நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளார்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, லஞ்ச – ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய ‘ஏர்பஸ்’ (Airbus) விமானக் கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகள் குறித்த வாக்குமூலத்தைப் பெற்றுக்கொள்வதற்காக, லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் இன்று காலை அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
எழுத்துப்பூர்வமாகப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கமைய இன்று (04) காலை ஆணைக்குழுவில் ஆஜரானார்.
சுமார் 5 மணித்தியாலங்களுக்கும் மேலாக அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.
நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளார்
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 04, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 04, 2026
Rating:

கருத்துகள் இல்லை: