தேசிய பாடசாலைகளின் வருடாந்த/கட்டாய ஆசிரியர் இடமாற்றத்திற்கான விண்ணப்பம் கோரல் - 2026
2026ஆம் ஆண்டுக்குரிய தேசிய பாடசாலை கட்டாய/வருடாந்த ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பங்கள் http://nstt.moe.gov.lk என்ற நீடிப்பினூடாக நிகழ்நிலையில் கோரப்பட்டுள்ளன.
தேசிய பாடசாலை ஆசிரியர்களுக்கு 2026-07-16ஆம் திகதி தொடக்கம் 2026-07-30ஆம் திகதி வரையில் நிகழ்நிலையில் இடமாற்றத்திற்கு விண்ணப்பிக்கக் கூடியதாக இருப்பதுடன், அதன் அச்சுப்பிரதியை ஆசிரியர்கள் 2026-07-31ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் தமது சம்பளம் பெறும் பாடசாலை அதிபரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆசிரியர்களினால் தனிப்பட்ட வகையில் சமர்ப்பிக்கப்படும் அல்லது தபாலில் அனுப்பப்படும் எந்த விண்ணப்பமும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் பொறுப்பேற்கப்பட மாட்டாது.
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூலை 16, 2026
Rating:

கருத்துகள் இல்லை: