Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

காத்தான்குடி நகரசபை எல்லைக்குள் கட்டடங்கள் கட்டுவதற்கான வரைபடம் மற்றும் கட்டடப் பொருட்களை வீதிகளில் கொட்டுவது தொடர்பான கலந்துரையாடல்.

காத்தான்குடி நகரசபை எல்லைக்குள் கட்டடங்கள் கட்டுவதற்கான வரைபடம் மற்றும் கட்டடப் பொருட்களை வீதிகளில் கொட்டுவது தொடர்பான கலந்துரையாடல்.


மேற்படி கலந்துரையாடல் 06.04.2026 ஆம் திகதி திங்கட்கிழமை அன்று நகரசபை சபா மண்டபத்தில் நகர முதல்வர் SHM அஸ்பர் JP UM அவர்களின் தலைமையில் நடைபெற்றது.


இதன் போது பின்வரும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


01. பாடசாலை நாட்களில் காலை 08.00 மணிக்கு முன் வீதிகளில் கல், மண் கொட்டுவது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. மீறி கொட்டப்பட்டிருப்பின் அவை நகரசபையினால் பறிமுதல் செய்யப்படுவதுடன், கொட்டிய வாகன உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

02. வடிகான்களுக்கு மேல் கல், மண் கொட்டுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு கொட்டுவதாயின் வடிகாணுக்குள் கல், மண் உற்செல்லாத வண்ணம் கொட்டப்படுவதுடன் போக்குவரத்திற்கு இடையூறு இல்லா வண்ணம் கொட்டப்படல் வேண்டும்.

03. அனுமதி பெறப்பட்டு கொட்டப்படும் கல், மண் உட்பட்ட கட்டுமான பொருட்கள் ஆறு மணித்தியாலத்திற்கு மேல் வீதிகளில் காணப்பட்டால் நகரசபையினால் பறிமுதல் செய்யப்படும்.

04. கட்டட விண்ணப்பப்படிவம் தொழிநுட்ப உத்தியோகத்தரினால் பரிசீலனை செய்யப்பட்ட பின்னரே கட்டுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மீறுவோருக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

05. உடைக்கும் பழைய கட்டடங்களின் சல்லுக்கற்களை வீதியிலோ அல்லது சுவரோரங்களிலோ கொட்டாது உடனடியாக அகற்றப்பட வேண்டும்.

06. வெளியூரிலிருந்து வந்து காத்தான்குடி நகரசபையின் எல்லைக்குள் கல், மண் வியாபாரம் செய்பவர்கள் நகரசபையில் முறையான அனுமதியினை பெற்றுக்கொள்ள வேண்டும்.
காத்தான்குடி நகரசபை எல்லைக்குள் கட்டடங்கள் கட்டுவதற்கான வரைபடம் மற்றும் கட்டடப் பொருட்களை வீதிகளில் கொட்டுவது தொடர்பான கலந்துரையாடல். Reviewed by www.lankanvoice.lk on ஏப்ரல் 08, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.