සිංහල පරිවර්තනය සමග) அதிகார அடக்கு முறைக்கு எதிரான இசை வடிவம்: மறைந்த கலாநிதி நந்தா மாலினி. අධිකාරී විරෝධී සංගීත ආකෘතිය: දිවංගත කලනිධි නන්දා මාලිනී.
සිංහල පරිවර්තනය සමග)
அதிகார அடக்கு முறைக்கு எதிரான இசை வடிவம்: மறைந்த கலாநிதி நந்தா மாலினி.
අධිකාරී විරෝධී සංගීත ආකෘතිය: දිවංගත කලනිධි නන්දා මාලිනී.
இடதுசாரி அரசியல் மற்றும் செயற்பாட்டாளர்களுடன் இயற்கையான கருத்தியல் ஈர்ப்பைக் கொண்டிருந்தார். அத்தோடு, அவரது பாடல்கள் வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமல்லாமல், சமூக விழிப்புணர்வையும் அரசியல் சிந்தனையையும் தூண்டும் சக்திவாய்ந்த கருவிகளாக திகழ்கின்றன.
எந்தவொரு அரசியல் கட்சிக்கும் அடிபணியாமல் 'பவனா' போன்ற இசைப் படைப்புகள் மூலம் 1970, 1980-களின் சமூக மாற்றக் குரல்களுக்கும் 2022 மக்கள் போராட்டத்திற்கும் சுயாதீனமாக ஆதரவளித்து 'தேசத்தின் குரலாகத்' திகழ்ந்து மறைந்துள்ளார்.
மறைந்த டொக்டர் நந்தா மாலினி (Nanda Malini) தொழிலாளர் வர்க்கப் பின்னணியில் பிறந்து வளர்ந்து, இடதுசாரி சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு, ஒடுக்கப்பட்ட மக்கள், சமூக அநீதி, அரசு மற்றும் அதிகார வர்க்க அடக்கு முறைகளுக்கு எதிரான பாடல்களைத் தன் இசை மூலம் வலிமையாக வெளிப்படுத்திய இலங்கையின் புகழ்பெற்ற மற்றும் முதன்மையான சிங்கள இசைக் கலைஞர் ஆவார்.
இலங்கையின் அளுத்கம பிரதேசத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் 1943 ஆகஸ்ட் 23ம் திகதி பிறந்த அவர், ஏனைய பாடகர்களைப் போன்று காதல் பிரிவை மட்டும் மையப்படுத்திய பாடல்களுக்கு முன்னுரிமை கொடுப்பதையும் தவிர்த்து, சமூக யதார்த்தங்களையும், மனிதர்களின் வேதனைகளையும் பிரதிபளிக்கும் கருத்துக்கள் மூலம் உறக்கத்தில் இருந்த தொழிலாளர் வர்க்கத்தை தட்டியெழுப்பிய கருத்தியல் பெண் விடுதலை போராளி என்றும் அழைக்கபபப்பட்டார்.
அவருடைய 1987 ஆம் ஆண்டு வெளிவந்த 'பவனா' (Pawana) இசைத் தொகுப்பு மனித உரிமைகளையும், அரசு அடக்கு முறைகளையும் விமர்சித்து மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி இருந்தது. கடந்த காலங்களில் தேசிய வானொலிகளில் அவரது பாடல்கள் தடை செய்யப்பட்ட போதும், மக்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்த பெண் பாடகரானார். அத்தோடு, பவன (Pawana) மற்றும் சத்தியயே கீதய (Sathyaye Geethaya) போன்ற கச்சேரிகள் மற்றும் பாடல்கள் மூலம் இலங்கையின் அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வுக்கு வித்திட்ட முன்னணி கலைஞராகவும் திகழ்ந்தார்.
லக்னோவில் உள்ள புகழ்பெற்ற பட்கண்டே இசைப் பல்கலைக்கழகத்தில் (Bhatkande Music Institute) சாஸ்திரீய இசையைக் கற்றறிந்து தனது குரல் வளத்தை செம்மைப்படுத்தினார். சிங்கள இசை உலகுக்கு அவர் ஆற்றிய இணையற்ற சேவையைப் பாராட்டி, பல்கலைக் கழகங்கள் அவருக்கு கௌரவ முனைவர் (Doctorate) பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளன.
நந்தா மாலினி தொழிலாளர் குடும்பத்தில் வளர்ந்ததாலும், சமூக சமத்துவமின்மைக்கு எதிரான பார்வை கொண்டிருந்ததாலும் இடதுசாரி அரசியல் மற்றும் செயற்பாட்டாளர்களுடன் இயற்கையான கருத்தியல் ஈர்ப்பைக் கொண்டிருந்தார். அத்தோடு, அவரது பாடல்கள் வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமல்லாமல், சமூக விழிப்புணர்வையும் அரசியல் சிந்தனையையும் தூண்டும் சக்திவாய்ந்த கருவிகளாக என்றும் திகழ்கின்றன.
இடதுசாரி இயக்கங்கள் மற்றும் முற்போக்கு சக்திகள் இவரைத் தங்களது அரசியல் இயக்கங்களுடன் இணைக்க முயன்றாலும், அவர் எப்போதுமே எந்தவொரு அரசியல் கட்சிக்கும் அடிபணியாமல், சுயாதீனமான கொள்கை சார்ந்த கலைப் பாதையையே தேர்ந்தெடுத்த ஒரு நடு நிலைவாத பெண்ணாகவும் வாழ்ந்து காட்டினார்.
1970 மற்றும் 1980-களில் இடதுசாரி மற்றும் முற்போக்கு செயற்பாட்டாளர்கள் முன்னெடுத்த சமூக மாற்றக் குரல்களுக்கு நந்தா மாலினியின் குரல் ஒரு இசை வடிவமாகப் பங்களித்தது. 2022ம் ஆண்டைய பொருளாதார வீழ்ச்சியை தொடர்ந்து ஏற்பட்ட மக்கள் போராட்டத்தின் போதும் அவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்தமை இலங்கை வரலாற்றில் முக்கிய விடயமாகவே பதியப்பட்டுள்ளது.
சுமார் 8 தசாப்தங்களாக இலங்கை இசைத் துறையில் ஆற்றிய அளப்பரிய சேவை மற்றும் தேசத்தின் பெருமைக்குரிய 'ஜாதிய யசோரவாய' (தேசத்தின் குரல்) என்ற அடையாளத்தைப் பெற்றிருந்தமைக்காக
அரசாங்கம் அவருக்கு முழுமையான அரச மரியாதையுடனான இறுதிச் சடங்குகளை நடத்த முன்வந்திருந்தது. இருந்தும், அவரது குடும்பத்தினர் மற்றும் நந்தா மாலினியின் உயிலில் குறிப்பிடப்பட்டிருந்த விருப்பத்திற்கேற்ப, எளிமையான முறையில் இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன.
இருப்பினும், அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டதுடன், அவரது மறைவையொட்டி மூன்று நாட்கள் ஆகஸ்ட் 21, 22 மற்றும் 23 ஆகிய நாட்கள் தேசிய துக்க நாளாகவும் பிரகடனம் செய்யப்பட்டது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மறைந்த பிரபல பாடகி வித்வான் கலாநிதி நந்தா மாலினிக்கு உரிய தேசிய மரியாதையை வழங்கியுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட முக்கிய தலைவர்கள்
நாவல பகுதியில் உள்ள நந்தா மாலினியின் இசை அகாடமிக்கு (Nanda Malini Sangeetha Ashramaya) நே
நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.
பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் (Harini Amarasuriya) வேண்டுகோளுக்கு இணங்க, இலங்கை நாடாளுமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் அவரது சமூக மற்றும் அரசியல் பங்களிப்பைப் பாராட்டி உரை நிகழ்த்தினர்.
நந்தா மாலினி எப்போதும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவும், சமூக அநீதிகளுக்கு எதிரான புரட்சிகரப் பாடகராகவும் திகழ்ந்தவர் என்பதால், அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் நேரில் சென்று தமது இறுதி அஞ்சலியை செலுத்தியமையும் அரச தரப்பு அவருடைய இழப்பில் கூடிய கவனம் செலுத்தியமையும் முக்கிய விடயமாக பார்க்கப்படுகின்றது.
மேலும், 1980களின் இறுதியில் (1987-1989 காலகட்டத்தில்) நந்தா மாலினி இலங்கையில் நிலவிய சமூக, அரசியல் கொந்தளிப்பான சூழலில் இளைஞர்களின் ஆதங்கத்தையும், வர்க்கப் போராட்டத்தையும் தனது கம்பீரமான குரல் வழியே வெளிப்படுத்தியவர். அது இலங்கையின் அரசியல் வரலாற்றில் மாற்றத்தை நோக்கிய இளைஞர் சமூகத்தின் மத்தியில் முக்கிய திருப்பு முனையாகவும் அமைந்தது.
நந்தா மாலினியின் இசைக் கச்சேரியில் அன்றைய அரசாங்கத்தின் கெடுபிடிகளையும் அடக்கு முறைகளையும் மீறி, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டனர். அப்பாடல்கள் இளைஞர்களிடையே மிகப்பெரிய அரசியல் விழிப்புணர்வையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியதுடன், நந்தா மாலினியின் உயிருக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படலாம் என்ற காரணத்தினால் அவர் சில காலம் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாட்டில் வாழ வேண்டிய சூழலும் உருவானது.
கலை என்பது வெறும் பொழுது போக்கு மட்டுமல்ல, அது ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டக் கருவி என்பதைத் தனது பாடல்கள் மூலம் நிரூபித்தவர் நந்தா மாலினி. அதனாலேயே அன்றைய காலக்கட்ட இளைஞர்களின் மனதில் அவர் ஒரு இசைக் குறியீடாக நிலைத்து நின்றார் என்பதை இன்றைய அவருடைய இழப்பு நாட்டு மக்களுக்கு கூறுகின்ற பாடகமாக இருக்கின்றது.
அஹமட் இர்ஷாட்.
24-08-2026.
அதிகார அடக்கு முறைக்கு எதிரான இசை வடிவம்: மறைந்த கலாநிதி நந்தா மாலினி.
අධිකාරී විරෝධී සංගීත ආකෘතිය: දිවංගත කලනිධි නන්දා මාලිනී.
වාමාංශික දේශපාලනය සහ ක්රියාකාරීන් සමඟ ඇයට ස්වභාවික මතවාදී බැඳීමක් තිබුණි. එසේම, ඔහුගේ ගීත හුදෙක් විනෝදාස්වාදය සඳහා නොව, සමාජ දැනුවත්භාවය සහ දේශපාලන චින්තනය අවුලුවාලීම සඳහා ප්රබල මෙවලම් වේ.
1970 සහ 1980 දශකවල සමාජ විපර්යාස හඬට සහ 2022 ජන අරගලයට කිසිදු දේශපාලන පක්ෂයකට සම්බන්ධ නොවී ‘භාවනා’ වැනි සංගීත කෘති හරහා ස්වාධීනව සහයෝගය ලබා දෙමින් ඇය ‘ජාතියේ හඬ’ බවට පත්වී ඇත.
+++++++++++++++++++
කම්කරු පන්ති පසුබිමක ඉපිද හැදී වැඩුණු, නැසීගිය ආචාර්ය නන්දා මාලිනී පීඩිත ජනතාවට, සමාජ අසාධාරණයට, රජයට සහ ඒකාධිපති පීඩනයට එරෙහිව සිය සංගීතයෙන් ප්රබල ලෙස ගීත ප්රකාශ කළ ශ්රී ලංකාවේ කීර්තිමත් සහ ප්රමුඛතම සිංහල සංගීත ශිල්පිනියකි.
1943 අගෝස්තු 23 වැනි දින ශ්රී ලංකාවේ අලුත්ගම ප්රදේශයේ සාමාන්ය පවුලක උපත ලද ඇය අනෙක් ගායිකාවන් මෙන් නොව ප්රේම සම්බන්ධයට පමණක් යොමු වූ ගීතවලට මුල්තැන දෙමින් සමාජ යථාර්ථයන් සහ මිනිස් වේදනාවන් පිළිබිඹු කරන අදහස් දැක්වීම් තුළින් නිදා සිටින කම්කරු පන්තිය අවදි කළ මතවාදී කාන්තා නිදහස් සටන්කාමියකු ලෙස හැඳින්විණි.
මානව හිමිකම් සහ රාජ්ය මර්දනය විවේචනය කරමින් ඇයගේ 1987 සංගීත සංග්රහය 'පවන' දැවැන්ත විප්ලවයක් ඇති කළේය. පසුගිය කාලයේ ජාතික ගුවන්විදුලි නාලිකාවලින් ඇයගේ ගීත තහනම් කර තිබුණත් නින්ගා ජනප්රිය ගායිකාවක් බවට පත්වුණා. ඔහු පවන, සත්යයේ ගීතය වැනි ප්රසංග සහ ගීත තුළින් ශ්රී ලංකාවට දේශපාලන හා සමාජ දැනුවත්භාවය ගෙන ආ ප්රමුඛ කලාකරුවෙකි.
ඇය ලක්නව්හි කීර්තිමත් භාත්කන්දේ සංගීත ආයතනයෙන් ශාස්ත්රීය සංගීතය හැදෑරූ අතර ඔහුගේ කටහඬ පිරිපහදු කළාය. ඔහු සිංහල ගීත ලොවට කළ අනුපමේය සේවය අගයමින් විශ්වවිද්යාල ඔහුට ගෞරව ආචාර්ය උපාධියක් පිරිනමා ඇත.
නන්දා මාලිනීට වාමාංශික දේශපාලනය සහ ක්රියාකාරීන් සමඟ ස්වභාවික මතවාදී ආකර්ෂණයක් තිබුණේ ඔහු කම්කරු පන්තික පවුලක හැදී වැඩුණු නිසාත් සමාජ අසමානතාවයට එරෙහිව අදහස් දැරූ නිසාත් ය. එසේම ඔහුගේ ගීත හුදෙක් විනෝදාස්වාදය සඳහා පමණක් නොව සමාජ දැනුවත්භාවය සහ දේශපාලන චින්තනය අවුලුවාලීමේ ප්රබල මෙවලම් වේ.
වාමාංශික ව්යාපාර සහ ප්රගතිශීලී බලවේග ඇයව තම දේශපාලන ව්යාපාර සමඟ සම්බන්ධ කර ගැනීමට උත්සාහ කළද ඇය සැමදා ජීවත් වූයේ කිසිදු දේශපාලන පක්ෂයක් අනුගමනය නොකර ස්වාධීන ප්රතිපත්ති මත පදනම් වූ කලාත්මක මාවතක් තෝරා ගත් මධ්යස්ථ කාන්තාවක් ලෙසය.
1970 සහ 1980 ගණන් වලදී වාමාංශික සහ ප්රගතිශීලී ක්රියාකාරීන් විසින් පුරෝගාමී වූ සමාජ විපර්යාසයේ හඬට සංගීතමය ස්වරූපයක් ලෙස නන්දා මාලිනීගේ හඬ දායක විය. 2022 ආර්ථික පසුබෑමෙන් පසු ඇති වූ ජනතා අරගලය නොතකා පීඩිත ජනතාව වෙනුවෙන් ඔහු හඬක් නැගීම ලංකා ඉතිහාසයේ වැදගත් කරුණක් ලෙස සටහන් වී ඇත.
දශක 8කට ආසන්න කාලයක් ශ්රී ලාංකේය සංගීත ක්ෂේත්රයට ඔහු කළ විශිෂ්ට සේවාව සහ ජාතියේ අභිමානය ලෙස 'ජාතිය යසෝරාවය' (ජාතියේ හඬ) නාමය හිමිකර ගැනීම වෙනුවෙන්.
ඔහුට පූර්ණ රාජ්ය අවමංගල්යයක් ලබාදීමට රජය ඉදිරිපත් විය. කෙසේ වෙතත්, ඔහුගේ පවුලේ අය සහ නන්දා මාලිනීගේ කැමැත්ත අනුව, සරල අවමංගල්යයක් සිදු කරන ලදී.
කෙසේ වෙතත්, රජයේ නියෝග මත ජාතික කොඩිය අඩකුඹු කර, ඔහු මිය ගිය අගෝස්තු 21, 22 සහ 23 යන දින තුන ජාතික ශෝක දින ලෙස ප්රකාශයට පත් කළේය. අභාවප්රාප්ත ජනප්රිය ගායන ශිල්පී විද්වාන් කලනිධි නන්දා මාලිනී මහත්මියට ජාතික ජනතා ශක්ති රජය විසින් නිසි ජාතික ගෞරවය පිරිනමා තිබේ. ජනාධිපති අනුරකුමාර් දිසානායක, අගමැති හරිනි අමරසූරිය ඇතුළු ප්රමුඛ පෙළේ නායකයන්
නාවල නන්දා මාලිනී සංගීතා ආශ්රමය
ඔවුන් පෞද්ගලිකව ගොස් අවසන් ගෞරව දැක්වූවා.
අග්රාමාත්ය කලනිති හරිනි අමරසුරිය මහත්මියගේ ඉල්ලීම පරිදි ශ්රී ලංකා පාර්ලිමේන්තුවේ සියලුම මන්ත්රීවරු නැගී සිට මොහොතක් නිශ්ශබ්දව සිටියහ. අග්රාමාත්ය සහ විපක්ෂ නායක සජිත් ප්රේමදාස මහතා ඔහුගේ සමාජ හා දේශපාලන දායකත්වය අගය කරමින් කතාවක් කළේය.
නන්දා මාලිනී සැමදා පීඩිත ජනතාවගේ හඬ මෙන්ම සමාජ අසාධාරණයන්ට එරෙහිව විප්ලවීය ගායිකාවක් වූ නිසා මැති ඇමැතිවරු දේශපාලන නායකයෝ රැසක් පෞද්ගලිකව අවසන් ගෞරව දැක්වූ අතර ඔහුගේ වියෝව පිළිබඳව රජයේ අවධානය යොමු විය.
එසේම, 1980 දශකයේ අග භාගයේ (1987-1989 කාලසීමාව) නන්දා මාලිනී ශ්රී ලංකාවේ සමාජ හා දේශපාලන කැලඹීම තුළ තරුණයන්ගේ කනස්සල්ල සහ පන්ති අරගලය සිය ගාම්භීර හඬ හරහා ප්රකාශ කළාය. එය ශ්රී ලංකා දේශපාලන ඉතිහාසයේ වෙනසක් කරා තරුණ ප්රජාව අතර ප්රධාන හැරවුම් ලක්ෂයක් ද විය.
නන්දා මාලිනීගේ සංගීත ප්රසංගයට දහස් සංඛ්යාත තරුණ තරුණියන් පැමිණ සිටියේ එදා ආණ්ඩුවේ දැඩි මර්දනකාරී ක්රියාමාර්ග නොතකා ය. අබ්දාල්වරු තරුණයින් අතර දැවැන්ත දේශපාලන අවබෝධයක් සහ නොසන්සුන්තාවයක් ඇති කළ අතර නන්දා මාලිනීට ජීවිත තර්ජන හේතුවෙන් ටික කලකට රට හැර යාමට බල කළහ.
කලාව හුදු විනෝදාංශයක් නොව පීඩිතයා වෙනුවෙන් සටන් කිරීමේ මෙවලමක් බව නන්දා මාලිනී සිය ගීත තුළින් ඔප්පු කළාය. ඒ නිසාම ඔහු එදා තාරුණ්යයේ තාරුණ්යයේ සංගීත සංකේතයක් ලෙස රැඳුණා, අද ඔහුගේ වියෝව රටේ ජනතාවට කියන ගීතයක්.
අහමඩ් ඉර්ෂාඩ්.
දිනකරන් සඟරාව සඳහා,
24-08-2026.
සිංහල පරිවර්තනය සමග) அதிகார அடக்கு முறைக்கு எதிரான இசை வடிவம்: மறைந்த கலாநிதி நந்தா மாலினி. අධිකාරී විරෝධී සංගීත ආකෘතිය: දිවංගත කලනිධි නන්දා මාලිනී.
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 25, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 25, 2026
Rating:


கருத்துகள் இல்லை: