Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

சூத்திரதாரிகளும் தண்டிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையை தந்த வரலாற்று தீர்ப்பு...


(සිංහල පරිවර්තනය සමඟ) சூத்திரதாரிகளும் தண்டிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையை தந்த வரலாற்று தீர்ப்பு.

NP அரசாங்கத்தில் இந்தத் தீர்ப்புக் கிடைத்துள்ளமை நீதிமன்றங்களின் சுயாதீன இயங்குதன்மைக்கு கிடைத்துள்ள ஒரு வெற்றியாகவே மூவின மக்களாலும் பார்க்கப்படுகின்றது.

நாட்டில் மிக உயர்ந்நபாதுகாப்பு பதவிகளில் இருந்தவர்கள் கூட தங்களின் கடமை தவறல்களுக்காகச் சட்டத்தின் முன் தண்டிக்கப்பவார்கள் என்ற " சட்டத்தின் ஆட்சி" (Rule of Law) நிலைநாட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆட்சியில் நீதி வெள்கின்றது. எதிர்கால சந்ததியினரிடம் சிறந்த நாட்டை ஒப்படைப்பார் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் வலுப்பெற்றுள்ளது.



பூஜிதவுக்கு வழங்கப்பபட்ட தீர்ப்பு!  "அதிரடி நடவடிக்கை" அல்ல, மாறாக சட்டமும் நீதியும் தன் கடமையைச் செய்துள்ளது.ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆட்சியில் நீதி வெள்கின்றது. எதிர்கால சந்ததியினரிடம் சிறந்த நாட்டை ஒப்படைப்பார் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் வலுப்பெற்றுள்ளது.

நீதிமன்றங்கள் தன்னிச்சையாகவோ அல்லது அவசரமாகவோ அதிரடி தீர்ப்புகளை வழங்குவதில்லை, மாறாக சட்டத்தின் படியும் சாட்சியங்களின் அடிப்படையிலுமே செயல்படுகின்றன. அந்த வகையில், NPP அரசாங்கத்தில்
இந்தத் தீர்ப்பு சட்டத்தின் ஆட்சியையும், "சட்டத்தின் முன் அனைவரும் சமம்" என்ற கோட்பாட்டையும் வெளிப்படுத்துவதாக அரசியல் அவதானிகளால் பார்க்கப்படுகிறது.

முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு ஜூலை 31, 2026 அன்று வழங்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்பு, நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொறுப்புக்கூறல் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகின்றது. 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியமை மற்றும் கடமைப் பொறுப்பைக் கைவிட்டமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ், கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதியரசர்கள் குழுவினால் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


இலங்கை வரலாற்றில் ஒரு முன்னாள் பொலிஸ் மா அதிபர் (IGP) குற்றவியல் அலட்சியம் மற்றும் கடமை தவறிய குற்றத்திற்காக மரண தண்டனை கைதியாக சிறைக்குச் செல்வது இதுவே முதல் முறையாகும். அதிகாரமும் பதவியும் தற்காலிகமானவை. நாம் இன்று அமர்ந்திருக்கும் நாற்காலி நாளை வேறொருவருடையது. நாம் செய்த நன்மைகளும், மக்கள் நலன் சார்ந்த கடமைகளுமே நம் பெயரை வரலாற்றில் பேச வைக்கும். பதவியால் நமக்குக் கிடைக்கும் மரியாதையை விட, அந்தப் பதவியால் மக்களுக்குக் கிடைக்கும் நன்மையே முக்கியம் என்பதை பூஜிதவின் மரண தண்டனை உணர்த்துகின்றது.

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைத் தடுக்கத் தவறியமை மற்றும் கடமை தவறிய குற்றச்சாட்டுகள் இவர்களுக்கு எதிராக நிரூபிக்கப்பட்டன. பூஜித ஜயசுந்தரவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட 855 குற்றச்சாட்டுகளில் 854 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, பெரும்பான்மை நீதியரசர்களின் முடிவின்படி குறித்த மரண தண்டனை விதிக்கப்பட்டது.

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்கள் குறித்து இந்திய புலனாய்வு அமைப்பால் முன்கூட்டியே எச்சரிக்கைகள் வழங்கப்பட்ட போதிலும், அதனைத் தடுக்கத் தவறியமை, கடுமையான கடமை அலட்சியம், குற்றவியல் ரீதியாகக் கடமையை மீறியமை மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்தன.


நீதிமன்றங்கள் தன்னிச்சையாகவோ அல்லது அவசரமாகவோ அதிரடி தீர்ப்புகளை வழங்குவதில்லை, மாறாக சட்டத்தின் படியும் சாட்சியங்களின் அடிப்படையிலுமே செயல்படுகின்றன. இலங்கை சட்ட அமைப்பில் மரண தண்டனை என்பது மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு, நீண்ட நீதிமன்ற விசாரணை மற்றும் முறையான சட்ட நடைமுறைகளுக்குப் பிறகே வழங்கப்படுகிறது.

அந்த வகையில், பூஜித ஜெயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர்களின் வழக்கு குறித்த நீதிமன்ற முடிவு அரசியல் தலையீடு இன்றி, சட்டத்தின்படி சுதந்திரமாக எடுக்கப்பட்ட ஒரு வழக்கமான நீதித்துறை நடவடிக்கையாகும். அரசியல் தாக்கங்கள் இல்லாமல் சட்டம் தன் கடமையை சரியாகச் செய்துள்ளது. தவறு இழைத்தவர் எவராக இருந்தாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை இது காட்டுகிறது.

நீதிமன்றம் காவல்துறை சமர்ப்பிக்கும் ஆதாரங்கள், சாட்சிகள் மற்றும் அறிவியல் பூர்வமான சான்றுகளை மட்டுமே அடிப்படையாகக் கொள்கிறது. குற்றம் சாட்டப்பட்டவருக்கு தன் தரப்பு நியாயத்தை வாதிட முழுமையான சட்டபூர்வ உரிமை வழங்கப்படுகிறது. வெளிப்புற அழுத்தங்கள் இன்றி, நாட்டின் சட்ட புத்தகத்தில் உள்ள விதிகளின்படியே இறுதித் தீர்ப்பு தீர்மானிக்கப்படுகிறது.

எனவே, பூஜித ஜெயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பானது "அதிரடி நடவடிக்கை" அல்ல, மாறாக சட்டமும் நீதியும் தன் கடமையைச் சரியாகச் செய்துள்ளதைக் நீரூபித்துக் காட்டியுள்ளது.

இலங்கையில் 1976 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மரண தண்டனை நிறைவேற்றப்படாததால், இது நடைமுறையில் ஆயுள் தண்டனையாக மாற வாய்ப்புள்ளது. எவ்வாறாயினும், குற்றவாளிகள் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய சட்ட ரீதியான உரிமையும் உண்டு.

ஆனால், எவ்வளவு பெரிய அதிகாரப் பதவியில் இருந்தாலும், பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் போது தட்டிக்கழித்தால் சட்டத்தின் முன் பதில் சொல்லியே ஆக வேண்டும். "முதுகெலும்புடன்" நேர்மையாகக் கடமையாற்ற முடியாத அதிகாரிகள் பதவிகளைத் துறந்து வெளியேற வேண்டும் என்ற படிப்பினையை இத்தீர்ப்பு தெளிவுபடுத்துகிறது.

இனிவரும் காலங்களில் பாதுகாப்புத் துறையினர் எவ்வித அரசியல் அழுத்தங்களுக்கும் அடிபணியாமல், தங்களுக்குரிய சட்டப்பூர்வக் கடமைகளைச் சரியாகச் செய்ய வழிவகுக்கப்பட்டுள்ள அதே இடத்தில், பொதுமக்களின் பாதுகாப்பைத் தாராளமயமாக்கி அலட்சியப்படுத்தும் எந்தவொரு உயர் அதிகாரியும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்பதை இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு மீண்டும் நிரூபித்துள்ளது என்பதே புத்தி ஜீவிகளின் கருத்தாக உள்ளது.

அத்தோடு, இலங்கையின் சுயாதீன நீதித்துறை மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதில் ஏற்பட்டுள்ள பெரும் முன்னேற்றமாக உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் பரவலாகப் பார்க்கப்படுகிறது. குறித்த தீர்ப்பானது  சர்வதேச ஊடகங்களில் முதன்மைச் செய்திகளாகவும் வெளிவந்துள்ளதுடன், மனித உரிமை மற்றும் பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கையின் தற்போதைய நீதித்துறையின் சுதந்திரத்தன்மை சர்வதேச சமூகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மேலும், 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற அமைதியான தேர்தல்களைத் தொடர்ந்து, 2026 ஆம் ஆண்டின் சர்வதேச உலகளாவிய அறிக்கைகளின்படி, இலங்கையின் சட்ட அமுலாக்கம், தனிநபர் பாதுகாப்பு மற்றும் ஆளுகை சீர்திருத்தங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆசிய-பசுபிக் பிராந்தியத்தின் ஊடக சுதந்திரத்தில் (Freedom of the Press) முன்னேற்றமடைந்த சில நாடுகளில் இலங்கையும் ஒன்றாகக் கருதப்படுகிறது.

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, ஈஸ்டர் தாக்குதல் மற்றும் கடந்த காலப் பெருங் குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துவதாக உறுதியளித்திருந்தது. அந்த வகையில், இந்தத் தீர்ப்பு சட்டத்தின் ஆட்சியையும், "சட்டத்தின் முன் அனைவரும் சமம்" என்ற கோட்பாட்டையும் வெளிப்படுத்துவதாக அரசியல் அவதானிகளால் பார்க்கப்படுகிறது.

கடந்த காலங்களைப் போலன்றி, தற்போதைய ஆட்சியின் கீழ் உண்மையான சூத்திரதாரிகள் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு பாதிக்கப்பட்டவர்களிடம் நிலவுகிறது. அத்தோடு,பொறுப்புக்கூறல் மற்றும் நீதி வழங்குதல் விவகாரத்தில் தற்போதைய அரசாங்கத்தின் மீதான சர்வதேச நாடுகளின் பார்வையும் திரும்பியுள்ளது.

முன்னைய ஆட்சிக்காலத்தில் உயர் அதிகாரிகளுக்கு எதிரான வழக்குகளில் அரசியல் அழுத்தங்கள் இருந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தற்போதைய அரசு நீதித்துறை நடவடிக்கைகளில் தலையிடாமல் அதற்குரிய பாதையில் சுதந்திரமாக நகர அனுமதித்துள்ளது என்ற கருத்து இத்தீர்ப்பின் மூலம் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான NPP அரசாங்கத்தின் கீழ் இந்தத் தீர்ப்பு கிடைத்தமை நீதிமன்றங்களின் சுயாதீன இயங்குதன்மைக்கு கிடைத்துள்ள ஒரு வெற்றியாகவே மூவின மக்களாலும் பார்க்கப்படுகின்றது. 

நாட்டின் மிக உயர்ந்த பாதுகாப்புப் பதவிகளில் இருந்தவர்கள் கூட தங்களின் கடமை தவறல்களுக்காகச் சட்டத்தின் முன் தண்டிக்கப்படுவார்கள் என்ற "சட்டத்தின் ஆட்சி" (Rule of Law) நிலைநாட்டப்பட்டுள்ளது என்ற நம்பிக்கை நாடு பூறாகவும் எழுந்துள்ளது என்ற கருத்தாடலே சமூக வலைத்தளங்களை ஆட் கொண்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.

இன்னொரு பக்கத்திலே, இலங்கையில் 1976 ஆம் ஆண்டு முதல் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தற்காலிகத் தடை (Moratorium) விதிக்கப்பட்டுள்ளது. தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் இந்தத் தடையைத் தொடர்வதையே ஆதரிக்கிறார் என்பதால், இந்த மரண தண்டனையானது நடைமுறையில் ஆயுள் தண்டனையாகவே மாற்றப்படும். எனினும், குற்றவாளிகளுக்கு உச்சகட்டத் தீர்ப்பை வழங்க நீதித்துறை தயங்கவில்லை என்பதையே இது காட்டுகிறது.

இருப்பினும், இந்த வழக்கு பல வருடங்களாக சட்ட ரீதியான கட்டமைப்புக்கு அமைவாக உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் நகர்ந்து வந்ததால், இதனை ஒரு குறிப்பிட்ட அரசாங்கத்தின் கீழ் பெற்ற வெற்றியாக மட்டும் பார்க்காமல், இலங்கையின் ஒட்டுமொத்த நீதித்துறை கட்டமைப்பின் சுயாதீன மற்றும் தொடர்ச்சியான செயல்பாட்டின் வெளிப்பாடு என்ற கருத்தியலில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இருப்பதானது அவர்களின் குறுகியகால அரசாட்சியின் முதிர்ச்சியினை எடுத்துக்காட்டுவதாக அரசியல் அவதானிகளுடைய கருத்துக்கள் அமைந்துள்ளன.

எது எவ்வாறாயினும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் விசாரணைகள் நம்பிக்கை தரும்படியாகவும், சரியான தொடக்க நிலையாகக் கருதப்பட்டாலும், இதன் உண்மையான சூத்திரதாரிகள் இன்னும் முழுமையாகக் கண்டறியப்படவில்லை என்பதில் கத்தோலிக்க திருச்சபையும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களும் உறுதியாக உள்ளன. தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீது அவர்கள் முழுமையான எதிர்பார்ப்புகளையும் நீதிக்கான கோரிக்கைகளையும் தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர்.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கு எதிரான தீர்ப்புகள் மற்றும் வழக்கு விசாரணைகள் முடக்கப்பட்டிருந்த நீதியைச் செயல்படுத்துவதற்கான ஆரம்ப நகர்வுகளாகப் பார்க்கப்படுகின்றன.நேரடித் தாக்குதல்களை நடத்தியவர்கள் மட்டும் உண்மையான மூளையாக இருக்க முடியாது என்றும், இதற்குப் பின்னால் பெரிய சதித்திட்டம் உள்ளதாகவும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் மற்றும் திருச்சபை தொடர்ந்து வலியுறுத்துகின்றன. 

2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலால் நூற்றுக்கணக்கான உயிர்களை பலிகொடுத்தும், நிரந்தர அங்கவீனர்களாகவும் பாதிக்கப்பட்ட கத்தோலிக்க மக்களும், அரசியல் காரணங்களுக்காக பல்வேறு இன்னல்களைச் சந்தித்த முஸ்லிம் சமூகமும், தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் கீழ் தங்களுக்கு விரைவில் நீதி கிடைக்கும் என்ற பலத்த எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள் என்பது தற்போதைய அரசியல் சூழலின் முக்கிய யதார்த்தமாகும்.

அந்த வகையில், விசாரணைகளில் எவ்வித அரசியல் தலையீடுகளும் இருக்காது என்றும், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு "உண்மையும் நீதியும்" மிக விரைவில் நிலை நாட்டப்படும் என்றும் அரசாங்கத் தரப்பு தொடர்ந்து உறுதியளித்து வருகிறது.

கத்தோலிக்க மற்றும் முஸ்லிம் சமூகங்கள் கொண்டுள்ள இந்த அதீத நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு நீதித்துறையினால் கொடுக்கப்பட்டட்டுள்ள மரண தண்டனை பெறும் ஆறுதலை கொடுத்திருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், உண்மையான சூத்திரதாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்களா என்பதை தற்போதைய அரசாங்கத்தின் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளே தீர்மானிக்கும்.

அதனால் "உண்மைகள் அழிக்கப்படுவதில்லை, அவை மிக விரைவில் நிரூபிக்கப்படும்" என்ற நம்பிக்கை ஜனாதிபதி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது பாதிக்கப்பட்ட கத்தோலிக்க மற்றும் முஸ்லிம் சமூகம் வைத்துள்ளதோடு, நாட்டில் சட்டம், ஒழுங்கு மற்றும் நீதி நிலைநாட்டப்படும் என்றும், எதிர்கால சந்ததியினருக்கு வளமான நாட்டை அவர் உருவாக்குகின்றார் என்ற நம்பிக்கையும் மக்கள் மத்தியில் வலுப்பெற்று வருகின்றது .

அஹமட் இர்ஷாட்
இன்றைய தினகரன் பத்திரிகைக்காக,
03-07/2026.

சூத்திரதாரிகளும் தண்டிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையை தந்த வரலாற்று தீர்ப்பு.
මහ මොළකරුවන්ට ද දඬුවම් ලැබෙනු ඇතැයි ඉතිහාසගත තීන්දුවෙන් බලාපොරොත්තුවක් ඇති විය.

ජාතික පක්‍ෂයේ ආණ්ඩුවේ තීන්දුව ප්‍රජාවන් තුනේ ස්වාධීනව කටයුතු කිරීමේ ජයග්‍රහණයක් ලෙස සැලකේ.

රටේ ඉහළම ආරක්‍ෂක තනතුරුවල සිටින අයට පවා රාජකාරිය පැහැර හැරීම සම්බන්ධයෙන් නීතිය ඉදිරියේ දඬුවම් ලැබෙන බවට "නීතියේ ආධිපත්‍යයක්" ස්ථාපිත වී ඇත.

අනුර කුමාර දිසානායක ජනාධිපතිතුමාගේ පාලනය යටතේ යුක්තිය ක්‍රියාත්මක වෙනවා. ඔහු අනාගත පරපුරට යහපත් රටක් බාරදෙයි යන විශ්වාසය ජනතාව තුළ ශක්තිමත් වී තිබේ.
+++++++++++++++++++++++

හිටපු පොලිස්පති පූජිතට දුන් තීන්දුව!  එය "ක්‍රියාකාරීත්වය" නොවේ, නමුත් නීතිය සහ යුක්තිය ඔවුන්ගේ යුතුකම ඉටු කර ඇත. අනුර කුමාර දිසානායක ජනාධිපතිතුමාගේ පාලනය යටතේ යුක්තිය සුදුයි. ඔහු අනාගත පරපුරට යහපත් රටක් බාරදෙයි යන විශ්වාසය ජනතාව තුළ ශක්තිමත් වී තිබේ.

උසාවි අත්තනෝමතික ලෙස හෝ හදිසියේ තීන්දු දෙන්නේ නැත, නමුත් නීතියට අනුව සහ සාක්ෂි පදනම් කරගෙන කටයුතු කරයි. ඒ විදියට NPP ආණ්ඩුවේ
මෙම තීන්දුව දේශපාලන නිරීක්ෂකයින් විසින් දකින්නේ නීතියේ ආධිපත්‍යය සහ "නීතිය ඉදිරියේ සියල්ලෝම සමානය" යන මූලධර්මයේ ප්‍රකාශනයක් ලෙස ය.

හිටපු පොලිස්පති පූජිත ජයසුන්දරට ​​සහ හිටපු ආරක්ෂක ලේකම් හේමසිරි ප්‍රනාන්දුට 2026 ජුලි 31 වැනිදා මරණ දඬුවම නියම කිරීම මෙරට ආරක්‍ෂාව සහ වගවීම පිළිබඳ ඉතිහාසයේ ප්‍රධාන සන්ධිස්ථානයක් ලෙස සැලකේ. රාජකාරි පැහැර හැරීම සහ 2019 පාස්කු ඉරිදා ත්‍රස්ත ප්‍රහාරය වැළැක්වීමට අපොහොසත් වීම යන චෝදනා යටතේ කොළඹ මහාධිකරණයේ විනිසුරු මඩුල්ලක් විසින් මෙම තීන්දුව ප්‍රකාශයට පත් කරන ලදී.

සාපරාධී නොසැලකිලිමත්කම සහ රාජකාරිය පැහැර හැරීම සම්බන්ධයෙන් හිටපු පොලිස්පතිවරයෙකු මරණ දණ්ඩනයට නියම වූ සිරකරුවෙකු ලෙස සිරගත වූ පළමු අවස්ථාව මෙයයි. බලය සහ තනතුර තාවකාලිකයි. අද අපි වාඩිවෙන පුටුව හෙට වෙන කෙනෙකුට අයිතියි. අප කළ යහපත් ක්‍රියා සහ මහජන සුබසාධන කටයුතු අපේ නම ඉතිහාසයේ කතා කරයි. තනතුරෙන් අපට ලැබෙන ගෞරවයට වඩා තනතුරෙන් ජනතාවට ලැබෙන ප්‍රතිලාභය වැදගත් බව පූජිතගේ මරණ දඬුවමෙන් පෙනී යයි.

2019 පාස්කු ඉරිදා ප්‍රහාරය වැළැක්වීමට අපොහොසත් වීම සහ රාජකාරි පැහැර හැරීම යන චෝදනා ඔවුන්ට එරෙහිව ඔප්පු වී ඇත. පූජිත ජයසුන්දරට ​​එරෙහිව ගොනු කර තිබූ චෝදනා 855 න් 854 ක් ඔප්පු වූ අතර විනිසුරුවරුන් බහුතරයක් මරණ දඬුවම නියම කළහ.

පාස්කු ඉරිදා මරාගෙන මැරෙන ප්‍රහාර වැලැක්වීමට අපොහොසත් වීම, දැඩි නොසැලකිලිමත්කම, සාපරාධී රාජකාරි පැහැර හැරීම සහ මිනීමැරීමට හවුල් වීම වැනි චෝදනා ඉන්දීය බුද්ධි අංශ අනතුරු අඟවා තිබියදීත් ඔවුන්ට චෝදනා එල්ල විය.

උසාවි අත්තනෝමතික ලෙස හෝ හදිසියේ තීන්දු දෙන්නේ නැත, නමුත් නීතියට අනුව සහ සාක්ෂි පදනම් කරගෙන කටයුතු කරයි. ශ්‍රී ලංකාවේ නීති පද්ධතිය තුළ මරණීය දණ්ඩනය ප්‍රදානය කරනු ලබන්නේ දීර්ඝ අධිකරණ නඩු විභාගයකින් සහ නියමිත නීතිමය ක්‍රියාවලියකින් පසුව වන බරපතලම චෝදනා සඳහාය.

