Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீம்; முஸ்லிம்களின் தனித்துவ அரசியலை பலவீனப்படுத்தும் 'வியாபாரத்தை' நீண்ட காலமாக செய்து வருகிறார்.


(சிரேஷ்ட  ஊடகவியலாளர்
UL.மப்றூக்)
 
அவர் முஸ்லிம்களின் தனித்துவ அடையாளத்தை - தமிழர் தரப்பிடம் தாரை வார்க்கின்றார்.


நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகள்- ஜனாதிபதியை இன்று சந்தித்துப் பேசினார்கள். 


இது குறித்து ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூட; '06 தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்கிய கூட்டணியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையில் சந்திப்பு' என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஆனால் ஜனாதிபதியுடனான இன்றைய சந்திப்பு பற்றி -  ஊடகங்களிடம் பேசிய ரஊப் ஹக்கீம்; "நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பேசும் கட்சிகளின் சபை" என்று தமிழ் - முஸ்லிம் கட்சிகளின் கூட்டணியை குறிப்பிட்டிருந்தார்.


'தமிழ் பேசும் மக்களின் அரசியலில்' இருந்து, முஸ்லிம்கள் தனியாகி நெடுங்காலமாகிவிட்டது.


இனரீதியாக முஸ்லிம்களின் அரசியல் தனி அடையாளம் பெற்றுள்ளது, முஸ்லிம்களின் அரசியல்,  கூர்மையடைந்துள்ளது.  தமது தனித்துவ அரசியல் பாதையில் பல தசாப்தங்களாக, முஸ்லிம்கள் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.


இந்த நிலையில், முஸ்லிம்களை - 'தமிழ் பேசும் மக்களின் அரசியல்' என்கிற பொதுமைக் குழிக்குள், மீண்டும் ஹக்கீம் தள்ளிவிட முயற்சிக்கின்றார்.

கண்ணைத் திறந்து கொண்டு -குழிக்குள் விழுவது, அவருக்கு ஒன்றும் புதிதில்லையே.


மறுபுறம். இன்றைய தினம் ஜனாதிபதியை சந்தித்த 06 தமிழ் - முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்துமே, புளித்துப் போனவை.


இந்த சந்திப்பில் கலந்து கொண்டவர்களின் கட்சிகள், நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகித்த போது, இவர்கள் இன்று ஜனாதிபதியிடம் கூறிய பிரச்சினைகளில் 90 வீதமானவற்றுக்கு அப்போதே தீர்வு கண்டிருக்கலாம்.


மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான அத்தனை வழிகளையும், ஹக்கீம் அமைச்சராக இருந்த நல்லாட்சி அரசாங்கம்தான் அடைத்துவிட்டது. இப்போது, ஏதோ அனுர அரசாங்கம்தான் -மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் இழுத்தடிப்பது போன்ற ஒரு படத்தை, ஹக்கீம் உள்ளிட்ட இந்த கூட்டணி கட்சியினர் காட்ட முயற்சிக்கின்றார்கள்.


முஸ்லிம்களின் தனித்துவ அரசியல் அடையாளத்தை வென்றெடுப்பதற்காகவே, முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 


ஆனால்,  முஸ்லிம்களின் தனித்துவ அரசியல் அடையாளத்தை, முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய தலைவரே, 'நல்ல விலைக்கு' விற்றுக் கொண்டிருக்கிறார் என்பதுதான் முரண் நகையாகும்.


முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீம்; முஸ்லிம்களின் தனித்துவ அரசியலை பலவீனப்படுத்தும் 'வியாபாரத்தை' நீண்ட காலமாக செய்து வருகிறார். Reviewed by www.lankanvoice.lk on ஆகஸ்ட் 04, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.