Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

கைத்தொழில் பேட்டையாக மாறவுள்ள காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை


 கைத்தொழில் பேட்டையாக மாறவுள்ள காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை: வடக்கில் பாரிய வேலைவாய்ப்புகளுக்கு வழிவகுக்கும்


யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை பாரிய கைத்தொழில் பேட்டையாக மாற்றுவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உள்நாட்டு யுத்தம் காரணமாக சுமார் 36 வருடங்களுக்கு மேலாக கைவிடப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலைக்கு சொந்தமான சுமார் 400 ஏக்கர் காணியில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இக்காணியினை முதலீட்டு சபையிடம் கையளிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தலைமையிலான குழுவினர் அண்மையில் கள விஜயம் ஒன்றை மேற்கொண்டனர். இதில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஜீவன் ஜெய்சந்திரமூர்த்தி, க.இளங்குமரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்தத் தொழில்பேட்டை உருவாக்கப்படும் பட்சத்தில், வடமாகாண இளைஞர்களுக்கு பெருமளவிலான வேலைவாய்ப்புகள் கிடைப்பதுடன், நாட்டின் பொருளாதாரத்திலும் இது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கே ஆர் டி வி நெட்வொர்க்

கே ஆர் டி வி லங்கன் வொய்ஸ்

உள்நாட்டுச் செய்தி



කාන්කේසන්තුරේ සිමෙන්ති කර්මාන්ත ශාලාව කාර්මික උද්‍යානයක් ලෙස සංවර්ධනය කෙරේ


යාපනය කාන්කේසන්තුරේ සිමෙන්ති කර්මාන්ත ශාලාව පිහිටි භූමිය දැවැන්ත කාර්මික උද්‍යානයක් ලෙස සංවර්ධනය කිරීම සම්බන්ධයෙන් නියෝජ්‍ය අමාත්‍යවරුන් ඇතුළු කණ්ඩායමක් ක්ෂේත්‍ර නිරීක්ෂණයක නිරත විය. සිවිල් යුද්ධය හේතුවෙන් වසර 36කට වැඩි කාලයක් අතහැර දමා තිබූ මෙම කර්මාන්ත ශාලාවට අයත් අක්කර 400ක පමණ භූමි ප්‍රමාණයක මෙම කාර්මික උද්‍යානය ඉදිකිරීමට සැලසුම් කර ඇත. මීට අදාළ පළමු අදියර ලෙස එම ඉඩම ආයෝජන මණ්ඩලය වෙත පවරා දීමේ කටයුතු මේ වන විට ආරම්භ කර තිබේ.


මුදල් හා ක්‍රමසම්පාදන නියෝජ්‍ය අමාත්‍ය අනිල් ජයන්ත මහතාගේ ප්‍රධානත්වයෙන් යාපනය දිස්ත්‍රික් පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරුන් වන රජීවන් ජයචන්ද්‍රමූර්ති සහ කේ. ඉලංගුමරන් ඇතුළු පිරිසක් මෙම නිරීක්ෂණ චාරිකාවට එක්වූහ. මෙම ව්‍යාපෘතිය හරහා දේශීය හා විදේශීය ආයෝජකයන් ආකර්ෂණය කර ගැනීමට අපේක්ෂා කරන අතර, එමඟින් උතුරු පළාතේ තරුණ තරුණියන්ට රැකියා අවස්ථා රැසක් උදාවන බව ද නියෝජ්‍ය අමාත්‍යවරයා මෙහිදී සඳහන් කළේය.


කේ ආර් ටී වී නෙට්වර්ක්

කේ ආර් ටී වී ලංකන් වොයිස්

දේශීය පුවත්



Kankesanthurai Cement Factory to be converted into a major Industrial Zone


A high-level government delegation conducted a field visit to explore the possibility of transforming the abandoned Kankesanthurai (KKS) Cement Factory in Jaffna into a large-scale Industrial Zone. The factory, which has been inactive for over 36 years due to the civil war, sits on approximately 400 acres of land. As part of the initial phase, steps are being taken to hand over the land to the Board of Investment (BOI) to attract both local and foreign investors.


Deputy Minister of Finance and Planning, Anil Jayantha, led the delegation, which included Jaffna District Members of Parliament Rajeevan Jayachandramoorthy and K. Ilangkumaran. The establishment of this industrial zone is expected to create significant employment opportunities for the youth in the Northern Province and contribute substantially to the national economy. The officials inspected the site to assess the feasibility of infrastructure development required for the project.


KR TV Network

KR TV Lankan Voice

Domestic News

கைத்தொழில் பேட்டையாக மாறவுள்ள காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை Reviewed by KR TV LANKAN VOICE on ஏப்ரல் 27, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.