Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையுடன் ஜனாதிபதி விஷேட சந்திப்பு


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர்களை இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சந்தித்தார்.

கடந்த இரண்டு வருடங்களாக நாட்டில் எந்தவொரு இனவாத மோதலுக்கும் இடமளிக்காது, அனைத்து மக்களுக்கும் இடையில் சகவாழ்வு, சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்த வேலைத்திட்டத்திற்கும், நாட்டின் எதிர்கால சந்ததியை வீழ்ச்சிக்கு உட்படுத்தி வரும் போதைப்பொருள் பேரழிவை ஒழிப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டத்திற்கும் ஜம்இய்யத்துல் உலமா சபை தமது பாராட்டுகளைத் தெரிவித்தது.


முஸ்லிம் சமூகம் தமது சமய மற்றும் கலாசார நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதில் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

எந்தவொரு சமூகமும் தமது கலாசார அடையாளம் காரணமாக சமூகத்தில் பாதுகாப்பற்ற தன்மையோ அல்லது அச்சமோ இல்லாத ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதுடன், தற்போதைய அரசாங்கம் அதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்பதையும் இதன்போது ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையுடன் ஜனாதிபதி விஷேட சந்திப்பு Reviewed by www.lankanvoice.lk on செப்டம்பர் 10, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.