அரசாங்க உத்தியோகத்தர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ அலுவலகம் இன்று திறப்பு
அரசாங்க உத்தியோகத்தர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ அலுவலகம் இன்று திறப்பு.
அரசாங்க உத்தியோகத்தர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத் துறையின் திருத்தத்திற்காக நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ அலுவலகம் இன்று (04) முற்பகல் 10.00 மணிக்கு கொழும்பு 07, மலலசேகர மாவத்தையில் அமைந்துள்ள அலுவலகத்தில் இடம்பெற்றது.
2026 ஜூன் 22 ஆம் திகதி 2494/05 இலக்க அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக ஜனாதிபதியின் அதிகாரங்களுக்கு அமைவாக இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.
அரசாங்க உத்தியோகத்தர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பாக காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குதல், அரசாங்க உத்தியோகத்தர்களின் தொழிலின் தன்மையை அதிகரித்தல், புதிய தொழில்நுட்பத் திறன் மற்றும் உலகளாவிய முன்னேற்றம் என்பவற்றுக்கு இணங்க அரசாங்க ஊழியர்கள் எந்த விதத்தில் தீர்மானமிக்க திருத்தங்கள் இடம்பெற வேண்டும் என்பதற்கான சிபாரிசுகளை வழங்குதல் போன்றவை தொடர்பான பொறுப்புக்கள் இந்த ஆணைக்குழுவிற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த நோக்கங்களை அடைவதற்காக தொழிற்சங்கங்கள் மற்றும் பொது மக்களின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளைக் கோருதல் நாளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 04, 2026
Rating:

கருத்துகள் இல்லை: