Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

தனிநபர் துதிபாடும் தலைவர் வழிபாட்டுக்கு அரசு முற்றுப்புள்ளி.


සිංහල පරිවර්තනය සමග)தனிநபர் துதிபாடும் தலைவர் வழிபாட்டுக்கு அரசு முற்றுப்புள்ளி.

"மக்களின் வரிப்பணத்தில் உருவான" அரச சொத்துக்களில் அரசியல்வாதிகளின் பெயர்கள் பொறிக்கப்பவது நியாயமானதா?

மட்டக்களப்பு பொது நூலகத் திறப்பு விழாவின் போது, நினைவுக்கல்லில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தனிப்பட்ட பெயரைப் பயன்படுத்தாமல், பதவிப் பெயரை மட்டும் குறிப்பிட்டிருப்பது இலங்கையின் பாரம்பரிய அரசியல் கலாசாரத்தில் ஒரு புதிய மாற்றம்.

பாடசாலை கட்டடங்களில் எதற்காக உயிருடன் இருக்கும் அரசியல் வாதிகளின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளது? உயிருடன் இருப்பவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டிருந்தால், அவற்றை அரச சொத்துக்களில் இருந்து நீக்குவதற்கான கொண்டு வரப்பட்ட சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

அரசு திட்டங்கள் மற்றும் பொதுச் சொத்துக்கள் அனைத்தும் மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்படுபவை. எனவே, அவற்றுக்கு அரசியல் தலைவர்களின் சொந்தப் பெயர்களைச் சூட்டுவது, தனிப்பட்ட நபர்களின் விளம்பரத்துக்காக மக்களின் பணத்தைப் பயன்படுத்துவதைப் போன்றதேயாகும்.

பல வளர்ந்த நாடுகளில், பொதுச் சொத்துக்களுக்கு அரசியல்வாதிகளின் பெயர்களுக்குப் பதிலாக, அந்தந்தப் பகுதியின் பூகோளப் பெயர்கள் அல்லது பொதுவான வரலாற்றுச் சின்னங்களின் பெயர்கள் மட்டுமே சூட்டப்படுகின்றன.

மக்கள் வரிப்பணத்தில் கட்டப்படும் பொதுச் சொத்துக்களில் அரசியல்வாதிகள் தங்கள் சொந்தப் பெயர்களைப் பொறித்து விளம்பரம் தேடுவதை எதிர்ப்பது காலத்தின் கட்டாயமாக பார்க்கப்படுகின்றது.

ஆனால், ஒரு குறிப்பிட்ட திட்டத்தைக் கொண்டு வருவதற்கு ஒரு மக்கள் பிரதிநிதி எடுக்கும் தனிப்பட்ட முயற்சி மற்றும் அர்ப்பணிப்பை காட்டுகிறது என அரசியல் தலைவர்களின் பெயர்களை கட்டங்களுக்கு வைப்பவர்களின் வாதமாக இருக்கின்றது. 

எந்தவொரு காலகட்டத்தில் அல்லது யாருடைய ஆட்சிக்காலத்தில் அந்தப் பொதுச் சொத்து உருவாக்கப்பட்டது என்பதை மக்கள் எளிதில் நினைவில் கொள்ள இது உதவுவதாகவும் அவர்களுடைய கருத்துக்கள் இருக்கின்ற அதே இடத்தில், இது நீண்ட காலமாகப் பின்பற்றப்படும் ஒரு பாரம்பரிய அரசியல் நடைமுறையாகவும் இருந்து வருகின்றது.

சில மாதங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு மாநகர சபை Batticaloa Public Library பொது நூலகத் திறப்பு விழாவின் போது, திறப்பு விழா நினைவுக் கல்லில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தனிப்பட்ட பெயரைப் பயன்படுத்தாமல் பதவிப் பெயரை மட்டும் குறிப்பிட்டிருப்பது இலங்கையின் பாரம்பரிய அரசியல் கலாசாரத்தில் ஒரு புதிய மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.

நினைவுக் கல்வெட்டில் "இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது" என்று பதவிப் பெயரை மட்டும் குறிப்பிட்டிருப்பது  அவரது அரசியல் முதிர்ச்சியையும் எளிமையையும் காட்டுகிறது. 

மேலும், இலங்கையில் நீண்டகாலமாக நிலவி வந்த "தலைவர் வழிபாடு" அல்லது "தனிநபர் துதிபாடும்" அரசியலுக்குப் பதிலாக, நிறுவன ரீதியான நடை முறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் தொடக்கமாக அன்று மட்டக்களப்பில் அடையாளப்படுத்தப்பட்டது. 

அதே போன்றே அண்மையில், யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்ட புதிய அபிவிருத்தி திட்டங்களின் நினைவுப் பலகைகளில் ஜனாதிபதியின் பெயரோ அல்லது அமைச்சர்களின் பெயர்களோ சூட்டப்படாமை, இலங்கையின் அரசியல் கலாசாரத்தில் ஏற்பட்டு வரும் ஒரு குறிப்பிடத்தக்க கலாச்சாரா ரீதியான மாற்றத்ததை காட்டுவதோடு, மக்கள் எதிர்பார்த்த "சிஸ்டம் சேஞ்ச் (System Change)" என்பது வெறும் ஆட்சி மாற்றம் மட்டுமல்ல, அது அரசியல்வாதிகளின் நடத்தையிலும் சிந்தனையிலும் ஏற்படும் மாற்றம் என்பதை உணர்த்தும் படியாக அமைந்திருந்தது.

எனவே, தனி நபர்களை விடவும் வகிக்கும் பதவியும், அரசுமே முக்கியம் என்பன் வெளிப்படைத்தன்மை ஜனாதியின் யாழ்ப்பாண மற்றும் மட்டக்களப்பில் இடம் பெற்ற செயற்பாடுகளில் தெளிவாக பார்க்கக்கூடியதாக இருந்தது. 

மக்கள் பணத்தில் கட்டப்படும் பொதுச் சொத்துக்களுக்கு, அரசியல்வாதிகள் தங்கள் சொந்தப் பெயரைப் பயன்படுத்தி விளம்பரம் தேடும் பழைய அரசியல் கலாசாரத்துக்கே அது சொந்தமானது என்பதை சகலருக்கும் மறைமுக செய்தியாக கூறப்பட்ட விடயமாகவும் பார்க்கலாம்.

தலைவர் என்பவர் ஒரு மக்கள் ஊழியன் மட்டுமே. தனிநபர் துதிபாடலைத் தவிர்த்து, நிறுவனங்களுக்கும் மக்கள் சேவைக்கும் முன்னுரிமை அளிக்கும் அழகிய முன்மாதிரியை சகல அரசியல் வாதிகளாலும் பின்பற்றப்பட வேண்டிய ஒன்று என்பதில் மாற்றுக் கருத்திருக்க வாய்ப்பில்லை. 

மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்படும் பொதுச் சொத்துக்கள் அனைத்தும் மக்களுக்கே சொந்தமானவை. எனவே, அவற்றில் அரசியல்வாதிகள் தங்கள் சுய விளம்பரத்திற்காகப் பெயர்களைப் பொறிக்கும் கலாசாரத்தைத் தவிர்ப்பது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு மிக அவசியமாகும்.

ஜனநாயக ரீதியில் பொது நிதியைப் பயன்படுத்துவது வெளிப்படையானதாக இருக்க வேண்டும். பொதுச் சொத்துக்களில் அரசியல்வாதிகளின் பெயர்களைப் பொறிப்பது மற்றும் விளம்பரப் படுத்துவதைத் தடுப்பதற்கு பல நாடுகளில் சட்டங்களும், வழிகாட்டல்களும் உள்ளன.

அந்த வகையில், "System Change"  எனும் குறிக்கோளுடன் நாட்டினை கட்டியெழுப்பி வரும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் பொதுத் திட்டங்களில் தனிநபர்களின் பெயர்களையோ படங்களையோ பயன்படுத்தக் கூடாது என்ற புதுச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். 

திட்டங்களுக்குப் பின்னால் உள்ள அரசியல்வாதிகளின் பெயர்களுக்குப் பதிலாக, நாட்டின் தேசிய சின்னம் அல்லது அரசு இலச்சினையை மட்டுமே பயன்படுத்த வேண்டும் நடைமுறைகள் அமுலாக்கப்பட வேண்டும்.

மேலும், பொதுச் சொத்துக்களின் அருகில் வைக்கப்படும் பலகைகளில், அந்தத் திட்டத்திற்குச் செலவிடப்பட்ட மொத்த நிதி எவ்வளவு என்ற விபரம் தெளிவாக இருக்க வேண்டும். 

அது எந்த மக்கள் வரிப்பணத்தின் மூலம் (உதாரணமாக: மத்திய அரசு நிதி, மாகாண சபை நிதி உள்ளூராட்சி மன்ற நிதி அல்லது வெளிநாட்டுநிதி உதவி) கட்டப்பட்டது என்பதும் தெளிவாகவும், வெளிப்படையாகவும் குறிப்பிடப்படல் வேண்டும்.

திட்டங்களுக்குத் அரசியல் தலைவர்களின் பெயர்களைச் சூட்டுவதற்குப் பதிலாக, அந்தந்தப் பகுதியின் வரலாற்றுப் பெயர்கள் அல்லது பொதுவான பெயர்களை  பயன்படுத்த வேண்டும் என்பது பாமர மகனுக்கும் தெளிவுள்ள விடயமாக மாற்றப்பட வேண்டும்.  

அரசியல்வாதிகள் என்பவர்கள் மக்களின் நிதியை நிர்வகிக்கும் பிரதிநிதிகளே தவிர, அவர்கள் தங்கள் சொந்தப் பணத்தை வழங்குவதில்லை என்ற விழிப்புணர்வை மக்களிடம் நடுத்தர வர்ர்க்கம் தொடக்கம் கிராமம்புரம் வரை மக்கள் மயப்படுத்த வேண்டும். 

பாடசாலை கட்டடங்களில் அரசியல்வாதிகளின் பெயர்கள் பொறிக்கப்படுவதும், வளாகத்திற்குள், அடிக்கல் நாட்டு விழாக்களில் அரசியல் செல்வாக்கைப் பிரதிபலிக்கும் விளம்பரங்கள் மேற்கொள்ளப்பவதும் முற்றாக தடை செய்ய வேண்டிய பொறுப்பு தற்போதைய அரசாங்கத்துக்கு இருக்கின்றது. 

அதனடிப்படையில், பாடசாலைகள் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட பொது அறிவு மையங்களாக இருக்க வேண்டும். 

கல்வி வளாகங்களில் அரசியல் தலைவர்களின் பெயர்கள், படங்கள் அல்லது வாசகங்களைத் தவிர்ப்பது மாணவர்களிடையே சமத்துவத்தை ஏற்படுத்தும்.

அரசியல்வாதிகளின் நேரடிக் கட்டுப்பாடுகள் குறைக்கப்பட்டு, கல்வியாளர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கங்களின் மூலம் நிர்வாகம் முன்னெடுக்கப்பட வேண்டும். 

அரசியல்வாதிகளின் பெயர் பலகைகளுக்குப் பதிலாக, அரச நிதியுதவி அல்லது பொது மக்களின் பங்களிப்பு என்பதை மட்டும் சுருக்கமாகக் குறிப்பிடும் முறைமை கொண்டு வரப்பட வேண்டும்.

பாடசாலைச் சூழல் அரசியல் மயமாவதைத் தடுக்கும் நோக்கில், உதவி வழங்கும் போர்வையில் அரசியல்வாதிகள் பாடசாலைகளுக்குச் சென்று அரசியல் பேசுவதற்கும், பாடசாலை நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை முக்கிய அதிதிகளாக அழைப்பதற்கும் கல்வி அமைச்சினால் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. 

மேலும், உயிருடன் இருப்பவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டிருந்தால், அவற்றை அரச சொத்துக்களில் இருந்து நீக்குமாறு மாகாண ஆளுநர்களுக்கு கல்வி அமைச்சு பணித்துள்ளது.

இலங்கையில் பொது நிர்வாக அமைச்சின் சுற்றறிக்கையின்படி, உயிருடன் இருக்கும் அரசியல்வாதிகள் அல்லது தனி நபர்களின் பெயர்களை பாடசாலைக் கட்டடங்கள், வீதிகள், மைதானங்கள் உள்ளிட்ட எந்தவொரு அரச சொத்துக்களுக்கும் சூட்டுவதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. 

கல்வித்துறையில் நீண்டகாலமாக நிலவி வந்த பழைய அரசியல் கலாச்சாரம் மற்றும் முறையற்ற அரசியல் செல்வாக்குகளை இல்லாதொழிப்பதற்காகவே இந்த சட்டதிட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

தற்போதைய கல்வி மறுசீரமைப்புகளின் கீழ், பாடசாலைகளில் உள்ள ஊழல் குற்றச்சாட்டுகளுக்குள்ளான மற்றும் தகுதியற்ற அரசியல்வாதிகளின் பெயர்களை நீக்கி, அவற்றுக்குப் பதிலாக பொதுவான பெயர்களைச் சூட்டுவதற்கு மாகாண கல்வித் திணைக்களங்கள் மற்றும் ஆளுநர்கள் மூலம் தொடர்ச்சியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த மாதிரியான சீர்திருத்தங்கள், அரசியல்வாதிகள் மீதான தனிநபர் வழிபாட்டைக் குறைத்து, மக்கள் மத்தியில் தங்கள் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வழிவகுக்கும்.

மக்கள் வரிப்பணத்தில் கட்டப்படும் பொதுச் சொத்துக்களில் அரசியல்வாதிகள் தங்கள் பெயர்களைப் பொறித்து விளம்பரம் தேடுவது, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழலின் ஒரு வடிவமாகவே பார்க்கப்படுகின்றது. 


பொது நிதியில் உருவாக்கப்படும் சொத்துக்கள் ஒரு குறிப்பிட்ட தனிநபரின் பெயரால் அடையாளப்படுத்தப்படும்போது, அது மக்களின் அடிப்படை உரிமையை மறைத்து, அரசியல்வாதிகளின் 'நன்கொடை' போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

மேலும், இது மக்களின் வரிப்பணத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளை, அரசியல்வாதிகள் தங்கள் சொந்தப் பணத்தில் செய்ததாகக் கூறி சுய விளம்பரம் தேடிக்கொள்கிறார்கள். 

தங்கள் ஆதரவாளர்கள் மூலம் இட்டுக்கட்டப்பட்ட தகவல்களைப் பரப்பி, மக்களை ஏமாற்றி அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்ளும் தந்திரமாகவும் இதனை பயன்படுத்துகின்றார்கள்.

அத்தோடு, அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் இருப்பை உறுதிப்படுத்தவும் பிராந்தியவாத உத்திகளைக் கையாளுவதற்காக பயன்படுத்துகின்றனர். ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து, ஏனைய பிரதேசங்களை அரசியல் ரீதியாகப் புறக்கணிப்பதன் மூலம் மக்களிடையே தேவையற்ற பிரதேசவாதப் பிரிவினையையும் தூண்டுகின்றனர். 

அதனால் ஏனைய பகுதிகளை அரசியல் ரீதியாகப் பிரித்தாளும் குறுகிய நோக்கத்தைக் கொண்டவையாக பார்க்கப்படுகின்றது.

எனவே, நாட்டுக்காக உயிர்நீத்த தியாகிகள், கல்விமான்கள், பொதுநலச் சிந்தனையாளர்களின் பெயர்கள் மற்றும் வரலாற்றுச் சின்னங்களின் பெயர்களை 
நாட்டு மக்களின் வரிப்பணத்தில் அமைக்கப்படும் அரச கட்டடங்களுக்கும் பொது இடங்களுக்கும் சூட்டுவது, அந்த ஆளுமைகளுக்குச் செய்யும் உண்மையான நன்றிக்கடனாகும். 

குறுகிய அரசியல் அடையாளங்களைக் கடந்து, இன, மத பேதமின்றி நாட்டுக்கு அளப்பரிய சேவையாற்றிய கல்வியாளர்கள் மற்றும் சமூக சிந்தனையாளர்களின் பெயர்கள் நிலை நிறுத்தப்படும் போது, அது தேசிய ஒருமைப்பாட்டை வளர்க்க வழி சமைக்கும்.

கறைபடிந்த அரசியல் கலாச்சாரத்தை மாற்றி, சமூகத்திற்கு உழைத்த ஆளுமைகளை வரலாற்றில் நிலை நிறுத்துவதற்கான இவ்வாறான ஆரோக்கியமான முன்னெடுப்புகள் மக்களாட்சித் தத்துவத்தை மேலும் வலுப்படுத்தும். 

இம்மாற்றங்களை மேற்கொள்வது புதிய தலைமுறைக்கு உண்மையான முன்மாதிரிகளை இனங்காண்பதற்கும், பொது சொத்துக்கள் மக்கள் வரிப்பணத்தால் உருவானவை என்பதை உறுதிப்படுத்துவதற்கும் வழிவகுக்கும். 

மேலும், மாற்றத்தை  நம்பியிக்கும் தற்கால இளைஞர்களுடைய வெற்றியாகவும் அது அமையும்.

மக்கள் வரிப்பணத்தில் கட்டப்படும் அரச கட்டடங்களில் அரசியல் விளம்பரங்களுக்காக அரசியல்வாதிகளின் பெயர்களைப் பொறிப்பதை முழுமையாகத் தடை செய்வதற்கும், ஏற்கனவே பதிக்கப்பட்டுள்ள பெயர்களை உடனடியாக அகற்றுவதற்கும் புதிய சட்டங்கள் இயற்பட வேண்டும் என்பது மாற்றதுக்காக வாக்களித்தவர்களின் விருப்பமாகவும் உள்ளது.

இலங்கையில் புதிய மாற்றத்தை நோக்கிய அரசியல் பயணத்தில், பொதுச் சொத்துக்களைத் தமது சொந்தப் பெயர்களில் அடையாளப்படுத்துவதைத் தவிர்த்து, 'அரசாங்கம் என்பது மக்களுக்கான சேவை' என்பதை செயற்பாடு ரீதியாக மிகச் சரியாக நிரூபிக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கின்றது. 

ஆகவே, இது போன்ற நேர்மையான முன்னெடுப்புகள் ஊழலற்ற, வினைத்திறனான நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவதற்கு வழிசமைக்கும் என்பதோடு, மக்கள் மத்தியில் புதிய எழுச்சியுடனானன அரசியல் கலாசாரத்தின் தொடக்கமாக அமையும் என்பதே உண்மை.

அஹமட் இர்ஷாட்.



ජනතා බදු මුදලින් නිර්මාණය කරන ලද පොදු දේපළවලට දේශපාලනඥයන්ගේ නම් අලවා ගැනීම සාධාරණද?

මඩකලපුව මහජන පුස්තකාලය විවෘත කිරීමේ උත්සවයේදී අනුර කුමාර දිසානායක ජනාධිපතිතුමාගේ පෞද්ගලික නම නොව ඔහුගේ පදවි නාමය පමණක් වූ සමරු ගල ශ්‍රී ලංකාවේ සම්ප්‍රදායික දේශපාලන සංස්කෘතියේ නව වෙනසක් විය.

ජීවමාන දේශපාලනඥයන්ගේ නම් පාසල් ගොඩනැගිලිවල කොටා ඇත්තේ ඇයි? ජීවත්ව සිටින අයගේ නම් නම් කළා නම් ඔවුන් රාජ්‍ය දේපළවලින් ඉවත් කිරීමට ගෙන එන නීති ක්‍රියාත්මක කළ යුතුයි.
+++++++++++++++++
රජයේ සියලුම වැඩසටහන් සහ පොදු වත්කම් නිර්මාණය වන්නේ ජනතාවගේ බදු මුදලින්. ඒ නිසා ඔවුන් දේශපාලන නායකයන්ගේ නම් තැබීම ජනතාවගේ මුදල් පෞද්ගලික පුද්ගලයන්ගේ ප්‍රචාරණ කටයුතුවලට යොදවනවා හා සමානයි.

බොහෝ සංවර්ධිත රටවල, පොදු දේපල හුදෙක් දේශපාලඥයින් වෙනුවට අදාළ කලාපයේ භූගෝලීය නම් හෝ පොදු ඓතිහාසික සන්ධිස්ථාන ලෙස නම් කර ඇත.

මහජන බදු මුදලින් ගොඩනගාගත් පොදු දේපළවලට තමන්ගේ නම ගසා ප්‍රසිද්ධිය අපේක්ෂාවෙන් සිටින දේශපාලකයන්ට එරෙහි වීම යුගයේ අත්‍යවශ්‍ය කරුණක් ලෙස සැලකේ.

එහෙත් කිසියම් ව්‍යාපෘතියක් ගෙන ඒම සඳහා මහජන නියෝජිතයකුගේ පෞද්ගලික උත්සාහය සහ කැපවීම එයින් පෙන්නුම් කෙරෙන බව දේශපාලන නායකයන්ගේ නම් ජාලගත කරන්නන්ගේ තර්කයයි. පොදු දේපල ඇති කළේ කුමන කාල පරිච්ඡේදයේදී හෝ කාගේ පාලන සමයේදීද සහ ඔවුන්ගේ අදහස් කොතැනද යන්න පහසුවෙන් මතක තබා ගැනීමට මිනිසුන්ට උපකාර වන බැවින් එය දිගු කලක් තිස්සේ සාම්ප්‍රදායික දේශපාලන භාවිතයකි.

මීට මාස කිහිපයකට පෙර මඩකලපුව මහ නගර සභාව මගින් මඩකලපුව මහජන පුස්තකාලය විවෘත කිරීමේ උත්සවයේදී ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතාගේ නිල නාමය සමාරම්භක සමරු ගලට යොදා නොතිබීම ශ්‍රී ලංකාවේ සම්ප්‍රදායික දේශපාලන සංස්කෘතියේ නව වෙනසක් ලෙස සැලකේ.

එම ස්මාරකයේ "ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ජනාධිපතිවරයා විසින් විවෘත කරන ලදී" යන මාතෘකාව පමණක් සඳහන් වීම ඔහුගේ දේශපාලන පරිණතභාවය සහ සරල බව පෙන්නුම් කරයි. එමෙන්ම දේශපාලනයට වඩා ආයතනික භාවිතයන් අවධාරණය කරමින් ශ්‍රී ලංකාවේ දීර්ඝ කාලීන "නායකත්ව වන්දනාවේ" හෙවත් "පුද්ගල ප්‍රශංසාවේ" ආරම්භය සනිටුහන් කළ එදින මඩකලපුවේදීය. 

එලෙසම යාපනයේ විවෘත කරන ලද නව සංවර්ධන ව්‍යාපෘතිවල සමරු ඵලකවල ජනාධිපතිවරයාගේ නම හෝ ඇමැතිවරුන්ගේ නම් සඳහන් නොවීම ශ්‍රී ලංකාවේ දේශපාලන සංස්කෘතියේ සිදුවන කැපී පෙනෙන සංස්කෘතික වෙනසක් පෙන්නුම් කරන අතර අපේක්ෂිත "පද්ධති වෙනසක්" (Sytem Change) යනු පාලනයේ වෙනසක් පමණක් නොව දේශපාලනඥයන්ගේ හැසිරීම් සහ චින්තනයේ වෙනසක් වේ.

ඒ නිසා පුද්ගලයාට වඩා රජය වැදගත් බව සහ දරන තනතුරේ විනිවිද භාවය යාපනයේ සහ මඩකලපුවේ ජනතිගේ ක්‍රියාකාරකම්වල පැහැදිලිව පෙනෙන්නට තිබුණි. ජනතා මුදලින් ගොඩනැගුණු පොදු දේපළ අයත් වන්නේ දේශපාලකයන් තම නම භාවිත කරමින් ප්‍රසිද්ධිය ලබා ගන්නා පැරණි දේශපාලන සංස්කෘතියට වන අතර එය සැමට ව්‍යංග පණිවිඩයක් ද වේ.

නායකයෙක් කියන්නේ ජනතාවගේ සේවකයෙක් පමණයි. පුද්ගල ප්‍රශංසාවට පිටුපා ආයතනික සහ රාජ්‍ය සේවයට මුල්තැන දීමේ සුන්දර ආදර්ශය සියලු දේශපාලකයන් විසින් අනුගමනය කළ යුතු එකක් බවට සැකයක් නැත. ජනතාවගේ බදු මුදලින් නිර්මාණය කරන ලද සියලුම පොදු වත්කම් ජනතාව සතුයි. එබැවින් දේශපාලකයින් තම ස්වයං ප්‍රවර්ධනය සඳහා නම් අලවා ගැනීමේ සංස්කෘතියෙන් වැළකී සිටීම සෞඛ්‍ය සම්පන්න ප්‍රජාතන්ත්‍රවාදයක් සඳහා අත්‍යවශ්‍ය වේ.

ප්‍රජාතන්ත්‍රවාදීව මහජන මුදල් පරිහරණය විනිවිද භාවයෙන් යුක්ත විය යුතුයි. බොහෝ රටවල දේශපාලකයන්ගේ නම් පොදු දේපළවල අලවා ප්‍රචාරණය කිරීම වැළැක්වීමට නීති සහ මාර්ගෝපදේශ ඇත.

ඒ ආකාරයට "පද්ධති වෙනසක්" ඉලක්ක කර ගනිමින් රට ගොඩනගන ජාතික ජනබල ආණ්ඩුව තුළ පුද්ගලයන්ගේ නම් හෝ රූප පොදු ව්‍යාපෘති සඳහා යොදා ගැනීම වැළැක්වීමට නව නීතියක් ගෙන ආ යුතුය. ව්‍යාපෘති පිටුපස සිටින දේශපාලනඥයන්ගේ නම් වෙනුවට රටේ ජාතික ලාංඡනය හෝ රාජ්‍ය ලාංඡනය පමණක් භාවිත කිරීමට ක්‍රියා පටිපාටි ක්‍රියාත්මක කළ යුතුයි.

එමෙන්ම ව්‍යාපෘතිය සඳහා වැය කර ඇති මුළු මුදල් ප්‍රමාණය පොදු දේපොළ අසල තබා ඇති පුවරුවල පැහැදිලිව ප්‍රදර්ශනය කළ යුතුය. එය ඉදිකළේ මහජන බදු මුදලින්ද (උදාහරණයක් ලෙස මධ් යම රජයේ අරමුදල්, පළාත් සභා අරමුදල්, ප් රාදේශීය සභා අරමුදල් හෝ විදේශ මූල් ය ආධාර) යන්නද පැහැදිලිව සහ විනිවිදභාවයෙන් සඳහන් කළ යුතුය.

ව්‍යාපෘති දේශපාලන නායකයන්ගේ නමින් නම් කිරීම වෙනුවට ඒ ඒ ප්‍රදේශවල ඓතිහාසික නම් හෝ පොදු නම් යෙදිය යුතු බව සාමාන්‍ය ජනතාවට පැහැදිලි කළ යුතුය.  දේශපාලනඥයන් යනු ජනතාවගේ මුදල් කළමනාකරණය කරන නියෝජිතයන් මිස තමන්ගේ මුදල් නොවන බව මධ්‍යම පන්තියේ සිට ගම්බද ප්‍රදේශවල ජනතාව දැනුවත් කළ යුතුය.

