இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து இந்தியத் துணை ஜனாதிபதி புறப்பட்டார்
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து இந்தியத் துணை ஜனாதிபதி புறப்பட்டார்
இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தந்த இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், தனது பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து இன்று (20) பிற்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
அவருக்கு வாழ்த்துத் தெரிவிப்பதற்காகத் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கலாநிதி அநுர கருணாதிலக்க மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோர் விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.
கடந்த 19 ஆம் திகதி இலங்கையை வந்தடைந்த இந்தியத் துணை ஜனாதிபதி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருடன் உயர்மட்ட இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
தனது பயணத்தின் ஒரு பகுதியாக பம்பலப்பிட்டி கதிரேசன் கோவில் மற்றும் கங்காராம விகாரை ஆகியவற்றிற்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், இலங்கையில் வசிக்கும் இந்திய சமூகத்தினரையும் அவர் சந்தித்தார்.
விஜயத்தின் இரண்டாம் நாளான இன்று, நுவரெலியா மாவட்டத்திற்கு விஜயம் செய்த அவர், இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மலையகத்தில் முன்னெடுக்கப்படும் வீட்டுத் திட்டங்களைப் பார்வையிட்டதுடன், அங்குள்ள மலையக மக்களுடனும் உரையாடினார்.
நுவரெலியா சீதா அம்மன் கோவிலில் நடைபெற்ற விசேட வழிபாடுகளில் கலந்துகொண்ட பின்னர், அவர் தனது இரண்டு நாள் பயணத்தை நிறைவு செய்து இலங்கையிலிருந்து புறப்பட்டார். இப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் பலப்படுத்தும் வகையில் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
දෙදින නිල සංචාරය නිම කළ ඉන්දීය උප ජනාධිපතිවරයා දිවයිනෙන් පිටත් වෙයි
ශ්රී ලංකාවේ දෙදින නිල සංචාරයක් සඳහා පැමිණි ඉන්දීය උප ජනාධිපති සී.පී. රාධක්රිෂ්ණන් මහතා සිය සංචාරය සාර්ථකව නිම කර අද (20) පස්වරුවේ කටුනායක බණ්ඩාරනායක ජාත්යන්තර ගුවන්තොටුපොළෙන් යළි ඉන්දියාව බලා පිටත් විය. ඉන්දීය උප ජනාධිපතිවරයා ඇතුළු දූත පිරිසට සුබ පැතීම සඳහා වරාය හා සිවිල් ගුවන් සේවා අමාත්ය ආචාර්ය අනුර කරුණාතිලක මහතා සහ ශ්රී ලංකාවේ ඉන්දීය මහකොමසාරිස් සංතෝෂ් ජා මහතා ගුවන්තොටුපොළ වෙත පැමිණ සිටියහ.
පසුගිය 19 වනදා දිවයිනට පැමිණි ඒ මහතා, ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා සහ අග්රාමාත්ය ආචාර්ය හරිනි අමරසූරිය මහත්මිය සමඟ වැදගත් ද්විපාර්ශ්වික සාකච්ඡා පැවැත්වීය. සිය සංචාරය අතරතුර බම්බලපිටිය කදිරේෂන් කෝවිල සහ හුණුපිටිය ගංගාරාම විහාරස්ථානය වෙත ගොස් ආගමික වතාවත්වල නිරත වූ ඔහු, මෙරට වෙසෙන ඉන්දීය ප්රජාව සමඟ ද සුහද හමුවකට එක්විය.
සංචාරයේ දෙවන දිනය වූ අද, නුවරඑළිය ප්රදේශයේ ඉන්දීය ආධාර යටතේ ක්රියාත්මක නිවාස ව්යාපෘති නිරීක්ෂණය කිරීමට එක්වූ උප ජනාධිපතිවරයා එහිදී මලෛයගම් ප්රජාව ද හමු විය. අනතුරුව නුවරඑළිය සීතා අම්මාන් කෝවිලේ ආගමික වතාවත්වලට සහභාගී වීමෙන් පසු ඔහු සිය නිල සංචාරය නිම කරමින් දිවයිනෙන් පිටත්ව ගියේය. මෙම සංචාරය දෙරට අතර පවතින මිත්රත්වය තවදුරටත් ශක්තිමත් කිරීමට මග පාදා ඇත.
Indian Vice President Departs Sri Lanka Following Successful Two-Day Official Visit
The Vice President of India, Shri C.P. Radhakrishnan, concluded his two-day official visit to Sri Lanka and departed for India this afternoon (20) from the Bandaranaike International Airport, Katunayake. Minister of Ports and Civil Aviation Dr. Anura Karunathilaka and Indian High Commissioner to Sri Lanka, Mr. Santosh Jha, were present at the airport to bid him farewell.
Arriving on April 19th, the Vice President held high-level bilateral discussions with President Anura Kumara Dissanayake and Prime Minister Dr. Harini Amarasuriya. During his stay, he participated in religious observances at the Kathiresan Kovil in Bambalapitiya and the Gangaramaya Temple in Hunupitiya, and met with members of the Indian community residing in Sri Lanka.
On the second day of his visit today, he toured Indian-funded housing projects in the Nuwara Eliya district and interacted with the Malayagam community. Following religious observances at the Seetha Amman Kovil in Nuwara Eliya, Vice President Radhakrishnan officially concluded his visit. This diplomatic visit is seen as a significant step in further strengthening the long-standing ties between India and Sri Lanka.
KR TV Network
KR TV Lankan Voice
International News
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து இந்தியத் துணை ஜனாதிபதி புறப்பட்டார்
Reviewed by KR TV LANKAN VOICE
on
ஏப்ரல் 20, 2026
Rating:
Reviewed by KR TV LANKAN VOICE
on
ஏப்ரல் 20, 2026
Rating:



கருத்துகள் இல்லை: