සිංහල පරිවර්තනය සමග) பாராளுமன்றச் வரப்பிரசாரங்களும் ஊழல் ஒழிப்பும்: புதிய அரசியல் கலாசார பாதையில் பயணிக்கும் தேசிய மக்கள் சக்தி
සිංහල පරිවර්තනය සමග) பாராளுமன்றச் வரப்பிரசாரங்களும் ஊழல் ஒழிப்பும்: புதிய அரசியல் கலாசார பாதையில் பயணிக்கும் தேசிய மக்கள் சக்தி. පාර්ලිමේන්තු වරප්රසාද සහ දූෂණයට එරෙහි සටන: නව දේශපාලන සංස්කෘතික මාවතක ජාතික ජන බලවේගය
பாராளுமன்ற ஆசனங்களையும் சிறப்புரிமைகளையும் பாதுகாப்புக் கவசமாகப் பயன்படுத்த நினைக்கும் அரசியல்வாதிகளின் எண்ணம் இனிவரும் காலங்களில் சாத்தியமற்றது என்ற விழிப்புணர்வு சமூக ஊடகங்கள் வாயிலாக மக்கள் மத்தியில் பலமாக எழுந்துள்ளது.
தகுதியான நிபுணர்களைப் பாராளுமன்றத்திற்குள் கொண்டு வருவதற்காக உருவாக்கப்பட்ட தேசிய பட்டியல் முறைமை, பல நாடுகளில் தோற்ற அரசியல்வாதிகளைக் காப்பாற்றும் ஒரு "காப்பீட்டுத் திட்டமாக" மாற்றப்பட்டுள்ளது.
22வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம், ஊழல் தடுப்புச் சட்டங்கள் மற்றும் நீதித்துறையின் சுதந்திரம் போன்ற சட்டரீதியான நகர்வுகள் மூலம் ஊழலை ஒழிக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசு தீவிரமாகச் செயற்பட்டு வருகிறது.
பாராளுமன்ற வரப்பிரசாதங்கள் (Parliamentary Privileges) என்பது மக்கள் பிரதிநிதிகள் அச்சமின்றி, சுதந்திரமாகத் தங்கள் கடமைகளைச் செய்ய உருவாக்கப்பட்ட ஒரு பாதுகாப்பு கவசம் என்றாலும், அது சில நேரங்களில் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிப்பதற்கான ஒரு ஓட்டையாக (Shield) பயன்படுத்தப்படுகிறது என்பது உலகெங்கிலும் உள்ள அரசியல் ஆய்வாளர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் மத்தியில் இது ஒரு தொடர் விவாதப் பொருளாகவே இருந்து வருகிறது.
சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அச்சமின்றி மக்கள் பணியாற்றவே அவர்களுக்கு வரப்பிரசாதங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், அவை தவறாகப் பயன்படுத்தப்படும் போது சட்டத்தின் ஆட்சி (Rule of Law) கேள்விக்குள்ளாகிறது என்பதற்கான பதில் நாட்டினுடைய அரசியல் சீர்திருத்தத்தில் முக்கியமாக செய்ய வேண்டிய திருத்தம் என்பது Genuine அரசியல்வாதிகளின் பார்வையாகும்.
முக்கியமாக, பாராளுமன்ற கூட்டத்தொடர் நடக்கும் போதும், அதற்கு முன்னரும் பின்னரும் குறிப்பிட்ட நாட்களுக்கு சிவில் வழக்குகளில் உறுப்பினர்களைக் கைது செய்ய முடியாது. பாராளுமன்ற வரப்பிரசாரத்தினை பயன்படுத்தி குற்றவியல் வழக்குகளை நீடித்து கொள்ளவும் சிலர் முயல்கின்றனர்.
பாராளுமன்றத்திற்குள் பேசும் பேச்சுக்கள் அல்லது வாக்கெடுப்புகள் தொடர்பாக நீதிமன்றங்கள் எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாது. அதனை பயன்படுத்தி அவதூறுகளையும், விசாரணைகளில் இருந்து தப்பிக்கும் உத்திகளையும் ஏராளமானோர் கையாளுகின்றனர்.
இதனால் ஊழல்வாதிகளும், கள்வர்களும், குற்றப் பின்னணி கொண்டவர்களும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவே அரசியலுக்கு வரும் நிலை (Criminalization of Politics) அதிகரிக்கிறது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அரசியலமைப்பு விதி மீறப்படுவதோடு, மோசடி செய்தவர்கள் தண்டனையில் இருந்து தப்பிப்பது கொள்வதால்,அரசாங்கத்தின் மீதும், அரசியல் அமைப்பின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் குறைக்கிறது.
ஒரு ஜனநாயகம் உண்மையாகச் செயல்பட வேண்டுமெனில், சாதாரண குடிமகனுக்கும் ஆளும் வர்க்கத்திற்கும் குற்றவியல் விசாரணை மற்றும் நீதி வழங்குவதில் ஒரே விதமான சட்ட விதிகள் அமுல்படுத்தப்பட வேண்டும். பதவியில் உள்ளவர்கள் செல்வாக்கு மிக்கவர்கள் என்ற காரணத்திற்காகச் சட்டத்தின் பிடியில் இருந்து விலக்களிப்பது அல்லது சலுகைகள் வழங்குவது ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடான சமத்துவத்திற்கு எதிரானதாகவே அமையும்.
ஆளும் வர்க்கத்தினர் மீது சுமத்தப்படும் குற்றச் சம்பவங்கள் மற்றும் ஊழல் குற்றங்கள் வெளிப்படையாகவும் பாரபட்சமின்றியும் விசாரிக்கப்படும் போது மட்டுமே அரச அமைப்பின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். விசாரணை அமைப்புகளும், நீதித்துறையும் எந்தவித அரசியல் அழுத்தங்களுக்கும் ஆளாகாமல் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிப்பது குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாக அமையும்.
பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும்போது சில விசேட சட்டப் பாதுகாப்புகள் கிடைக்கின்றன. உழல் மோசடி மற்றும் சொத்துக் குவிப்பு வழக்குகளில் சிக்கியுள்ளவர்கள், தங்கள் மீதான சட்ட நடவடிக்கைகளைத் தாமதப்படுத்த அல்லது அதிகாரத்தைப் பயன்படுத்தி அவற்றிலிருந்து தப்பிக்க பாராளுமன்ற சிறப்புரிமையையும், பதவியைப் பயன்படுத்துகின்றனர்.
பாராளுமன்ற உறுப்பினர் (MP) என்ற பதவி இல்லாவிட்டால், அரச நிறுவனங்கள் மற்றும் விசாரணை அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் சக்தி குறைந்துவிடும். சட்டவிரோதமாகச் சேர்த்த சொத்துக்களைப் பாதுகாப்பதற்கும், அவை தொடர்பான விசாரணைகளை முடக்குவதற்கும் அதிகாரத்தில் இருப்பது அவர்களுக்கு அவசியமாகிறது.
இதனால், மக்களின் நேரடி வாக்குகளால் தோற்கடிக்கப்பட்ட ஒருவரை, அரசியல் கட்சிகள் தங்களுக்குக் கிடைக்கும் வாக்குச் சதவீதத்தின் அடிப்படையில் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்கு அனுப்பும் முடிவுகளையும் எடுகின்றது. தகுதியான நிபுணர்களைப் பாராளுமன்றத்திற்குள் கொண்டு வருவதற்காக உருவாக்கப்பட்ட தேசிய பட்டியல் முறைமை, பல நாடுகளில் தோற்ற அரசியல்வாதிகளைக் காப்பாற்றும் ஒரு "காப்பீட்டுத் திட்டமாக" மாற்றப்பட்டுள்ளது.
ஆகவேதான் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட அரசியல்வாதிகள் தேசியப்பட்டியல் (National List) மூலமாக மீண்டும் பாராளுமன்றத்திற்குள் நுழைய முயற்சிப்பதற்குப் பின்னால் பல்வேறு அரசியல் மற்றும் சட்டப் பாதுகாப்புக் காரணங்கள் இருக்கின்றன. மக்கள் ஆணையால் நிராகரிக்கப்பட்ட பிறகும் அவர்கள் ஏன் இந்த வழியைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்ற உண்மைய தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது மக்களுக்கு தெளிவுபடுத்தும் விடயத்தில் முன்னின்று செயற்படுகின்றது.
அந்த கையில், கடந்த காலங்களில் அரசியல் செல்வாக்கு மற்றும் பதவிகளைப் பயன்படுத்திச் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பியோடும் போக்கு இருந்ததாகவும், அதனை மாற்றிச் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை நிலைநிறுத்துவதே தமது முதன்மைக் கொள்கை எனத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது.
நீண்டகாலமாக வேரூன்றிய ஊழல் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, எளிய குடிமகனுக்கும் நீதி கிடைப்பதில் துரிதமான வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதே தற்போதைய மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்ற அதே இடத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் தேசிய மக்கள் சக்தி அரசும் அதற்காகவே செயற்பட்டு வருகின்றது.
மேலும், பாரம்பரிய அரசியல் கலாசாரத்தை மாற்றி முழுமையான சமத்துவத்தைக் களத்தில் கொண்டுவருவதில் உள்ள நடைமுறைத் தடைகள் மற்றும் நிர்வாகத் தாமதங்களை தகத்தெறிவதில் NPP அரசு கூடிய கவனம் செலுத்தி வருகின்றது.
அரச நிர்வாகத்தை நெறிப்படுத்துதல் மற்றும் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள மக்கள் குறை தீர்ப்புப் பணிகளை விரைவுபடுத்துவதே அரசாங்கத்தின் தற்போதைய முக்கிய இலக்குககளில் ஒன்றாக இருக்கின்றது.
இவ்வாறான விடயங்களுக்காகவே 22வது அரசியல் அமைப்பு சீர்ரதிருத்தம், ஊழல் தடுப்புச் சட்டங்கள், வெளிப்படைத்தன்மை மற்றும் நீதித்துறையின் சுதந்திரம் என்பன ஜனாதிபதி தலைமையிலான NPP அரசினால் உறுதிப்படுத்துவதற்கான சட்டரீதியான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதனடிப்படையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் ஊழல் மற்றும் சட்டவிரோத சொத்துக்களைப் பாதுகாக்கும் யுகம் முடிவுக்கு வந்துள்ளது எனற கருத்துக்கள் தற்போதைய அரசியல் சூழலில் பலராலும் எதிர்பார்க்கப்ட்டு அலசப்படும் மாற்றமாகும். சட்டத்தின் ஆட்சி மற்றும் வெளிப்படைத்தன்மை நிலை நாட்டப்படும் பட்சத்தில், பதவிகளைப் பயன்படுத்தித் தப்பித்துக் கொள்ளும் அரசியல் கலாசாரம் எடுபடாது என்பதில் தற்போதைய இளைஞர் சமூகம் தெளிவாக உள்ளது.
அந்த வகையில்! தேசியப்பட்டியல் அல்லது பாராளுமன்ற உறுப்பினர் (MP) பதவி மூலம் கிடைக்கும் சட்டப் பாதுகாப்புகள் மற்றும் வரப்பிரசாதங்களைப் பயன்படுத்தி எவரும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்ற விடயத்தை உறுதிப்படுத்துவதில் NPP அரசும், நிலையான கொள்வாதிகளும் திடமான நடைமுறைச் செயற்பாடுகளுடன் பயனித்து வருகின்றார்கள்.
பாராளுமன்ற சிறப்புரிமைகள் என்பது குற்றவியல் குற்றச்சாட்டுகள் அல்லது ஊழல் விசாரணைகளில் இருந்து தப்பிப்பதற்கான கேடயம் அல்ல என்பதை மக்கள் விடுதலை முன்னணியானது (JVP).புதிய அரசியல் கலாசாரதின் மூலம் மக்கள் உள்ளங்களில் பதிய வைத்து வருகின்றது.
மக்கள் பிரதிநிதிகள் தங்களின் சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை துல்லியமாக வெளிப்படுத்த வேண்டும் என்ற ரீதியில் சட்டம் கடுமையாக நடை முறைப்படுத்தப்படுகிறது. கடந்த காலங்களில் அரசியல் செல்வாக்கு காரணமாக முடக்கப்பட்டிருந்த முக்கிய நிதி மோசடி மற்றும் ஊழல் தொடர்பான விசாரணைகள், சுயாதீனமான முறையில் மீண்டும் தூசுதட்டப்பட்டு வருகின்றன.
அரசியல்வாதிகளின் முறைகேடுகள் மற்றும் சட்டமீறல்கள் இன்று சமூக ஊடகங்கள் மூலம் உடனடியாக வெளிச்சத்திற்கு வருவதால், மக்கள் மத்தியில் விழிப்புணர்வும், அதற்கு எதிரான கூட்டுக்குரலும் வலுவடைந்துள்ளது.
குற்றச்சலுகைகள் அல்லது அரசியல் பாதுகாப்புகளைக் கடந்து, சட்டத்தின் ஆட்சிக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்ற கொள்கை பொதுவெளியில் வலுப்பெற்றுள்ளது.மக்கள் பிரதிநிதிகள் மீது சாமானிய மக்களும் சட்டத்தின் மூலம் கேள்வி எழுப்பும் விழிப்புணர்வு உருவாகியுள்ளது. பதவிகளைத் தற்காப்பு அரணாகப் பயன்படுத்தும் நிலை மாறி, வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஆகவே, பாராளுமன்ற ஆசனங்களைப் பாதுகாப்புக் கவசமாகப் பயன்படுத்த நினைக்கும் அரசியல்வாதிகளின் எண்ணம் இனிவரும் காலங்களில் சாத்தியமற்றது என்ற விழிப்புணர்வும் எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் வலுவாக எழுந்துள்ளதால், அரசியல்வாதிகள் தங்களைச் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களாகக் கருதும் நிலையை மாற்றி, அனைவரும் சட்டத்தின் முன் சமம் என்ற உண்மையை மக்கள் விடுதலை முன்னணியும் (JVP) தேசிய மக்கள் சக்தியும் (NPP) மக்கள் மயப்படுத்துவதில் வெற்றி கண்டுள்ளன என்பதே நிதர்சனம்.
அஹமட் இர்ஷாட்.
13-09-2026
පාර්ලිමේන්තු වරප්රසාද සහ දූෂණයට එරෙහි සටන: නව දේශපාලන සංස්කෘතික මාවතක ජාතික ජන බලවේගය.
පාර්ලිමේන්තු ආසන සහ වරප්රසාද තම දේශපාලන ආරක්ෂක පලිහක් ලෙස භාවිත කිරීමට උත්සාහ කරන දේශපාලනඥයන්ගේ එම මානසිකත්වය ඉදිරි කාලයේදී තවදුරටත් සාර්ථක නොවන බවට ප්රබල ජනතා අවබෝධයක්, විශේෂයෙන්ම සමාජ මාධ්ය ඔස්සේ, වර්ධනය වෙමින් පවතී.
සුදුසුකම් ලත් වෘත්තිකයන් සහ විශේෂඥයන් පාර්ලිමේන්තුවට ගෙන ඒම සඳහා මුලින් හඳුන්වා දුන් ජාතික ලැයිස්තු ක්රමය, බොහෝ අවස්ථාවලදී මැතිවරණවලින් පරාජයට පත් වූ දේශපාලනඥයන් ආරක්ෂා කිරීම සඳහා වූ “රක්ෂණ ක්රමයක්” බවට පරිවර්තනය වී තිබේ.
ව්යවස්ථා සංශෝධන, දූෂණ විරෝධී නීති සහ අධිකරණයේ ස්වාධීනත්වය ආරක්ෂා කිරීම සඳහා ගනු ලබන පියවර ඇතුළු නීතිමය හා ආයතනික ක්රියාමාර්ග ඔස්සේ, ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතාගේ නායකත්වයෙන් යුත් රජය දූෂණය තුරන් කිරීම සහ නව දේශපාලන සංස්කෘතියක් ස්ථාපිත කිරීම සඳහා බරපතළ පියවර ගනිමින් සිටී.
++++++++++++++
පාර්ලිමේන්තු වරප්රසාද යනු මහජන නියෝජිතයින්ට නොබියව තම රාජකාරිය කිරීමට හැකි වන පරිදි නිර්මාණය කරන ලද ආරක්ෂක පලිහක් වුවද, එය ඇතැම් විට චෝදනාවලින් බේරීමට සිදුරු (පළිහක්) ලෙස භාවිතා කිරීම ලොව පුරා දේශපාලන විශ්ලේෂකයින් සහ නීති විශාරදයින් අතර නිරන්තර සංවාදයට ලක්ව ඇත.
ව්යවස්ථාදායක සභාවේ සහ පාර්ලිමේන්තු මන්ත්රීවරුන්ට නොබියව ජනතාවට සේවය කිරීමට වරම් ලබාදී තිබෙනවා. එහෙත් ඒවා අවභාවිත කළ විට නීතියේ ආධිපත්යය ප්රශ්නයට ලක්වන්නේ රටේ දේශපාලන ප්රතිසංස්කරණයේදී සිදු කළ යුතු ප්රධාන සංශෝධනය බව සැබෑ දේශපාලනඥයන්ගේ අදහසයි.
වැදගත්ම දෙය නම් පාර්ලිමේන්තු සැසිවාරයට පෙර සහ පසුව ඇතැම් දිනවලදී සිවිල් නඩුවලදී මන්ත්රීවරුන් අත්අඩංගුවට ගත නොහැක. ඇතැමුන් පාර්ලිමේන්තු බලය යොදාගෙන අපරාධ නඩු දිග් ගැස්සීමට උත්සාහ කරනවා.
පාර්ලිමේන්තුවේ කතා හෝ ඡන්දය සම්බන්ධයෙන් අධිකරණයට කිසිදු නීතිමය පියවරක් ගත නොහැක. බොහෝ අය අපහාස උපාමාරු කිරීමට සහ විමර්ශනවලින් බේරීමට එය භාවිතා කරති.
මේ නිසා දූෂිතයන්, තක්කඩියන්, අපරාධ පසුබිම් ඇති පුද්ගලයන් තම ආරක්ෂාව සඳහා දේශපාලනයට එන දේශපාලන අපරාධකරණයේ මට්ටම ඉහළ යයි. නීතිය ඉදිරියේ සමානාත්මතාවයේ ව්යවස්ථාපිත අයිතිය උල්ලංඝනය කිරීමට අමතරව, වංචනිකයින්ට දණ්ඩමුක්තිය නොලැබීම රජය සහ දේශපාලන පද්ධතිය කෙරෙහි මහජන විශ්වාසය පළුදු කරයි.
ප්රජාතන්ත්රවාදයක් සත්ය වශයෙන්ම ක්රියාත්මක වීමට නම්, අපරාධ විමර්ශනයේදී සහ යුක්තිය පසිඳලීමේදී සාමාන්ය පුරවැසියාට මෙන්ම පාලක පන්තියටද එකම නීති රීති අදාළ විය යුතුය. බලයේ සිටින පුද්ගලයන්ට බලපෑ හැකි පමණින් නීතියෙන් නිදහස් කිරීම හෝ වරප්රසාද දීම ප්රජාතන්ත්රවාදයේ, සමානාත්මතාවයේ මූලික මූලධර්මයට පටහැනිය.
රාජ්ය ක්රමය ගැන ජනතාවට විශ්වාසයක් ඇති වන්නේ පාලක පන්තියට එල්ල වී ඇති අපරාධ හා දූෂණ පිළිබඳ නඩු විවෘතව හා අපක්ෂපාතීව විමර්ශනය කරන විට පමණි. විමර්ශන ආයතනවලට සහ අධිකරණයට කිසිදු දේශපාලන බලපෑම්වලට යටත් නොවී ස්වාධීනව කටයුතු කිරීමට ඉඩ හැරීම පුරවැසියන්ගේ අයිතිවාසිකම් සුරැකෙනු ඇත.
පාර්ලිමේන්තු මන්ත්රීවරයෙකු ලෙස කටයුතු කරන විට යම් යම් විශේෂ නීතිමය රැකවරණයක් ඇත. බද්ධ කිරීම් සහ මංකොල්ලකෑම් නඩුවලට සම්බන්ධ අය පාර්ලිමේන්තු වරප්රසාද සහ කාර්යාලය භාවිත කරන්නේ තමන්ට එරෙහි නීතිමය ක්රියාමාර්ග ප්රමාද කිරීමට හෝ ඒවා මඟ හැරීමට බලය භාවිත කිරීමට ය.
පාර්ලිමේන්තු මන්ත්රී ධූරයක් නොමැතිව රාජ්ය ආයතනවලට සහ විමර්ශන බලධාරීන්ට බලපෑම් කිරීමේ බලය අඩුවේ. නීති විරෝධී ලෙස උපයාගත් වත්කම් ආරක්ෂා කර ගැනීමටත් ඒවාට අදාළ පරීක්ෂණ යටපත් කිරීමටත් ඔවුන් බලයේ සිටීම අවශ්ය වේ.
මේ අනුව ජනතාවගේ සෘජු ඡන්දයෙන් පරාජයට පත්වන පුද්ගලයකු දේශපාලන පක්ෂ විසින් ජාතික ලැයිස්තුවෙන් පාර්ලිමේන්තුවට යැවීමටද තීරණය වන්නේ ඔවුන් ලබා ගන්නා ඡන්ද ප්රතිශතය අනුවය. සුදුසුකම් ලත් විශේෂඥයින් පාර්ලිමේන්තුවට ගෙන ඒම සඳහා සකස් කළ ජාතික ලැයිස්තු ක්රමය බොහෝ රටවල අසාර්ථක දේශපාලනඥයන් බේරා ගැනීමේ “රක්ෂණ ක්රමයක්” බවට පත් කර ඇත.
මැතිවරණවලින් පරාජය වූ දේශපාලනඥයන් ජාතික ලැයිස්තුවෙන් යළි පාර්ලිමේන්තුවට පැමිණීමට උත්සාහ කිරීම පිටුපස විවිධ දේශපාලන හා නීතිමය ආරක්ෂක හේතු ඇත්තේ එබැවිනි. ජනවරමෙන් ප්රතික්ෂේප වී මේ මාවත තෝරා ගන්නේ ඇයි දැයි ජනතාවට පැහැදිලි කිරීමට සැබෑ වත්මන් ජාතික ජන බලවේගය රජය පෙරමුණ ගනිමින් සිටී.
ඒ අතින් දේශපාලන බලපෑම් සහ තනතුරු යොදා ගනිමින් නීතියේ ග්රහණයෙන් මිදීමේ ප්රවණතාවක් පසුගිය කාලයේ පැවැති අතර ජාතික ජන බලවේගය රජය තම මූලික ප්රතිපත්තිය නීතිය ඉදිරියේ සමානාත්මතාවය රැක ගැනීම බව දිගින් දිගටම අවධාරණය කළේය.
දීර්ඝ කාලීනව මුල් බැසගත් දූෂණ සංස්කෘතියට තිත තබා සාමාන්ය පුරවැසියාට යුක්තිය ඉටුකරදීමේ කඩිනම් විනිවිදභාවයක් ඇති කිරීම ජනතාවගේ වත්මන් අපේක්ෂාව වන බැවින් අනුර කුමාර දිසානායක ජනාධිපතිවරයා සහ ජාතික ජන බලවේගය රජය ඒ වෙනුවෙන්ම කටයුතු කරමින් සිටී.
එමෙන්ම සාම්ප්රදායික දේශපාලන සංස්කෘතිය වෙනස් කර පූර්ණ සමානාත්මතාවය ඉදිරියට ගෙන ඒමේ ප්රායෝගික බාධාවන් සහ පරිපාලනමය ප්රමාදයන් හඳුනා ගැනීම කෙරෙහි NPP රජයේ අවධානය යොමුව තිබේ.
රාජ්ය පරිපාලනය විධිමත් කිරීම සහ දීර්ඝ කාලීනව පවතින ජනතා දුක්ගැනවිලි කඩිනම් කිරීම රජයේ වත්මන් ප්රධාන අරමුණකි.
22 වැනි ආණ්ඩුක්රම ව්යවස්ථා ප්රතිසංස්කරණය, දූෂණ විරෝධී නීති, විනිවිදභාවය සහ අධිකරණයේ ස්වාධීනත්වය සහතික කිරීම සඳහා ජනාධිපතිවරයා ප්රමුඛ NPP රජය විසින් ව්යවස්ථාදායක පියවර ගෙන ඇත්තේ එවැනි දේ සඳහා ය.
ඒ අනුව ජාතික ජනබල ආණ්ඩුව යටතේ දූෂණයේ සහ නීතිවිරෝධී වත්කම් සුරැකීමේ යුගය අවසන් වී ඇතැයි යන මතය වත්මන් දේශපාලන වාතාවරණය තුළ බොහෝ දෙනා අපේක්ෂා කරන සහ විශ්ලේෂණය කරන වෙනසකි. නීතියේ ආධිපත්යය සහ විනිවිදභාවය ආරක්ෂා කරන්නේ නම් තනතුරුවලින් ගැලවී යාමේ දේශපාලන සංස්කෘතියට ඉඩ නොදෙන බව වත්මන් තරුණ ප්රජාව පැහැදිලිය.
ඒ පාර! ජාතික ලයිස්තුව හෝ මන්ත්රී (පාර්ලිමේන්තු මන්ත්රී) නම්වීම හරහා ඇති නෛතික ආරක්ෂාව සහ වරප්රසාදවලින් ප්රයෝජන ගනිමින් කිසිවකුට නීතියේ ග්රහණයෙන් ගැලවිය නොහැකි බව සහතික කිරීම සඳහා එන්පීපී රජය සහ ස්ථාවර ප්රතිපත්ති සම්පාදකයින් දැඩි ප්රායෝගික ක්රියාමාර්ග භාවිතා කරති.
පාර්ලිමේන්තු වරප්රසාද අපරාධ චෝදනාවලින් හෝ දූෂණ විමර්ශනවලින් ගැලවීමට පලිහක් නොවන බව මහජන විමුක්ති පෙරමුණ (ජවිපෙ) සිය නව දේශපාලන සංස්කෘතිය හරහා ජනතාව තුළ කාවැද්දමින් සිටී.
මහජන නියෝජිතයන් තම වත්කම් බැරකම් නිවැරදිව හෙළි කළ යුතු බවට නීතිය තදින්ම ක්රියාත්මක වේ. දේශපාලන බලපෑම් මත පසුගිය කාලයේ ඇහිරී ගිය මහා මූල්ය වංචා දූෂණ විමර්ශන ස්වාධීනව යළිත් දූවිලි ගසා දමමින් තිබේ.
අද සමාජ මාධ්ය හරහා දේශපාලන අකටයුතුකම් සහ කඩකිරීම් ක්ෂණිකව හෙළිදරව් වන විට ජනතාව අතර දැනුවත්භාවය සහ ඊට එරෙහි සාමූහික හඬ ශක්තිමත් වී තිබේ.
සෑම කෙනෙකුම නීතියේ ආධිපත්යයට අවනත විය යුතුය යන මූලධර්මය සාපරාධී මුක්තිය හෝ දේශපාලන ආරක්ෂාව මගහරිමින් පොදු සමාජය තුළ ශක්තිමත් වී ඇත. මහජන නියෝජිතයන් නීතිය හරහා ප්රශ්න කරන සාමාන්ය ජනතාව පිළිබඳ දැනුවත්භාවයක් ඇති වී තිබේ. තනතුරු ආරක්ෂක බැම්මක් ලෙස භාවිත කිරීමේ තත්ත්වය වෙනස් වී ඇති අතර විනිවිදභාවයෙන් යුතුව කටයුතු කිරීමට බලකිරීමක් ද සිදුවී ඇත.
එබැවින් පාර්ලිමේන්තු ආසන ආරක්ෂක පලිහක් කර ගැනීමට කැමති දේශපාලනඥයන්ගේ අදහස අනාගතයේ දී කළ නොහැක්කක් බවට වන දැනුවත්භාවය සහ අපේක්ෂාව ජනතාව තුළ ප්රබලව මතුව තිබෙන අතර යථාර්ථය නම් නීතිය ඉදිරියේ දේශපාලනඥයන් සියලු දෙනාම සමාන බව ජනතාවට ඒත්තු ගැන්වීමට මහජන විමුක්ති පෙරමුණ සහ ජාතික ජන බලවේගය සමත් වී තිබීමයි.
අහමඩ් ඉර්ෂාඩ්.
අද දිනකරන් පුවත්පත.
13-09-2026
සිංහල පරිවර්තනය සමග) பாராளுமன்றச் வரப்பிரசாரங்களும் ஊழல் ஒழிப்பும்: புதிய அரசியல் கலாசார பாதையில் பயணிக்கும் தேசிய மக்கள் சக்தி
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 13, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 13, 2026
Rating:



கருத்துகள் இல்லை: