குறுகிய காலத்தில் சர்வதேச நன்மதிப்பை பெற்றுள்ள இலங்கை.
குறுகிய காலத்தில் சர்வதேச நன்மதிப்பை பெற்றுள்ள இலங்கை.
வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிப்பு, தெற்காசிய பிராந்தியத்தில் பூட்டானுக்கு அடுத்தபடியாக இரண்டாவது அமைதியான நாடாகிறது இலங்கை. தேசிய மக்கள் சக்தி அரசில் "மீண்டும் வரத் தூண்டும் தீவு" என்ற சர்வதேச நற்பெயர் இலங்கையின் சுற்றுலாத் துறையை மிக வேகமாக மீட்டெடுக்க உதவியுள்ளது.
பாதுகாப்பு, நம்பகத்தன்மை அதிகரித்துள்ளதால் உலகெங்குமிருந்து படையெடுக்கும் சுற்றுலாப்பயணிகள்! உலகில் வேகமாக முன்னேறி வரும் நாடுகளின் பட்டியலில் நான்காவதாக இடம்பிடித்தது இலங்கை.
சர்வதேச அளவில் இலங்கையின் நன்மதிப்பு அதன் பொருளாதார சீர்திருத்தங்கள், கடன் வெளிப்படைத்தன்மை மற்றும் சுற்றுலாத் துறை ஆகியவற்றின் மூலம் மேம்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச முதலீட்டாளர் உறவுகள் மற்றும் கடன் வெளிப்படைத்தன்மை (Investor Relations and Debt Transparency) குறியீட்டில் முன்னேற்றம் கண்ட நாடுகளில் வியட்நாம், பெலிஸ், மொசாம்பிக் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக இலங்கை நான்காம் இடத்தைப் பிடித்துள்ளது.
நாட்டின் நிதித் தரவுகள் மற்றும் கொள்கை விளக்கங்களில் வெளிப்படைத்தன்மை அதிகரித்துள்ளமையே இவ்வாறு இலங்கை முன்னேற்றகரமான இலக்கினை அடைந்தமைக்கான காரணமாக பார்க்கப்படுகின்றது. அத்தோடு, சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் நிர்வாகம் தொடர்பான கொள்கைகளில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளமையும் முக்கிய விடயமாகும்.
வியட்நாம், பெலிஸ் மற்றும் மொசாம்பிக் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து இலங்கை 4-வது வேகமாக முன்னேறும் நாடாக தரப்படுத்தப் பட்டுள்ளமையானது இலங்கையின் முதலீட்டாளர் உறவுகள் புள்ளிகள் (Investor Relations Country Score) கடந்த 2025 இல் 37.33 ஆக இருந்த நிலையில், 2026 இல் 43.67 புள்ளிகளாக (50 க்கு) உயர்ந்துள்ளதை பிரதான காரணமாக வைத்தே நோக்கப்படோகின்றது.
நாட்டின் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சகம் மேற்கொண்ட சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் நிர்வாக கொள்கை மாற்றங்கள் மற்றும் முறையான கடன் மேலாண்மை நடைமுறைகள் காரணமாக இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
மேலும், 2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டு, 2025 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 5 சதவீத உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சியின் அடிப்படையில், இலங்கை 2026 ஜூலை 1ம் திகதி அன்று வெளியிடப்பட்ட (உலக வங்கியின் நாட்டு வருவாய் வகைப்பாட்டின்படி).மீண்டும் உயர்-மத்திய வருவாய் நாடாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த 2025 ஆம் ஆண்டில் இலங்கையில் உருவான ஆட்சி மாற்றத்தினால் ஏற்பட்ட ஊழல் ஒழிப்பு, நிருவாக மற்றும் நடைமுறை சீர்திருதங்களே உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (Real GDP) 5 சதவீத வளர்ச்சியைப் பதிவுக்கான காரணமாகவும் அமைந்துள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழ் உள்நாட்டு பாதுகாப்பு, சமூக அமைதி மற்றும் குற்றங்கள் குறைவடைந்தது போன்ற சாதகமான காரணிகளால், தெற்காசிய பிராந்தியத்தில் பூட்டானுக்கு அடுத்தபடியாக இரண்டாவது மிக அமைதியான நாடாக இலங்கை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இதனால், சர்வதேச அரசியலில் இலங்கை ஒரு நடுநிலையான நாடாக பார்க்கப்படுவதோடு, வெளிநாட்டு நேரடி முதலீடுகள் (FDI) கணிசமாக அதிகரித்து வருகின்றன. துறைமுக நகரம் (Port City) மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில் உலக நாடுகள் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன.
இலங்கை எந்தவொரு சர்வதேச அரசியல் முகாமிலும் இணையாமல் நடுநிலை வகிப்பதால், ஒரே நேரத்தில் இந்தியா, சீனா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய அனைத்து தரப்பிலிருந்தும் பொருளாதார ஆதரவையும் முதலீடுகளையும் பெற முடிகிறது. இந்த புவிசார் அரசியல் சமநிலை, வெளிநாட்டு நேரடி முதலீட்டாளர்களுக்கு (FDI) இலங்கையின் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
மேலும், இலங்கை, தெற்காசியாவின் ஒரு முக்கிய வர்த்தக மற்றும் நிதி மையமாக (Special Economic Zone) வேகமாக வளர்ந்து வருகிறது. அநற்கு கொழும்பு துறைமுக நகரத் திட்டம் (Colombo Port City) பிரதான காரணமாகவும் அமைந்துள்ளது.
அடுத்ததாக, சுற்றுலாத்துறையின் விரைவான மீட்சி, தொழில்துறை நடவடிக்கைகள் மற்றும் நிதிச் சேவைகளின் வளர்ச்சி ஆகியவை இந்த முன்னேற்றத்திற்கு முக்கிய உந்து சக்தியாக அமைந்தள்ளன. வெளிநாட்டுப் பணப் பரிமாற்றங்கள் அதிகரிப்பு, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆதரவுடனான பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் பொருளாதாரத்தை இஸ்திரப்படுத்த உதவியுள்ளன.
உலக வங்கியானது தலா மொத்த தேசிய வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்டியலை ஆண்டுதோறும் ஜூலை 1ம் திகதி அன்று புதுப்பிக்கிறது. இலங்கையுடன் சேர்ந்து ஜோர்டான், மைக்ரோனேஷியா, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளும் இம்முறை தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
இலங்கை சுற்றுலாத்துறையில் அடைந்துள்ள இந்த மைல்கல் நாட்டின் பொருளாதார மீட்சிக்கு ஒரு வலுவான சான்றாக பார்க்கப்படுகின்றது. 2026 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இந்த இலக்கை எட்டியிருப்பது, உலகளாவிய சுற்றுலா வரைபடத்தில் இலங்கை மீண்டும் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளதைக் எடுத்துக்காட்டும் விடயமாக உள்ளது.
இதற்கு, பல நாடுகளுக்கு இலவச விசா அல்லது இலகுவான மின்-விசா (e-Visa) முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டமையும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு நாட்டில் நிலவும் பாதுகாப்பான மற்றும் சுமுகமான சூழ்நிலை மீதான நம்பிக்கையை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வெளிப்படையாக அதிகரித்துள்ளமை முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் கீழ், இலங்கை சர்வதேச முதலீட்டாளர் உறவுகள் மற்றும் கடன் வெளிப்படைத்தன்மை குறியீட்டில் முன்னேற்றம் அடைந்துள்ளமைக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றது.
தேசிய மக்கள் சக்தி அரசில் " மீண்டும் வரத் தூண்டும் தீவு" என்ற சர்வதேச நற்பெயர், இலங்கையின் சுற்றுலாத் துறையை மிக வேகமாக மீட்டெடுக்க உதவியுள்ளது.
முன்னணி சர்வதேச விமான நிறுவனங்கள் தங்களது தினசரி விமானச் சேவைகளை அதிகரித்துள்ளமை, நாட்டின் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பு மீதான உலகளாவிய நம்பிக்கையைக் காட்டுகிறது.
இது நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு (Foreign Reserves) உயர்வதற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் நேரடிப் பங்களிப்பை வழங்குகிறது.
புதிய அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் வெளிப்படையான நிர்வாகக் கொள்கைகள் சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வென்றுள்ளன.
சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலகளாவிய கடன் வழங்குநர்களுடன் அரசாங்கம் பேணிவரும் வெளிப்படையான பேச்சுவார்த்தைகள் இந்தக் குறியீட்டில் இலங்கை முன்னேறுவதற்கு பிரதான காரணமாக அமைந்துள்ளன. கடன் வெளிப்படைத்தன்மை அதிகரித்துள்ளதால், சர்வதேச சந்தையில் இலங்கையின் கடன் தரமதிப்பீடு (Credit Rating) மேம்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு (CIABOC) மூலமாக 2025–2029 காலப்பகுதிக்கான தேசிய ஊழல் எதிர்ப்புச் செயற்திட்டமாகை தேசிய மக்கள் சக்தி அரசு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பொதுச் சேவைகளில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய டிஜிட்டல் கண்காணிப்பு மற்றும் வழக்குத் தொடரும் முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
பொதுத்துறையில் ஊழலைத் தடுத்து முன்மாதிரியான நிர்வாகத்தைக் கட்டியெழுப்ப நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை அரசாங்கம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் நம்பிக்கையுடன் செயற்படுவதற்கு நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் ஊழல் தடுப்பு ஊடாக மேற்கொண்டுள்ள முதற்கட்ட நடவடிக்கைகளாக பார்க்கப்படுகின்றன.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் தற்போதைய செயல்பாடுகள் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் பல முக்கிய அவதானிப்புகளைப் பெற்றுள்ளன. அதனாலே இந்தியா, சீனா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற முக்கிய உலகளாவிய சக்திகள் புதிய அரசாங்கத்துடன் தங்களின் ராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளைத் தொடர்ந்து பலப்படுத்தி வருகின்றன.
கடந்த கால ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் மீதான விசாரணைகளை துரிதப்படுத்துவது அரசாங்கத்தின் மீதான நம்பகத்தன்மையை சர்வதேச அளவில் மேலும் அதிகரித்துள்ளது. நீதித்துறை மற்றும் பொலிஸ் ஆணைக்குழு போன்ற முக்கிய நிறுவனங்கள் அரசியல் தலையீடின்றி சுயாதீனமாக இயங்குவதற்கான கட்டமைப்பு மாற்றங்கள் வலியுறுத்தப்படுகின்றன.
மிக முக்கியமாக, நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுதல் மற்றும் இனங்களுக்கு இடையே நல்லிணக்கம் பேணுதல் ஆகியவை மக்களின் நிம்மதியான வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துகின்றன. இத்தகைய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளால், தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் உள்நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் நன்மதிப்பைப் பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
NPP அரசு முன்னெடுக்கும் பொருளாதார சீர்திருத்தங்கள், கல்வி முறை மாற்றங்கள் மற்றும் நீதித்துறை மறுசீரமைப்புகள் ஆகியவை நாட்டின் நீண்டகால ஸ்திரத்தன்மைக்கும், சர்வதேச அரங்கில் இலங்கை பேசுபொருளாக மாறுவதற்கும் பிரதான அடிப்படை காரணமாக அமைந்துள்ளது.
அத்தோடு, "அமைப்பியல் மாற்றம்" (System Change) மற்றும் ஊழலற்ற நிர்வாகம் ஆகிய கோஷங்கள் மிகவும் தீர்க்கமானவையாகும். சர்வதேச நாணய நிதியம் (IMF), உலக வங்கி மற்றும் உலகளாவிய முதலீட்டாளர்கள் போன்ற சர்வதேச அமைப்புகள் இலங்கையின் எதிர்காலத்தை மதிப்பிடுவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசினுடைய இந்த சீர்திருத்தங்களையே முதன்மை அளவுகோலாகவும் பார்க்கப்படுகின்றன.
அந்த வகையில், நாட்டைக்கட்டி எழுப்பும் பணியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஊழலை ஒழித்தல், பொருளாதாரத்தை நிலைப்படுத்துதல், மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் என 2024 செப்டம்பர் 22 அன்று பதவியேற்றது முதல், இற்றை வரைக்கும் NPP அரசாங்கம் பல சீர்திருத்தங்களை முன்னெடுத்து வருகிறது.
1977 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகக் குறைந்த வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையைப் பதிவு செய்ததோடு, வரி மற்றும் சுங்கத்துறைகளில் இலக்கைத் தாண்டிய அரச வருமானத்தை ஈட்ட வழிவகுக்கப்பட்டுள்ளது. சுங்கம் மற்றும் கலால் திணைக்களங்களை நவீனமயமாக்கி வெளிப்படைத்தன்மைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், நாட்டின் பொருளாதாரத்தை 12% GDP வரை (USD 15 பில்லியன்) உயர்த்தும் நோக்கில் 'டிஜிட்டல் பொருளாதார அதிகாரசபை' (Digital Economic Authority) மற்றும் 'GovPay' போன்ற டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சட்டங்களை ஜனாதிபதி அறிமுகப்படுத்தியுள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்குப் பயன்படுத்தப்படாத அரசு நிலங்களை விவசாயத் திட்டங்களுக்காக ஒதுக்குதல் மற்றும் உர மானியங்களை 25,000 ரூபாவாக அதிகரித்தல் போன்ற கிராமிய பொருளாதார மேம்பாடுகளை மேற்கொண்டுள்ளார். தொழிற்பயிற்சி கல்வித் துறையை வலுப்படுத்துவதுடன், இனம், மதம் கடந்த ஒற்றைக் கொடியின் கீழ் பன்முகத்தன்மையை மதிக்கும் அனைவருக்குமான ஒரு தேசத்தை உருவாக்குவதை பிரதான இலக்காகவும் கொள்ளப்பட்டுள்ளது.
ஆகவே, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் நாட்டைக்கட்டி எழுப்பும் இந்த இரண்டாண்டு காலப்பகுதி, நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்குப் பிந்தைய குறுகிய கால நிவாரணங்களையும், நீண்ட கால மக்கள் அதிகாரமளித்தல் திட்டங்களையும் சமநிலைப்படுத்தும் ஒரு முக்கிய கட்டமாக சர்வதேசத்தின் பார்வை அமைந்துள்ளது.
அஹமட் இர்ஷாட்.
இன்றைய தினகரன் பத்திரிகைக்காக,
02-08-2026.
குறுகிய காலத்தில் சர்வதேச நன்மதிப்பை பெற்றுள்ள இலங்கை.
ශ්රී ලංකාව කෙටි කාලයක් තුළ ජාත්යන්තර පිළිගැනීමක් ලබා ඇත.
විදේශ ආයෝජන වැඩිවීම නිසා භූතානයට පසුව දකුණු ආසියා කලාපයේ සාමකාමීම රට බවට ශ්රී ලංකාව පත්ව ඇත. ජාතික ජන බලය රජය යටතේ, ශ්රී ලංකාව "නැවත එන දිවයින" ලෙස ජාත්යන්තර කීර්තියට පත්වීම ශ්රී ලංකාවේ සංචාරක කර්මාන්තය ඉතා ඉක්මනින් යථා තත්ත්වයට පත් කිරීමට උපකාරී වී තිබේ.
වැඩි ආරක්ෂාව සහ විශ්වසනීයත්වය නිසා ලොව පුරා සංචාරකයින් පැමිණේ! ලෝකයේ වේගයෙන්ම වර්ධනය වන රටවල් ලැයිස්තුවේ ශ්රී ලංකාව සිව්වැනි ස්ථානයට පත්ව ඇත.
++++++++++++++++++
ශ්රී ලංකාවේ ආර්ථික ප්රතිසංස්කරණ, ණය විනිවිදභාවය සහ සංචාරක ව්යාපාරය තුළින් ජාත්යන්තර වශයෙන් ශ්රී ලංකාවේ කීර්තිය වැඩිදියුණු වෙමින් පවතී. ජාත්යන්තර ආයෝජක සබඳතා සහ ණය පාරදෘශ්යතා දර්ශකයේ වැඩිදියුණු වූ රටවල් අතර වියට්නාමය, බෙලීස් සහ මොසැම්බික් යන රටවලට පසුව ශ්රී ලංකාව සිව්වන ස්ථානයේ සිටී.
ශ්රී ලංකාව මෙම ප්රගතිශීලී ඉලක්කය සපුරා ගැනීමට හේතුව ලෙස රටේ මූල්ය දත්ත සහ ප්රතිපත්ති පැහැදිලි කිරීම්වල විනිවිදභාවය ඉහළ යාම සැලකේ. ඊට අමතරව පාරිසරික, සමාජීය සහ පාලන ප්රතිපත්තිවල හොඳ ප්රගතියක් ලබා ඇත.
ශ්රී ලංකාව වියට්නාමය, බෙලීස් සහ මොසැම්බික් වලින් පසු වේගයෙන්ම වර්ධනය වන 4 වන රට ලෙස ශ්රේණිගත කර ඇති අතර, ශ්රී ලංකාවේ ආයෝජක සබඳතා රටෙහි අගය 2025 දී 37.33 සිට 2026 දී ලකුණු 43.67 දක්වා (50 න්) දක්වා ඉහළ ගොස් තිබේ.
රටේ මුදල් හා ක්රමසම්පාදන අමාත්යාංශය විසින් සිදු කරන ලද පාරිසරික, සමාජීය සහ පාලන ප්රතිපත්ති වෙනස්කම් සහ නිසි ණය කළමනාකරණ පිළිවෙත් මෙම දියුණුවට හේතු වී ඇත.
එසේම, 2022 දී ඇති වූ දරුණු ආර්ථික පසුබෑමෙන් සහ 2025 දී වාර්තා වූ සියයට 5 ක සැබෑ දළ දේශීය නිෂ්පාදිතයේ (GDP) වර්ධනය මත පදනම්ව, ශ්රී ලංකාව 2026 ජූලි 1 වන දින (ලෝක බැංකුවේ රටේ ආදායම් වර්ගීකරණයට අනුව) ඉහළ මධ්යම ආදායම් ලබන රටක් බවට පත් කර ඇත.
2025 දී ශ්රී ලංකාව තුළ ඇති වූ පාලන තන්ත්ර වෙනස මගින් ඇති කරන ලද දූෂණ තුරන් කිරීම, පරිපාලන හා ප්රායෝගික ප්රතිසංස්කරණ ද සැබෑ දළ දේශීය නිෂ්පාදිතය සියයට 5 ක වර්ධනයට හේතුවකි.
ජාතික ජන බලවේගයේ පාලනය යටතේ අභ්යන්තර ආරක්ෂාව, සමාජ සාමය, අපරාධ අඩුවීම වැනි සාධනීය කරුණු නිසා භූතානයට පසුව දකුණු ආසියානු කලාපයේ දෙවැනි සාමකාමී රට ලෙස ශ්රී ලංකාව පිළිගැනේ.
මේ නිසා ශ්රී ලංකාව ජාත්යන්තර දේශපාලනයේ මධ්යස්ථ රටක් ලෙස සැලකෙන අතර සෘජු විදේශ ආයෝජන (FDI) සැලකිය යුතු ලෙස වැඩිවෙමින් පවතී. වරාය නගර සහ පුනර්ජනනීය බලශක්ති ව්යාපෘති සඳහා ආයෝජනය කිරීමට ලොව පුරා රටවල් උනන්දුවක් දක්වයි.
මේ නිසා ශ්රී ලංකාව ජාත්යන්තර දේශපාලනයේ මධ්යස්ථ රටක් ලෙස සැලකෙන අතර සෘජු විදේශ ආයෝජන (FDI) සැලකිය යුතු ලෙස වැඩිවෙමින් පවතී. වරාය නගර සහ පුනර්ජනනීය බලශක්ති ව්යාපෘති සඳහා ආයෝජනය කිරීමට ලොව පුරා රටවල් උනන්දුවක් දක්වයි.
ශ්රී ලංකාව කිසිදු ජාත්යන්තර දේශපාලන කණ්ඩායමකට සම්බන්ධ නොවී මධ්යස්ථව සිටින බැවින්, ඉන්දියාව, චීනය, ඇමරිකා එක්සත් ජනපදය සහ යුරෝපා සංගමය වැනි සෑම පැත්තකින්ම එකවර ආර්ථික සහය සහ ආයෝජන ලබා ගැනීමට හැකි වේ. මෙම භූ දේශපාලන සමතුලිතතාවය ශ්රී ලංකාව කෙරෙහි විදේශ සෘජු ආයෝජකයින්ගේ (FDI) විශ්වාසය වැඩි කර ඇත.
එසේම, ශ්රී ලංකාව දකුණු ආසියාවේ ප්රධාන වෙළෙඳ හා මූල්ය මධ්යස්ථානයක් (විශේෂ ආර්ථික කලාපය) ලෙස වේගයෙන් වර්ධනය වෙමින් පවතී. ඒකට ප්රධානම හේතුව තමයි කොළඹ වරාය නගර ව්යාපෘතිය.
ඊළඟට, සංචාරක ව්යාපාරයේ වේගවත් ප්රකෘතිය, කාර්මික ක්රියාකාරකම් සහ මූල්ය සේවාවල වර්ධනය මෙම වර්ධනය පිටුපස ඇති ප්රධාන ගාමක බලවේගයයි. විදේශ ප්රේෂණ වැඩිවීම, ජාත්යන්තර මූල්ය අරමුදලේ (IMF) සහය ලබන ආර්ථික ප්රතිසංස්කරණ සහ ණය ප්රතිව්යුහගත කිරීමේ ක්රියාමාර්ග ආර්ථිකය ස්ථාවර කිරීමට උපකාරී වී ඇත.
ඒක පුද්ගල දළ ජාතික ආදායම මත පදනම්ව ලෝක බැංකුව වාර්ෂිකව ජූලි 1 වැනිදා මෙම ලැයිස්තුව යාවත්කාලීන කරයි. ශ්රී ලංකාව සමඟ ජෝර්දානය, මයික්රොනීසියාව, පිලිපීනය සහ වියට්නාමය ද මෙවර වැඩිදියුණු කර ඇත.
ශ්රී ලංකා සංචාරක ව්යාපාරයේ මෙම සන්ධිස්ථානය රටේ ආර්ථික ප්රකෘතියේ ප්රබල සාක්ෂියක් ලෙස සැලකේ. 2026 මැද භාගය වන විට මෙම ඉලක්කය සපුරා ගැනීම ගෝලීය සංචාරක සිතියමේ ශ්රී ලංකාව නැවත ප්රමුඛ ස්ථානයක් ලබාගෙන ඇති බවට ඉඟියකි.
ශ්රී ලංකා සංචාරක ව්යාපාරයේ මෙම සන්ධිස්ථානය රටේ ආර්ථික ප්රකෘතියේ ප්රබල සාක්ෂියක් ලෙස සැලකේ. 2026 මැද භාගය වන විට මෙම ඉලක්කය සපුරා ගැනීම ගෝලීය සංචාරක සිතියමේ ශ්රී ලංකාව නැවත ප්රමුඛ ස්ථානයක් ලබාගෙන ඇති බවට ඉඟියකි.
බොහෝ රටවල් සඳහා නොමිලේ වීසා හෝ පහසු ඊ-වීසා ක්රම හඳුන්වාදීම සහ ජාතික ජන බලවේගය රජය පැහැදිලිවම රට තුළ ඇති ආරක්ෂිත සහ සුවපහසු පරිසරය පිළිබඳ විදේශීය සංචාරකයින්ගේ විශ්වාසය වැඩි කර තිබීම මෙයට ප්රධාන හේතුවයි.
ජාතික ජන බලය රජය විසින් "නැවත එන දිවයින" ලෙස ජාත්යන්තර කීර්තිය ශ්රී ලංකාවේ සංචාරක කර්මාන්තය ඉතා ඉක්මනින් යථා තත්ත්වයට පත් කිරීමට උපකාරී වී ඇත.
ප්රමුඛ පෙළේ ජාත්යන්තර ගුවන් සමාගම් සිය දෛනික ගුවන් සේවා වැඩි කර තිබීමෙන් පෙන්නුම් කරන්නේ රටේ ස්ථාවරත්වය සහ ආර්ථික සුරක්ෂිතභාවය පිළිබඳ ගෝලීය විශ්වාසයයි.
එය රටේ විදේශ සංචිත වර්ධනයට සහ ආර්ථික වර්ධනයට සෘජුවම දායක වේ.
නව රජයේ දූෂණ විරෝධී ක්රියාමාර්ග සහ විනිවිද භාවයෙන් යුත් පාලන ප්රතිපත්ති ජාත්යන්තර ආයෝජකයන්ගේ විශ්වාසය දිනාගෙන තිබේ.
ජාත්යන්තර මූල්ය අරමුදල (IMF) සහ ගෝලීය ණය දෙන්නන් සමඟ රජය විවෘත සාකච්ඡා පැවැත්වීම මෙම දර්ශකයේ ශ්රී ලංකාවේ ප්රගතියට ප්රධාන හේතුවයි. ණය විනිවිදභාවය ඉහළ ගොස් ඇති බැවින් ජාත්යන්තර වෙළෙඳපොළ තුළ ශ්රී ලංකාවේ ණය ශ්රේණිගත කිරීම ඉහළ නැංවීමට අවස්ථා උදා වී තිබේ.
ජාතික ජන බලය රජය විසින් 2025-2029 කාලසීමාව සඳහා අල්ලස් හා දූෂණ විරෝධී කොමිසම (CIABOC) හරහා ජාතික දූෂණ විරෝධී ක්රියාකාරී සැලැස්ම ක්රියාත්මක කර ඇත. රාජ්ය සේවාවන්හි විනිවිදභාවය සහතික කිරීම සඳහා ඩිජිටල් නිරීක්ෂණ සහ නඩු පැවරීමේ පද්ධති හඳුන්වා දී ඇත.
රාජ්ය අංශයේ දූෂණ වැළැක්වීම සහ ආදර්ශමත් පාලනයක් ගොඩනැගීම සඳහා වන ක්රියාමාර්ග තීව්ර කිරීම පරිපාලන ප්රතිසංස්කරණ සහ දූෂණ විරෝධී ක්රියාමාර්ග හරහා විදේශීය ආයෝජකයින් ශ්රී ලංකාව තුළ ක්රියාත්මක වීමට දිරිගැන්වීම සඳහා රජය ගත් පළමු පියවර ලෙස සැලකේ.
ජනාධිපති අනුර කුමාර දිසානායකගේ සහ ජාතික ජන බලවේගයේ (NPP) ආණ්ඩුවේ වත්මන් ක්රියාකාරකම් දේශීය හා ජාත්යන්තර වශයෙන් විවේචනාත්මක නිරීක්ෂණ රාශියක් ලැබී ඇත. ඉන්දියාව, චීනය, එක්සත් ජනපදය සහ යුරෝපා සංගමය වැනි ප්රධාන ගෝලීය බලවතුන් නව රජය සමඟ ඔවුන්ගේ රාජ්යතාන්ත්රික හා ආර්ථික සබඳතා තවදුරටත් ශක්තිමත් කර ගන්නේ එබැවිනි.
අතීතයේ සිදුවූ දූෂණ හා අපචාර පිළිබඳ විමර්ශන කඩිනම් කිරීම ජාත්යන්තර වශයෙන් රජය කෙරෙහි ඇති විශ්වසනීයත්වය තවදුරටත් ඉහළ නංවා ඇත. අධිකරණය, පොලිස් කොමිසම වැනි ප්රධාන ආයතන දේශපාලන මැදිහත්වීම්වලින් තොරව ස්වාධීනව කටයුතු කළ හැකි පරිදි ව්යුහාත්මක වෙනස්කම් අවධාරණය කෙරේ.
වැදගත්ම දෙය නම් රටේ නීතිය හා සාමය ආරක්ෂා කිරීම සහ ජාතීන් අතර සහජීවනය පවත්වා ගැනීම ජනතාවගේ සාමකාමී ජීවනෝපාය සහතික කිරීමයි. මෙවැනි සාධනීය ක්රියාමාර්ග සමඟ ජාතික ජන බලවේගය (NPP) රජය දේශීයව මෙන්ම ජාත්යන්තරව ද විශාල අවධානයක් දිනාගෙන ඇත.
NPP ආණ්ඩුවේ ආර්ථික ප්රතිසංස්කරණ, අධ්යාපන ක්රමයේ වෙනස්කම් සහ අධිකරණ ප්රතිසංස්කරණ රටේ දිගුකාලීන ස්ථාවරත්වයට සහ ශ්රී ලංකාව ජාත්යන්තර තලයේ කතා බහට ලක්වන ප්රධාන හේතුවයි.
එසේම “ක්රමය වෙනස් කිරීම” සහ දූෂණයෙන් තොර පාලනයක් යන සටන් පාඨ ඉතා තීරණාත්මකය. ජාත්යන්තර මූල්ය අරමුදල (IMF), ලෝක බැංකුව සහ ගෝලීය ආයෝජකයින් වැනි ජාත්යන්තර ආයතන ශ්රී ලංකාවේ අනාගතය තක්සේරු කිරීමේ මූලික මිණුම් දණ්ඩ ලෙස ජාතික ජන බලවේගයේ රජයේ මෙම ප්රතිසංස්කරණ දෙස බලයි.
ඒ ආකාරයට 2024 සැප්තැම්බර් 22 වැනිදා අනුර කුමාර දිසානායක ජනාධිපතිවරයාගේ පදවි ප්රාප්තියෙන් පසු 2024 සැප්තැම්බර් 22 වැනිදා සිට රට ගොඩනැගීමේ කර්තව්යයේ දූෂණය පිටුදැකීමටත්, ආර්ථිකය ස්ථාවර කිරීමටත්, පරිපාලන ප්රතිසංස්කරණ සඳහාත් NPP රජය ප්රතිසංස්කරණ රැසක් සිදු කරමින් සිටී.
එය 1977 න් පසු අඩුම අයවැය හිඟය වාර්තා කර ඇති අතර බදු සහ රේගු අංශයන්හි ඉලක්කගත රාජ්ය ආදායමට වඩා වැඩි ප්රමාණයක් ලබා දීමේ මාවතේ ගමන් කරයි. රේගු සහ සුරාබදු දෙපාර්තමේන්තු නවීකරණය කර විනිවිදභාවයට පත් කර ඇත.
එමෙන්ම රටේ ආර්ථිකය දළ දේශීය නිෂ්පාදිතය 12% (USD බිලියන 15) දක්වා ඉහළ නැංවීම සඳහා ‘ඩිජිටල් ආර්ථික අධිකාරිය’ සහ ‘GovPay’ වැනි ඩිජිටල් ගෙවීම් පනත් ජනාධිපතිවරයා විසින් හඳුන්වා දී ඇත.
විදේශයන්හි සිට ආපසු පැමිණෙන සංක්රමණික කම්කරුවන්ට කෘෂිකාර්මික ව්යාපෘති සඳහා භාවිතයට නොගත් රජයේ ඉඩම් ලබාදීම, පොහොර සහනාධාරය රුපියල් 25,000 දක්වා වැඩි කිරීම වැනි ග්රාමීය ආර්ථික ප්රතිසංස්කරණ ඔහු විසින් සිදු කර ඇත. වෘත්තීය අධ්යාපන ක්ෂේත්රය ශක්තිමත් කිරීමත් සමඟම විවිධත්වය අගයන කුල, ආගම් භේදයකින් තොරව සැමට එකම ධජයක් යටතේ ජාතියක් බිහිකිරීම ප්රධාන අරමුණයි.
ඒ නිසා අනුර කුමාර දිසානායක ජනාධිපතිතුමාගේ දෙවසරක රට ගොඩනැගීමේ ධුර කාලය ජාත්යන්තර ප්රජාව දකින්නේ දීර්ඝ කාලීන ජනතා සවිබල ගැන්වීමේ වැඩසටහන් සමඟ රටේ ආර්ථික පසුබෑමෙන් පසු කෙටිකාලීන සහන තුලනය කිරීමේ වැදගත් පියවරක් ලෙසයි.
අහමඩ් ඉර්ෂාඩ්.
අද දිනකරන් සඟරාව සඳහා,
02-08-2026.
குறுகிய காலத்தில் சர்வதேச நன்மதிப்பை பெற்றுள்ள இலங்கை.
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 03, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 03, 2026
Rating:




கருத்துகள் இல்லை: