காத்தான்குடி பிஸ்மி அஹதிய்யாப் பாடசாலையின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் விழா
காத்தான்குடி பிஸ்மி அஹதிய்யாப் பாடசாலையின் 2025ம் ஆண்டுக்கான வருடாந்த சான்றிதழ் வழங்கும் விழா இன்று 2026.06.21 ஞாயிற்றுக்கிழமை காலை 08.00 மணி முதல் 10.30 மணி வரை காத்தான்குடி அல் மனார் மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
பிஸ்மி அஹதிய்யாவின் பொறுப்பாசிரியர் அஷ்ஷெய்க் MIM. நுபைல் (நளீமி) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் காத்தான்குடி பிராந்தியத்தில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் அஷ்ஷெய்க். MIM. மஸீன் (இஸ்லாஹி) பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் அஹதிய்யா தேசிய இடைநிலைப் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களுக்கான சான்றிதழ்களும் எமது பிஸ்மி அஹதிய்யா மாணவர்களுக்கு நடாத்தப்பட்டு வரும் அல்குர்ஆன் பாடநெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும் இறுதியாக இடம்பெற்ற அஹதிய்யா இடைநிலைப் பரீட்சையில் தேசிய ரீதியில் முதல் பத்து இடங்களுக்குள் இடம் பிடித்த காத்தான்குடி பிஸ்மி அஹதிய்யாப் பாடசாலை மாணவிக்கான விஷேட கௌரவமும் வழங்கப்பட்டது.
மேலும் நிகழ்வின் முக்கிய அம்சமாக பிஸ்மி அஹதிய்யா பாடசாலையினால் தயாரிக்கப்பட்ட அஹதிய்யா பாடநூல்கள் வெளியீட்டு வைக்கும் நிகழ்வும் இடம்பெற்றதோடு முஹர்ரம் மாதத்தை சிறப்பிக்கும் வகையிலான விஷேட கலை நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன.
நூல் வெளியீட்டு நிகழ்வு மற்றும் நிகழ்வு பற்றிய அறிமுக உரை என்பவற்றை அஷ்ஷெய்க் MSM. நுஸ்ரி (நளீமி) வழங்கியிருந்ததோடு நிகழ்வில் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த முக்கிய உலமாக்கள் மற்றும் அஹதிய்யா பாடசாலைகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
காத்தான்குடி பிஸ்மி அஹதிய்யாப் பாடசாலையின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் விழா
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூன் 21, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூன் 21, 2026
Rating:















கருத்துகள் இல்லை: