Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

ஈரானுக்கான புதிய இலங்கைத் தூதுவராக பேராசிரியர் பஸீஹா அஸ்மி பொறுப்பேற்பு


ஈரான் இஸ்லாமியக் குடியரசுக்கான இலங்கையின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் பஸீஹா அஸ்மி தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளார்.

தெஹ்ரானில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகத்தில் நேற்று (ஜூன் 30) நடைபெற்ற நிகழ்வில் அவர் தனது பணிகளை ஆரம்பித்தார்.

இராஜதந்திரப் பணிக்கு முன்னர், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றிய அவர், புவியியல் துறையில் முதலாம் வகுப்புச் சித்தியுடன் இளநிலைப் பட்டத்தையும், நோர்வே அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (NTNU) M.Phil மற்றும் PhD பட்டங்களையும் பெற்றுள்ளார்.

20 ஆண்டுகளுக்கும் மேலான கல்வி மற்றும் ஆராய்ச்சி அனுபவம் கொண்ட பேராசிரியர் பஸீஹா அஸ்மி, இளைஞர் விவகாரங்கள், வறுமை ஒழிப்பு, பெண்கள், புலம்பெயர்வு, உள்நாட்டு இடப்பெயர்வுகள் மற்றும் போருக்குப் பின்னரான அபிவிருத்தி உள்ளிட்ட பல சமூகப் பொருளாதாரத் துறைகளில் குறிப்பிடத்தக்க ஆய்வுகளை 
மேற்கொண்டுள்ளார்.

தனது முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பில் உரையாற்றிய அவர், இலங்கை–ஈரான் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவதே தனது பிரதான இலக்கு எனத் தெரிவித்தார்.

மேலும், தமக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள அஜர்பைஜான் மற்றும் துருக்மெனிஸ்தான் நாடுகளுடனும் இலங்கையின் உறவுகளை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வர்த்தகம், சுற்றுலா, கல்வி, கலாச்சாரம் மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் புதிய ஒத்துழைப்பு வாய்ப்புகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஈரானுக்கான புதிய இலங்கைத் தூதுவராக பேராசிரியர் பஸீஹா அஸ்மி பொறுப்பேற்பு Reviewed by www.lankanvoice.lk on ஜூலை 01, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.