சாய்ந்தமரு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி (இன்ஸ்பெக்டர் தரமுடையவர்) மற்றும் அங்கு கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஆகியோரை லஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சாய்ந்தமரு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி (இன்ஸ்பெக்டர் தரமுடையவர்) மற்றும் அங்கு கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஆகியோரை, லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழு அதிகாரிகள் இன்று பிற்பகல் கைது செய்தனர்.
போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில், அண்மையில் கைதுசெய்த சந்தேக நபரை, சட்ட நடவடிக்கைகளிலிருந்து விடுவிப்பதற்காக - லஞ்சம் பெற்றபோது, லஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் இவர்களை கைது செய்தனர்.
கைதான பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி - பாலசுப்பிரமணியம் பிரகலதன், பொலிஸ் சார்ஜன்ட் - ஹசன் மௌலானா அனுஹர் ஆகியோராவர்.
சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தற்போது, பெரிய நீலாவணை பொலிஸ் நிலையப் பதில் பொறுப்பதிகாரியாகவும் கடமையாற்றுகிறார்.
அவரை - பெரிய நீலாவணையில் வைத்தே ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்தனர்.
இவர்கள் பெற்ற லஞ்சம் எவ்வளவு தெரியுமா? 20 ஆயிரம் ரூபாய்.
இப்போதைக்கு தொழிலும் இல்லை, சம்பளமும் இல்லை. வழக்கு முடியவே பல வருடங்களாகும்.
(UL.Mabrook)
(படம்: AIஇல் கற்பனையாக உருவாக்கப்பட்டது)
சாய்ந்தமரு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி (இன்ஸ்பெக்டர் தரமுடையவர்) மற்றும் அங்கு கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஆகியோரை லஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 17, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 17, 2026
Rating:

கருத்துகள் இல்லை: