உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவன விரிவுரையாளர்களின் பிரச்சினைகள் குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய கவனம்
உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவன விரிவுரையாளர்களின் பிரச்சினைகள் குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய கவனம்
இலங்கை உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் (SLIATE) நீண்டகாலமாக நிலவி வரும் விரிவுரையாளர்களின் தொழில்சார் மற்றும் நிர்வாகப் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடும் விசேட சந்திப்பொன்று, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் அந்த நிறுவனத்தின் விரிவுரையாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கும் இடையில் இடம்பெற்றது. இச்சந்திப்பு இன்று (29) இசுருபாயவிலுள்ள கல்வி அமைச்சு வளாகத்தில் நடைபெற்றது.
விரிவுரையாளர்களின் தொழில்சார் தரத்தை உயர்த்துதல், நீண்டகாலமாகத் தீர்க்கப்படாத பதவியுயர்வு மற்றும் ஆட்சேர்ப்பு நடைமுறை மாற்றங்கள், கல்விசார் கொடுப்பனவுகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது. இப்பிரச்சினைகளில் சிலவற்றுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள தீர்வுகள் குறித்தும் பிரதமர் இதன்போது தெளிவுபடுத்தினார். நிறுவனத்தின் நோக்கு மற்றும் அடிப்படை இலக்குகளுக்கு அமைய, அதன் நிர்வாகச் செயற்பாடுகளை மீள்வரிசைப்படுத்துவது குறித்தும் பிரதமர் தனது கவனத்தைச் செலுத்தினார்.
இங்கு கருத்துத் தெரிவித்த பிரதமர், வேகமாக மாற்றமடைந்து வரும் தொழில்நுட்ப உலகிற்கு ஏற்ப நவீன தொழில் வல்லுநர்களை உருவாக்குவதற்கு, கல்வி நிறுவனங்கள் தங்களை வடிவமைத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களின் தொழில்சார் வளர்ச்சிக்கான திட்டங்கள் வகுக்கப்படும் என்றும், அவர்களுக்குரிய கொடுப்பனவுகள் படிப்படியாகப் பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். மேலும், பாடவிதானங்களைப் புதுப்பிக்கும்போது கைத்தொழில் துறையினரையும் இணைத்துக்கொள்வதன் மூலம் அத்துறைக்குத் தேவையான தகுதியுள்ள நிபுணர்களை உருவாக்குவது இலகுவாகும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
KR TV Network
KR TV Lankan Voice
உள்நாட்டுச் செய்தி
ශ්රී ලංකා උසස් තාක්ෂණ අධ්යාපන ආයතනයේ ආචාර්යවරුන්ගේ ගැටලු පිළිබඳ අග්රාමාත්යවරියගේ අවධානය
ශ්රී ලංකා උසස් තාක්ෂණ අධ්යාපන ආයතනයේ ආචාර්යවරුන් මුහුණ දෙන වෘත්තීය සහ පරිපාලන ගැටලු පිළිබඳව සාකච්ඡා කිරීම සඳහා අග්රාමාත්ය ආචාර්ය හරිනි අමරසූරිය මහත්මිය සහ එම ආයතනයේ කථිකාචාර්ය සංගමයේ සාමාජිකයින් අතර හමුවක් අද (29) ඉසුරුපාය අධ්යාපන අමාත්යාංශයේදී පැවැත්විණි.
මෙහිදී ආචාර්යවරුන්ගේ උසස්වීම්, බඳවා ගැනීමේ ක්රියාපටිපාටියේ වෙනස්කම් සහ අධ්යයන දීමනා සම්බන්ධයෙන් දීර්ඝව සාකච්ඡා කෙරිණි. ආයතනයේ දැක්මට අනුකූල වන පරිදි පරිපාලනමය වෙනස්කම් සිදු කිරීමේ අවශ්යතාවය ද අග්රාමාත්යවරියගේ අවධානයට යොමු විය. පවතින තාක්ෂණික වෙනස්වීම්වලට අනුකූලව සිසුන්ට දැනුම ලබා දීමට නම් අධ්යාපන ආයතන ද යාවත්කාලීන විය යුතු බව ඇය මෙහිදී පෙන්වා දුන්නාය.
අධ්යයන හා අනධ්යයන කාර්ය මණ්ඩලයේ වෘත්තීය සංවර්ධනය වෙනුවෙන් සැලසුම් සකස් කරන බවත්, ඔවුන්ට හිමි දීමනා ක්රමයෙන් ලබා දීමට කටයුතු කරන බවත් අග්රාමාත්යවරිය ප්රකාශ කළාය. තවද, කර්මාන්ත ක්ෂේත්රයට අවශ්ය වෘත්තිකයන් බිහි කිරීම සඳහා විෂය නිර්දේශ යාවත්කාලීන කිරීමේදී කර්මාන්ත ක්ෂේත්රයේ සහභාගීත්වය ලබා ගැනීමේ වැදගත්කම ද ඇය අවධාරණය කළාය.
කේ ආර් ටී වී නෙට්වර්ක්
කේ ආර් ටී වී ලංකන් වොයිස්
දේශීය පුවත්
Prime Minister Addresses Grievances of Higher Technological Education Academics
Prime Minister Dr. Harini Amarasuriya, in her capacity as the Minister of Education, Higher Education, and Vocational Education, met with members of the Lecturers' Association of the Sri Lanka Institute of Advanced Technological Education (SLIATE) today (29) at the Ministry of Education premises in Isurupaya. The discussion focused on long-standing professional and administrative issues faced by the academic staff.
Key topics included enhancing professional standards, resolving promotion and recruitment delays, and addressing academic and other allowances. The Prime Minister briefed the association on solutions already implemented for some of these concerns and emphasized aligning the institute’s administrative functions with its core vision and objectives.
Highlighting the rapid evolution of technology, the Prime Minister stated that educational institutes must adapt to these changes to produce modern professionals with updated technical knowledge. She affirmed that professional development plans for both academic and non-academic staff would be formulated and that their entitled allowances would be provided progressively. Furthermore, she noted the importance of involving the industrial sector in curriculum updates to ensure graduates meet industry-specific requirements.
KR TV Network
KR TV Lankan Voice
Domestic News
Reviewed by KR TV LANKAN VOICE
on
ஏப்ரல் 29, 2026
Rating:

கருத்துகள் இல்லை: