Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

முற்றத்து மல்லிகை மணப்பதில்லை; வரலாற்றுச் சாதனையின் சொந்தக்காரன் அறபாத் சேர்

(யு.எல்.எம்.என்.முபீன்)

காத்தான்குடியில் முக்கிய கல்விக் கூடங்களில் ஒன்றான BT/BC/கிழுரியா
வித்தியாலயம் நாளை வியாழக்கிழமை 02/07/2026 விழாக்கோலம் பூணுகிறது.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

இணைப் பாடவிதான செயற்பாடுகளில் வரலாற்று சாதனை. 

புறக்கீர்த்தி செயல்பாடுகளில் உச்சத்தன்மையின் வெளிப்பாடு. 

உள்ளிட்ட சிறந்த அடைவுகளைப் பெற்று கிழக்கு மாகாணத்தின் சிறந்த பாடசாலையாக தடம் பதித்து தலை நிமிர்ந்து நிற்கிறது காத்தான்குடி கிழுரியா வித்தியாலயம். 

இந்தப் பாடசாலையின் அடைவுகளுக்கு பின்னால் இரவு பகல் பாராது ஓடியாடி பாடுபடும் அன்பு நண்பர் MR.S.I.யாசிர் அரஃபாத் B.B.A,PGDE,MBA இருக்கிறார். 

அரஃபாத் சேர் அவர்கள் பல வருடங்கள் எனது செயலாளராக கடமை ஆற்றியவர் என்பது எனக்கு எப்போதும் மகிழ்ச்சி. 

அத்தோடு அன்றைய நாட்களில் இந்த ஊர் சார்ந்து பல்வேறு நான் அரபாத் சேர் மற்றும் நண்பர்கள் இணைந்து பல பணிகளை செய்துள்ளோம். 

அரசு நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் துணையோடு சமூக, சமய, பொருளாதாரம், கல்விப் பணியென பல பணிகளை செய்தோம். 

என்னுடைய தலைமைத்துவத்தின் கீழ் அரபாத் சேர் பயிற்சிகளை பெற்றுக் கொண்டார் என்பதில் எனக்கு எப்போதும் சந்தோஷம்தான். 

சிறந்த ஆரம்பக் கல்வி முன்மாதிரி பாடசாலையாக காத்தான்குடி கிழுரியா வித்தியாலயத்தை அரபாத் சேர் சக ஆசிரியர்களுடன் இணைந்து கட்டி எழுப்பி உள்ளனர். 

இன்று இலங்கையின் பல்வேறு பாகங்களில் இருந்தும் கிழுரியா பாடசாலையை தரிசித்து அதன் சிறந்த செயற்பாடுகளை கண்டறிந்து கொள்ள பல்வேறு பாடசாலைகள் களப்பயணம் மேற்கொண்டு காத்தான்குடிக்கு  வருகை தந்து Best practice  அறிந்து கொள்ளும் கல்வி கூடமாக அப்பாடசாலை தலை நிமிர்ந்து நிற்பதன் பின்னால் அதிபரின் உயர் பங்களிப்புடன் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலைஅபிவிருத்தி நிறைவேற்றிக் குழுவின் பங்களிப்புகள் காணப்படுகின்றன. 

இணைப்பாட  விதான செயற்பாடுகளிலும்
கோட்ட மட்டம்,வலய  மட்டம்,மாகாண மட்டம், 
தேசிய மட்டம் என்ற அடைப்புகளுக்கு அப்பால் அப்பாடசாலை மாணவர்கள் சர்வதேச போட்டிகளிலும் கலந்து கொண்டு பாடசாலைக்கும் நமது ஊருக்கு பெருமை சேர்த்துள்ளனர். 

இவ்வாறு சிறப்பாக செயல்படும் அதிபருக்கு கடந்த நாட்கள் மிகச் சோதனையான நாட்களாக மாறி இருந்தன. 

பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தார்.

சம்பளம் நிப்பாட்டப்  பட்டிருந்தது. 

போலீஸ், நீதிமன்றம், சட்டத்தரணிகள் சந்திப்பு, சமரச சபை, அமர்வுகள் என அதிபர் அலைந்து திரிந்தார். 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிரபல வசனம் 
கடவுள் நல்லவர்களை சோதிப்பார் 
ஆனால் கைவிட மாட்டார் என்பது போல் 

அதிபருக்கு எதிரான வழக்கு முடிவடையும் தருவாய்க்கு வந்திருப்பதான செய்தி மகிழ்வை தந்தாலும் 

நன்றி கெட்ட சமூகத்துக்கு கல்விப் பணி  சமூகப் பணி செய்வதற்கு ஒரு முறைக்கு இரண்டு தடவை யோசிக்க வேண்டியிருக்கிறது.

அதிபரை பற்றிய விமர்சனங்கள் இருக்கலாம். அவர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட ஒரு புனிதராக நான் இங்கே அவரை கூற முன் வரவில்லை. 

ஆனால் விமர்சனம் செய்யும்போது அபாண்டமாக அநியாயமாக கதைப்பதை நமது மக்கள் எப்போதுதான் நிறுத்துவார்களோ தெரியவில்லை. 

ஒருவன் என்னிடத்தில் அதிபருக்கு மெண்டல் என்றான் அவன் மேல் எனக்கு கடுமையான கோபம் வந்தது அவனுக்கு உரிய முறையில் பதில் சொன்னேன். 

இன்னொருவர் உங்களுக்கு ஆட்டைய போட்டயாமே அரபாத்..? என்று கேட்டார். 

அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை என்று அவருக்கு பக்குவமாக பதில் சொன்னேன் 

கிழுரியா பாடசாலையின் பெற்றோர்களே,,,,,   !

உங்கள் அதிபர் போலீஸ் விசாரணைக்கு உட்பட்ட போது.....
 

நீதிமன்றம் படி ஏறி அலைந்த போது ......

சம்பளம் இல்லாமல்  இருந்த போது ......

நீங்கள் என்ன செய்தீர்கள்....? 

மாணவர்களை பாடசாலையில் அனுமதிப்பதில் சிலருக்கு சந்தர்ப்பம் கிடைக்காமல் போயிருக்கலாம். 

பாடசாலை மாணவர் அனுமதி என்பது அரசாங்க சுற்றறிக்கைக்கு அமைவானது. 

அந்த சுற்றறிக்கைக்கு மாற்றமாக உங்களுக்கு அநியாயம் நடந்தால் நீங்கள் நீதிமன்றத்தை நாடி நியாயத்தை பெற்றுக் கொள்ள முடியும். 

இவ்வாறான வழிகள் இருக்கின்ற போது 

அதிபரை கள்ளன் என அழைப்பதை நிறுத்துங்கள். 

அல்லாஹ்வுக்காக மெண்டல் என்று சொல்லாதீர்கள். 

முகநூல் மற்றும் பேனா இருக்கிறது என்பதற்காக கண்டதை எல்லாம் எழுதி உங்கள் புள்ளிகளை கூட்டிக் கொள்ள முயற்சிக்காதீர்கள். 

இன்று நமது ஊரில் ஆண் ஆசிரியர்கள் மிகத் தட்டுப்பாடாக உள்ளது 

பாடசாலைக்கு பொருத்தமான அதிபர்கள் இல்லை 

அதிபர்கள் என்ற பெயரில் ஒரு சிலர் பாடசாலைகளில் இருந்து கொண்டு அநியாயம் செய்து கொண்டிருக்கிறார்கள். 

இது விரிவாக கதைக்க வேண்டிய வேறொரு விடயம்.

பாடசாலை மாணவர்களிடையே ஒழுக்கமில்லை. 

மாணவர்களுக்கு மாணவிகளுக்கு சபையில் பேசத் தெரியாது 

மூத்தோரை மதிக்க தெரியாது. 

இறுதியில் நமது ஊரின் இளம் தம்பதிகள் காதிக்கோட்டிலே அலைகின்ற அவலம் பாடசாலை கல்வியில் ஏற்பட்டிருக்கின்ற விழுமியம் இன்மையே காரணம் என்றால் அது மிகையான கூற்று அல்ல.

எடுத்ததக்கெல்லாம் நீங்கள் போலீஸ், 
கோடு, கச்சேரி, என ஏறி இறங்கினால் பாடசாலைகளில் ஒழுக்க விழுமியங்களை பார்ப்பதற்கு எந்த ஆசிரியரும் அதிபரும் முனவரமாட்டார்கள்.

காத்தான்குடி போன்ற வர்த்தக சமூகத்துக்குள் மாத சம்பளத்தை எடுத்துக் கொண்டு வாழ்க்கை செலவை பல்வேறு போட்டிகளுக்கு மத்தியில் வாழும் கஷ்ட நிலைக்கு அரசாங்க உத்தியோகத்தர்கள் படுகின்ற அவதிக்குள் நீங்கள் உங்கள் பங்குக்கு அதிபர் ஆசிரியர்களை வாட்டி எடுத்தால் 

ஆசிரியர் தொழிலுக்கும் அதிபர் தொழிலுக்கும் யாரும் வரவே மாட்டார்கள். 

நீங்களே உங்க பிள்ளைகளுக்கு உங்கள் வீட்டில் வைத்து படிப்பிக்க வேண்டிய இக்கட்டான நிலைமையே உருவாகலாம். 

ரசூலுல்லாஹ் சொன்னார்கள் 
உங்கள் பிள்ளைகளை ஐந்து வயதில் தொழச் சொல்லுங்கள், 
பத்து வயதிலும் அவர் தொழாவிட்டால் அடித்து தொழ வையுங்கள். 

இறுதியாக 
அதிபர்களே,
ஆசிரியர்களே, 
அல்லாஹ்வின் திருப்தியை மாத்திரம் எதிர்பார்த்து பணி செய்வோம். 

நாளை நடைபெற உள்ள கிழுரியா வித்யாலயத்தின் வரலாற்றுச் சாதனை விழா சிறப்படைய வாழ்த்துக்களை முன்கூட்டியே தெரிவித்துக் கொள்கின்றேன். 

வல்லவன் அல்லாஹ் நமது நல்ல பணிகளை அங்கீகரிப்பானாக ஆமீன் 

அன்புடன் .
யூ. எல். எம் .என் .முபின்
முற்றத்து மல்லிகை மணப்பதில்லை; வரலாற்றுச் சாதனையின் சொந்தக்காரன் அறபாத் சேர் Reviewed by www.lankanvoice.lk on ஜூலை 01, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.