முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான வழக்கு ஜூலை மாதம் வரை ஒத்திவைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான வழக்கு ஜூலை மாதம் வரை ஒத்திவைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது முன்னாள் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிராக, அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 8 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (29) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இன்றைய விசாரணையின் போது, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், ஜூலை 8 ஆம் திகதிக்கு முன்னதாகச் சந்தேகநபர்களுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். மேலும், முன்னாள் ஜனாதிபதியின் மனைவி மைத்ரி விக்கிரமசிங்கவையும் இவ்வழக்கில் ஒரு சந்தேகநபராகப் பெயரிடுவதா என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனையடுத்து, விசாரணைகளின் முன்னேற்றத்தை அடுத்த தவணையின் போது சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதவான் உத்தரவிட்டார்.
கே ஆர் டி வி நெட்வொர்க்
கே ஆர் டி வி லங்கன் வொய்ஸ்
உள்நாட்டுச் செய்தி
හිටපු ජනාධිපති රනිල් වික්රමසිංහ මහතාට එරෙහි නඩුව යළි කල් යයි
රජයේ මුදල් අවභාවිත කළ බවට එල්ල වී ඇති චෝදනා සම්බන්ධයෙන් හිටපු ජනාධිපති රනිල් වික්රමසිංහ මහතා සහ හිටපු ජනාධිපති ලේකම් සමන් ඒකනායක මහතාට එරෙහිව පවරා ඇති නඩුව එළඹෙන ජූලි මස 8 වනදා දක්වා කල් තැබීමට කොළඹ කොටුව මහේස්ත්රාත් අධිකරණය අද (29) නියෝග කළේය.
අද දින නඩු විභාගයේදී අතිරේක සොලිසිටර් ජනරාල් දිලීප පීරිස් මහතා සඳහන් කළේ, ජූලි 8 වනදාට පෙර සැකකරුවන්ට එරෙහිව අධිචෝදනා පත්ර ගොනු කිරීමට පියවර ගන්නා බවයි. එමෙන්ම හිටපු ජනාධිපතිවරයාගේ බිරිඳ වන මෛත්රී වික්රමසිංහ මහත්මිය ද මෙම නඩුවේ සැකකාරියක ලෙස නම් කරන්නේද යන්න පිළිබඳව මේ වන විට විමර්ශනය කරමින් පවතින බව ඔහු වැඩිදුරටත් පැවසීය. ඒ අනුව, විමර්ශනවල ප්රගතිය මීළඟ නඩු වාරයේදී අධිකරණයට ඉදිරිපත් කරන ලෙස මහේස්ත්රාත්වරයා අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තුවට නියෝග කළේය.
කේ ආර් ටී වී නෙට්වර්ක්
කේ ආර් ටී වී ලංකන් වොයිස්
දේශීය පුවත්
Case against Former President Ranil Wickremesinghe postponed again
The case filed against former President Ranil Wickremesinghe and former Presidential Secretary Saman Ekanayake over the alleged misuse of state funds has been postponed until July 8. The order was issued when the case was taken up for hearing at the Colombo Fort Magistrate’s Court today (29).
During today's proceedings, Additional Solicitor General Dileepa Peiris informed the court that steps will be taken to file indictments against the suspects before July 8. He further noted that authorities are currently considering whether to name the former President's wife, Maithree Wickremesinghe, as a suspect in the case. Following these submissions, the Magistrate directed the Criminal Investigation Department (CID) to report the progress of the investigations at the next hearing.
KR TV Network
KR TV Lankan Voice
Domestic News
Reviewed by KR TV LANKAN VOICE
on
ஏப்ரல் 29, 2026
Rating:

கருத்துகள் இல்லை: