Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

සිංහල පරිවර්තනය සමග).இந்தியாவுக்கான இலங்கையின் பாதுகாப்பு உறுதிமொழி! பிராந்திய ஒற்றுமையை வலுப்படுத்தும் புதிய தலைமைத்துவ அடையாளம்.


இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு எந்தச் செயற்பாட்டுக்கும் இலங்கை நிலப்பரப்பு பயண்படுத்தப்படாது என்ற ஜனாதிபதி அநுரவின் உறுதிப்பாடு, அண்டைய நாடுகளின் பாதுகாப்பு அக்கறைகளை மதிக்கும் பொறுப்பான தலைமைத்துவத்தின் வெளிப்பாடாக சர்வதேச ரீதியில் பார்க்கப்படுகின்றது.

ஜனாதிபதியின் இராஜதந்திர நகர்வு, பிராந்திய ஸ்திரத்தன்மையைப் பேணுவதோடு, இலங்கையின் மீது சர்வதேச நம்பிக்கையையும் பொருளாதார வளர்ச்சிக்கான சாதகமான சூழலையும் வலுப்படுத்தியுள்ளது.


இந்தியா மற்றும் இலங்கை இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை புதிய கட்டத்திற்கு கொண்டு செல்லும் மிக முக்கியமான நிகழ்வாக ராஜ்நாத் சிங்கின் இந்த விஜயத்தை முன்னணி இந்திய மற்றும் சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.


சுமார் 38 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ பயணமாக இம்மாதம் (செப்டம்பர் 8 முதல் 10 வரை) பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் (Rajnath Shing), விஜயம் இடம் பெற்றிருந்தது. இதற்கு முன்னர் 1988 ம் ஆண்டு இந்திய பாதுகாப்பு அமைச்சர் கே.சி.பந்த் (K. C. Pant)  உத்தியோகபூர்வ விஜயத்தினை இலங்கைக்கு மேற்கொண்டிருந்தார். 

இந்த விஜயமானது இந்தியாவின் "அண்டை நாட்டுக்கு முதலிடம்" (Neighbourhood First) என்ற கொள்கை மற்றும் 'மகாசாகர்' (MAHASAGAR) பிராந்தியக் கோட்பாட்டின் கீழ் இரு நாடுகளின் நட்புறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் 38 வருடங்களுக்கு பின்னர் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருப்பது சர்வதேசத்தின் பார்வையை ஈர்த்த விடயமாகவும் பார்க்கப்படுகின்றது.


இதுவரைக்கும், இந்திய இலங்கை சுதந்திரத்துக்கு பின்னர் மூன்று தடவைகளில் இந்திய பாதுகாப்பு அமைச்சர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்கள். அதில் இரண்டு அமைச்சர்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உரவுகளை வலுப்படுத்துவதற்காக அமைந்துள்ளது. மூன்றாவது, 2005ம் ஆண்டு வெளிநாட்டு அமைச்சர் லக்சன் கதிர்காமர் சுடப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்வத்தில் அவருடை இறுதிக்கிரிகையில் கலந்து கொள்வதற்காக அப்போதைய இந்திய பாதுகாப்பு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு வருகை செய்திருந்தார்.

1988 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்த இந்திய பாதுகாப்பு அமைச்சர் கே. சி. பந்த் (K. C. Pant) அவர்களின் முதன்மை நோக்கம், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலைநிறுத்தப்பட்டிருந்த இந்திய அமைதி காக்கும் படையின் (IPKF) இராணுவ நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்வதாக அமைந்திருந்தது.

அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த கே. சி. பந்த், இலங்கையின் அப்போதைய அரசாங்கத்துடன் நிலவி வந்த தீவிரமான இராஜதந்திர மற்றும் பாதுகாப்புச் சூழல்கள் குறித்து உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார். 


மேலும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு (LTTE) எதிரான அடுத்தகட்ட இராணுவ உத்திகள் குறித்து அப்போதைய இலங்கை ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனவுடன் உயர்மட்டக் கலந்துரையாடல்களை மேற்கொள்வது சம்பந்தமாகவும் குறித்த விடயம் அமைந்திருந்தது.

இந்தியாவின் அண்டைநாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இலங்கையின் நிலப்பரப்போ அல்லது கடல் எல்லையோ பயன்படுத்தப்பட மாட்டாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார். இது, சீனா உள்ளிட்ட நாடுகளுடனான பொருளாதார மற்றும் முதலீட்டு உறவுகளைத் தொடர்ந்தாலும், இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் எந்தவித சமரசத்திற்கும் இடமில்லை என்பதை வெளிப்படுத்தும் முக்கியமான இராஜதந்திரச் செய்தியாக அமைந்துள்ளது.

இலங்கையின் துறைமுகங்கள் அல்லது நிலப்பரப்பு வெளிநாட்டு சக்திகளால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகப் பயன்படுத்தப்படலாம் என்ற புதுடெல்லியின் நீண்டகால அக்கறைக்கு இந்த உறுதிமொழி நேரடியான பதிலாக அமைந்துள்ளது. அதேவேளை, எந்தவொரு வல்லரசின் ஆதிக்கத்திற்கும் முழுமையாகச் சாயாமல், அனைத்து நாடுகளுடனும் சமநிலையான மற்றும் நட்புறவான உறவுகளைப் பேணுவதற்கான இலங்கையின் வெளியுறவுக் கொள்கையையும் இது வெளிப்படுத்துகிறது.

சர்வதேச கடல் வழிப் பாதைகளின் முக்கியமான பகுதியில் அமைந்துள்ள இலங்கை, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதில் பொறுப்புமிக்க நாடாகச் செயல்படுவதற்கான தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளது. பிராந்தியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய எந்தவொரு வெளிநாட்டு சக்திக்கும் தனது நிலப்பரப்பையோ துறைமுகங்களையோ பயன்படுத்த அனுமதிக்காது என்ற சமிக்ஞையையும் வழங்கியுள்ளது.

அதனடிப்படையில், கடல்சார் பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை, பரஸ்பரப் பயிற்சி மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு போன்ற துறைகளில் இந்தியாவுடன் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள், இலங்கையின் தேசியப் பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு, அண்டை நாடுகளுடன் வெளிப்படையான மற்றும் பொறுப்பான உறவுகளைப் பேணும் நாடாக இலங்கையை அடையாளப்படுத்துகின்றன.

மேலும், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளை ஒடுக்குவதில் இந்தியாவின் உளவுத்துறை மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு இலங்கைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.

இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம், மாறிவரும் புவிசார் அரசியல் சூழலில் இலங்கையின் தற்போதைய வெளியுறவுக் கொள்கை நிலைப்பாட்டைத் தெளிவாக வெளிப்படுத்தும் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. எந்தவொரு குறிப்பிட்ட வல்லரசின் ஆதிக்கத்திற்கும் முழுமையாக அடிபணியாமல், அனைத்து நாடுகளுடனும் சமமான மற்றும் இணக்கமான உறவுகளைப் பேண இலங்கை முற்படுகிறது என்ற செய்தியும் இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது.

இவ்வாறான சமநிலையான இராஜதந்திர அணுகுமுறை, இலங்கை பாதுகாப்பானதும் ஸ்திரத்தன்மையானதுமான நாடு என்ற சர்வதேச நம்பிக்கையை வலுப்படுத்துவதுடன், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கும் சர்வதேச கடன் மறுசீரமைப்பு உள்ளிட்ட பொருளாதார நடவடிக்கைகளுக்கும் சாதகமான சூழலை உருவாக்கக்கூடியதாக அமைகிறது.

இந்த நிலையில், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை விஜயம் தொடர்பாக, பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா (PTI), ஏசியன் நியூஸ் இன்டர்நேஷனல் (ANI), தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, தி ஹிந்து உள்ளிட்ட முன்னணி இந்திய ஊடகங்களில் வெளியான செய்திகள் மற்றும் ஆய்வுகள், இந்த விஜயம் இந்தியா–இலங்கை இருதரப்பு உறவுகளை, குறிப்பாக பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் முக்கியமான நிகழ்வாக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டுகின்றன.

1988ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வது, இரு நாடுகளுக்கிடையிலான உயர்மட்ட பாதுகாப்பு உரையாடலின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாகவும், தற்போதைய இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதில் இந்தியா கொண்டுள்ள ஆர்வத்தை பிரதிபளிப்பதாகவும் அவை குறிப்பிடுகின்றன.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பாதுகாப்புச் சவால்களின் பின்னணியில், இலங்கையின் பாதுகாப்புத் திறன்களை மேம்படுத்துதல், குறிப்பாக L-70 துப்பாக்கிகளை நவீனமயப்படுத்துதல், அத்துடன் இரு நாடுகளுக்கிடையிலான SLINEX மற்றும் MITRA SHAKTI போன்ற கூட்டு இராணுவப் பயிற்சிகளைத் தொடர்ந்து வலுப்படுத்துதல் ஆகியவை இந்த விஜயத்தின் முக்கிய அம்சங்களாகக் கருதப்படுகின்றன.

நெருக்கடியான சூழ்நிலைகளில் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து துணை நிற்கும் என இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருப்பதும், பொருளாதார நெருக்கடி மற்றும் இயற்கை அனர்த்தங்களின்போது இந்தியா வழங்கிய ஆதரவும், இரு நாடுகளுக்கிடையிலான பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பின் தொடர்ச்சியை வெளிப்படுத்துவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கைக்கும் இலங்கையின் நிலப்பரப்பு பயன்படுத்தப்படாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வழங்கிய உறுதிமொழி, இரு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் முக்கியமான உறுதிப்பாடாகப் பார்க்கப்படுகிறது.

தேசிய மாணவர் படைகளுக்கிடையிலான ஒத்துழைப்பு, இராணுவக் கல்லூரிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு மற்றும் இராணுவ உபகரணங்களைப் பழுதுபார்த்தல் மற்றும் பராமரித்தல் தொடர்பான ஒப்பந்தங்கள் போன்ற நடவடிக்கைகள் மூலம், இந்தியா–இலங்கை பாதுகாப்பு உறவு மேலும் நடைமுறை சார்ந்த புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது.

மொத்தத்தில், ராஜ்நாத் சிங்கின் இலங்கை விஜயம், இரு நாடுகளுக்கிடையிலான பாரம்பரிய நட்புறவைத் தாண்டி, பாதுகாப்பு, கடல்சார் ஒத்துழைப்பு, இராணுவத் திறன் மேம்பாடு மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மை ஆகிய துறைகளில் பரஸ்பர நம்பிக்கையை மேலும் ஆழப்படுத்தும் ஒரு முக்கியமான கட்டமாக அமைந்துள்ளது என்ற செய்திகள் வெளிவரத் தொடங்கியுள்ளது.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சீனாவின் அதிகரித்து வரும் செல்வாக்கு, கடல்சார் பாதுகாப்பு மற்றும் பிராந்திய புவிசார் அரசியல் சமநிலை ஆகியவற்றின் பின்னணியில், இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை விஜயத்தை சர்வதேச ஊடகங்கள் முக்கியத்துவத்துடன் பதிவு செய்துள்ளன. குறிப்பாக, இந்தியா தனது கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு, இலங்கையுடனான பாதுகாப்பு மற்றும் இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முயற்சியாகவே இந்த விஜயம் பார்க்கப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

முன்னதாக சீன ஆராய்ச்சிக் கப்பல்களின் இலங்கை வருகை தொடர்பாக இந்தியா வெளியிட்ட கவலைகள் மற்றும் இலங்கை கடைப்பிடித்த பாதுகாப்பு நிலைப்பாடுகளின் பின்னணியில், தற்போதைய NPP அரசாங்கத்துடன் இந்தியா தனது பாதுகாப்பு உறவுகளை எவ்வாறு சமநிலைப்படுத்துகிறது என்பதும் சர்வதேச ஊடகங்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. அதேவேளை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் அணிசேராக் கொள்கை மற்றும் சமநிலையான இராஜதந்திர அணுகுமுறையும் இந்தச் சூழலில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

சர்வதேச பார்வையில், இந்த விஜயம் ஒரு தரப்பை நோக்கிய இராணுவ அணிசேர்வாக அல்லாமல், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் புவிசார் அரசியல் சமநிலையைப் பேணும் நோக்கில் இந்தியா–இலங்கை உறவுகளை வலுப்படுத்தும் முக்கியமான இராஜதந்திர நகர்வாகவே பார்க்கப்படுகிறது.

ஆகவே, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை விஜயமானது, இந்தியா–இலங்கை பாதுகாப்பு உறவுகளை புதிய கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முக்கியமான இராஜதந்திர நிகழ்வாக அமைந்துள்ளது. குறிப்பாக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம், எந்தவொரு வல்லரசின் அழுத்தத்திற்கும் அல்லது ஆதிக்கத்திற்கும் அடிபணியாமல், இலங்கையின் தேசிய நலன், இறையாண்மை மற்றும் பிராந்தியப் பாதுகாப்பை மையமாகக் கொண்டு சமநிலையான வெளியுறவுக் கொள்கையை முன்னெடுத்து வருகிறது.

இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு எதிரான எந்தச் செயற்பாட்டிற்கும் இலங்கை நிலப்பரப்பு பயன்படுத்தப்படாது என்ற ஜனாதிபதி அநுரவின் உறுதிப்பாடு, அண்டை நாடுகளின் பாதுகாப்பு அக்கறைகளை மதிக்கும் பொறுப்பான தலைமைத்துவத்தின் வெளிப்பாடாக சர்வதேச ரீதியில் பார்க்கப்படுகிறது.

அதேவேளை, இந்தியாவுடன் பாதுகாப்பு மற்றும் கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்திக்கொண்டே, சீனா உள்ளிட்ட ஏனைய நாடுகளுடனான பொருளாதார மற்றும் இராஜதந்திர உறவுகளையும் தொடரும் அநுர அரசாங்கத்தின் அணுகுமுறை, இலங்கை எந்தவொரு அணியிலும் சிக்கிக்கொள்ளாமல் தனது தேசிய நலன்களை முன்னிறுத்தும் சுயாதீனமான நாடாக செயற்படுகிறது என்ற செய்தியை சர்வதேசத்திற்கு வழங்கியுள்ளது. 

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் போட்டிகளுக்கு மத்தியில், இலங்கையை மோதலின் களமாக அல்லாமல் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான பாலமாக நிலைநிறுத்தும் என்ற ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் சமநிலையான இராஜதந்திர நகர்வானது சர்வதேசத்தின் பார்வையில் இலங்கைக்கு சாதகமான ஒரு புதிய நம்பிக்கையை உருவாக்கி வருவதாகவே 38 ஆண்டுகளுக்கு பின்னரான இந்திய பாதுகாப்பு அமைச்சரின் வருகை வெளிப்படுத்துகிறது.

அஹமட் இர்ஷாட்.
14-09-2026

ඉන්දියාවට ශ්‍රී ලංකාවෙන් ආරක්ෂාව! කලාපීය සමගිය ශක්තිමත් කරන නව නායකත්ව අනන්‍යතාවයක්.

ඉන්දියාවේ ආරක්ෂක අවශ්‍යතාවලට එරෙහි කිසිදු මෙහෙයුමක් සඳහා ශ්‍රී ලංකා භූමි ප්‍රදේශය සම්මුතියකට නොපැමිණෙන බවට ජනාධිපති අනුරව්ගේ සහතිකය අසල්වැසි රටවල ආරක්ෂක අවශ්‍යතාවලට ගරු කරන වගකිවයුතු නායකත්වයක ප්‍රකාශනයක් ලෙස ජාත්‍යන්තරව සැලකේ.

ජනාධිපතිතුමාගේ රාජ්‍ය තාන්ත්‍රික ක්‍රියාමාර්ගය නිසා කලාපීය ස්ථාවරත්වය පවත්වා ගෙන යාමටත්, ශ්‍රී ලංකාව කෙරෙහි ජාත්‍යන්තර විශ්වාසය ශක්තිමත් කිරීමටත් ආර්ථික වර්ධනයට හිතකර පරිසරයක් ඇති කිරීමටත් හැකි වී තිබේ.

රාජ්නාත් සිංගේ සංචාරය ඉන්දියාව සහ ශ්‍රී ලංකාව අතර ආරක්ෂක සහයෝගීතාව නව තලයකට ගෙන යන ඉතා වැදගත් සිදුවීමක් ලෙස ප්‍රමුඛ ඉන්දීය සහ ජාත්‍යන්තර මාධ්‍ය විසින් පෙන්වා දී තිබේ.
++++++++++++++++++

ආරක්ෂක අමාත්‍ය රාජ්නාත් ෂිංගේ මෙම මාසයේ (සැප්තැම්බර් 8 සිට 10 දක්වා) සංචාරය වසර 38 කට පමණ පසු ඉන්දීය ආරක්ෂක අමාත්‍යවරයකු ශ්‍රී ලංකාවට පැමිණි පළමු නිල සංචාරය විය. මෙයට පෙර 1988 දී ඉන්දීය ආරක්ෂක අමාත්‍ය K. C. Pant මහතා ශ්‍රී ලංකාවේ නිල සංචාරයක නිරත වී ඇත. 

ඉන්දියාවේ "අසල්වැසි පළමුව" සහ 'මහසාගර්' (මහසාගර්) කලාපීය මූලධර්මය යටතේ දෙරටේ මිත්‍ර සබඳතා ඉහළ තලයකට ගෙනයාම මෙම සංචාරයේ අරමුණ වුවද, ජනාධිපති අනුරකුමාර් දිසානායක මහතා ප්‍රමුඛ ජාතික ජනබල රජය යටතේ වසර 36කට පසු ඉන්දීය ආරක්ෂක අමාත්‍යවරයකු ශ්‍රී ලංකාවට පැමිණීම ජාත්‍යන්තර අවධානයට ලක්ව ඇති බව ද පෙනේ.

ඉන්දියාව සහ ශ්‍රී ලංකාව නිදහස ලැබීමෙන් පසු මේ දක්වා ඉන්දීය ආරක්ෂක අමාත්‍යවරු තුන් වතාවක් ශ්‍රී ලංකාවට පැමිණ තිබේ. මෙම අමාත්‍යවරුන් දෙදෙනකු දෙරට අතර රාජ්‍ය තාන්ත්‍රික සබඳතා ශක්තිමත් කිරීමට අදහස් කරන අය වෙති. තුන්වනුව, 2005 වසරේ විදේශ අමාත්‍ය ලක්ෂාන් කතිර්කාමර් වෙඩි තබා ඝාතනය කළ අවස්ථාවේ ඔහුගේ අවමංගල්‍ය උත්සවයට සහභාගී වීමට එවකට ඉන්දීය ආරක්ෂක අමාත්‍ය ප්‍රනාබ් මුකර්ජි ශ්‍රී ලංකාවට පැමිණියේය.

1988 දී ශ්‍රී ලංකාවට පැමිණි ඉන්දීය ආරක්ෂක අමාත්‍ය K. C. K. C. Pant ගේ මූලික අරමුණ වූයේ ශ්‍රී ලංකාවේ උතුරු සහ නැගෙනහිර පළාත්වල ස්ථානගත කර ඇති ඉන්දීය සාම සාධක හමුදාවේ (IPKF) හමුදා මෙහෙයුම් සියැසින්ම නිරීක්ෂණය කිරීමයි.

එවකට ඉන්දීය අග්‍රාමාත්‍ය රජිව් ගාන්ධිගේ කැබිනට් මණ්ඩලයේ සිටි ආරක්ෂක අමාත්‍ය K. C. Pant ශ්‍රී ලංකා රජය සමඟ පැවති උණුසුම් රාජ්‍යතාන්ත්‍රික සහ ආරක්ෂක තත්ත්වය පිළිබඳව ඉහළ මට්ටමේ සාකච්ඡා පවත්වා ඇත. 

ජයවර්ධන සමඟ ඉහළ මට්ටමේ සාකච්ඡා පැවැත්වීම සම්බන්ධයෙන් ද එවකට ශ්‍රී ලංකා ජනාධිපති ජේ.ආර්.

ශ්‍රී ලංකාවේ ගොඩබිම් හෝ සමුද්‍ර සීමාවන් ඉන්දියාවේ අභ්‍යන්තර ආරක්ෂාවට තර්ජනයක් වන අයුරින් භාවිත නොකරන බවට ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා සහතික වෙයි. චීනය ඇතුළු රටවල් සමඟ ආර්ථික හා ආයෝජන සබඳතා පවත්වාගෙන යන ඉන්දියාවේ ජාතික ආරක්‍ෂාව සම්බන්ධ කාරණා සම්බන්ධයෙන් කිසිදු සම්මුතියකට ඉඩක් නොමැති බව පෙන්වීමට මෙය වැදගත් රාජ්‍ය තාන්ත්‍රික පණිවිඩයකි.

මෙම සහතිකය, ශ්‍රී ලංකාවේ වරායන් හෝ ගොඩබිම් විදේශීය බලවතුන් විසින් ඉන්දියාවේ ආරක්‍ෂාවට තර්ජනය කිරීම සඳහා යොදාගත හැකි බවට නවදිල්ලියේ දිගුකාලීන කනස්සල්ලට සෘජු ප්‍රතිචාරයකි. එමෙන්ම කිසිදු සුපිරි බලවතෙකුගේ ආධිපත්‍යයක් මත සම්පූර්ණයෙන්ම රඳා නොසිට සියලු රටවල් සමඟ සමබර සහ මිත්‍ර සබඳතා පවත්වාගෙන යාමේ ශ්‍රී ලංකාවේ විදේශ ප්‍රතිපත්තිය ද එය ප්‍රකාශ කරයි.

ජාත්‍යන්තර මුහුදු මංතීරුවල වැදගත් ප්‍රදේශයක පිහිටා ඇති ශ්‍රී ලංකාව, ඉන්දීය සාගර කලාපයේ සාමය, ආරක්ෂාව සහ ස්ථාවරත්වය පවත්වාගෙන යාම සඳහා වගකිවයුතු රටක් ලෙස ක්‍රියා කිරීමේ සිය ස්ථාවරය පැහැදිලි කර ඇත. කලාපීය ආරක්ෂාවට තර්ජනයක් වන පරිදි තම භූමිය හෝ වරායන් භාවිතා කිරීමට කිසිදු විදේශීය බලවේගයකට ඉඩ නොදෙන බවට ද සංඥා කර ඇත.

ඒ අනුව, සමුද්‍ර ආරක්‍ෂාව, ආපදා කළමනාකරණය, අන්‍යෝන්‍ය පුහුණුව සහ ආරක්‍ෂක සහයෝගීතාව වැනි ක්‍ෂේත්‍රවල ඉන්දියාව සමඟ කරන ක්‍රියාකාරකම් ශ්‍රී ලංකාවේ ජාතික ආරක්‍ෂාව ශක්තිමත් කරන අතර ශ්‍රී ලංකාව අසල්වැසියන් සමඟ විවෘත හා වගකීම් සහගත සබඳතා පවත්වන රටක් ලෙස හඳුනා ගනී.

එමෙන්ම ජාත්‍යන්තර මත්ද්‍රව්‍ය ජාවාරම් ජාලයන් මර්දනය කිරීමේදී ඉන්දියාවේ බුද්ධි සහ සමුද්‍ර ආරක්ෂක සහයෝගීතාව ශ්‍රී ලංකාවට වැදගත් වේ.

වෙනස්වන භූ දේශපාලන පරිසරය තුළ ශ්‍රී ලංකාවේ වත්මන් විදේශ ප්‍රතිපත්ති ස්ථාවරය පැහැදිලිව ප්‍රකාශ කරන ප්‍රධාන සිදුවීමක් ලෙස ඉන්දීය ආරක්ෂක අමාත්‍යවරයාගේ ශ්‍රී ලංකා සංචාරය සැලකේ. ශ්‍රී ලංකාව කිසියම් සුපිරි බලවතෙකුගේ ආධිපත්‍යයට සම්පූර්ණයෙන්ම යටත් නොවී සියලු රටවල් සමඟ සමාන සහ සුහද සබඳතා පවත්වා ගැනීමට උත්සාහ කරන බවට පණිවිඩය ද එයින් ලබා දේ.

එවැනි සමතුලිත රාජ්‍ය තාන්ත්‍රික ප්‍රවේශයක් ශ්‍රී ලංකාව සුරක්ෂිත සහ ස්ථාවර රටක් බවට ජාත්‍යන්තර විශ්වාසය ශක්තිමත් කරන අතර ජාත්‍යන්තර ණය ප්‍රතිව්‍යුහගත කිරීම ඇතුළු විදේශ ආයෝජන ආකර්ෂණය කර ගැනීමට සහ ආර්ථික ක්‍රියාකාරකම් සඳහා හිතකර පරිසරයක් නිර්මාණය කරයි.

මෙම තත්ත්වය තුළ ඉන්දීය ආරක්ෂක අමාත්‍ය රාජ්නාත් සිංගේ ශ්‍රී ලංකා සංචාරය සම්බන්ධයෙන් Press Trust of India (PTI), Asian News International (ANI), The Times of India, The Hindu ඇතුළු ප්‍රමුඛ පෙළේ ඉන්දීය මාධ්‍යවල පළ වූ පුවත් සහ අධ්‍යයනයන් පෙන්වා දෙන්නේ මෙම සංචාරය ඉන්දීය ශ්‍රී ලංකා ද්විපාර්ශ්වික සබඳතා, විශේෂයෙන්ම ආරක්ෂක සහයෝගීතාව තවදුරටත් ශක්තිමත් කිරීමට වැදගත් අවස්ථාවක් බවයි.

1988 වසරේ සිට ඉන්දීය ආරක්ෂක අමාත්‍යවරයෙකු ශ්‍රී ලංකාවට පැමිණි නිල සංචාරයක් මගින් දෙරට අතර ඉහළ මට්ටමේ ආරක්ෂක සංවාදයක වැදගත්කම පෙන්නුම් කරන අතර වත්මන් ශ්‍රී ලංකා රජය සමඟ කටයුතු කිරීමට ඉන්දියාව දක්වන උනන්දුව පිළිබිඹු වන බව ඔවුන් සඳහන් කරයි.

ඉන්දියන් සාගර කලාපයේ ආරක්ෂක අභියෝග වැඩිවන සන්දර්භය තුළ, ශ්‍රී ලංකාවේ ආරක්ෂක හැකියාවන් වැඩිදියුණු කිරීම, විශේෂයෙන් L-70 තුවක්කු නවීකරණය මෙන්ම SLINEX සහ MITRA SHAKTI වැනි දෙරට අතර ඒකාබද්ධ යුද අභ්‍යාස අඛණ්ඩව ශක්තිමත් කිරීම මෙම සංචාරයේ ප්‍රධාන අංගයන් ලෙස සැලකේ.

තීරණාත්මක අවස්ථාවන්හිදී ඉන්දියාව ශ්‍රී ලංකාවට අඛණ්ඩව සහය දක්වන බවත් ආර්ථික අර්බුද සහ ස්වභාවික විපත් වලදී ඉන්දියාව ලබාදෙන සහය දෙරට අතර අන්‍යෝන්‍ය විශ්වාසයේ සහ සහයෝගීතාවයේ අඛණ්ඩ පැවැත්ම පෙන්නුම් කරන බව ඉන්දීය ආරක්ෂක අමාත්‍ය රාජ්නාත් සිං ප්‍රකාශ කළේය.

මේ අතර ඉන්දියාවේ ආරක්‍ෂක අවශ්‍යතාවලට එරෙහිව කිසිදු ක්‍රියාමාර්ගයක් සඳහා ශ්‍රී ලංකා භූමිය යොදා නොගන්නා බවට ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා සහතික වීම දෙරට අතර ආරක්‍ෂක විශ්වාසය තවදුරටත් ශක්තිමත් කිරීමේ වැදගත් කැපවීමක් ලෙස සැලකේ.

ජාතික ශිෂ්‍ය බලකා අතර සහයෝගීතාව, හමුදා විද්‍යාල අතර අවබෝධය සහ යුධ උපකරණ අළුත්වැඩියා කිරීම සහ නඩත්තු කිරීම පිළිබඳ ගිවිසුම් වැනි ක්‍රියාකාරකම් හරහා ඉන්දියා-ශ්‍රී ලංකා ආරක්ෂක සබඳතාව නව සහ වඩාත් ප්‍රායෝගික මානයකට ළඟා වී තිබේ.

සමස්තයක් වශයෙන් ගත් කල, රාජ්නාත් සිංගේ ශ්‍රී ලංකා සංචාරය දෙරටේ සාම්ප්‍රදායික මිත්‍රත්වයෙන් ඔබ්බට ගොස් ආරක්‍ෂක, සමුද්‍රීය සහයෝගීතාව, යුධ හැකියාවන් වර්ධනය සහ කලාපීය ස්ථාවරත්වය යන ක්ෂේත්‍රවල අන්‍යෝන්‍ය විශ්වාසය ගැඹුරු කරනු ඇති බවට වාර්තා පළ වීමට පටන් ගෙන තිබේ.

ඉන්දියානු සාගර කලාපය තුළ චීනයේ වර්ධනය වන බලපෑම, සමුද්‍ර ආරක්ෂාව සහ කලාපීය භූ දේශපාලන සමතුලිතතාවය යන සන්දර්භය තුළ ඉන්දීය ආරක්ෂක අමාත්‍ය රාජ්නාත් සිංගේ ශ්‍රී ලංකා සංචාරය ජාත්‍යන්තර මාධ්‍ය විසින් සනිටුහන් කර ඇත. විශේෂයෙන්ම මෙම සංචාරය ඉන්දියාවේ සමුද්‍ර ආරක්‍ෂාව තර කර ගැනීමටත්, ශ්‍රී ලංකාව සමඟ ඇති ආරක්‍ෂාව සහ රාජ්‍ය තාන්ත්‍රික සබඳතා තවදුරටත් ශක්තිමත් කර ගැනීමේ උත්සාහයක් ලෙසත් සැලකෙන බව පෙන්වා දෙනවා.

මීට පෙර චීන පර්යේෂණ යාත්‍රා ශ්‍රී ලංකාවට පැමිණීම සහ ශ්‍රී ලංකාව අනුගමනය කළ ආරක්ෂක ඉරියව්ව සම්බන්ධයෙන් ඉන්දියාව විසින් ප්‍රකාශ කරන ලද කනස්සල්ල සම්බන්ධයෙන් ඉන්දියාව වත්මන් එන්පීපී රජය සමඟ සිය ආරක්ෂක සබඳතා සමතුලිත කරන ආකාරය ජාත්‍යන්තර මාධ්‍ය අවධානයට ලක්ව තිබේ. මේ අතර, ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා ප්‍රමුඛ රජයේ නොබැඳි ප්‍රතිපත්ති සහ සමබර රාජ්‍ය තාන්ත්‍රික ප්‍රවේශය ද මෙම සන්දර්භය තුළ වැදගත් යැයි සැලකේ.

ජාත්‍යන්තර වශයෙන් මෙම සංචාරය සැලකෙන්නේ ඒකපාර්ශ්වික හමුදාමය මැදිහත්වීමක් ලෙස නොව, ඉන්දීය සාගර කලාපයේ ආරක්‍ෂාව සහ භූ දේශපාලනික සමතුලිතතාව පවත්වා ගැනීම සඳහා ඉන්දු - ශ්‍රී ලංකා සබඳතා ශක්තිමත් කිරීමේ වැදගත් රාජ්‍ය තාන්ත්‍රික පියවරක් ලෙසයි.

එබැවින් ඉන්දීය ආරක්ෂක අමාත්‍ය රාජ්නාත් සිංගේ ශ්‍රී ලංකා සංචාරය ඉන්දු - ශ්‍රී ලංකා ආරක්ෂක සබඳතා නව තලයකට ගෙන යන වැදගත් රාජ්‍යතාන්ත්‍රික සිදුවීමකි. විශේෂයෙන්ම අනුර කුමාර දිසානායක ජනාධිපතිවරයා ප්‍රමුඛ රජය කිසිදු සුපිරි බලවතෙකුගේ බලපෑම්වලට හෝ ආධිපත්‍යයට යට නොවී ශ්‍රී ලංකාවේ ජාතික අවශ්‍යතාව, ස්වෛරීභාවය සහ කලාපීය ආරක්ෂාව කෙරෙහි අවධානය යොමු කරමින් සමබර විදේශ ප්‍රතිපත්තියක් අනුගමනය කරමින් සිටී.

ඉන්දියාවේ ආරක්‍ෂක අවශ්‍යතාවලට එරෙහි කිසිදු ක්‍රියාකාරකමක් සඳහා ශ්‍රී ලංකා භූමිය යොදා නොගන්නා බවට ජනාධිපති අනුරව්ගේ සහතිකය ජාත්‍යන්තර වශයෙන් සැලකෙන්නේ තම අසල්වැසියන්ගේ ආරක්‍ෂක අවශ්‍යතාවලට ගරු කරන වගකිවයුතු නායකත්වයක ප්‍රකාශනයක් ලෙසය.

එමෙන්ම ඉන්දියාව සමඟ ආරක්ෂක සහ නාවික සහයෝගීතාව ශක්තිමත් කරමින් චීනය ඇතුළු අනෙකුත් රටවල් සමඟ ආර්ථික හා රාජ්‍ය තාන්ත්‍රික සබඳතා අඛණ්ඩව පවත්වාගෙන යාමේ අනුර ආණ්ඩුවේ ප්‍රවේශය ශ්‍රී ලංකාව කිසිදු කල්ලියක හිර නොවී ජාතික අවශ්‍යතා ඉටු කරන ස්වාධීන රටක් ලෙස ක්‍රියා කරන බවට ජාත්‍යන්තර ප්‍රජාවට පණිවිඩය ලබා දී ඇත.

ඉන්දීය සාගර කලාපයේ වර්ධනය වන භූ දේශපාලන එදිරිවාදිකම් මධ්‍යයේ ශ්‍රී ලංකාව සාමය, ආරක්ෂාව සහ සහයෝගීතාවයේ පාලමක් ලෙස ස්ථානගත කිරීමට ජනාධිපති අනුර කුමාර දිසානායකගේ සමතුලිත රාජ්‍ය තාන්ත්‍රික පියවර ජාත්‍යන්තර ප්‍රජාව ඉදිරියේ ශ්‍රී ලංකාවට පක්ෂව නව විශ්වාසයක් ඇති කරයි.

අහමඩ් ඉර්ෂාඩ්.
දිනකරන් සඟරාව සඳහා,
14-09-2026
සිංහල පරිවර්තනය සමග).இந்தியாவுக்கான இலங்கையின் பாதுகாப்பு உறுதிமொழி! பிராந்திய ஒற்றுமையை வலுப்படுத்தும் புதிய தலைமைத்துவ அடையாளம். Reviewed by www.lankanvoice.lk on செப்டம்பர் 14, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.