ඒ නිසා පූජිත ජයසුන්දර සහ හේමසිරි ප්‍රනාන්දු යන අයගේ නඩුවේ අධිකරණ තීන්දුව දේශපාලන ඇඟිලි ගැසීම්වලින් තොරව නීතියෙන් ස්වාධීනව ගනු ලැබූ සාමාන්‍ය අධිකරණ ක්‍රියාමාර්ගයකි. දේශපාලන ඇඟවුම්වලින් තොරව නීතිය සිය යුතුකම නිසි ලෙස ඉටුකර ඇත. වැරදි කරන්නා කුමක් වුවත් නීතිය ඉදිරියේ සියල්ලෝම සමාන බව එයින් පෙනේ.

අධිකරණය රඳා පවතින්නේ පොලිසිය ඉදිරිපත් කරන සාක්ෂි, සාක්ෂිකරුවන් සහ විද්‍යාත්මක සාක්ෂි මත පමණයි. විත්තිකරුට තම නඩුව ඉදිරිපත් කිරීමට පූර්ණ නීත්‍යානුකූල අයිතිය ලබා දී ඇත. බාහිර බලපෑම්වලින් තොරව රටේ නීති පොතේ ඇති නීතිරීතිවලට අනුව අවසන් තීන්දුව තීරණය වේ.

එබැවින් පූජිත ජයසුන්දරට ​​සහ හේමසිරි ප්‍රනාන්දුට ලබා දී ඇති තීන්දුව "ප්‍රතිගාමී පියවරක්" නොව නීතිය සහ යුක්තිය තම යුතුකම නිසි ලෙස ඉටු කර ඇති බව පෙන්නුම් කිරීමකි.

1976 වසරේ සිට ශ්‍රී ලංකාව තුළ මරණ දණ්ඩනය ක්‍රියාත්මක කර නොමැති බැවින් එය සත්‍ය වශයෙන්ම ජීවිතාන්තය දක්වා සිරදඬුවමක් වීමට ඉඩ ඇත. කෙසේ වෙතත්, වැරදිකරුවන්ට ඉහළ උසාවියක් වෙත අභියාචනා කිරීමට ද ව්‍යවස්ථාපිත අයිතියක් ඇත.

හැබැයි කොච්චර ලොකු බලතල තිබුණත් ජන ජීවිතය අනතුරේ වැටෙනකොට නීතිය ඉදිරියේ වග කියන්න ඕන. “කොඳු ඇට පෙළෙන්” අවංකව රාජකාරිය කළ නොහැකි නිලධාරීන් ඉල්ලා අස්විය යුතු බවට වූ පාඩම තීන්දුවෙන් පැහැදිලි වේ.

මහජනතාවගේ ආරක්‍ෂාව ලිබරල් කරන සහ නොසලකා හරින ඕනෑම උසස් නිලධාරියකුට නීතියේ ග්‍රහණයෙන් ගැලවිය නොහැකි බවත්, ඒ සමගම අනාගතයේදී කිසිදු දේශපාලන බලපෑම්වලට යට නොවී තම නීත්‍යානුකූල රාජකාරිය නිසිලෙස ඉටු කිරීමට ආරක්‍ෂක අංශ යොමු කරන බවත් මෙම ඓතිහාසික තීන්දුවෙන් නැවත වරක් ඔප්පු වී ඇති බව බුද්ධිමතුන්ගේ අදහසයි.

මීට අමතරව, එය ශ්‍රී ලංකාවේ ස්වාධීන අධිකරණය සහ නීතියේ ආධිපත්‍යය ස්ථාපිත කිරීමේ ප්‍රධාන ඉදිරි පියවරක් ලෙස දේශීය හා ජාත්‍යන්තර වශයෙන් පුළුල් ලෙස සැලකේ. මෙම තීන්දුව ජාත්‍යන්තර මාධ්‍යවල සිරස්තල බවට පත් වූ අතර මානව හිමිකම් සහ වගවීම සම්බන්ධයෙන් ශ්‍රී ලංකාවේ වත්මන් අධිකරණයේ ස්වාධීනත්වය කෙරෙහි ජාත්‍යන්තර අවධානය යොමු විය.

තවද, 2024 සාමකාමී මැතිවරණයෙන් පසුව, 2026 ජාත්‍යන්තර ගෝලීය වාර්තා මගින් ශ්‍රී ලංකාවේ නීතිය ක්‍රියාත්මක කිරීම, පුද්ගලික ආරක්ෂාව සහ පාලන ප්‍රතිසංස්කරණවල සැලකිය යුතු ප්‍රගතියක් පෙන්නුම් කරන ලදී. ශ්‍රී ලංකාව සැලකෙන්නේ ආසියා පැසිෆික් කලාපයේ මාධ්‍ය නිදහස වැඩිදියුණු වූ රටවල් කිහිපයෙන් එකක් ලෙස ය.

බලයට පත්වූ දා සිට පාස්කු ප්‍රහාරය සහ අතීතයේ සිදුවූ අනෙකුත් ප්‍රධාන අපරාධ සම්බන්ධයෙන් වගකිවයුත්තන් නීතිය ඉදිරියට පමුණුවන බවට ජාතික ජන බලවේගය (NPP) රජය පොරොන්දු වී ඇත. එනිසා මෙම තීන්දුව දේශපාලන නිරීක්ෂකයින් විසින් දකින්නේ නීතියේ ආධිපත්‍යයේ සහ "නීතිය ඉදිරියේ සියල්ලෝම සමාන" යන මූලධර්මයේ ප්‍රකාශනයක් ලෙසය.

අතීතයේ මෙන් නොව වත්මන් පාලනය යටතේ සැබෑ මහ මොළකරුවන් හෙළිදරව් වනු ඇතැයි වින්දිතයන් අතර අපේක්ෂාවක් ඇත. මීට අමතරව, වත්මන් ආණ්ඩුවේ ජාත්‍යන්තර මතය ද වගවීම සහ යුක්තිය ඉටු කිරීම පිළිබඳ ප්‍රශ්නයට යොමු වී තිබේ.

පසුගිය පාලන සමයේ ඉහළ නිලධාරීන්ට එරෙහි නඩු සම්බන්ධයෙන් දේශපාලන බලපෑම් එල්ල වූ බවට චෝදනා එල්ල වූ අතර, වත්මන් රජය කිසිදු බාධාවකින් තොරව අධිකරණ ක්‍රියාදාමයන් සිදු කිරීමට ඉඩ දී ඇතැයි යන මතය මෙම තීන්දුවෙන් තවදුරටත් තහවුරු වේ.

ඒ ආකාරයට අනුරකුමාර දිසානායක ජනාධිපතිවරයා ප්‍රමුඛ (එන්පීපී NPP) රජය යටතේ මෙම තීන්දුව ලබා ගැනීම ජාති තුනේම ජනතාව විසින් අධිකරණය ස්වාධීනව ක්‍රියාත්මක කිරීමේ ජයග්‍රහණයක් ලෙස සැලකේ.

රටේ ඉහළම ආරක්‍ෂක තනතුරුවල සිටි අය පවා තම රාජකාරි පැහැර හැරීම සම්බන්ධයෙන් නීතිය ඉදිරියේ දඩුවම් ලබනු ඇතැයි යන විශ්වාසය "නීතියේ ආධිපත්‍යය" තහවුරු වී ඇති බවද නිරීක්ෂණය කළ හැකිය.

අනෙක් අතට, 1976 සිට ශ්‍රී ලංකාව මරණ දඬුවම ක්‍රියාත්මක කිරීම තහනම් කර ඇත. වත්මන් ජනාධිපති අනුරකුමාර් දිසානායක මහතා ද තහනම අඛණ්ඩව ක්‍රියාත්මක කිරීමට සහාය දක්වන බැවින් මරණ දඬුවම ජීවිතාන්තය දක්වා සිරදඬුවම් දක්වා වෙනස් වනු ඇත. එහෙත් වරදකරුවන්ට ඉහළම දඩුවම දීමට අධිකරණය පසුබට නොවන බව මෙයින් පෙනී යයි.

කෙසේ වෙතත් මෙම නඩුව නීතිමය රාමුවක් ලෙස ශ්‍රේෂ්ඨාධිකරණ නියෝගය යටතේ වසර ගණනාවක් ඉදිරියට යන බැවින් ජාතික ජනබල ආණ්ඩුවේ මතවාදය තුළ ජාතික ජනබල ආණ්ඩුව සිටීම කිසියම් රජයක් යටතේ ලැබූ ජයග්‍රහණයක් පමණක් නොව ශ්‍රී ලංකාවේ සමස්ත අධිකරණ ව්‍යුහයේ ස්වාධීන හා අඛණ්ඩ ක්‍රියාකාරීත්වයේ ප්‍රකාශනයක් ලෙස දේශපාලන නිරීක්ෂකයන්ගේ අදහසයි.

කෙසේ වෙතත්, කතෝලික සභාව සහ විපතට පත් වූවන්ගේ පවුල් දැඩි ලෙස පවසන්නේ පාස්කු ප්‍රහාරය සම්බන්ධයෙන් අධිකරණ තීන්දු සහ පරීක්ෂණ පොරොන්දු සහ වලංගු ආරම්භක ලක්ෂ්‍යයක් වුවද, සැබෑ මහ මොළකරුවන් තවමත් සම්පූර්ණයෙන් හඳුනාගෙන නොමැති බවයි. වත්මන් ජාතික ජනබල රජය කෙරෙහි ඔවුන් පූර්ණ අපේක්ෂාවන් සහ යුක්තිය ඉල්ලීම් අඛණ්ඩව තබා ඇත.

හිටපු පොලිස්පතිවරයාට සහ හිටපු ආරක්ෂක ලේකම්වරයාට එරෙහි නඩු තීන්දු සහ නඩු පැවරීම දැනටමත් ඇනහිට ඇති යුක්තිය පසිඳලීමේ මුල් පියවර ලෙස සැලකේ. මෙල්කම් රංජිත් කාදිනල් හිමිපාණන් සහ පල්ලිය දිගින් දිගටම අවධාරනය කරන්නේ සෘජු ප්‍රහාරවල අපරාධකරුවන් සැබෑ මහ මොළකරුවන් විය නොහැකි බවත් එය පිටුපස විශාල කුමන්ත්‍රණයක් ඇති බවත්ය. 

2019 පාස්කු ඉරිදා ත්‍රස්ත ප්‍රහාරයෙන් ජීවිත සිය ගණනක් බිලිගත් කතෝලික ජනතාව, දේශපාලන හේතූන් මත විවිධ දුෂ්කරතාවලට මුහුණ දුන් මුස්ලිම් ප්‍රජාව, වත්මන් ජනාධිපති අනුර කුමාර දිසානායක ප්‍රමුඛ ජාතික ජන බලවේගය (NPP) රජය යටතේ කඩිනමින් යුක්තිය ඉටුකර ගැනීමේ බලවත් අපේක්ෂාවෙන් පසුවන බව වත්මන් දේශපාලන වාතාවරණයෙහි කැපී පෙනෙන යථාර්ථයකි.

ඒ නිසා පරීක්ෂණවලට දේශපාලන මැදිහත්වීමක් සිදු නොවන බවත්, විපතට පත් පාර්ශ්වවලට “සත්‍යය සහ යුක්තිය” කඩිනමින් ඉටු කරන බවටත් රජය දිගින් දිගටම සහතික වෙනවා.

කතෝලික සහ මුස්ලිම් ප්‍රජාවන්ගේ මෙම අන්තවාදී විශ්වාසයන් සහ අපේක්ෂාවන් සඳහා අධිකරණය විසින් ලබා දෙන මරණීය දණ්ඩනය සැනසීමක් ලබා දෙනු ඇතැයි විකල්ප සලකා බැලීමක් නොමැත. එහෙත් සැබෑ මහ මොළකරුවන් නීතිය හමුවට පමුණුවන්නේද යන්න වත්මන් ආණ්ඩුවේ මීළඟ නීතිමය ක්‍රියාමාර්ගය අනුව තීරණය වනු ඇත.

ඒ නිසා විපතට පත් කතෝලික සහ මුස්ලිම් ප්‍රජාවන් "සත්‍ය විනාශ නොවේ, ඉතා ඉක්මනින් ඔප්පු කරනු ඇත" යන විශ්වාසය ජනාධිපතිවරයා ප්‍රමුඛ ජාතික ජනබල රජය කෙරෙහි තබා, රටේ නීතිය, සාමය, යුක්තිය ස්ථාපිත කර අනාගත පරපුරට සෞභාග්‍යමත් රටක් නිර්මාණය කරන බවට විශ්වාසය ජනතාව තුළ දැඩි වෙමින් පවතී.

අහමඩ් ඉර්ෂාඩ්.
අද දිනකරන් සඟරාව සඳහා,
03-07-2026.
சூத்திரதாரிகளும் தண்டிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையை தந்த வரலாற்று தீர்ப்பு... Reviewed by www.lankanvoice.lk on ஆகஸ்ட் 03, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.