மட்டக்களப்பு பிரம்மகுமாரிகள் இராஜ யோக நிலையத்தின் ஏற்பாட்டில் மாபெரும் போதை ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் மட்டு மண்ணில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
-ஊடகவியலாளர் டீன் பைருஸ்-
மட்டக்களப்பு பிரம்மகுமாரிகள் இராஜ யோக நிலையத்தின் ஏற்பாட்டில் "மனம் எவ்வாறோ நாமும் அவ்வாறே" செழிப்பான மனதின் மூலம் போதைப் பாவனையிலிருந்து பாதுகாப்பாக இருப்போம் எனும் தொணிப்பொருளில் மாபெரும் போதை ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது .
இடம் பெறவுள்ள மாபெரும் போதை ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம்
தொடர்பான ஊடக சந்திப்பு மட்டக்களப்பு பிரம்மகுமாரிகள் இராஜ யோக நிலையத்தின் பொறுப்பாளர் சகோதரர் சுரேஷ் தலைமையில் (20) இடம் பெற்றது.
குறித்த ஊடக சந்திப்பின் போது எதிர்வரும் (28.06.2026 Sunday) 04.30.pm to 06.00 pm. மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் "போதை ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம்" உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக
தெரிவித்தனர்.
மேலும் இச் செயற்திட்டமானது பல இலக்குகளை கொண்டுள்ள துடன் 18 மாதகால செயற்திட்டத்தின் பிரதான இலக்கு பத்து இலட்சம் மக்களை நேரடியாக சந்தித்து போதைப்பொருள் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் மேலும் பல திட்டங்கள் உள்ளடங்கப்பட்டுள்ளதாகவும் இதன் போது தெரிவித்தார்.
மேற்படி நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகான ஆளுஞர் Hon.Prof. ஜெயந்தலால் ரத்னசேகர , Spiritual Gust. ராஜ்யோகி சகோதரர் Charlie Hogg (Regional Coodinator, B.K. Asia pacific conuntries) கலந்து சிறப்பிக்க உள்ளதுடன் மட்டக்களப்பு பிரம்ம குமாரிகள் இராஜ யோக நிலையத்தின் உயர்பீட சகோதர நிர்வாகிகள் உட்பட பலரும் குறித்த நிகழ்வில் பங்கேற்க உள்ளதாகவும் ஊடக சந்திப்பின் போது தெரிவித்தனர்.
"AS THE MIND SO WE ARE"
"We can protect ourselves from drug abuse by keeping a healthy mind"
மட்டக்களப்பு பிரம்மகுமாரிகள் இராஜ யோக நிலையத்தின் ஏற்பாட்டில் மாபெரும் போதை ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் மட்டு மண்ணில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூன் 21, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூன் 21, 2026
Rating:




கருத்துகள் இல்லை: