Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹிஸ்புழ்ழாஹ்வின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு 2026"


மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினுடைய பிரதித் தலைவருமான கலாநிதி எம் .எல் .ஏ .எம் ஹிஸ்புழ்ழாஹ் அவர்களினது  2026 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட ரூபாய் 10 மில்லியன் நிதியானது அவர்களது ஆலோசனைக்கமைய பின்வரும் பிரதேச செயலகங்களுக்கு  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

1.காத்தான்குடி பிரதேச செயல பிரிவுக்குட்பட்ட அபிவிருத்தி திட்டங்களுக்கென ரூபாய்
2.0 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

2.மன்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பாலமுனை, காங்கேயனோடை மற்றும் ஹைராத் பிரதேசங்களுக்காக ரூபாய் 1.0 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

 3. மன்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் மற்றும் மற்றும்  குவைட் சிட்டி பிரதேசங்களில் இரண்டு வேலைத் திட்டங்களுக்கு ரூபா‌ய் 5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்து.

காத்தான்குடி, மன்முனை வடக்கு, மற்றும் மன்முனைப்பற்று பிரதேச செயலகங்களுக்கு மொத்தமாக ரூபாய் 3.5 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

4.ஏறாவூர் நகர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வேலைத்திட்டங்களு ரூபா‌ய் 2.0 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
 
5.ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவுக்கு சுமார் ரூபாய் 1.0 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் நகர் மற்றும் ஏறாவூர் பற்று பிரதேச செயலகங்களுக்கென மொத்தமாக 3.0 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

6.அதேபோன்று கல்குடா தொகுதியில், கோரளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்கு ரூபாய் 1.4 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

7.கோரளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலகத்திற்கு சுமார் 2.1 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மொத்தமாக கல்குடா தொகுதிக்கு ரூபாய் 3.5 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேற்குறித்த ஒதுக்கீடுகள் மாவட்ட செயலகம் ஊடாக குறித்த பிரதேச செயலகங்களுக்கு அனுப்பப்பட்டு வேலைத்திட்டங்களுக்கான ஆரம்ப பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹிஸ்புழ்ழாஹ்வின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு 2026" Reviewed by www.lankanvoice.lk on ஜூலை 29, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.