පාසල් ගොඩනැගිලිවල සහ විශ්වවිද්‍යාල පරිශ්‍රය තුළ දේශපාලන බලපෑම් පිළිබිඹු වන දැන්වීම් සහ මුල්ගල තැබීමේ උත්සවවලදී දේශපාලනඥයන්ගේ නම් සඳහන් කිරීම සම්පූර්ණයෙන් තහනම් කිරීම වත්මන් රජයේ වගකීමකි. 

ඒ අනුව පාසල් පක්ෂ දේශපාලනයෙන් ඔබ්බට පොදු දැනුම් මධ්‍යස්ථාන විය යුතුය. අධ්‍යාපනික මණ්ඩපවල දේශපාලන නායකයින්ගේ නම්, පින්තූර හෝ සටන් පාඨ මග හැරීම සිසුන් අතර සමානාත්මතාවය ඇති කරයි.

දේශපාලකයන් සෘජුව පාලනය කිරීම අවම කර අධ්‍යාපනඥයින් සහ පාසල් සංවර්ධන සංගම් මගින් කළමනාකරණය කළ යුතුයි. දේශපාලනඥයන්ගේ නාමපුවරු වෙනුවට රජයේ අරමුදල් හෝ මහජන දායකත්වය පමණක් කෙටියෙන් සඳහන් කරන ක්‍රමයක් හඳුන්වා දිය යුතුය.

පාසල් පරිසරය දේශපාලනීකරණය වීම වැලැක්වීම සඳහා ආධාර ලබාදීමේ මුවාවෙන් දේශපාලනඥයන් පාසල්වලට පැමිණ දේශපාලනය කතා කිරීම සහ පාසල් උත්සව සඳහා දේශපාලනඥයන්ට ප්‍රධාන ආරාධිතයන් ලෙස ආරාධනා කිරීම අධ්‍යාපන අමාත්‍යාංශය විසින් සීමා කර තිබේ. එමෙන්ම ජීවතුන් අතර සිටින පුද්ගලයන්ගේ නම් රජයේ දේපළවලින් ඉවත් කරන ලෙස අධ්‍යාපන අමාත්‍යාංශය පළාත් ආණ්ඩුකාරවරුන්ට උපදෙස් ලබාදී තිබෙනවා.

ශ්‍රී ලංකාවේ රාජ්‍ය පරිපාලන අමාත්‍යාංශය විසින් නිකුත් කර ඇති චක්‍රලේඛයකට අනුව පාසල් ගොඩනැගිලි, මාර්ග, පිට්ටනි ඇතුළු රජයේ කිසිදු දේපළක් ජීවමාන දේශපාලනඥයින්ගේ හෝ පුද්ගලයන්ගේ නමින් නම් කිරීම සම්පූර්ණයෙන් තහනම් කර ඇත. පැරණි දේශපාලන සංස්කෘතිය සහ අධ්‍යාපන ක්ෂේත්‍රයේ අනිසි දේශපාලන බලපෑම් පිටුදැකීම සඳහා මෙම පනත් කෙටුම්පත් ගෙනවිත් තිබෙනවා.

වත්මන් අධ්‍යාපන ප්‍රතිසංස්කරණ යටතේ දූෂිත හා අදක්ෂ දේශපාලකයන්ගේ නම් පාසල්වලින් ඉවත් කර ඒ වෙනුවට සාමාන්‍ය නම් යෙදීමට පළාත් අධ්‍යාපන දෙපාර්තමේන්තු සහ ආණ්ඩුකාරවරුන් විසින් පියවර මාලාවක් ගනු ලැබේ.

මෙවැනි ප්‍රතිසංස්කරණ මගින් දේශපාලකයන්ගේ පුද්ගලික වන්දනාව අඩු වන අතර ඔවුන්ගේ අයිතිවාසිකම් පිළිබඳව ජනතාව තුළ වැඩි අවබෝධයක් ඇති වේ.

දේශපාලනඥයන් බදු ගෙවන්නන්ගේ මුදලින් ගොඩනගාගත් පොදු දේපළවලට තම නම අලවමින් ප්‍රසිද්ධිය අපේක්ෂාවෙන් කටයුතු කිරීම සැලකෙන්නේ බලය අයුතු ලෙස භාවිත කර දූෂණයක් ලෙසය. රාජ්‍ය මුදල්වලින් නිර්මාණය වන වත්කම් කිසියම් පුද්ගලයකුගේ නමින් හඳුනා ගත් විට එය ජනතාවගේ මූලික අයිතිවාසිකම යටපත් කර දේශපාලකයන්ගේ ‘පරිත්‍යාග’ ස්වරූපයක් ගෙන දෙයි.

ඒ වගේම ජනතාවගේ බදු මුදලින් කරන සංවර්ධන කටයුතු තමයි, දේශපාලකයෝ තමන්ගේ මුදලින් කළා යැයි කියමින් ස්වයං ප් රවර්ධනය සොයති. තම ආධාරකරුවන් හරහා ව්‍යාජ තොරතුරු පතුරවමින් ජනතාව රවටා තම දේශපාලන පැවැත්ම රැකගැනීමේ උපක්‍රමයක් ලෙසද ඔවුහු එය භාවිතා කරති.

එසේම දේශපාලඥයන් තම දේශපාලන පැවැත්ම තහවුරු කර ගැනීමට ප්‍රාදේශීයවාදී උපාය මාර්ග භාවිත කරයි. එමෙන්ම එක් ප්‍රදේශයක් පමණක් අවධාරණය කරමින් දේශපාලනික වශයෙන් අනෙකුත් ක්ෂේත්‍ර නොසලකා හරිමින් ජනතාව අතර අනවශ්‍ය ප්‍රාදේශීයවාදය අවුස්සති. ඒ නිසා අනෙක් ප්‍රදේශ දේශපාලන වශයෙන් බෙදීම පටු අරමුණක් ලෙසයි දකින්නේ.

එබැවින් රට වෙනුවෙන් දිවි පිදූ දිවි පිදූවන්ගේ, අධ්‍යාපනඥයින්ගේ, දානපතියන්ගේ, ඓතිහාසික ස්මාරක. 
බදු ගෙවන්නන්ගේ මුදලින් ඉදිකරන ලද රජයේ ගොඩනැගිලි සහ පොදු ස්ථාන උණුසුම් කිරීම එම පෞරුෂයන්ට කරන සැබෑ කෘතඥතාවකි. පටු දේශපාලන අනන්‍යතාවයන් අභිබවා කුල, ආගම් භේදයකින් තොරව රටට අපමණ මෙහෙවරක් කළ අධ්‍යාපනවේදීන්ගේ සහ සමාජ චින්තකයන්ගේ නම් ගම් ජාතික සමගිය වර්ධනයට මග පෑදෙනු ඇත.

කිලිටි වූ දේශපාලන සංස්කෘතිය වෙනස් කර ඉතිහාසය තුළ සමාජය වෙනුවෙන් කටයුතු කළ පුද්ගලයන් වැජඹීමට මෙවැනි සෞඛ්‍ය සම්පන්න මුලපිරීම් ප්‍රජාතන්ත්‍රවාදී දර්ශනය තවදුරටත් ශක්තිමත් කරනු ඇත. මෙම වෙනස්කම් සිදුකිරීමෙන් නව පරම්පරාවන්ට සැබෑ ආදර්ශ හඳුනා ගැනීමටත්, පොදු වත්කම් ජනතාවගේ බදු මුදලින් නිර්මාණය වන බවටත් සහතික වීමට ඉඩ සැලසේ. එය වෙනසක් විශ්වාස කරන වත්මන් තරුණ පරපුරේ ජයග්‍රහණයක් ද වනු ඇත.

බදු ගෙවන්නන්ගේ මුදලින් රජයේ ආයතනවල දේශපාලන ප්‍රචාරණය සඳහා වෙනත් අයගේ නම් අලවා තැබීම සම්පූර්ණයෙන්ම තහනම් කිරීමටත්, දැනටමත් කොට ඇති නම් වහා ඉවත් කිරීමටත් නව නීති සම්පාදනය කිරීමේ වෙනසක් සඳහා ඡන්ද දායකයින්ට අවශ්‍ය වේ.

නව පරිවර්තනයක් කරා යන ශ්‍රී ලංකාවේ දේශපාලන ගමනේ දී රාජ්‍ය වත්කම් ඔවුන්ගේ නමින් හංවඩු ගසනවාට වඩා ‘ආණ්ඩුව ජනතාවට සේවයක්’ බව ක්‍රියාකාරීව ඔප්පු කිරීමේ වගකීම රජයට තිබේ. 

එබැවින් අවංක මුලපිරීම් දූෂණයෙන් තොර කාර්යක්ෂම පාලන ව්‍යාපාරයක් නිර්මාණය කිරීම, ජනතාව අතර යළි පිබිදීමක් සහිත නව දේශපාලන සංස්කෘතියක් ආරම්භ කිරීමත් සමඟ විවෘත බව විවෘත වේ.

අහමඩ් ඉර්ෂාඩ්.
ඉරිදා දිනකරන් සඟරාව සඳහා,
26-07-2026.
தனிநபர் துதிபாடும் தலைவர் வழிபாட்டுக்கு அரசு முற்றுப்புள்ளி. Reviewed by www.lankanvoice.lk on ஜூலை 29, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.