Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

பெற்றோலுக்கான QR முறைமை நாளை நள்ளிரவு முதல்


பெற்றோலுக்கான QR முறைமை நாளை நள்ளிரவு முதல் மீண்டும் அமுல்; எரிசக்தி அமைச்சு அறிவிப்பு

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு பொதுமக்களின் வசதி கருதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பெற்றோலுக்கான தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் (QR முறைமை), நாளை (18) நள்ளிரவு முதல் மீண்டும் கட்டாயமாக்கப்படவுள்ளது. இதன்படி, நாளை நள்ளிரவு முதல் பெற்றோலில் இயங்கும் அனைத்து வாகன உரிமையாளர்களும் மீண்டும் QR குறியீட்டைப் பயன்படுத்தி மட்டுமே எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, டீசலுக்கான QR முறைமையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை எனவும், அது ஏற்கனவே நடைமுறையில் உள்ளவாறே தொடரும் எனவும் எரிசக்தி அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது. புத்தாண்டு காலப்பகுதியில் தற்காலிகமாக வழங்கப்பட்ட சலுகை நாளை நள்ளிரவுடன் நிறைவடைவதால், வாகன உரிமையாளர்கள் தமது QR கோட்டாக்களைச் சரிபார்த்து எரிபொருளைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

KR TV Network
KR TV Lankan Voice
உள்நாட்டுச் செய்தி

පෙට්‍රල් සඳහා QR ක්‍රමය හෙට මධ්‍යම රාත්‍රියේ සිට යළි ක්‍රියාත්මකයි

සිංහල සහ දෙමළ අලුත් අවුරුදු සමය වෙනුවෙන් තාවකාලිකව අත්හිටුවා තිබූ පෙට්‍රල් සඳහා වන QR ක්‍රමය (ජාතික ඉන්ධන බලපත්‍රය), අප්‍රේල් 18 වනදා මධ්‍යම රාත්‍රියේ සිට යළි ක්‍රියාත්මක වන බව නිවේදනය කර ඇත.

ඒ අනුව, 2026 අප්‍රේල් 18 වනදා මධ්‍යම රාත්‍රියේ සිට පෙට්‍රල් මඟින් ධාවනය වන සියලුම වාහන හිමියන් යළිත් QR කේතය භාවිතා කරමින් පමණක් ඉන්ධන ලබාගත යුතු වේ. කෙසේ වෙතත්, ඩීසල් සඳහා වන QR ක්‍රමයේ කිසිදු වෙනසක් සිදු කර නොමැති අතර එය දැනටමත් ක්‍රියාත්මකව පවතී. උත්සව සමයේ ලබාදුන් මෙම සහනය හෙට මධ්‍යම රාත්‍රියෙන් අවසන් වන බැවින් සියලුම වාහන හිමියන් ඒ පිළිබඳව දැනුවත් විය යුතු බව බලශක්ති අමාත්‍යාංශය අවධාරණය කරයි.

KR TV Network
KR TV Lankan Voice
දේශීය පුවත්

QR System for Petrol to Resume from Midnight Tomorrow

The National Fuel Pass (QR system) for petrol, which was temporarily suspended during the Sinhala and Tamil New Year festive season, is scheduled to resume from midnight tomorrow (April 18, 2026).

Starting from midnight tomorrow, all owners of petrol-driven vehicles will once again be required to use the QR code to obtain fuel. The Ministry of Energy clarified that there have been no changes to the QR system for diesel, as it remains in effect as usual. Vehicle owners are advised to ensure they have their valid QR profiles ready as the festive season suspension concludes.

KR TV Network
KR TV Lankan Voice
Local News
பெற்றோலுக்கான QR முறைமை நாளை நள்ளிரவு முதல் Reviewed by KR TV LANKAN VOICE on ஏப்ரல் 17, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.