Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

சிறுபான்மை இனங்களை தூண்டிவிட்டு ஆட்சியை சீர்குலைக்கும் தந்திரம். எதிரிணிகள் முன்னெடுக்கும் மறைமுகத் திட்டம்.


சர்வதேச அரங்கில் இலங்கையின் நற்பெயர் உயர்வதால், அதற்கு கலங்கம் ஏற்படுத்தும் சதிகளில் ஒன்றே கல்முனை வைத்தியசாலை சீருடை விவகாரம்!

இலங்கையின் பாதுகாப்பு மற்றும் இஸ்திரத்தன்மை குறித்து சர்வதேச ரீதியில் தவறான பிம்பத்தை உருவாக்கி, சுற்றுலாத்துறை மற்றும் வெளிநாட்டு முதலீடுகளைப் பாதிப்படையச் செய்வதே எதிர்க்கட்சிகளின் பிரதான இலக்காகும்.


பிராந்தியப் பாதுகாப்பில் இலங்கை நடந்து கொள்ளும் முறைகள் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான முயற்சிகள் வெளிநாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த நிலையில், இலங்கையின் வெளியுறவுக் கொள்கை மற்றும் இராஜதந்திர நகர்வுகள் காரணமாக சர்வதேச அளவில் நாட்டின் மீதான நன்மதிப்பு அதிகரித்து சர்வதேசத்தின் பார்வை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளது.

இதனால் அரசின் வெளியுறவு மற்றும் பொருளாதார வெற்றிகளை எவ்வாறு விமர்சிப்பது என்பதில் எர்க்கட்சிகள் தெளிவற்ற நிலையில் நிலைதடுமாறி வருகின்றன. நாலா புறத்திலிருந்தும் சர்வதேச ஆதரவை பெற்று வரும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினை எதிர்கொள்ள முடியாத சூழ்நிலைக்கு மத்தியில், அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் என்னவென்று புரியாத குழப்பத்தில் திணறி வருவதாக அரசியல் அவதானிகளின் பார்வை உள்ளது.


ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசு பின்பற்றும் சமச்சீரான மற்றும் அணிசேரா வெளியுறவுக் கொள்கை நாட்டின் தேசிய இறையாண்மையைப் பாதுகாக்கவும், பொருளாதார மீட்டெடுப்பை உறுதி செய்யவும் மிக முக்கியப் பங்காற்றுகிறது. தேசிய மக்கள் சக்தி அரசானது எந்தவொரு வல்லரசு முகாமிலும் இணையாமல், நாட்டின் சொந்தப் பொருளாதார நலன்களையும், இறையாண்மையையும் மையமாகக் கொண்டு செயல்படுவதை  உலகிற்கு தெளிவுபடுத்தி வருகின்றது.  

அந்த வகையில், நாட்டின் மிக நெருங்கிய அண்டை நாடாகவும் பாதுகாப்புப் கூட்டாளியாகவும் உள்ள இந்தியாவுடன், பாதுகாப்பு மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புத் திட்டங்களில் இணக்கமான உறவினை பேணுகின்ற NPP அரசானது ஹம்பாந்தோட்டை தொழில்துறை மண்டலம், கொழும்பு துறைமுக நகரம் மற்றும் முதலீட்டுத் திட்டங்களில் சீனாவுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் பொருளாதார நிலையை சீரமைக்க  நடவடிக்கை எடுத்தும் வருகின்றது.

சர்வதேச வர்த்தகம், கடனுதவி மற்றும் சர்வதேச நிதி அமைப்புகளின் ஆதரவைப் பெற அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் நடுநிலையான இராஜதந்திர உறவு முன்னெடுக்கப்படுகின்ற அதே இடத்தில், எரிசக்தி தேவைகள், சுற்றுலாத் துறை மேம்பாடு மற்றும் இராஜதந்திர ஆதரவை வலுப்படுத்த பாரம்பரிய நட்புறவும் தக்கவைக்கப்படுகிறது.

மேலும், ஜனாதிபதிதலைமையிலான மக்கள் விடுதலை முன்னணி (JVP) வரலாற்று ரீதியாக மார்க்சிச-லெனினிச கொள்கைகளைக் கொண்டிருப்பதால், ரஸ்யாவுடன் ஒரு இயல்பான அரசியல் இணக்கத்தைக் கொண்டிருக்கின்றது. கச்சா எண்ணெய் வர்த்தகம், சுற்றுலாத்துறை மற்றும் தேயிலை ஏற்றுமதி போன்ற துறைகளில் இலங்கையுடன் ரஸ்யா தனது உறவுகளைத் மேலும் வலுப்படுத்திக்கொள்ளவே விரும்புகிறது.

மத்திய கிழக்கு நாடுகள் இலங்கைக்கு முக்கிய எரிபொருள் விநியோகஸ் தர்களாகவும், இலட்சக்கணக்கான இலங்கைத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நாடுகளாகவும் உள்ளன. அத்தோடு, மத்திய கிழக்கு பதற்றத்தின் மத்தியில் இலங்கை அரசு பாரபட்சமற்ற நடுநிலையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கையின் ஆடைத் தயாரிப்புகள் மற்றும் பிற பொருட்களுக்கான பிரதான ஏற்றுமதிச் சந்தையாக ஐரோப்பிய ஒன்றியம் திகழ்கின்றதோடு, ஜனாதிபதி அநுர குமார திசா நாயக்க தலைமையிலான NPP அரசாங்கம் இலங்கையில் அரசியல் இஸ்திரத்தன்மை, ஊழல் ஒழிப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை முன்னெடுப்பதால், ஐரோப்பிய நாடுகள் வர்த்தக ரீதியான முதலீடுகளை மேற்கொள்ள அதிகம் ஆர்வம் காட்டுகின்றன.

இலங்கையில் ஏற்பட்ட  ஆட்சி மாற்றத்தோடு இடம் பெறுகின்ற தெளிவான பெரும்பான்மையுடன் கூடிய ஆட்சியானது  சர்வதேச வணிகங்களுக்கு ஒரு நிலையான கொள்கை சூழலை உறுதிப்படுத்தி உள்ளது. ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் சட்டமும் நீத்தித்துறையும் சுயாதீனமாக இயங்குவதால்  சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இதனை பொறுத்துக்கொள்ள முடியாத எதிர்த்தரப்பினர் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சில தனித்துவ கட்சிகளின் தலைவர்களை இணைத்துக்கொண்டு ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் சர்வதேசத்தில் இருக்கும் நற்பெயரினை இல்லாமல் செய்யும் வேலைத்திட்டங்களில் இறங்கியுள்ளார்கள்.

அதற்காக பாராளுமன்றத்தில் சில உறுப்பினர்களை உசுப்பேத்தி விட்டு ஆங்கிலத்தில் உரையாற்ற வைப்பைது, சிறுபான்மை கட்சிகளின் தலைவர்களை வெளிநாட்டு தூதுவர்களிடத்திலும், தமிழ் நாடு மற்றும்  இந்தியாவின் பிற மானிலங்களின் முதலைமைச்சர்களை  சந்திக்க செய்து அரசாங்கத்திற்கு எதிராக சேறு பூசுகின்ற செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

மேலும், அரசாங்கத்தின் நடைமுறைச் செயற்பாடுகளுக்கும் தேர்தல் வாக்குறுதிகளுக்கும் இடையிலான இடைவெளிகளைச் சுட்டிக்காட்டும் எதிர்கட்சிகள், அரச கொள்கைகளை தகுந்த காரணங்கள் இன்றி விமர்சிப்பதோடு நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் தொடர்ச்சியான உண்மைக்கு புறம்பான செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசியல் ரீதியாக தங்களை வலுப்படுத்திக் கொள்வதற்காக, எதிர்க்கட்சிகள் சிறுபான்மை மக்களின் மத மற்றும் கலாச்சார உணர்வுகளைப் பயன்படுத்தி, சில சிறுபான்மை பிரதிநிதிகள் மற்றும் கட்சித் தலைவர்களுடன் இணைந்து கூட்டுப் போராட்டங்களையும், அரசியல் அழுத்தங்களையும் உருவாக்க முயற்சித்து வருகின்றது. 

அதன் ஒரு முதற்கட்ட அங்கமாகவே கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் புதிதாக நியமனம் பெற்ற சிற்றூழியர்களின் சீரூடை விவகாரம் திரைக்கு பின்னால் இருந்து இயற்பட்ட அரசியல் நாடகமாக இருக்கின்றது.

தேசியம், நில உரிமைகள், மத அடையாளங்கள் மற்றும் அதிகாரப் பகிர்வு போன்ற உணர்வுபூர்வமான விடயங்கள் இலங்கையின் அரசியல் களத்தில் மீண்டும் பிரதான விவாதப் பொருளாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சிறுபான்மையின மக்களிடையே, அவர்களின் தனித்துவமான மத, கலாச்சார மற்றும் பிரதேச ரீதியான உணர்வு பூர்வமான கோரிக்கைகளை முன்னிறுத்தி NPP அரசாங்கத்திற்கு எதிராக மறைமுகம சூழ்ச்சிகளை கையாளும் திட்டங்களில் எதிர்க்கட்சியினர் இறங்கியுள்ளார்கள்.

எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் ஆளுங்கட்சியின் சர்வதேச நற்பெயரைக் குறைப்பதற்கோ அல்லது அவர்களின் பலவீனங்களை அம்பலப்படுத்துவதற்கோ எதிர்க்கட்சிகள் முயற்சிப்பது வழக்கமான அரசியல் போட்டியின் ஒரு பகுதியாகும். 

இலங்கையில் ஆட்சி மாற்ற தீர்மானங்களில் சிறுபான்மை (தமிழ், முஸ்லிம் மற்றும் மலையகத் தமிழ்) மக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். பாரம்பரிய எதிர்க்கட்சிகள் சிறுபான்மைத் தலைவர்களின் ஆதரவைப் பெற்று தங்களின் அரசியல் பலத்தை அதிகரிக்க முயற்சிப்பது பாரம்பரிய இலங்கையின் அரசியல் கலாச்சாரமாக இருந்து வந்துள்ளது.

அத்தகைய நிலைமைகளை சாதகமாகிக்கொள்ள சிறுபான்மை கட்சிகளின் தலைவர்களை பயன்படுத்தி சர்வதேச நாடுகளில் ஜனாதிபதிக்கும், அவர் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு இருக்கும் நன்மதிப்பை குறைக்கும் செயற்பாடுளே எதிர்க் கட்யினரால் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. மேலும் அரசாங்கத்தின் மீதான சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை பலவீனப்படுத்த எதிர்க்கட்சிகள் இவ்வாறான சிறுபான்மை தனித்துவ கட்சியின் தலைவர்களைப் பயன்படுத்துகின்றது என்ற விமர்சனங்களும் மக்கள் மத்தியில் பரவலாக மேலெழுந்துள்ளது.

உள்நாட்டில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதென்றால்! சர்வதேச அரங்கில் நாட்டுக்கு இருக்கின்ற நன்மதிப்பிலும், NPP அரசுக்கு இருக்கின்ற இராஜதந்திர உறவிலும் விரிசலையும் தாக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும். அதற்கான ஒரே வழி சிறுபான்மையினரிடையே இன,மத, கலாச்சார உணர்வுகளைத் தூண்டிவிடும் செயற்பாடுகள் தற்போது எதிர்க்கட்சிகளின் மறைமுக அரசியல் ஆயுதமாக மாறியுள்ளது.

இன,மத,கலாச்சார ரீதியான உணர்வுகள் தூண்டப்படும் போது, பல்லின சமூகங்கள் வாழும் இலங்கையில் இனங்களுக்கு இடையிலான பரஸ்பர நம்பிக்கை குறைவடைய ஆரம்பிக்கும். கொள்கை சார்ந்த மற்றும்நேர்மையான புதிய  அரசியல் கலாச்சாரத்துக்குள் தங்களை பழக்கப்படுத்தி வரும் சிறுபான்மை மக்களுக்கு மத்தியில் உணர்ச்சிவசப்பட்ட மற்றும் பிளவுபடுத்தும் அரசியல் கலாச்சாரம் மேலோங்கச் செய்யும் முயற்சியே தற்போது எதிர்தரப்பினால் முன்னெடுக்கப்படுகின்றது.

அத்தோடு, தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது நாட்டின்  பொருளாதாரத்தையும், ஒழுங்கையும் கையாளத் தவறிவிட்டது என்ற பிம்பத்தை உருவாக்குவதே எதிர்க்கட்சிகளின் பிரதான இலக்காக இருப்பதோடு, பாதுகாப்பு மற்றும் சமூக அமைதியின்மை பற்றிய சர்வதேச ரீதியிலான பிரசாரங்களை முன்னெடுத்து நாட்டின் முதன்மை வருமானமாக மாற்றமடைந்து வரும் சுற்றுலாத் துறையைப் பாதிப்படைய செய்வதே இவர்களின் பிரதான நோக்கங்களில் ஒன்றாக இருக்கின்றது.

அதற்காக, இலங்கையில் இன,மத மற்றும் கலாச்சார ஒருமைப்பாடு மற்றும் நாட்டின் இஸ்திரத்தன்மையை  சீர்குலைந்துள்ளது என்பதனை வெளிக்காட்டி சிறுபான்மையினரின் பாதுகாப்பு அல்லது உரிமைகள் பறிக்கப்படுகின்றது என்ற போர்வையில் சர்வதேச அமைப்புகளின் கவனத்தை ஈர்க்கும் செயற்பாடுகளின் அரங்கேற்றமும் மிகக் கச்சிதமாக நகர்த்தப்படுகின்றது. 

அதன் மூலம் ஜனாதிபதிக்கும் தற்போதைய NPPஅரசுக்கு சர்வதேச நெருக்கடிகளை  கொடுக்கலாம் என்பது எதிர்க்கட்சிகளின் அரசியல் சித்து விளையாட்டாக இருக்கின்றது. அதனால் சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கையைத் தகர்த்தெறிவதில் வெற்றியடைந்து விடலாம் என்பதே இவர்களுடைய பாரம்பரிய அரசியல் தந்திரமாகும்.

மேலும், அரசாங்கத்தின் புதிய பொருளாதார மற்றும் ஊழல் எதிர்ப்பு கொள்கைகளுக்கு நிகரான, வலுவானதொரு மாற்றுத் திட்டத்தை முன்வைக்க முடியாத சவாலினை எதிர்க்கட்சிகள் எதிர் கொண்டுள்ளன என்பது சமகால அரசியலில் பாமர மகனும் அலசிக்கொள்ளும் சாதாரண விடயமாக மாறியுள்ளது. பிரதான எதிர்க் கட்சிகளுக்குள் காணப்படும் தலைமைத்துவப் போட்டிகளும், கொள்கை முரண்பாடுகளும் அவர்களைத் தொடர்ந்து பலவீனப்படுத்தியும் வருகின்றன.

அதனால், தேர்தல் காலங்களிலும் அதற்குப் பின்னரும் இலங்கையின் நீண்டகால அரசியல் வரலாறாக இருந்து வந்துள்ள சிறுபான்மை மக்களின் இன,மதம் மற்றும் கலாச்சாரம் சார்ந்த உணர்வுப்பூர்வமான விடயங்களை சிறுபான்மை சமூகங்களுக்கு மத்தியில் தூண்டச் செய்து  மீண்டும் அரசியல் அதிகாரங்களை கைப்பற்றிக்கொளும் சூழ்ச்சிகளுக்கு  திரைமறைவில் இருந்து செயல் வடிவம் கொடுக்கும் தொடங்கப்பட்டுள்ளது என்பது அரசியல் அனுபவம் வாய்ந்த அவதானிகளின் கருத்தாகும்.

எல்லா வற்றுக்கும் ஒரு படி மேலே என்பதைப் போல்; சில பாராளுமன்ற உறுப்பினர்கள் பகிரங்கமாகவே அவர்களுக்கு இருக்கும் பாராளுமன்ற சிறப்புரிமைகளை பாவித்து கலாச்சார மற்றும் மத ரீதியானதும், உணர்வு பூர்வமான கருத்துக்களை தெரிவித்து அதனை சமூக வலைத் தளங்கலூடாக சமூகமயப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றார்கள்.

எதுவாக இருந்தாலும், தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சர்வதேச ரீதியில் கட்டியெழுப்பியுள்ள நற்பெயரைக் குலைப்பதற்கும், நாட்டின் இஸ்திரத்தன்மையை கேள்விக்கு உள்ளாக்கும் எதிர்க்கட்சிகளின்  திட்டமானது தங்களிடம் பழிக்காது என்ற விடயத்தில்  NPP அரசாங்கம் எந்தளவு உறுதியாக இருக்கின்றது.

அதே அளவு,  இன,மத,கலாச்சார உணர்வுகளை தூண்டி அதன் மூலம் இனங்களுக்கு இடையில் ஏற்படும் பிளவுகளை கருவியாகப் பயன்படுத்தப்பட நினைக்கும் எதிர்கட்சிகளின் திட்டமானது உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் வாழுகின்ற புத்திஜிவிகள் மற்றும் நடுநிலை சிந்தனையாளர்களிடம் எடுபடப்போவதில்லை என்பதே உண்மை.

அஹமட் இர்ஷாட்.
30-08-2026.

වාර්ගික සුළු ජාතීන් උසිගන්වා පාලනය අස්ථාවර කිරීමේ උපක්‍රමයක්. විරුද්ධවාදීන්ගේ රහසිගත සැලැස්මක්. சிறுபான்மை இனங்களை தூண்டிவிட்டு ஆட்சியை சீர்குலைக்கும் தந்திரம். எதிரிணிகள் முன்னெடுக்கும் மறைமுகத் திட்டம்.

ශ්‍රී ලංකාවේ කීර්ති නාමය ජාත්‍යන්තරය තුළ ඉහළ යද්දී එය කැළඹෙන එක් කුමන්ත්‍රණයක් වන්නේ කල්මුණේ රෝහලේ නිල ඇඳුම් ප්‍රශ්නයයි!

විපක්ෂයේ ප්‍රධාන ඉලක්කය වී ඇත්තේ ජාත්‍යන්තර වශයෙන් ශ්‍රී ලංකාවේ ආරක්ෂාව සහ ස්ථාවරත්වය පිළිබඳ ව්‍යාජ චිත්‍රයක් නිර්මාණය කර සංචාරක ව්‍යාපාරයට සහ විදේශ ආයෝජනවලට හානි කිරීම ය.


කලාපීය ආරක්ෂාව සම්බන්ධයෙන් ශ්‍රී ලංකාවේ හැසිරීම සහ ආර්ථික ස්ථාවරත්වය සඳහා දරන ප්‍රයත්න විදේශ රටවල අවධානයට ලක්ව ඇති අතර ශ්‍රී ලංකාවේ විදේශ ප්‍රතිපත්ති සහ රාජ්‍ය තාන්ත්‍රික ක්‍රියාමාර්ග හේතුවෙන් ජාත්‍යන්තර වශයෙන් රටේ හොඳ හිත ඉහළ ගොස් ඇති අතර ජාත්‍යන්තර අවධානය ජාතික ජනබල රජය වෙත යොමු වී තිබේ.

මේ නිසා ආණ්ඩුවේ විදේශ හා ආර්ථික ජයග්‍රහණ විවේචනය කරන්නේ කෙසේද යන්න පිළිබඳව දේශපාලන පක්ෂ අවිනිශ්චිත තත්ත්වයකට පත්ව ඇත. ජාත්‍යන්තරයෙන් සෑම පැත්තකින්ම සහයෝගයක් ලැබෙන ජාතික ජන බලවේගයට ආණ්ඩුවට මුහුණ දීමට නොහැකි තත්ත්වයක් උද්ගතව ඇති තත්ත්වයක් මැද දේශපාලන ව්‍යාපාරවල මීළඟ අදියර ව්‍යාකූලත්වයේ සිරවී ඇති බව දේශපාලන නිරීක්ෂකයන්ගේ අදහසයි.

අනුර කුමාර දිසානායක ජනාධිපතිතුමාගේ රජය අනුගමනය කරන සමබර සහ නොබැඳි විදේශ ප්‍රතිපත්තියක් රටේ ජාතික ස්වෛරීභාවය සුරැකීමට සහ ආර්ථික ප්‍රකෘතිමත් වීම සඳහා ඉතා වැදගත් කාර්යභාරයක් ඉටු කරයි. ජාතික ජන බලවේගය රජය කිසිදු සුපිරි බල කඳවුරක් සමඟ නොගැලපෙන බවත් රටේ ආර්ථික අවශ්‍යතා සහ ස්වෛරීභාවය මුල් කරගනිමින් කටයුතු කරන බවත් ලෝකයට පැහැදිලි කරමින් සිටී.  

ඒ ආකාරයට ආරක්‍ෂක හා බලශක්ති යටිතල ව්‍යාපෘතිවලදී රටේ සමීපතම අසල්වැසියා සහ ආරක්‍ෂක හවුල්කරුවා වන ඉන්දියාව සමඟ සුහද සබඳතාවයක් පවත්වාගෙන යන NPP රජය හම්බන්තොට කර්මාන්ත කලාපය, කොළඹ වරාය නගරය, ආයෝජන ව්‍යාපෘති චීනය සමඟ සහයෝගයෙන් කටයුතු කරමින් ආර්ථික තත්ත්වය වැඩිදියුණු කිරීමට පියවර ගනිමින් සිටී.

එක්සත් ජනපදය සහ යුරෝපීය රටවල් සමඟ මධ්‍යස්ථ රාජ්‍ය තාන්ත්‍රික සබඳතා ජාත්‍යන්තර වෙළඳාම, ණය සහ ජාත්‍යන්තර මූල්‍ය ආයතනවල සහාය සුරක්ෂිත කිරීම සඳහා දියුණු වන අතර, බලශක්ති අවශ්‍යතා, සංචාරක සංවර්ධනය සහ රාජ්‍ය තාන්ත්‍රික සහාය ශක්තිමත් කිරීම සඳහා සම්ප්‍රදායික මිත්‍රත්වයන් පවත්වාගෙන යනු ලැබේ.

එසේම ජනාධිපති ජනතා විමුක්ති පෙරමුණට (ජවිපෙ) රුසියාව සමග ස්වභාවික දේශපාලන හිතවත්කමක් ඇත්තේ එය ඓතිහාසිකව මාක්ස් ලෙනින්වාදී ප්‍රතිපත්ති දරන බැවිනි. බොරතෙල් වෙළඳාම, සංචාරක කර්මාන්තය සහ තේ අපනයනය වැනි ක්ෂේත්‍රවල ශ්‍රී ලංකාව සමඟ ඇති සබඳතා තවදුරටත් ශක්තිමත් කර ගැනීමට රුසියාව උනන්දු වෙයි.

මැදපෙරදිග රටවල් ශ්‍රී ලංකාවට ප්‍රධාන ඉන්ධන සපයන්නන් වන අතර මිලියන සංඛ්‍යාත ශ්‍රී ලාංකික ශ්‍රමිකයන්ගේ සේවා යෝජකයන් වේ. එමෙන්ම මැදපෙරදිග ආතතිය මැද ශ්‍රී ලංකා රජය අපක්ෂපාතී සහ මධ්‍යස්ථ ස්ථාවරයක් පෙන්නුම් කර ඇත.

යුරෝපා සංගමය ශ්‍රී ලංකාවේ ඇඟලුම් සහ අනෙකුත් භාණ්ඩ සඳහා ප්‍රධාන අපනයන වෙළෙඳපොළ වන අතර, ජනාධිපති අනුර කුමාර දිසානායක ප්‍රමුඛ NPP රජය ශ්‍රී ලංකාවේ දේශපාලන ස්ථාවරත්වය, දූෂණ විරෝධී සහ නීතියේ ආධිපත්‍යය ප්‍රවර්ධනය කරන බැවින්, යුරෝපීය රටවල් වාණිජ ආයෝජන සිදු කිරීමට වැඩි උනන්දුවක් දක්වයි.

පැහැදිලි බහුතර රජයක් වෙත ශ්‍රී ලංකාව සංක්‍රමණය වීම ජාත්‍යන්තර ව්‍යාපාර සඳහා ස්ථාවර ප්‍රතිපත්ති පරිසරයක් සහතික කර ඇත. ජාත්‍යන්තර ආයෝජකයින්ගේ විශ්වාසය ඉහළ නැංවීම සඳහා දූෂණ විරෝධී ක්‍රියාමාර්ග සහ නීතියේ සහ අධිකරණයේ ස්වාධීනත්වය වැදගත් කාර්යභාරයක් ඉටු කරයි.

මෙය ඉවසාගත නොහැකිව විපක්ෂය දෙමළ හා මුස්ලිම් පක්ෂ නියෝජනය කරන ඇතැම් තනි පක්ෂ නායකයන් සමඟ එකතු වී ජනාධිපතිවරයාගේත් ආණ්ඩුවේත් ජාත්‍යන්තර කීර්ති නාමය විනාශ කිරීමේ වැඩසටහන් දියත් කර ඇත.

ඒ සඳහා පාර්ලිමේන්තුවේ ඇතැම් මන්ත්‍රීවරුන්ට ඉංග්‍රීසියෙන් කතා කිරීමට බලකර සුළු පක්ෂ නායකයන් විදේශ තානාපතිවරුන් සහ ඉන්දියාවේ තමිල්නාඩු ප්‍රමුඛ ප්‍රාන්ත මහ ඇමැතිවරුන් හමුවී රජයට මඩ ප්‍රහාර එල්ල කරමින් සිටිනවා.

එමෙන්ම ආණ්ඩුවේ ප්‍රායෝගික ක්‍රියාකාරකම් සහ මැතිවරණ පොරොන්දු අතර ඇති හිඩැස් පෙන්වා දෙමින් විපක්ෂයේ පක්ෂ නිසි හේතු නොමැතිව රජයේ ප්‍රතිපත්ති විවේචනය කරමින් පාර්ලිමේන්තුව තුළත් ඉන් පිටතත් දිගින් දිගටම අසත්‍ය ක්‍රියාවල නිරත වෙමින් සිටිනවා.

දේශපාලන වශයෙන් ශක්තිමත් වීම සඳහා විරුද්ධ පක්‍ෂ සුළුතර ජනතාවගේ ආගමික හා සංස්කෘතික හැඟීම් උපයෝගී කරගනිමින් සුළු ජාතික නියෝජිතයන් හා පක්‍ෂ නායකයන් සමඟ ඒකාබද්ධ අරගල හා දේශපාලන බලපෑම් ඇති කිරීමට උත්සාහ කරයි.

එහි මුල් කොටසක් ලෙස කල්මුණේ උතුර සම්පත් රෝහලේ නව පත්වීම් ලැබූ ශිෂ්‍යභට නිලධාරීන්ගේ නිල ඇඳුම් ප්‍රශ්නය තිරය පිටුපස දේශපාලන නාටකයකි.

ජාතිකත්වය, ඉඩම් අයිතිය, ආගමික අනන්‍යතා සහ බලය බෙදාගැනීම වැනි සංවේදී කරුණු නැවත ශ්‍රී ලංකාවේ දේශපාලන ක්ෂේත්‍රයේ ප්‍රධාන ධාරාවට ගෙන ඒමට උත්සාහ දරමින් සිටී. විරුද්ධ පක්ෂ සුළුතර ජනතාව අතර ඔවුන්ගේ අනන්‍ය ආගමික, සංස්කෘතික සහ භෞමික හැඟීම්බර ඉල්ලීම් ඉදිරියට ගෙන යමින් NPP ආන්ඩුවට එරෙහිව පසුගාමී උපාමාරුවල යෙදීමේ යෝජනා ක්‍රම ආරම්භ කර ඇත.

ඕනෑම ප්‍රජාතන්ත්‍රවාදී රටක විපක්ෂයේ පක්ෂ පාලක පක්ෂයේ ජාත්‍යන්තර කීර්ති නාමයට හානි කිරීමට හෝ ඔවුන්ගේ දුර්වලතා හෙළිදරව් කිරීමට උත්සාහ කිරීම සාමාන්‍ය දේශපාලන තරඟයකි.

ශ්‍රී ලංකාවේ පාලන තන්ත්‍ර වෙනස් කිරීමේ තීරණවලදී සුළු ජාතීන් (දෙමළ, මුස්ලිම් සහ කඳුකර දෙමළ) වැදගත් කාර්යභාරයක් ඉටු කරයි. සාම්ප්‍රදායික විරුද්ධ පක්ෂ තම දේශපාලන ශක්තිය වැඩි කර ගැනීම සඳහා සුළු ජාතික නායකයන්ගේ සහාය ලබා ගැනීම සාම්ප්‍රදායික ශ්‍රී ලාංකීය දේශපාලන සංස්කෘතියකි.

එවැනි තත්ත්වයන් ප්‍රයෝජනයට ගැනීම සඳහා සුළු පක්ෂ නායකයන් යොදා ගනිමින් ජාත්‍යන්තර රටවල ජනාධිපතිවරයාගේ සහ ඔහු ප්‍රමුඛ ජාතික ජන බල ආණ්ඩුවේ හොඳ හිත අඩු කිරීමේ කටයුතු විපක්ෂ බලවේග මේ වනවිට ක්‍රියාත්මක කරමින් සිටින බව නිරීක්ෂණය කළ හැකිය. එපමණක් නොව, සුළු ජාතික ජනතාවගේ ආණ්ඩුව කෙරෙහි ඇති විශ්වාසය හීන කිරීමට විරුද්ධ පක්ෂ මෙවැනි සුළු ජාතික පුද්ගලවාදී පක්ෂ නායකයන් යොදා ගනිමින් සිටින බවට විවේචන ද ජනතාව අතර පුළුල් ලෙස මතුව තිබේ.

රටේ දේශපාලන බලය ඇල්ලීමට! ජාත්‍යන්තර තලයේ රටේ කීර්ති නාමයට සහ NPP ආණ්ඩුවේ රාජ්‍යතාන්ත්‍රික සබඳතාවලට බලපෑම් කළ යුතුයි. ඒ සඳහා ඇති එකම මග දැන් විරුද්ධ පක්ෂවල වක්‍ර දේශපාලන අවියක් බවට පත්ව ඇති සුළු ජාතීන් අතර වාර්ගික, ආගමික හා සංස්කෘතික හැඟීම් ඇවිස්සීමයි.

වාර්ගික, ආගමික සහ සංස්කෘතික හැඟීම් අවුස්සන විට බහු වාර්ගික ශ්‍රී ලංකාව කෙරෙහි අන්තර් වාර්ගික විශ්වාසය පළුදු වීමට පටන් ගනී. ප්‍රතිපත්තිගරුක සහ අවංක නව දේශපාලන සංස්කෘතියට අනුගත වෙමින් සිටින සුළුතර ජනතාව අතර උද්වේගකර සහ භේදකාරී දේශපාලන සංස්කෘතියක් බලගැන්වීමට විපක්ෂය මේ වනවිට උත්සාහ කරමින් සිටී.

මීට අමතරව, වත්මන් ජාතික ජන බලවේගය රජය රටේ ආර්ථිකය හා සාමය හැසිරවීමට අපොහොසත් වී ඇති බවට ප්‍රතිරූපයක් නිර්මාණය කිරීම විරුද්ධ පක්ෂවල ප්‍රධාන ඉලක්කය වන අතර ඔවුන්ගේ එක් ප්‍රධාන ඉලක්කයක් වන්නේ ආරක්ෂාව සහ සමාජ අසහනය පිළිබඳ ජාත්‍යන්තර ප්‍රචාරණයන් ප්‍රවර්ධනය කර රටේ ප්‍රධාන ආදායම් මාර්ගය බවට පත්ව ඇති සංචාරක කර්මාන්තයට හානි කිරීමයි.

ඒ සඳහා ශ්‍රී ලංකාවේ වාර්ගික, ආගමික හා සංස්කෘතික ඒකීයභාවය සහ ස්ථාවරත්වය බිඳ වැටී ඇති බව පෙන්වමින් සුළු ජාතීන්ගේ ආරක්‍ෂාව හෝ අයිතිවාසිකම් අහිමි කිරීමේ මුවාවෙන් ජාත්‍යන්තර සංවිධානවල අවධානයට ලක්වන ක්‍රියාකාරකම් වේදිකාගත කිරීම ඉතා කදිමට චලනය වෙමින් පවතී.

ජනාධිපතිවරයාට සහ වත්මන් එන්පීපී ආණ්ඩුවට ජාත්‍යන්තර අර්බුදයක් ලබාදීම විරුද්ධ පක්ෂවල දේශපාලන සෙල්ලමකි. එබැවින් ඔවුන්ගේ සාම්ප්‍රදායික දේශපාලන උපාය මාර්ගය වන්නේ ජාත්‍යන්තර ආයෝජකයින්ගේ විශ්වාසය බිඳ දැමීම සාර්ථක කර ගැනීමයි.

එපමණක් නොව ආණ්ඩුවේ නව ආර්ථික සහ දූෂණ විරෝධී ප්‍රතිපත්තිවලට එරෙහිව ප්‍රබල විකල්ප සැලැස්මක් ඉදිරිපත් කිරීමට නොහැකිවීමේ අභියෝගයට විරුද්ධ පක්ෂ මුහුණදීම සමකාලීන දේශපාලනයේ සාමාන්‍ය දෙයක් බවට පත්ව ඇත. ප්‍රධාන විරුද්ධ පක්‍ෂ තුළ ඇති නායකත්ව තරග සහ ප්‍රතිපත්තිමය ගැටුම් දිගින් දිගටම ඔවුන් දුර්වල කරයි.

එබැවින් මැතිවරණ කාලසීමාවන් තුළත්, දීර්ඝ ශ්‍රී ලංකා දේශපාලන ඉතිහාසයෙන් පසුවත් සුළු ජාතික ජන කොටස් අතර වාර්ගික, ආගමික, සංස්කෘතික සංවේදිතාවන් ඇවිස්සී යළි දේශපාලන බලය ලබාගැනීමේ උපක්‍රම තිරය පිටුපස සිට ක්‍රියාත්මක වීමට පටන් ගෙන ඇති බව දේශපාලන වශයෙන් පළපුරුදු නිරීක්ෂකයන්ගේ අදහසයි.

සියල්ලටම වඩා එක් පියවරක් ඉදිරියෙන් සිටින්නාක් මෙන්; ඇතැම් මන්ත්‍රීවරුන් තම පාර්ලිමේන්තු වරප්‍රසාද විවෘතව භාවිත කරමින් සංස්කෘතික, ආගමික හා හැඟුම්බර අදහස් ප්‍රකාශ කරමින් සමාජ ජාල වෙබ් අඩවි හරහා ඒවා සමාජගත කිරීමට අවධානය යොමු කරති.

කෙසේ වෙතත් වත්මන් ජනාධිපතිවරයා ප්‍රමුඛ ජාතික ජනබල ආණ්ඩුව ජාත්‍යන්තරව ගොඩනඟා ඇති කීර්ති නාමයට හානි කර රටේ ස්ථාවරත්වය ප්‍රශ්න කිරීමේ විපක්ෂයේ සැලසුම ඔවුන්ට වරදක් නොවන බවට NPP ආණ්ඩුව කෙතරම් අධිෂ්ඨානශීලීව සිටීද?

එසේම වාර්ගික, ආගමික, සංස්කෘතික හැඟීම් අවුස්සමින් ජාතීන් අතර භේද ඇති කිරීමට ඒවා මෙවලමක් කර ගැනීමට අවශ්‍ය විරුද්ධ පක්ෂවල සැලසුම දේශීය හා ජාත්‍යන්තරව ජීවත්වන බුද්ධිමතුන් හා මධ්‍යස්ථ චින්තකයින් විසින් පිළිනොගන්නා බව සැබෑය.

අහමඩ් ඉර්ෂාඩ්.
දිනකරන් වර මංජරි වෙනුවෙන්,
30-08-2026.
சிறுபான்மை இனங்களை தூண்டிவிட்டு ஆட்சியை சீர்குலைக்கும் தந்திரம். எதிரிணிகள் முன்னெடுக்கும் மறைமுகத் திட்டம். Reviewed by www.lankanvoice.lk on ஆகஸ்ட் 31, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.