Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

அமைப்பு மாற்றத்தை நோக்கிய பயணம்: விமர்சனங்களை கடந்துசாதிக்கும் தேசிய மக்கள் அரசு.


සිංහල පරිවර්තනය සමග)அமைப்பு மாற்றத்தை நோக்கிய பயணம்: விமர்சனங்களை கடந்துசாதிக்கும் அரசு.

ආයතනික වෙනසක් කරා යන ගමනක්: විවේචන ජයගත් රජයක්.

எதிர்க்கட்சிகளின் விமர்சனம் அரசியல் தந்திரோபாய விமர்சனமே தவிர, யதார்த்தத்திற்குப் பொருந்தாது.

"இரண்டு ஆண்டுகள்" அல்லது "ஓராண்டு" போன்ற குறுகிய காலக்கெடுவை நிர்ணயிப்பதன் மூலம், அரசாங்கத்தின் மீது தொடர்ச்சியான பொது அழுத்தத்தை உருவாக்க எதிர்க்கட்சிகள் முயல்கின்றன.

போலிப் பிரச்சாரங்களையும், சாதி-மத ரீதியான அரசியல் தூண்டுதல்களையும் தடுத்து, நல்ல கொள்கைகள் மற்றும் நேர்மையான வேட்பாளர்கள் பற்றிய விபரங்களை கிராமம்புற மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய தேவையும், பொறுப்பும் தற்போதைய படித்த இளைஞர்களுடைய கைகளிலே தங்கியுள்ளது.

1965 இல் உருவாக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி (JVP), 1971 மற்றும் 1989 போன்ற காலகட்டங்களில் அரசியல் கிளர்ச்சிகளில் ஈடுபட்டு, பின்னர் 1994 முதல் முழுமையான ஜனநாயகப் பாதையில் பயணிக்க தொடங்கியது. 

இவ்வளவு நீண்ட அரசியல் வரலாற்றைக் கொண்ட ஒரு கட்சி, நாட்டின் ஒட்டுமொத்த பிரச்சினைகளையும் ஒரு சில வருடங்களுக்குள் தீர்க்க முடியும் என எதிர்பார்ப்பது அரசியல் தந்திரோபாய விமர்சனமே தவிர, யதார்த்தத்திற்குப் பொருந்தாது என்பதே பல்கலைக்கழக மாணவர்கள் தொடக்கம் புத்திஜீவிகளினதும் பார்வையாக உள்ளது.

மக்கள் விடுதலை முன்னணி (JVP) 1965 இல் ஆரம்பிக்கப்பட்டு, நீண்ட அரசியல் வரலாற்றைக் கொண்டிருந்தாலும், தேசிய மக்கள் சக்தி (NPP) கூட்டணியாக 2024 பிற்பகுதியில் அரசாங்கத்தைக் கைப்பற்றிய பின்னர், அனைத்துப் பிரச்சினைகளையும் குறுகிய காலத்திற்குள் தீர்க்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனம் மற்றும் அழுத்தங்கள் சாதாரணமானவை அல்ல. 


ஜனநாயக அரசியல் சூழலில் இத்தகைய விமர்சனங்கள் இயல்பானவை என்றாலும், தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார சூழலின் பின்னணியில் இதன் ஆழமான தாக்கங்களை நாம் உற்றுநோக்க வேண்டும்.


பல தசாப்தங்களாகத் தொடரும் இலங்கையின் தீவிர பொருளாதார நெருக்கடிகள், கட்டமைக்கப்பட்ட ஊழல்கள் மற்றும் முறையற்ற நிர்வாகச் சீர்கேடுகள் ஆகியவற்றை வெறுமனே இரண்டு ஆண்டுகளுக்குள் மாற்றுவது என்பது மிகவும் சவாலான மற்றும் நடைமுறைக்குச் சாத்தியமற்ற காரியமாகும்.


2022 இல் ஏற்பட்ட வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிபந்தனைகளுக்கு NPP அரசாங்கம் தனது பொருளாதாரக் கொள்கையை முன்னெடுக்க வேண்டியுள்ளது. 


வாழ்க்கைச் செலவு, கடன் மறுசீரமைப்பு மற்றும் வறுமை ஒழிப்பு போன்றவற்றை குறுகிய காலத்தில் முழுமையாகத் தீர்ப்பது கடினம் என்பதற்கும் அப்பால் பழைய அரசியல் கலாச்சாரத்திற்குள் பழக்கப்பட்டுள்ள அரச நிருவாக கட்டமைப்புக்களை பகுதி அடிப்படையிலாவது தூக்கி நிறுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு மிகத் தேவையாக உள்ளது.


1948 முதல் ஆதிக்கம் செலுத்திய பாரம்பரிய அரசியல் கலாசாரத்தில் ஊறிய அரச நிருவாக கட்டமைப்புகளை, குறுகிய காலத்திற்குள் கொள்கை ரீதியான 'System change' (அமைப்பு மாற்றம்) முறைமைக்குள் கொண்டுவருவது பாரிய சவாலாகும்.


அத்தோடு, தாமதம் மற்றும் அரசியல் தலையீடுகளுக்குப் பழக்கப்பட்ட அரச நிருவாக இயந்திரத்தை குறுகிய காலத்தில் சாத்தியமற்றது என்ற விடயத்தினை மக்கள் விளங்கிக்கொள்வது என்பதே பாகுபாடின்றி சகலரும் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயமாக உள்ளது.


தற்போதைய ஜே.வி.பி மற்றும் என்.பி.பி (JVP/NPP) கூட்டணி அரசாங்கம் இதற்கு நிதானமான அணுகு முறையையும், மக்களின் தெளிவான பங்களிப்பையும் எதிர்பார்பதும், மக்கள் அதற்கு பூரண ஒத்துளைப்புக்களையும் வழங்குவதும் காலத்தின் தேவையாகும்.


சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிபந்தனைகளுடன் சமரசம் செய்துகொள்ள வேண்டிய பொருளாதார நெருக்கடி காலத்தில், அரசு ஸ்திரத்தன்மையைப் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. 


எனவே, தீவிர மாற்றங்களை அவசரப்பட்டு மேற் கொள்ளாமல், நிர்வாகச் சீர்குலைவுகளைத் தவிர்த்து, சகல விடயங்களையும் பக்குவமாக நகர்த்த வேண்டிய தேவை அரசுக்கு உள்ளது.


இந்த மாற்றங்கள் வெறும் அரசாங்கத்தின் இலக்காக மட்டும் நின்றுவிடக் கூடாது. மக்களும் அரசியல் தெளிவு பெற்று, ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகத்தை ஆதரிக்க வேண்டும். அதற்காக 'Praja Shakthi' மற்றும் 'Clean Sri Lanka' போன்ற திட்டங்கள் மூலம் மக்கள் பங்கேற்பு அரசாங்கத்தால் ஊக்குவிக்கப்படுகிறது.


அரசாங்கத்தின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதுடன், அவர்கள் எடுக்கும் முறையான நிருவாகச் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க வேண்டும். 


தனிநபர்களும் இலஞ்சம், முறை கேடுகளைத் தவிர்த்து தூய அரசியல் கலாச்சாரத்திற்குத் மக்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.


நாட்டின் உண்மையான வளர்ச்சிக்கு அரசியல்வாதிகள் மாறுவது எவ்வளவு முக்கியமோ, அதைவிடவும் முக்கியமாக பார்க்கப்படுவது சாதாரண குடிமக்களும், படித்த இளைஞர்களும் விழிப்படைவதுதான். 


அரசியல் எனும் சமூகப் பொறுப்பு வாய்ந்த தூய பயணத்தில் 
வாக்குகளைப் பணம் அல்லது பொருட்களுக்காக விற்கக் கூடாது என்பதைப் பாமர மக்களுக்குப் புரிய வைக்க வேண்டிய தேவை தற்போதைய இளைஞர் சமூகத்திற்கு இருக்கின்றது. 


எதற்கும் இலஞ்சம் கொடுக்கத் தேவையில்லை என்பதை சமூகத்துக்கு உணர்த்த வேண்டும் என்ற பணியானது மிகப்பெரும் சவால்மிக்க ஒன்றாக இருக்கின்றது.

போலிப் பிரச்சாரங்களையும், சாதி-மத ரீதியான அரசியல் தூண்டுதல்களையும் கிராமப்புற மக்கள் நம்புவதை தடுக்க வேண்டும். 


நல்ல கொள்கைகள் மற்றும் நேர்மையான வேட்பாளர்கள் பற்றிய விபரங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய தேவையானது தற்போதைய படித்த இளைஞர்களுடைய கைகளிலே தங்கியுள்ளது.


தங்கள் பகுதி பிரதிநிதிகளிடம் மக்கள் கேள்வி கேட்கும் தைரியத்தை உருவாக்க வேண்டும். 


படித்த இளைஞர்கள் வெறும் விமர்சகர்களாக மட்டும் இருக்காமல், சமூகத்தை வழிநடத்தும் வழி காட்டிகளாக மாறும்போது மட்டுமே மாற்றத்தை நோக்கிய எந்தப் பயணங்களாக இருந்தாலும் அது சரியான இலக்கினை அடையும் என்பது பல நாடுகளினுடைய வரலாறுகள் எமக்கு கற்றுத்தரும் பாடங்களாக உள்ளது.


கடந்த காலங்களில் அரசாங்க நிறுவனங்கள் ஊழலுக்கும் முறைகேடுகளுக்கும் பெயர் போனவையாக இருந்தன. 


தற்போது சட்டவாக்க துறையினையும் பொலிஸ் ஆணைக் குழுவையும் சுயாதீனமாக்கி இரண்டு வருடத்துக்குள் நாட்டினுடைய சிவில் நிருவாகத்துக்குள் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.


தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது இன்னும் இரண்டு வருடங்கள் இதே ஆட்சியை கொண்டு செல்லுமாக இருந்தால்! பழைய அரசியல் கலாச்சாரத்துக்குள் பலக்கப்பட்ட ஒட்டு மொத்த அரச நிறுவனங்களையும், அதன் சேவைக் கட்டமைப்புக்களையும் ஊழலற்ற, நேர்மையான தூய்மையான Jvp யினுடைய கொள்கைக்குள் கொண்டு வந்து விடுவார்கள்.

அதனால் பழைய அரசியல் கலாச்சாரத்திற்குள் இயங்கிய எதிர்க்கட்சிகள் தமது இருப்புக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் உள்ளன. 


இதன் காரணமாகவே அவர்கள் NPPயின் ஆட்சியமைப்பைப் பலவீனப்படுத்தும் நோக்கில் கூட்டணிகளை உருவாக்குவதும், அரசாங்கத்தின் மீது சேறுபூசும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

முறையான கொள்கைகளோ அல்லது மக்களின் நன்மதிப்போ இல்லாத எதிர்க்கட்சிகள், தேசிய மக்கள் சக்தியின் மக்கள் ஆதரவைத் திசை திருப்பவும், அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளுக்குத் தடையை ஏற்படுத்தவும் அவர்களால் முடியுமான அரசியல் தந்திரங்களை கையாள்கின்றன.

அரச நிறுவனங்களில் உள்ள வீண்விரயம், முறைகேடுகள் மற்றும் இலஞ்சம், ஊழல்களை ஒழிப்பதற்காக 'கிளீன் ஸ்ரீ லங்கா' (Clean Sri Lanka) போன்ற வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. 


ஊழல் வழக்குகளில் தொடர்புடையவர்களைக் கடுமையாகத் தண்டிப்பதற்கான சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளது.

நிர்வாகத்தில் தூய்மையையும் வெளிப்படைத் தன்மையையும் கொண்டு வருவது தேசிய மக்கள் சக்தியின் பிரதான இலக்காக இருந்தாலும், நீண்டகாலமாக வேரூன்றிய நிர்வாகக் கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளைத் திருத்தி, உறுதியான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் நீண்டகால சவாலாகவும் பார்க்கப்படுகிறது.


நீண்டகாலமாக வேரூன்றியுள்ள அதிகாரத்துவ மற்றும் ஊழல் வலைப்பின்னல்களை முழுமையாக அகற்றுவதற்கு தொடர்ச்சியான அரசியல் உறுதிப்பாடு தேவையாகும். 


ஊழலை ஒழிப்பதோடு மட்டுமல்லாமல், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளைச் சமாளிக்கும் திறன் அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையை தீர்மானிக்கும் என்பதில் தெளிவு பெற வேண்டிய கடமையும், பொறுப்பும் படித்த இளைஞர் சமூகத்திற்கு இருக்கின்றது.


நேர்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாக முறை, அரச நிறுவனங்களின் சேவைகளை மக்களுக்கு விரைவாகவும் தடையின்றியும் பெற்றுக்கொடுக்க உதவும். அதற்கு அரசாங்கத்தின் 'முறையான மாற்றம்' (System Change) என்ற வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு புதிய அரசியலமைப்பு, நீதித்துறை சீர்திருத்தங்கள் மற்றும் நிர்வாகக் கட்டமைப்புகளை மாற்றுதல் போன்ற நீண்டகாலச் செயன்முறைகள் அவசியமாகின்றன.

"இரண்டு ஆண்டுகள்" அல்லது "ஓராண்டு" போன்ற குறுகிய காலக்கெடுவை நிர்ணயிப்பதன் மூலம், அரசாங்கத்தின் மீது தொடர்ச்சியான பொது அழுத்தத்தை உருவாக்க எதிர்க்கட்சிகள் முயல்கின்றன.

பாரம்பரிய அரசியல் கட்சிகள் தமது மீட்சிக்காக மக்கள் மத்தியில் அதிருப்திகளைப் உருவாக்கி அரசாங்கத்தை விரைவாகத் தோல்வியடையச் செய்யும் ஒரு உத்தியாக விமர்சனங்களைப் பயன்படுத்த முற்படுகின்றனர். 


தேவையற்ற முறையில் அரசாங்கத்தின் மீது எதிர்பார்ப்புகளையும் அழுத்தங்களையும் அதிகரிக்க எதிர்க்கட்சிகள் ஒரு குறுகிய கால அரசியல் கருவியாகப் பயன்படுத்துகின்றன என்பதை மக்கள் தற்போது தெளிவிக புரிந்து கொண்டுள்ளனர்.

எனவே, எதிர்க்கட்சிகளின் இந்த விமர்சனங்களை வெறும் "அரசியல் குற்றச்சாட்டுகளாக" மட்டும் கடந்துவிட முடியாது. இது அரசாங்கத்தின் மீதான மக்களின் பொறுமையையும், NPP அரசாங்கத்தின் நிர்வாகத் திறனையும் ஒரே நேரத்தில் சோதிக்கும் ஒரு கடுமையான சவாலாகும். 


மாபெரும் மக்கள் ஆணையுடன் ஆட்சிக்கு வந்த அரசாங்கம், இந்த அழுத்தங்களுக்கு மத்தியில் எவ்வாறு காத்திரமான மாற்றங்களை உருவாக்குகிறது என்பதைப் பொறுத்தே அதன் எதிர்காலம் தீர்மானிக்கப்படும் என்பது எதிர்கால வரலாற்று ரீதியான உண்மையாக அமையும்.


-அஹமட் இர்ஷாட்-
31-07-2027

அமைப்பு மாற்றத்தை நோக்கிய பயணம்: விமர்சனங்களை கடந்துசாதிக்கும் அரசு.
ආයතනික වෙනසක් කරා යන ගමනක්: විවේචන ජයගත් රජයක්.

විරුද්ධ පක්ෂ විසින් කරන විවේචන දේශපාලන උපායශීලී විවේචනයක් මිස යථාර්ථයට අදාළ නොවේ.

"අවුරුදු දෙකක්" හෝ "වසරක්" වැනි කෙටි කාලසීමාවන් නියම කිරීමෙන් විපක්ෂය උත්සාහ කරන්නේ රජයට අඛණ්ඩ මහජන පීඩනයක් ඇති කිරීමට ය.

ව්‍යාජ ප්‍රචාර සහ කුල-ආගමික දේශපාලන උසිගැන්වීම් වළක්වා හොඳ ප්‍රතිපත්ති සහ අවංක අපේක්ෂකයින් පිළිබඳ තොරතුරු ග්‍රාමීය ජනතාව වෙත ගෙන යාමේ අවශ්‍යතාවය සහ වගකීම අද උගත් තරුණයින් අත පවතී.
++++++++++++++++++++

1965 දී පිහිටුවන ලද ජනතා විමුක්ති පෙරමුණ 1971, 1989 වැනි කාල වකවානුවල දේශපාලන කැරලිවල නිරත වූ අතර ඉන්පසුව 1994 සිට පූර්ණ ප්‍රජාතන්ත්‍රවාදී මාවතේ ගමන් කිරීමට පටන් ගත්තේය. මෙතරම් දීර්ඝ දේශපාලන ඉතිහාසයක් ඇති පක්ෂයකට වසර කිහිපයක් ඇතුළත රටේ සියලු ගැටලු විසඳා ගැනීමට හැකි වෙතැයි අපේක්ෂා කිරීම දේශපාලන උපායශීලී විවේචනයක් පමණක් නොව එය යථාර්ථවාදී නොවන බව විශ්වවිද්‍යාල සිසුන්ගේ හා බුද්ධිමතුන්ගේ අදහසයි.

ජනතා විමුක්ති පෙරමුණ 1965 දී ආරම්භ කර දීර්ඝ දේශපාලන ඉතිහාසයකට හිමිකම් කීවද 2024 අග භාගයේදී ජාතික ජන බලවේගයේ සන්ධානයක් ලෙස ආණ්ඩු බලය ලබාගෙන කෙටි කාලයක් තුළ සියලු ප්‍රශ්න විසඳන ලෙස විපක්ෂයේ පක්ෂවල විවේචන හා බලපෑම් සුලභ නොවේ. ප්‍රජාතන්ත්‍රවාදී දේශපාලන වටපිටාවක් තුළ මෙවැනි විවේචන ස්වභාවික වුවත්, වත්මන් දේශපාලන හා ආර්ථික පරිසරයේ සන්දර්භය තුළ ඒවායේ ගැඹුරු ඇඟවුම් දෙස අප බැලිය යුතුය.

ශ්‍රී ලංකාවේ දශක ගනනාවක දරුණු ආර්ථික අර්බුද, ව්‍යුහගත දූෂණය සහ වැරදි පරිපාලනය වසර දෙකකින් ආපසු හැරවීම ඉතා අභියෝගාත්මක සහ ප්‍රායෝගික නොවන කාර්යයකි.

2022 පෙර නොවූ විරූ ආර්ථික අර්බුදයෙන් පසුව, NPP ආන්ඩුවට සිය ආර්ථික ප්‍රතිපත්තිය ජාත්‍යන්තර මූල්‍ය අරමුදලේ (IMF) කොන්දේසි වලට අනුගත විය යුතුය. ජීවන වියදම, ණය ප්‍රතිව්‍යුහගත කිරීම සහ දරිද්‍රතාවය පිටුදැකීම කෙටි කාලයක් තුළ සම්පූර්ණයෙන් විසඳාගැනීම දුෂ්කර බැවින් පැරණි දේශපාලන සංස්කෘතියට හුරුවී ඇති පරිපාලන ව්‍යුහයන් අර්ධ වශයෙන් හෝ කඩා බිඳ දැමීමේ වගකීම රජය භාරගත යුතුව ඇත.

1948 සිට ආධිපත්‍යය දැරූ සාම්ප්‍රදායික දේශපාලන සංස්කෘතිය තුළ ගිලී ඇති පරිපාලන ව්‍යුහයන් කෙටි කාලයක් තුළ ප්‍රතිපත්තිමය ‘පද්ධති වෙනසක්’ කරා ගෙන ඒම දැවැන්ත අභියෝගයකි.
එමෙන්ම ප්‍රමාදයට සහ දේශපාලන අතපෙවීම්වලට හුරුවී ඇති පරිපාලන යාන්ත්‍රණය කෙටි කාලයකින් කළ නොහැකි බව ජනතාවට අවබෝධ කරදීම ජාති භේදයකින් තොරව සියලු දෙනාගේ අවධානයට ලක්විය යුතු කරුණකි.

වත්මන් ජනතා විමුක්ති පෙරමුණ සහ ජාතික ජන බලවේගය (J.V.P./N.P.P) හවුල් ආණ්ඩුව මේ සඳහා ලිහිල් ප්‍රවේශයක් ගත යුතු අතර, ඒ සඳහා පැහැදිලි ජනතා සහභාගීත්වයක් සහ ජනතා පූර්ණ සහයෝගීතාව අපේක්ෂා කිරීම යුගයේ අවශ්‍යතාවයයි.

ආර්ථික අර්බුදකාරී කාලවලදී, ජාත්‍යන්තර මූල්‍ය අරමුදලේ (IMF) කොන්දේසි සමඟ සම්මුතියක් ඇති කර ගනිමින් රජය ස්ථාවරත්වය පවත්වා ගැනීමට සිදු වේ. එබැවින් පරිපාලනමය බාධාවන් මඟහරවා ගනිමින් කඩිමුඩියේ රැඩිකල් වෙනස්කම් නොකර පරිණත ලෙස සියලු කටයුතු ගෙනයාමේ අවශ්‍යතාව රජය සතුය.

මේ වෙනස්කම් ආණ්ඩුවේ ඉලක්කය පමණක් නොවිය යුතුයි. ජනතාවද දේශපාලන පැහැදිලිභාවයක් ලබාගෙන දූෂණයෙන් තොර විනිවිද පෙනෙන පාලනයකට සහාය දිය යුතුය. ඒ සඳහා ‘ප්‍රජා ශක්ති’, ‘පිරිසිදු ශ්‍රී ලංකාව’ වැනි වැඩසටහන් හරහා රජයෙන් ජනතා සහභාගිත්වය දිරිමත් කරනවා.

ආණ්ඩුවේ වැරදි පෙන්වා දී ඔවුන් විසින් ගනු ලබන විධිමත් පරිපාලන ප්‍රතිසංස්කරණ ක්‍රියාමාර්ගවලට සහාය දිය යුතුයි. පුද්ගලයන් විසින් අල්ලස හා දූෂණයෙන් වැළකී පිරිසිදු දේශපාලන සංස්කෘතියක් බවට ජනතාව පරිවර්තනය විය යුතුය.

රටේ සැබෑ සංවර්ධනයට දේශපාලකයින් වෙනස් වීම වැදගත් වන තරමටම වඩා වැදගත් වන්නේ සාමාන්‍ය පුරවැසියන් සහ උගත් තරුණයන් පිබිදීමයි. සමාජ වගකීම් සහිත පිරිසිදු දේශපාලන ගමනක
වත්මන් තරුණ සමාජය ගිහියන්ට අවබෝධ කර දිය යුතු වන්නේ ඡන්දය මුදලට හෝ භාණ්ඩවලට විකිණීම නොකළ යුතු බවයි. අල්ලස් දීමේ අවශ්‍යතාවක් නැති බව සමාජයට ඒත්තු ගැන්වීමේ කාර්යය ඉතා අභියෝගාත්මක කාර්යයකි.

ව්‍යාජ ප්‍රචාර සහ කුල-ආගමික දේශපාලන උසිගැන්වීම් විශ්වාස කිරීමෙන් ග්‍රාමීය ජනතාව වැළැක්විය යුතුයි. යහපත් ප්‍රතිපත්ති සහ අවංක අපේක්ෂකයින් පිළිබඳ තොරතුරු ජනතාව අතරට ගෙන යාමේ අවශ්‍යතාවය අද උගත් තරුණ තරුණියන් අතේ පවතී.

ජනතාව තම ප්‍රාදේශීය නියෝජිතයන්ගෙන් ප්‍රශ්න කිරීමට ධෛර්යය වර්ධනය කළ යුතුය. බොහෝ රටවල ඉතිහාස පාඩම් අපට කියා දෙන්නේ වෙනසක් කරා යන ඕනෑම ගමනක් නිවැරදි ගමනාන්තය කරා ළඟා වන්නේ උගත් තරුණ පරපුර හුදු විචාරකයන් නොවී සමාජය මෙහෙයවීමට මඟ පෙන්වන්නන් වූ විට බවයි.

පසුගිය කාලයේ රාජ්‍ය ආයතන දූෂණයට හා අක්‍රමිකතාවලට ප්‍රසිද්ධියට පත් විය. මේ වන විට ව්‍යවස්ථාදායක දෙපාර්තමේන්තුව සහ පොලිස් කොමිසම ස්වාධීන කර වසර දෙකක් ඇතුළත රටේ සිවිල් පරිපාලනයේ වෙනස්කම් ගෙන තිබෙනවා.

ජාතික ජන බලවේගයේ ආණ්ඩුව තව අවුරුදු දෙකක් එකම පාලනයක් ගෙන ගියොත්! පැරැණි දේශපාලන සංස්කෘතිය තුළ මුල් බැසගත් සමස්ත රාජ්‍ය ආයතන සහ එහි සේවා ව්‍යුහයන් ජනතා විමුක්ති පෙරමුණේ දූෂණ, අවංක හා පවිත්‍ර ප්‍රතිපත්තිය තුළට ඔවුන් ගෙන එනු ඇත.

එබැවින් පැරණි දේශපාලන සංස්කෘතිය තුළ ක්‍රියාත්මක වන විරුද්ධ පක්ෂ තම පැවැත්මට තර්ජනයක් වේ යැයි බියෙන් පසුවෙති. එන්පීපී පාලනය දුර්වල කිරීමේ අරමුණින් සන්ධානගත වෙමින් ආණ්ඩුවට මඩ ගැසීමේ කටයුතුවල නියැලෙන්නේ මේ නිසා ය.

නිසි ප්‍රතිපත්ති හෝ මහජන සුහදතාවක් නැති විරුද්ධ පක්ෂ ජාතික ජන බලවේගයේ ජනතා සහයෝගය වෙනතකට යොමු කර ආණ්ඩුවේ දූෂණ විරෝධී වැඩපිළිවෙළට බාධා කිරීමට හැකි ඕනෑම දේශපාලන උපක්‍රම යොදමින් සිටිති.

රාජ්‍ය ආයතනවල නාස්තිය, අක්‍රමිකතා සහ අල්ලස පිටුදැකීම සඳහා රජය ‘පිරිසිදු ශ්‍රී ලංකා’ වැනි වැඩසටහන් දියත් කර තිබේ. දූෂණ නඩුවලට සම්බන්ධ පුද්ගලයන්ට දඬුවම් ලබාදීමේ නීතිමය පියවර කඩිනම් කර තිබෙනවා.

පාලනයේ පිරිසිදුකම සහ විනිවිදභාවය ගෙන ඒම ජාතික ජන බලයේ ප්‍රධාන අරමුණ වන අතරම, පාලන ව්‍යුහයේ දීර්ඝ කාලීනව මුල් බැසගෙන ඇති දුර්වලතා නිවැරදි කර තිරසාර ආර්ථික වර්ධනයක් ඇති කිරීම රජයට දිගුකාලීන අභියෝගයක් ලෙස ද සැලකේ.

දිගු කලක් තිස්සේ මුල් බැසගත් නිලධාරිවාදී සහ දූෂිත ජාලයන් සම්පූර්ණයෙන් විසුරුවා හැරීම සඳහා අඛණ්ඩ දේශපාලන කැපවීමක් අවශ්‍ය වනු ඇත. දූෂණය පිටුදැකීමට අමතරව ජනතාවගේ ජීවනෝපාය වැඩිදියුණු කිරීම සහ ජාත්‍යන්තර මූල්‍ය අරමුදලේ තත්ත්වයන්ට මුහුණ දීමේ හැකියාව රජයේ ස්ථාවරභාවය තීරණය කරන බව වටහා ගැනීම උගත් තරුණ ප්‍රජාවගේ යුතුකම සහ වගකීමයි.

රාජ්‍ය ආයතනවල සේවාවන් කඩිනමින් සහ සුමටව ලබා ගැනීමට අවංක හා විනිවිද පෙනෙන පාලන ක්‍රමයක් ජනතාවට උපකාර වනු ඇත. ‘පද්ධති වෙනසක්’ පිළිබඳ ආණ්ඩුවේ පොරොන්දුව ඉටු කිරීම සඳහා නව ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවක්, අධිකරණ ප්‍රතිසංස්කරණ සහ පරිපාලන ව්‍යුහයන් වෙනස් කිරීම වැනි දිගුකාලීන ක්‍රියාදාමයන් අවශ්‍ය වේ.

"අවුරුදු දෙකක්" හෝ "වසරක්" වැනි කෙටි කාලසීමාවන් නියම කිරීමෙන් විපක්ෂය උත්සාහ කරන්නේ රජයට අඛණ්ඩ මහජන පීඩනයක් ඇති කිරීමට ය.

සාම්ප්‍රදායික දේශපාලන පක්ෂ තම ප්‍රකෘතිය සඳහා ජනතාව අතර අතෘප්තිය ඇති කරමින් ඉක්මනින් ආණ්ඩුව පෙරලීමේ උපාය මාර්ගයක් ලෙස විවේචන භාවිතා කිරීමට උත්සාහ කරයි. ආණ්ඩුවට අනවශ්‍ය ලෙස බලාපොරොත්තු සහ බලපෑම් ඇති කිරීමට විරුද්ධ පක්ෂ කෙටි කාලීන දේශපාලන මෙවලමක් ලෙස එය භාවිතා කරන බව දැන් ජනතාවට පැහැදිලිවම වැටහෙනවා.

එබැවින් විරුද්ධ පක්ෂවල මෙම විවේචන හුදු "දේශපාලන චෝදනා" ලෙසින් බැහැර කළ නොහැක. මෙය රජය කෙරෙහි ජනතාවගේ ඉවසීම සහ NPP ආණ්ඩුවේ පරිපාලන හැකියාව සමගාමීව උරගා බලන බරපතල අභියෝගයකි. මහා ජනවරමක් ලබා බලයට පත්වන ආණ්ඩුවක අනාගතය තීරණය වන්නේ මේ බලපෑම් මධ්‍යයේ අවශ්‍ය වෙනස්කම් සිදු කරන ආකාරය අනුව බව අනාගත ඓතිහාසික යථාර්ථයක් වනු ඇත.

අහමඩ් ඉර්ෂාඩ්.
අද දිනකරන් සඟරාවට
31-07-2027
அமைப்பு மாற்றத்தை நோக்கிய பயணம்: விமர்சனங்களை கடந்துசாதிக்கும் தேசிய மக்கள் அரசு. Reviewed by www.lankanvoice.lk on ஜூலை 31, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.