இந்தியத் துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணனின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம்
இந்தியத் துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணனின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம்; ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அறிவிப்பின்படி, இந்தியத் துணை ஜனாதிபதி திரு சி. பி. ராதாகிருஷ்ணன், 2026 ஏப்ரல் 19 முதல் 20 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இவ்விஜயத்தின் போது, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே சமீபத்தில் நடைபெற்ற உயர்மட்ட இராஜதந்திர சந்திப்புகளின் தொடர்ச்சியாக, துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோருடன் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.
தித்வா (Ditwah) புயலினால் பாதிப்படைந்தோரின் புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பான திட்டங்கள் உட்பட, ஒத்துழைப்பை மேம்படுத்துவதை மையமாகக் கொண்டு, இரு நாடுகளுக்கும் இடையேயான பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இவ்விஜயத்தின் போது பரிமாறிக்கொள்ளப்படவுள்ளன. இந்தியத் துணை ஜனாதிபதி பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதுடன், அரசியல் மற்றும் சமூகத் தலைவர்களுடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார். இவ்விஜயத்தின் போது, துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணனுடன் இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட தூதுக்குழுவும் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
KR TV Network
KR TV Lankan Voice
உள்நாட்டுச் செய்தி
ඉන්දීය උප ජනාධිපති ශ්රී සී.පී.රාධක්රිෂ්ණන් මහතා ශ්රී ලංකාවේ නිල සංචාරයක; ජනාධිපතිතුමා සමඟ සාකච්ඡා
විදේශ කටයුතු අමාත්යාංශය නිවේදනය කරන පරිදි, ඉන්දීය උප ජනාධිපති ශ්රී සී.පී.රාධක්රිෂ්ණන් මහතා 2026 අප්රේල් 19 වැනි දින සිට 20 වැනි දින දක්වා ශ්රී ලංකාවේ නිල සංචාරයක නිරත වේ. මෙම සංචාරය අතරතුරදී, උප ජනාධිපති රාධක්රිෂ්ණන් මහතා, ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා සහ අග්රාමාත්ය ආචාර්ය හරිනි අමරසූරිය සමඟ ද්විපාර්ශ්වික සාකච්ඡා පවත්වනු ඇත.
දිට්වා (Ditwah) සුළි කුණාටුව සම්බන්ධ පුනරුත්ථාපන කටයුතු හා සංවර්ධන සහයෝගීතාවට අදාළ ව්යාපෘති ඇතුළුව සහයෝගීතාව වැඩි දියුණු කිරීම කෙරෙහි අවධානය යොමු කරමින්, දෙරට අතර අවබෝධතා ගිවිසුම් ගණනාවක් ද මෙම සංචාරයේදී හුවමාරු කර ගැනීමට නියමිතය. ඉන්දීය උප ජනාධිපතිවරයා අවස්ථා කිහිපයකට සහභාගී වන අතර දේශපාලන හා ප්රජා නායකයින් සමඟ සම්බන්ධ වීමට ද නියමිතය. උප ජනාධිපති රාධක්රිෂ්ණන් මහතා සමඟ ඉන්දීය රජයේ ඉහළ පෙළේ දූත පිරිසක් මෙම සංචාරයට එක්වනු ඇත.
KR TV Network
KR TV Lankan Voice
දේශීය පුවත්
Vice President of India Shri C. P. Radhakrishnan to Undertake an Official Visit to Sri Lanka; Bilateral Discussions with President
The Ministry of Foreign Affairs has announced that the Vice President of India Shri C. P. Radhakrishnan is scheduled to undertake an official visit to Sri Lanka from 19 to 20 April 2026. During this visit, Vice President Radhakrishnan will hold bilateral discussions with President Anura Kumara Disanayake and Prime Minister Dr. Harini Amarasuriya.
A number of Memoranda of Understanding between the two countries are also scheduled to be exchanged during the visit, focusing on enhancing cooperation including in projects related to cyclone Ditwah rehabilitation and development cooperation with the assistance of the Government of India. The Indian Vice President will also participate in several events to engage with political and community leaders in Sri Lanka. Vice President Radhakrishnan will be accompanied by a high-level delegation from the Government of India.
KR TV Network
KR TV Lankan Voice
Local News
இந்தியத் துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணனின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம்
Reviewed by KR TV LANKAN VOICE
on
ஏப்ரல் 17, 2026
Rating:
கருத்துகள் இல்லை: