඩුව පුරා අඛණ්ඩව මැතිවරණ ප්‍රචාරක මෙහෙයුම් දියත් කළ ඒ මහතා, මැතිවරණ ප්‍රතිඵල අපේක්ෂාවෙන් සිටින මෙම කාලය තුළ පෞද්ගලික සංචාරයක් ලෙස මෙලෙස විදේශගත වී ඇත. එහි දින කිහිපයක් රැඳී සිට විවේක ගැනීමෙන් අනතුරුව ඡන්ද ගණන් කිරීමේ දිනයට පෙර ඔහු නැවත තමිල්නාඩුවට පැමිණීමට නියමිතය.


මෙම මැතිවරණයේදී ඩී.එම්.කේ (DMK) සන්ධානයේ ජයග්‍රහණය වෙනුවෙන් ඔහු ප්‍රාන්තය පුරා කැපී පෙනෙන කාර්යභාරයක් ඉටු කළේය.


කේ ආර් ටී වී නෙට්වර්ක්

කේ ආර් ටී වී ලංකන් වොයිස්

ජාත්‍යන්තර පුවත්


Tamil Nadu Elections Conclude; Udhayanidhi Stalin Departs for the UK with Family for a Vacation


Following the conclusion of the Tamil Nadu Legislative Assembly elections, Minister for Youth Welfare and Sports Development, Udhayanidhi Stalin, has left for the United Kingdom (London) with his family for a short vacation.


After weeks of intensive election campaigning across the state, the Minister opted for this private trip to rest while awaiting the election results. He is expected to spend a few days in London and return to Tamil Nadu before the scheduled date for the counting of votes.


Udhayanidhi Stalin played a pivotal role in the DMK-led alliance's campaign, traveling extensively throughout the state to secure voter support.


KR TV Network

KR TV Lankan Voice

International News

தமிழக சட்டமன்றத் தேர்தல் நிறைவு; ஓய்வெடுப்பதற்காக குடும்பத்துடன் லண்டன் பயணமானார் உதயநிதி ஸ்டாலின் Reviewed by KR TV LANKAN VOICE on ஏப்ரல் 25, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.