Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

සිංහල පරිවර්තනය සමඟ) இன அடையாளங்களை விடவும், நாட்டுப்பற்றுக்கே முதலிடமளிக்கும் சிந்தனை மாற்றத்தின் அவசியம்.


(සිංහල පරිවර්තනය සමඟ) இன அடையாளங்களை விடவும், நாட்டுப்பற்றுக்கே முதலிடமளிக்கும்  சிந்தனை மாற்றத்தின் அவசியம்.

"நம் சமூகத்தை சேர்ந்த ஒருவர் இல்லாவிட்டால் நாம் ஏமாற்றப்பட்டு விடுவோம்" என்ற பயம் நீங்கி, தகுதியின் அடிப்படையில் சகல விடயங்களும் இடம் பெறும் என்ற தைரியத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதே NPP அரசின் நோக்கமாக உள்ளது.


சட்டமும், திட்டங்களும் அனைவருக்கும் சமமாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கை வரும்போது, மக்கள் தங்களுக்கு ஆதரவாக ஒரு 'சுயநலக் குழுவை' தேட வேண்டிய அவசியம் இல்லாமல் போகிறது.

எங்கள் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் பதவியில் இருந்தால்தான் எங்களுக்கு நீதி கிடைக்கும்" என்ற எண்ணம் இயல்பாகவே மறைந்து விடும்.

தனது நாட்டு குடிமக்கள் அனைவரையும் இனம், மொழி, மதம் கடந்து சமமாக நடத்துவதினால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அந்த சிந்தனையின் நடைமுறைச் சாத்தியங்களை அமுல்படுத்துவதில் முன்னுதாரணமாகவும், சமத்துவமிக்க ஜனநாயகத்தின் (Ideal Egalitarian Democracy) அடிப்படைக் கொள்கையை நிலை நாட்டும் முகமாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் செயற்பட்டு வருகின்றது.



சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால், இனம் பார்க்கத் தேவையில்லை. சகல விடயங்களிலும் அரசாங்கம் நியாயமாக நடந்தால் நாட்டில் மக்களுக்குப் பயம் இருக்காது. இன அடையாளங்களை விட மக்களிடையே நாட்டுப்பற்றே அதிகமாக ஏற்படும். சிறுபான்மை மக்களுக்கு அரசாங்கத்தின் மீது நம்பிக்கை ஏற்படுகின்ற பொழுது, அந்தந்த மக்கள் தமது குறைகளுக்கான தீர்வுகளை நோக்கி பயணிக்க வாய்புக்கள் ஏற்படுவதோடு, முந்தைய காலத்து வன் முறைகள் அல்லது குறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் முடியும்.

அந்த வகையில், அமைச்சரவை மற்றும் ஆணைக்குழுக்களில் நியமனங்கள் இன வாரியாக அன்றி, தனிநபரின் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும். மிகச்சிறந்த தகுதிவாய்ந்த நபர்கள் துறைகளை நிர்வகிப்பதால் அரசாங்கத்தின் ஒட்டுமொத்த செயல்திறன் அதிகரிக்கும்.

மேலும், மக்கள் தங்களை ஒரு குறிப்பிட்ட இனமாகப் பார்க்காமல், நாட்டின் குடிமக்களாக மட்டுமே உணர்வார்கள். இதனால், இனவாத அரசியல் ஒழிக்கப்பட்டு வாக்குகளைப் பெறுவதற்காக அரசியல்வாதிகள் இன உணர்வுகளையோ, மத உணர்வுகளையோ தூண்டும் சூழல் அற்ற ஒரே தேசம் என்ற கலாச்சாரம் உருவாக வழி பிறக்கும். 

சட்டம் அனைவருக்கும் சமம் என்ற வகையில் நிலை நாட்டப்டுகின்ற பொழுது சிறுபான்மையினர் என்ற அச்சமோ அல்லது பெரும்பான்மையினர் ஆதிக்கம் செலுத்தும் அரசியலோ ஏற்பட வாய்ப்பிருக்காது. அத்தோடு, அரசுத் திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்கள் அனைத்தும் மக்களுக்கும் பாரபட்சமின்றி பொதுவான சேவைகளை வழங்கும் நிறுவனங்களாக மாற்றமடையும்.

எனவே, நீதி, சட்டம், மற்றும் நிர்வாகம் ஆகியவை முற்றிலும் சுயாதீனமாகவும், நடுநிலையாகவும் பாகுபாடின்றியும் செயல்படும் பொழுது, கொள்கை அடிப்படையிலான அரசியல் சூழலில் இன-மத ரீதியிலான பங்கீடுகளோ அல்லது சிறப்புப் பிரதி நிதித்துவங்களோ இனத்துவ ரீதியாகத் தேவையில்லை என்ற வாதம் மிகவும் வலுவாக்கப்பட்டு, நாட்டின் தேசிய ஒருமைப்பாடும், நாட்டின் வளர்ச்சியும் முக்கியமான ஒன்றாக மாற்றமடையும்.

சட்டம் அனைவருக்கும் சமம், நீதி அமைப்பும், அரச நிர்வாகமும் மனிதர்களில் இனம், மதம், மொழி அல்லது சாதிப் பின்னணியைப் பொருட்படுத்தாமல் திறமை மற்றும் தகுதியின் அடிப்படையில் மட்டுமே செயல்படும்போது, எந்தவொரு பிரிவினருக்கும் தனிப்பட்ட பாதுகாப்போ அல்லது பங்கீடோ தேவைப்படாது. 


குடிமக்கள் அனைவரும் அரசு நிறுவனங்களின் மீது முழு நம்பிக்கை வைக்கும் சூழல் உருவாகின்ற பொழுது, "எங்கள் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் பதவியில் இருந்தால்தான் எங்களுக்கு நீதி கிடைக்கும்" என்ற எண்ணம் இயல்பாகவே மறைந்து விடும்.


இன-மத ரீதியிலான பங்கீடுகள் என்பவை நிலையான தீர்வல்ல, மாறாக உண்மையான சமத்துவத்தை அடைவதற்கான தற்காலிகக் கருவிகளே. ஆனால், ஒரு நாட்டில் ​நீதிமன்றங்கள், காவல்துறை, சிவில் நிர்வாகம் போன்ற அடிப்படை நிறுவனங்கள்  நூறு விகித சுயாதீனத்துடன் நடு நிலைமையாக செயற்படுகின்ற பொழுதே அங்கே உண்மையான ஜனநாயகம் நிலை நாட்டப்படும் என்பது பழுத்த அரசியல் நிபுணர்களின் வாதமாக இருக்கின்றது.


ஆகவே, நிர்வாக வெளிப்படைத்தன்மை, சட்டத்தின் ஆட்சி மற்றும் நடுநிலைமை ஆகியவை உறுதியாக்கப்படும் போதுதான், இன,மத அல்லது சமூக ரீதியான பின்னணிக்கு அப்பாற்பட்டு அனைவருக்கும் சமமான நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு உருவாகும். அதிகாரத்தில் இருப்பவர் யார் என்பதைக் கடந்து, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கையும் இலகுவாக நடை முறைப்படுத்தப்படும்.

"நம் சமூகத்தை சேர்ந்த ஆள் இல்லாவிட்டால் நாம் ஏமாற்றப்பட்டு விடுவோம்" என்ற பயம் நீங்கி, தகுதியின் அடிப்படையில் சகல விடயங்களும் இடம் பெறும் என்ற தைரியம் மக்கள் மத்தியில் பிறக்கின்றது. சட்டமும் திட்டங்களும் அனைவருக்கும் சமமாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கை வரும்போது, மக்கள் தங்களுக்கு ஆதரவாக ஒரு 'சுயநலக் குழுவை' தேட வேண்டிய அவசியம் இல்லாமல் போகிறது.

இதற்காகத்தான் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசு, நாட்டில் நீதி மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தவும், அரசியல் தலையீடுகளை நீக்கி சுயாதீனமான ஜனநாயகத் தூண்களை உருவாக்கவும் 22வது அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது. இது நாட்டின் ஆட்சி முறையில் வெளிப்படைத் தன்மையையும் நடுநிலைத் தன்மையையும் உறுதி செய்யும் நோக்கத்தினை அடிப்படையாக கொண்டது.

மேலும், நீதிமன்றங்களின் கொள்ளளவை விரிவுபடுத்துவதும், நீதித்துறையில் உள்ள முதிர்ந்த அனுபவமிக்க நீதிபதிகளைத் தக்கவைத்து கொள்வதற்காகவே நீதிபதிபதிகளின் வயதெல்லை அதிகரிப்பு கொண்டுவரப்படுகிறதே தவிர, தனிப்பட்ட எவருக்கும் சலுகை வழங்கும் நோக்கில் செய்யப்படவில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடனான (BASL) சந்திப்பில் திட்டவட்டமாக விளக்கமளித்துள்ளார். 

NPP அரசாங்கத்தின் இந்த முயற்சி வெறும் மாற்றமாக இல்லாமல், முறையான நீதி மற்றும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் ஒரு கட்டமைப்பாவே சர்வதேச நாடுகளாலும் பார்க்கப்படுகிறது."நமது சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் பதவியிலோ அல்லது அதிகாரத்திலோ இல்லை என்றால் நமக்கு நீதி கிடைக்காது அல்லது நாம் ஏமாற்றப்படுவோம்" என்ற பரவலான அச்சத்திற்கு இது முற்றுப்புள்ளி வைக்கும் அரசாங்கத்தின் தூர நோக்கு சிந்தனையாகவும் உள்ளது.

தகுதியான நபர்கள் சரியான இடங்களுக்கு வருவார்கள். நிர்வாகத்திறன் அதிகரித்து நாடு வேகமாக முன்னேறும். சாதி, மதம், இனம் அல்லது சமூகப் பின்னணியைப் பார்க்காமல், முற்றிலும் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையிலேயே வாய்ப்புகளும் நீதியும் வழங்கும் சூழலை கொண்ட புதிய இலங்கை தேசம் உருவாக்கப்படும்.

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் அமைதிக்கும் குறுகிய இன அடையாளங்களை விட, அனைத்து மக்களையும் உள்ளடக்கிய நாட்டுப்பற்றே மிக முக்கியமானது. இந்த சிந்தனை மாற்றம் சமூகத்தில் ஆக்கபூர்வமான மாற்றங்களைக் கொண்டுவர உதவும்.

சமூகங்கங்களுக்கு மத்தியில் சுயநலத்திற்காக உருவான கடந்தகால தனித்துவ அரசியல் ரீதியான கசப்பான வரலாற்று அனுபவங்கள் மற்றும் பாகுபாடுகள் காரணமாக மக்களிடையே உடனடியாக இன அடையாளங்களை விடவும் நாட்டுப்பற்றுக்கே முதலிடம் எனும் சமூதாயத்தை இலகுவில் உருவாக்கி விட முடியாது.

இனவாத மற்றும் அடையாள அரசியலைத் தாண்டி, தொலை நோக்குக் கொள்கைகள் மற்றும் பொருளாதாரத் திட்டங்களை நோக்கி மக்களை சிந்திக்க வைக்கின்ற புதிய அரசியல் கலாச்சாரத்தை நிலை நாட்டுவதே ஜனாதிபதி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இலக்காகவும் இருக்கின்றது.

அனைத்துக் குடிமக்களுக்கும் சட்டம் சமமாகச் செயல்படுதல். தகுதியும் திறமையும் உள்ளவர்களுக்கு உரிய இடமும் பொறுப்புகளும் வழங்குதல். அனைத்து இன மற்றும் மத மக்களையும் சமமாக நடத்தும் தேசிய ஒருமைப்பாட்டினை கட்டியெழுப்புதல். பிளவுபடுத்தும் அரசியல் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தல். அடிப்படை உரிமைகள் மற்றும் நீதி அனைவருக்கும் சமமாக கிடைப்பதை உறுதி செய்வதே ஜனாதிபதி தலைமையிலான கொள்கைசார் திட்டங்களாகும்.

அந்த வகையில்,  வெளிப்படைத்தன்மையும் தகுதியும் முதன்மைப்படுத்தப்படும் போது, அது தனிநபர்களின் சுயநல அரசியலுக்கான கதவுகளை அடைத்து, ஒரு முற்போக்கான சமூகக் கட்டமைப்பிற்கு வலுவான அடித்தளமாக அமையும். அதனால் சந்தர்ப்பவாத, இனவாத மற்றும் பிரதேசவாத அரசியலை தமது மூலதனமாகவும், வியாபாரமாகவும் செய்து வரும்  தனித்துவ அரசியல் புல்லுருவிகள் சமூகத்தை விட்டு தூரமாக்கபடும் காலம் தொலைவில் இல்லை என்பதே உண்மை.

அஹமட் இர்ஷாட்.
26-08-2026

இன அடையாளங்களை விடவும், நாட்டுப்பற்றுக்கே முதலிடமளிக்கும் சிந்தனை மாற்றத்தின் அவசியம். වාර්ගික අනන්‍යතාවයෙන් ඔබ්බට, 
දේශප්‍රේමයට මුල් තැන දෙන චින්තනයේ වෙනසක් අවශ්‍යයි.

“අපේ ප්‍රජාවේ කෙනෙක් නැත්නම් අපි රැවටෙයි” යන බිය දුරු කර, පින මත සියල්ල සිදු වන බවට ජනතාව තුළ ධෛර්යයක් ඇති කිරීම NPP ආණ්ඩුවේ අරමුණයි.

නීති සහ වැඩසටහන් සියල්ලන්ටම එකසේ ලබා ගත හැකි බවට විශ්වාසයක් පවතින විට, මිනිසුන්ට තවදුරටත් ඔවුන්ට සහය දැක්වීමට 'ස්වයං-අවශ්‍යතා කණ්ඩායමක්' සෙවීමට අවශ්‍ය නොවේ.

අපේ ප්‍රජාවේ කෙනෙක් තනතුරේ හිටියොත් විතරයි අපිට සාධාරණයක් වෙන්නේ කියන අදහස නිරායාසයෙන්ම නැති වෙනවා.
+++++++++++++++++

ජාති, භාෂා, ආගම් භේදයකින් තොරව සියලු පුරවැසියන්ට සමානව සැලකීමේ අදහසේ ප්‍රායෝගික හැකියාවන් සහ ප්‍රතිලාභ ක්‍රියාවට නැංවීමේදී ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා සහ ජාතික ජන බලවේගය රජය ආදර්ශයක් ලෙස ක්‍රියා කරයි.

නීතිය ඉදිරියේ සියල්ලෝම සමාන නම් ජාතිය අදාල නැත. රජය සියලු කාරණාවලදී සාධාරණව කටයුතු කරන්නේ නම්; රට තුළ බියක් ඇති නොවනු ඇත. ජනවාර්ගික අනන්‍යතාවලට වඩා ජාතිකවාදය මිනිසුන් අතර බහුලව පවතී. සුළු ජාතික ජනතාව රජය කෙරෙහි විශ්වාසය තැබූ විට ඒ ඒ ජනතාවට තමන්ගේ දුක්ගැනවිලිවලට විසඳුම් දෙසට ගමන් කිරීමේ අවස්ථා තිබෙනවා. එය පැරණි පුරුදු හෝ දුක්ගැනවිලි අවසන් කළ හැකිය.

ඒ ආකාරයට කැබිනට් මණ්ඩලයට හා කොමිෂන් සභාවලට පත්කිරීම් කළ යුත්තේ පුද්ගලයාගේ කුසලතාව සහ හැකියාව මත මිස ජාතිය අනුව නොවේ. හොඳම සුදුසුකම් ඇති පුද්ගලයන් දෙපාර්තමේන්තු කළමනාකරණය කරන නිසා රජයේ සමස්ත කාර්යක්ෂමතාවය ඉහළ යනු ඇත.

ඒ වගේම මිනිස්සු තමන්ව විශේෂ ජාතියක් විදියට දකින්නේ නැතිව රටේ පුරවැසියන් විදිහටයි දකින්නේ. මේ අනුව කුල දේශපාලනය තුරන් වී එක ජාතියක සංස්කෘතියක් ගොඩනැගෙන්නේ දේශපාලකයන්ට වාර්ගික හෝ ආගම්වාදී හැඟීම් අවුස්සමින් ඡන්දය ලබා ගැනීමට පරිසරයක් නොමැති වීමයි. 

නීතිය සැමට සමාන වන විට සුළු ජාතීන්ට හෝ බහුතර ආධිපත්‍ය දේශපාලනයට බිය වීමට ඉඩක් නැත. ඒ වගේම සියලුම රාජ්‍ය දෙපාර්තමේන්තු සහ ආයතන භේදයකින් තොරව ජනතාවට විශ්වීය සේවාවන් සපයන ආයතන බවට පත් කරනවා.

එබැවින් යුක්තිය, නීතිය සහ පරිපාලනය සම්පූර්ණයෙන්ම ස්වාධීනව, මධ්‍යස්ථව හා අපක්ෂපාතීව ක්‍රියාත්මක වන විට ප්‍රතිපත්ති මත පදනම් වූ දේශපාලන පරිසරයක වාර්ගික ආගම් භේද හෝ විශේෂ මූල්‍ය සම්පත් අවශ්‍ය නැත යන තර්කය ශක්තිමත් වී රටේ ජාතික සමගිය සහ රටේ සංවර්ධනය වැදගත් වේ.

නීතිය සැමට සමාන වන විට අධිකරණ පද්ධතිය සහ රාජ්‍ය පරිපාලනය ක්‍රියාත්මක වන්නේ ජාති, ආගම්, භාෂා, කුල භේදයකින් තොරව මනුෂ්‍ය වර්ගයාගේ පින සහ කුසලය මත පමණක් වන විට කිසිදු අංශයකට පුද්ගල ආරක්ෂාවක් හෝ වරප්‍රසාදයක් අවශ්‍ය නොවේ. සියලුම පුරවැසියන් රාජ්‍ය ආයතන කෙරෙහි පූර්ණ විශ්වාසය තබන විට “අපේ ප්‍රජාවේ කෙනෙක් තනතුරේ සිටියොත් පමණයි අපට සාධාරණය ඉටු වන්නේ” යන අදහස නිතැතින්ම පහව යනු ඇත.

වාර්ගික-ආගමික බෙදීම් ස්ථිර විසඳුම් නොව සැබෑ සමානාත්මතාවය ළඟා කර ගැනීම සඳහා තාවකාලික මෙවලම් වේ. එහෙත් උසාවි, පොලිසිය, සිවිල් පරිපාලනය වැනි මූලික ආයතන 100% ස්වාධීනව ක්‍රියාත්මක වන විට රටක සැබෑ ප්‍රජාතන්ත්‍රවාදය ස්ථාපිත වන බව හොඳම දේශපාලන විශේෂඥයන්ගේ තර්කයයි.

එබැවින්, පරිපාලනමය විනිවිදභාවය, නීතියේ ආධිපත්‍යය සහ මධ්‍යස්ථභාවය සහතික කළ විට පමණක්, ජනවාර්ගික, ආගමික හෝ සමාජීය පසුබිම නොසලකා සැමට සමාන යුක්තිය පිළිබඳ විශ්වාසයක් ඇති වේ. කවුරු බලයේ සිටියත් නීතිය ඉදිරියේ සමානාත්මතාවය යන මූලධර්මය ද පහසුවෙන් ක්‍රියාත්මක වනු ඇත.

“අපේ සමාජයේ කෙනෙක් බලයේ නොසිටියොත් අපි රැවටෙයි” යන බිය දුරු වී සියල්ල පින මත සිදුවනු ඇතැයි ජනතාව තුළ ධෛර්යය උපදී. නීති සහ වැඩසටහන් සියල්ලන්ටම එකසේ ලබා ගත හැකි බවට විශ්වාසයක් පවතින විට, මිනිසුන්ට තවදුරටත් ඔවුන්ට සහය දැක්වීමට 'ස්වයං-අවශ්‍යතා කණ්ඩායමක්' සෙවීමට අවශ්‍ය නොවේ.

රට තුළ නීතියේ ආධිපත්‍යය සහ යුක්තිය තහවුරු කර දේශපාලන ඇඟිලි ගැසීම් ඉවත් කර ප්‍රජාතන්ත්‍රවාදයේ ස්වාධීන කුළුණු නිර්මාණය කිරීමට අනුර කුමාර දිසානායක ජනාධිපතිවරයා ප්‍රමුඛ රජය 22 වැනි ව්‍යවස්ථා සංශෝධනය ගෙන ආවේ ඒ සඳහාය. එය රටේ පාලනයේ විනිවිදභාවය සහ මධ්‍යස්ථභාවය සහතික කිරීමේ අරමුණ මත පදනම් වේ.

තවද විනිසුරුවරුන්ගේ වයස් සීමාව වැඩි කිරීම ගෙන එන්නේ අධිකරණයේ ධාරිතාව පුළුල් කිරීමටත් පරිණත පළපුරුදු විනිසුරුවරුන් අධිකරණයේ රඳවා ගැනීමටත් මිස කිසිවකුට වාසියක් ලබා දීමට නොවන බවත් ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා ශ්‍රී ලංකා නීතීඥ සංගමයේ (BASL) හමුවකදී පැහැදිලිව පැහැදිලි කර ඇත. 

NPP ආණ්ඩුවේ මෙම මුලපිරීම හුදෙක් වෙනසක් පමණක් නොව, නිසි යුක්තිය සහ ප්‍රජාතන්ත්‍රවාදය සහතික කිරීමේ රාමුවක් ලෙස ජාත්‍යන්තර රටවල් ද දකින්නේ "අපේ ප්‍රජාවේ කෙනෙකු තනතුරේ හෝ බලයේ නැතිනම්, අපට යුක්තිය නොලැබේ නම් හෝ අපි රැවටෙනු ඇත" යන පුළුල් භීතියට තිත තැබීමේ රජයේ දූරදර්ශී චින්තනයක් ලෙස ය.

නියම මිනිස්සු නියම තැන්වලට යයි. පරිපාලන හැකියාව වැඩි වී රට වේගයෙන් දියුණු වනු ඇත. කුල, ආගම, වාර්ගික හෝ සමාජ පසුබිම නොසලකා හුදෙක් කුසලතාව සහ හැකියාව මත පදනම් වූ අවස්ථා සහ යුක්තිය සහිත පරිසරයක් සහිත නව ශ්‍රී ලාංකික ජාතියක් නිර්මාණය වනු ඇත.

රටක සංවර්ධනය සහ සාමය සඳහා පටු වාර්ගික අනන්‍යතාවලට වඩා සියල්ල ඇතුළත් දේශප්‍රේමයක් වැදගත් වේ. මෙම චින්තනයේ වෙනස සමාජය තුළ නිර්මාණාත්මක වෙනස්කම් ඇති කිරීමට උපකාරී වනු ඇත.

ප්‍රජාවන් අතර ආත්මාර්ථකාමී අවශ්‍යතා සඳහා ගොඩනැගුණු අතීත පුද්ගලවාදී දේශපාලනයේ කටුක ඓතිහාසික අත්දැකීම් සහ වෙනස්කම් නිසා වාර්ගික අනන්‍යතාවන්ට වඩා දේශප්‍රේමයට මුල්තැන දෙන ප්‍රජාවක් නිර්මාණය කිරීම පහසු නැත.

ජනවාර්ගික සහ අනන්‍යතා දේශපාලනයෙන් ඔබ්බට දිගුකාලීන ප්‍රතිපත්ති සහ ආර්ථික සැලසුම් ගැන සිතීමට සලස්වන නව දේශපාලන සංස්කෘතියක් ස්ථාපිත කිරීම ජනාධිපතිවරයා ප්‍රමුඛ ජාතික ජනබල රජයේ අරමුණයි.

නීතිය සෑම පුරවැසියෙකුටම එකසේ අදාළ වේ. සුදුසුකම් ඇති, හැකියාව ඇති අයට නිසි තැන හා වගකීම් ලබාදීම. සියලුම වාර්ගික සහ ආගමික ජනතාවට සමාන සැලකිලි ඇතිව ජාතික සමගිය ගොඩනැගීම. බෙදුම්වාදී දේශපාලන සංස්කෘතියක් අවසන් කිරීම. ජනාධිපතිතුමාගේ නායකත්වයෙන් යුත් ප්‍රතිපත්ති වැඩසටහන් මූලික අයිතිවාසිකම් සඳහා සමාන ප්‍රවේශයක් සහ සැමට යුක්තිය සහතික කිරීමයි.

ඒ ආකාරයට විනිවිදභාවයට හා කුසලතාවයට මුල්තැන දෙන විට පුද්ගල ආත්මාර්ථකාමී දේශපාලනයට දොරගුළු වැසී ප්‍රගතිශීලී සමාජ ව්‍යුහයකට ශක්තිමත් අඩිතාලමක් දමයි. එබැවින් අවස්ථාවාදී, වර්ගවාදී, ප්‍රාදේශීයවාදී දේශපාලනය තම ප්‍රාග්ධනය සහ ව්‍යාපාරය කර ගන්නා පුද්ගලවාදී දේශපාලන දුර්මත සමාජයෙන් ඈත් වන කාලය වැඩි ඈතක නොවන බව සැබෑය.

අහමඩ් ඉර්ෂාඩ්
දිනකරන් සඟරාව සඳහා,
26-08-2026
සිංහල පරිවර්තනය සමඟ) இன அடையாளங்களை விடவும், நாட்டுப்பற்றுக்கே முதலிடமளிக்கும் சிந்தனை மாற்றத்தின் அவசியம். Reviewed by www.lankanvoice.lk on ஆகஸ்ட் 26, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.